இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று நடந்த உலகக் கோப்பை இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று அலஹபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழந்து 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அபாரமாக ஆடி சதமடித்தார்.
பின்னர் வெற்றிபெற 261 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 2 விக்கெட்கள் வீழ்த்தி நன்றாக பந்து வீசிய யுவராஜ் சிங் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 64 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் கவுதம் கம்பீரும் இணைந்து அமைத்துக் கொடுத்த உறுதியான அடித்தளத்தில் தொடர்ந்து ஆட வந்த யுவராஜ் மற்றும் ரெய்னா ஜோடி இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. ரெய்னாவின் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை போட்டியினைவிட்டு வெளியேறியது. அரையிறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.
1 பின்னூட்டங்கள்:
அவுச்திரேலியா வெளியேற்வதை பார்க்க , எவ்வ்ளவு சந்தோசமா இருக்குப்பா....
கருத்துரையிடுக