புதன், 20 ஜூலை, 2011

பழசோ புதுசோ ஏதோ ஒண்ண கொடுங்க...

ஒரு நாட்டின் வளர்ச்சி அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அந்நாட்டின் கல்வியைப் பொறுத்தே அமையும்..
இன்றைக்கு நம்மை விட அமெரிக்காவோ ஜப்பனோ முன்னே இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பொருளாதாரத்தினால் தான் என்பது எனக்கென்னவோ சரியாக படவில்லை. கல்வி கற்பிக்கும் முறைகளில் நமக்கும் அவர்களுக்கும் டயல்-அப்பிற்கும் ப்ராட்பாண்டிற்குமான வித்தியாசம் இருக்கிறது.


அவர்கள் பிள்ளைகள் எதை விரும்புகிறார்களோ எது அவர்களுக்கு வருகிறதோ அதை சொல்லித் தருகிறார்கள். நாம் எது இருக்கிறதோ அதை மாணவன் மீது திணிக்கிறோம்.
சரி இதை எல்லாம் பல நூறு தடவை பல பேர் சொல்லி விட்டார்கள் இனி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இருக்கின்ற கல்வியை சமச்சீர் ஆக்குகிறோம் என்று பாடங்களில் தேவை அற்ற அரசியலாளர்களின் கருத்துகள் புகுந்து கொள்ள அடுத்து வந்த அரசு அதை அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் அன்றி வேறொன்றுமில்லை.

இது நாள் வரையில் பாடப் புத்தகங்களில் இந்த மாதிரி குளறுபடிகள் நடந்ததில்லை. சமச்சீர் கல்வி மிகவும் தேவையானது தான். ஆனால் நாம் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும், நம் வீட்டு விஷேசத்திற்கான அழைப்பிதழில் அடுத்தவர் பெயரை எப்படி போட மாட்டோமோ அதே போல தான் பழைய அரசு குறித்த செய்திகள் பாட நூல்களில் இருப்பதை புதிய அரசு விரும்பவில்லை.

அது எப்படியோ கிடந்து விட்டு போகிறது என்று இவர்களுக்கும் மனம் வரவில்லை, ஆட்சி போய் விட்டதே என்று அவர்களும் அதை விட மாட்டேன் என்கிறார்கள்.
கடைசியில் கஷ்டப்படுவது மாணவர்கள் தான்.

பள்ளி திறந்து ஒன்றரை மாதம் ஆகிறது இன்னும் பாட நூல்கள் கைக்கு வந்த பாடில்லை.
இங்கே இருப்பது மனப்பாட தேர்வு முறை என்பதால் பொதுத் தரவை நோக்கி இருக்கும் மாணவர்கள் நிலை மோசமாகி உள்ளது.

சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க..
எப்படியும் பசங்கள மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கத் தான் வைக்கப் போகிறீர்கள்.. பழசோ புதுசோ
சமச்சீரோ இல்லையோ
ஏதோ ஒரு புத்தகத்தை கொடுங்க

6 பின்னூட்டங்கள்:

  1. மாய உலகம்Jul 20, 2011 09:49 AM

    எப்படியும் பசங்கள மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கத் தான் வைக்கப் போகிறீர்கள்.. பழசோ புதுசோ...

    நச்சுன்னு ஒரு சவுக்கடி அரசுக்கு கொடுத்தீர்கள்...

    பதிலளிநீக்கு
  2. மாய உலகம்Jul 20, 2011 09:56 AM

    அது எப்படியோ கிடந்து விட்டு போகிறது என்று இவர்களுக்கும் மனம் வரவில்லை, ஆட்சி போய் விட்டதே என்று அவர்களும் அதை விட மாட்டேன் என்கிறார்கள்.
    கடைசியில் கஷ்டப்படுவது மாணவர்கள் தான்.

    நான் மாணவனாக இருந்த போது மனப்பாடம் பண்ணி சொன்னால் அனைவரும் பாராட்டினார்கள்... ஆனால் அர்த்தம் தெரியாது ...
    இது டிகிரி வரை தொடர்ந்தது....

    தமிழ் நாட்டில் தமிழ் பள்ளியில் படித்தவன் .. எனக்கு தமிழ் இலக்கியம் தெரியாது... என்னைபோன்று தானே பல பேர்... எதற்காக படிக்கிறோம் என்றே தெரியாமல் கவுரவுத்துக்காகவும், எதற்க்கோ படித்துவிட்டு.... ச்சே..

    பதிலளிநீக்கு
  3. மாய உலகம்Jul 20, 2011 10:01 AM

    தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 80 பேர் திறன் வாய்ந்தவர்களாக இருந்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 20 பேர் கூட திறன் வாய்ந்தவர்களாக இல்லை.... இது முழுக்க போதிக்கப்படும் முறையே.....

    பயிற்சி கூடங்களுடன் கூடிய பாடம் 1ம் வகுப்பிலேருந்து எப்பொழுது வருகிறதோ ...மாற்றம் வரும்.....

    பதிலளிநீக்கு
  4. மாய உலகம்Jul 20, 2011 10:04 AM

    //ஒரு நாட்டின் வளர்ச்சி அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அந்நாட்டின் கல்வியைப் பொறுத்தே அமையும்..//

    முழுக்க முழுக்க முற்றிலும் உண்மை... நாட்டின் வளர்ச்சியைப்பற்றி நம் நாட்டிற்கு கவலையிருக்காது நண்பா....

    பதிலளிநீக்கு
  5. சுந்தர்Jul 22, 2011 06:02 AM

    சமச்சீர் கல்வி எல்லோருக்கும் தேவை தான்
    ஆனால் அந்த பாடத்திட்டத்தில் ஏதோ தி மு க வை பற்றியே எழுதி உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது

    தெளிவான பாடத்திட்டம் கொண்ட ஒரு கல்வித்திட்டம் தமிழகத்துக்கு தேவை

    பதிலளிநீக்கு
  6. அம்பாளடியாள்Jul 29, 2011 11:54 PM

    சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க..
    எப்படியும் பசங்கள மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கத் தான் வைக்கப் போகிறீர்கள்.. பழசோ புதுசோ
    சமச்சீரோ இல்லையோ
    ஏதோ ஒரு புத்தகத்தை கொடுங்க

    வேதனைக்குரிய விசயம்.இதனால் அதிகம் பாதிக்கப்படுவது
    மாணவர்கள்தான் இந்த நிலை மாற வேண்டும் . அருமையாக
    புரிய வைத்துள்ளீர்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ..........

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...