இது கனவா இல்லை நினைவா? - நியூசிலாந்து அரை இறுதியில்

on வெள்ளி, 25 மார்ச், 2011

உலக கோப்பையில் எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாத அணி தென் ஆப்ரிக்கா. உண்மையில் அதிர்ஷ்டம் இல்லை என்பது என்னவென்று நோக்கினால் அன்றைய தினத்தில் அவர்களின் சராசரிக்கும் குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே குறிக்கும்.

அதே அளவுகோளில் பார்த்தால் இன்று நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று சொன்னால் என்னை விட மகா முட்டாள் வலை வீசி தேடினாலும் கிடைக்க மாட்டான்.

குப்தில், மெக் குல்லம் - இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் மிக குறைந்த ரன்களுக்கு தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த பின்னர், அணியை சரிவினின்று தங்களின் மிக நேர்த்தியான,பொறுமையான,விவேகமான துடுப்பாட்டத்துடன் ரைடரும் டெய்லரும் மெதுவாக மீட்டு எடுத்தனர். அந்த இணை 114 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தது. டெய்லர் 43 ரன்களும், ரெய்டர் 83 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்த பின்னர் மற்ற நியூசிலாந்து வீரர்கள் வெகு விரைவாகவே தங்கள் ஆட்டத்தை இழக்க, வில்லியம்சன் மட்டும் 38 ரன்கள் எடுத்து அணியை 221 என்ற நல்ல நிலைமைக்கு இட்டு சென்றார்.

"ஒரு கேட்ச் ஒரு மேட்ச்"

ஒரு கேட்ச் ஆட்டத்தை எப்படி திசை திருப்பும் என்பதற்கு இந்த்த போட்டி ஒரு நல்ல சான்று. டிம் சவுத்தீ வீசிய பந்தில் கல்லிஸ் அடித்த பந்தை ஜேகப் ஓரம் ஓடிக்கொண்டே பிடித்த கேட்ச் ஆட்டத்தை சட்டென நியூசிலாந்தை நோக்கி திருப்பிற்று. 47 ரன்களுடன் கல்லிஸ் சென்ற பின்னர் மற்றுமொருமுறை தென் ஆப்ரிக்கா கோப்பை கனவுகள் அகல தோல்வி அடைந்தது.

தஹிர்,பீட்டர்சன்,போத்தா எப்படி தென் ஆப்ரிக்காவிற்கு பந்து வீச்சில் இருந்தனரோ அதை போல நியூசிலாந்துக்கு வெட்டோரி,நாதன் மெக் குல்லம்,வுட் காக்  சுழலில் திணறடித்தனர்.

ஆனால் ஜேகப் ஓரம் பிடித்த இரண்டு கேட்ச் மற்றும் நான்கு விக்கெட்டுக்கள் நியூசிலாந்தை வெற்றி அடைய வைத்தது.

இது தான் வெட்டோரி விளையாடும் கடைசி போட்டி என்றெல்லாம் மீடியாவில் பேசினார்கள். ஆனால் அவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வைத்து எல்லோர் எண்ணத்தையும் பொய்யாக்கி உள்ளார்.

இந்தியா என்ன செய்யுமோ?

2 பின்னூட்டங்கள்:

இக்பால் செல்வன் சொன்னது…

அப்போ இந்தியா நியுசீலாந்து இறுதிப்போட்டியில் வரவிருக்கு.. பார்ப்போம் கிவியா - புலியானு .....

Mano சொன்னது…

The Cup is ours...

கருத்துரையிடுக