விடுதலை பெற்ற பின்னர் தமிழகம் மட்டும் இன்றி கிட்டத்தட்ட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் உருவான நோக்கம் தேச விடுதலை தானே அதை தான் அடைந்து விட்டோமே இன்னும் எதற்கு கட்சி கலைத்து விடலாமே என தந்தை பெரியாரின் மொழிதளுக்கு மகாத்மா காந்தி இசைவு தெரிவித்தாலும் பண்டித நேரு அதனை ஏற்று கொள்ளாமல் கட்சியை தொடர்ந்து வைத்து இருந்தார்.
தமிழ்நாட்டில் என்ன தான் கர்மவீரர் காமராசர் நல்லவராய் இருந்தாலும் பல சிறப்பான திட்டங்கள் மூலம் தமிழகத்தை நாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக உயர்த்தி கொண்டு இருந்தாலும் அன்றைய நிலையில் நிச்சயமாய் ஒரு மாற்று தேவைப்பட்டது. ஒரே ஒரு கட்சி தான் வெற்றி பெரும் என்றால் தேர்தலே தேவை இல்லையே. முடிவு தேர்ந்தும் நடக்கும் தேர்தல்களாகவே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சில தேர்தல்கள இருந்தன.
இந்தி எதிர்ப்பு, தமிழ் இன உணர்வு, ஏழைகள் முன்னேற்றம் போன்ற அறிய இலக்குகள் பலவற்றை உள்ளடக்கியதாக அன்றைய தி.மு.க தோன்றியது.
பொதுப்பணி செய்ய அரசியல் வேண்டாம் நற்சிந்தனை இருந்தால் போதும் என்றார் பெரியார். ஆனால் ஆட்சி கை வசம் வந்தாலொழிய நாம் நினைத்தை சாதிக்க முடியாது என்பதில் உறுதியாய் இருந்த அண்ணா, திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அரசியல் கட்சியை உருவாக்கினார்கள்.
எந்த வித பலமும் இல்லாமலே மென்மேலும் தி.மு.க. வளர்ந்தது. அதன் வளர்ச்சிக்கு ஊடகத்துறை மிக பெரும் பங்கு வகித்தது. இதனை கண்ட காமராஜர் அமைச்சரவையில் இருந்த ஒருவர் நாமும் நம் சாதனைகள் குறித்த செய்தி படமொன்று எடுத்து திரையரங்குகளில் காட்டுவோம் என்றார். காமராசரோ அதற்கு செய்யும் செலவில் மேலும் சில பள்ளிகூடங்களை கட்டுங்கள் என திருப்பி அனுப்பி விட்டார்.
இப்படி ஒரு புறமிருக்க மெல்ல வளர்ச்சி கண்ட தி.மு.க ஆட்சி பீடத்திற்கு வந்தது. தமிழ் அரியணை ஏறியதாய் பூரிப்படைந்தது. அண்ணா எனும் மாமனிதர் தோற்று வித்த அந்த மாற்று சக்திக்கு பின் ஒருவரும் பெரிதாய் உதிக்கவில்லையே எனும் போது வருத்தம் வரத்தான் செய்கிறது.
அதற்கு பின் தோன்றிய சில முக்கிய கட்சிகளை பார்ப்போம்.
இப்படி எல்லா கட்சிகளுமே ஏதோ ஒரு விதத்தில் பிரிந்து வந்ததாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சியாகவோ இருந்து வருகிறது.
இந்த நிலையில் தே.மு.தி.க தொடங்க பட்ட போது பலரும் அதனை ஒரு மாற்றாக கருதினார்கள். இன்றும் அதுவும் இல்லை என்றாகி போனது.
இப்படி மாறி மாறி வருவதை எல்லாம் பார்த்தால் ஒன்று தான் சொல்ல தோன்றுகிறது..?
ஆறு கோடி பேரில் யாருக்குமா ஆட்சி திறன் இல்லை..
எது எப்படியோ தமிழ்நாடு சிறக்க வேண்டுமாயின்
அரசியல்வாதிகள் ஆட்சியாலர்களாவதொழிந்து
ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகளாக வேண்டும்.

- அ.தி.மு.க - எம்.ஜி.ஆர் , தி.மு.க வினின்று பிரிந்தது
- பா.ம.க - ராமதாஸ் , குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி
- ம.தி.மு.க - வைகோ , தி.மு.க வினின்று பிரிந்தது
- த.மா.கா - மூப்பனார் , காங்கிரஸில் இருந்து பிரிந்தது
- வி.சி - தொல்.திருமாவளவன் , குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி
இப்படி எல்லா கட்சிகளுமே ஏதோ ஒரு விதத்தில் பிரிந்து வந்ததாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சியாகவோ இருந்து வருகிறது.
இந்த நிலையில் தே.மு.தி.க தொடங்க பட்ட போது பலரும் அதனை ஒரு மாற்றாக கருதினார்கள். இன்றும் அதுவும் இல்லை என்றாகி போனது.
இப்படி மாறி மாறி வருவதை எல்லாம் பார்த்தால் ஒன்று தான் சொல்ல தோன்றுகிறது..?
ஆறு கோடி பேரில் யாருக்குமா ஆட்சி திறன் இல்லை..
எது எப்படியோ தமிழ்நாடு சிறக்க வேண்டுமாயின்
அரசியல்வாதிகள் ஆட்சியாலர்களாவதொழிந்து
ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகளாக வேண்டும்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக