திங்கள், 2 மே, 2011

பின் லேடன் மரணம் : அமெரிக்கா கொண்டாட்டம்

அமெரிக்காவிற்கு இருந்த ஒரே அச்சுறுத்தல் ஆன பின்லேடன் அந்நாட்டு ராணுவத்தால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். இனி என்ன வழக்கம்போல அவர் நல்லவரா? கெட்டவரா? விவாதம் தயாராகி ஒரு வாரத்திற்கு மீடியாவிற்கு தீனி கிடைக்கும்.


அல்குவைதா பயங்கரவாத கும்பல் தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்க அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஒபாமா : ஒசாமா பின் லேடன் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்தததாகவும், அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் தற்போது நிறை‌வேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார். இந்த நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.


சுற்றிவளைப்பு :

  ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க படைகள் ஒசாமா இருப்பிடத்தை நெருங்கியது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ., அதிகாரிகள் கொண்‌ட சிறிய குழு, இந்த ஆபரேஷனை தைரியமாக கையாண்டது. ஒரு கட்டத்தில் ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த காம்புவண்டை சுற்ற வளைத்த படைகள் லாவகமாக செயல்பட்டு ஒசாமாவை கொன்றது. தற்போது ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க ராணுவத்தினாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அல்குவைதா அச்சுறுத்தல் :

ஒசாமா கொல்லப்பட்டு விட்டதால் மட்டும் அல்குவைதா தாக்குதல் நின்று விடாது என்று முடிவுக்கு வந்து விட முடியாது . தொடர்ந்து அல்குவைதா எங்களை குறி வைத்து தாக்குதல்கள‌ை நடத்த திட்டமிடும். ஆனால் அவை முறியடிக்கப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும்.

வீரர்களுக்கு பாராட்டு :

10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்க மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக