வெள்ளி, 29 ஏப்ரல், 2011

பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும் மூன்று இலக்க ரன்கள் அடிக்கவில்லை என்பது சச்சின் தன் திறமையை எந்த ஆடுகளத்திலும் மிகச் சிறப்பாக பயன்படுத்துவார் என்பதற்கு நல்ல சான்று.


சதம் #4

ரன்கள் : 111
எதிரணி : தென் ஆப்ரிக்கா
இடம் : ஜோஹன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா
நாள் :  நவம்பர் 28,1992
ஆட்ட முடிவு : டிரா
ஆட்ட நாயகன் : இல்லை

போட்டியின் முதல் இன்னிங்க்ஸ்-ல் 292 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்ரிக்கா. இந்த டெஸ்ட் போட்டியின் எந்த இன்னிங்க்ஸ்-லும் ரன் விகிதம் 3 ஐக் கூட தொடவில்லை. ஜான்டி ரோட்ஸ் 28 ரன்கள் எடுத்த பொது ரன் அவுட் ஆனார். ஆனால் பக்னர் மூன்றாவது நடுவரைக் கூடக் கேட்காமல் அவுட் இல்லை என்று சொல்லி அவருக்கு நல்ல வாய்ப்பு கொடுக்க அவர் 91 ரன்கள் எடுத்து இந்தியா கையில் இருந்து ஆட்டத்தை பறித்தார்.

முதலில் மனோஜ் பிரபாகரின் ஸ்விங் பந்து வீச்சில் சிக்கி நான்கு விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு பறி கொடுத்தது தென் ஆப்ரிக்கா. பின் மேக்மில்லன்,ரோட்ஸ்-ன் ரன்களால் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்தது.

இரண்டாவதாக ஆடத் தொடங்கிய இந்திய அணியினர் எந்த நிலையிலும் தென் ஆப்ரிக்கா பந்துகளை சமாளிக்க முடியாமல் போயிற்று. சச்சினுக்கு பத்து ரன்களில் ஒரு டாப் எட்ஜ் மூலம் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வேளை அந்த கேட்ச் மட்டும் பிடிக்கப்பட்டிருந்தால் இந்திய அணி 100 ரன்களை கடந்திருப்பது கூட கஷ்டமாக மாறி இருக்கும்.

திணறிக் கொண்டிருந்த அணியின் நடுவில் சச்சின் மட்டும் நம்பிக்கையுடன் விளையாடி தொடர்ந்து எந்த பார்ட்னர்ஷிப்பும் கிடைக்காவிட்டாலும் நூறு ரன்களை கடந்தார்.இந்த போட்டியில் 33 ரன்கள் அடித்திருந்த பொது சச்சின் 1000 ரன்களைக் கடந்த மிக இளம் வீரர் (19 வயது 217 நாட்கள்) என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே அந்த பெருமையை வைத்திருந்தவரும் ஒரு இந்தியர் தான், அவர் கபில் தேவ். சச்சின் அவரை விட இரண்டு வயது முன்னதாகவே இந்த சாதனையைப் படைத்தார்.

270 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரிகளின் உதவியுடன் சச்சின் 111 ரன்கள் அடித்தார். அற்புதமான ஸ்ட்ரைட் டிரைவ் மூலம் தொடங்கி, கண்ணுக்கு விருந்தாக ஸ்கொயர் டிரைவ், லெக் க்லான்ஸ் என பல வகை ஷாட்களும் இந்த போட்டியில் பார்க்க கிட்டியது. சச்சினுக்கு அடுத்து இந்திய வீரர் ஒருவரின் சிறப்பான ஆட்டம் வெறும் 25 ரன்கள் தான், கடை நிலையில் களமிறங்கிய கபில் தேவ் தான் அதையும் அடித்தார். இந்த ஆட்டத்தில் அவரது பேட்டிங்கிற்கு சவாலாக விளங்கியவர் டொனால்ட், இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் அவர் சச்சினின் விக்கெட்டை தன் வேகத்தால் கைப்பற்றவும் செய்தார்.

கடைசி நாளில் இந்தியா வெற்றிக்கு 303 ரன்கள் அடிக்க வேண்டும், ஆனால் இரு அணிகளும் வெற்றி பெற நம்பிக்கை இல்லாமல் போட்டியை சீக்கிரத்தில் முடித்துக் கொண்டார்கள்.

காணொளி : 

                            

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்...

அந்த சென்னையை சச்சினுக்கு ஏன் பிடிக்கும் எனும் காரணம், நாளை...!

வியாழன், 28 ஏப்ரல், 2011

நம் கணினிக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு தளங்களை பயன்படுத்துவோம்.ஆனால் பெரும்பாலான நேரங்களில் இங்கிருந்து அங்கு,அங்கிருந்து இங்கு என சுற்றி கடைசியில் மென்பொருளுக்கான தரவிறக்க சுட்டியை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

இன்றைய கோப்புறையில் நாம் மென்பொருள்களை நேரடியாக தரவிறக்க உதவும் இணைய கோப்புறை.

இதில் இன்டர்நெட் தொடர்பான மென்பொருள்கள், .நெட், டோர்ரென்ட், அடோப் ரீடர், விஷுவல் பேசிக், நச்சு நிரல் அழிப்பான்கள் என நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன.

மென்பொருள்கள்

இந்த தளத்தை அறிமுகப்படுத்துவதை தவிர வேறு எதற்கும் தமிழ்தெல் பொறுப்பாகாது.
நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம்.
இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம்.

நம்ம இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பிட்சுகள் எல்லாமே சுழலுக்கு சாதகமானவை. வேகப் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாது.ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் உள்ளவை வேகப் பந்துவீச்சுக்கு மிக நன்றாக ஈடுகொடுக்கக் கூடியவை. அதனாலேயே மிரட்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் பலரும் அங்கிருந்து உருவாகி இருக்கின்றனர்.

1992 ல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட ஆஸ்திரேலியா சென்றது நம் அணி. நான்கு போட்டிகளில் தோல்வி, ஒன்றில் மட்டுமே டிரா என சோகமாகவே இந்த தொடர் அமைந்தது.

சதம் #2

ரன்கள் : 148
எதிரணி : ஆஸ்திரேலியா
இடம் : சிட்னி,ஆஸ்திரேலியா
நாள் :  ஜனவரி 6,1992
ஆட்ட முடிவு : டிரா

இந்தியா அந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்த ஒரே போட்டி இது தான். நான்கு வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கியது இந்திய அணி, ஒரு வேளை நல்ல ஸ்பின்னர் ஒருவர் இருந்திருந்தால் கடைசி நாளில் நன்றாக பந்து திரும்பிய இந்த போட்டியை இந்தியா வசம் கொண்டு வந்திருக்க முடியும்.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து இந்திய அணியில் ரவி சாஸ்திரியின் அற்புதமான இரட்டை சதத்தால் இந்தியா வலுவான நிலையில் இருந்தது.

சச்சின் தனது இரண்டாவது சதத்தை இந்த போட்டியில் தான் பதிவு செய்தார். அவர் ரவி சாஸ்திரி உடன் சேர்ந்து 196 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் தான் கிரிக்கெட் உலகின் சிறந்த எதிராளிகள்(விளையாடும் போது தான்) சச்சினும் வார்னேவும் முதன் முதலாக சந்தித்து கொண்டனர். இந்த போட்டி தான் ஷேன் வார்னேவின் முதல் சர்வதேச போட்டி ஆகும்.

சச்சின் தான் சந்தித்த 213 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 148 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இதில் அவரது அனாயாசமான பவுண்டரிகளுக்கு ஆஸ்திரேலியர்களும் ரசிகராயினர். சச்சின் இந்த சதம் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆனால் கடைசி நாளன்று ஆஸ்திரேலிய அணியின் எட்டு விக்கெட்டுகளை எடுத்த இந்திய அணியில் நல்ல ஸ்பின்னர் இல்லாதது குறையாக போய் விட்டது. இல்லையேல் வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. சச்சினும் ஒரு ஓவர் கடைசியில் பந்து வீசி ஒரு விக்கெட் எடுத்து அதனை நிரூபித்து இருந்தார்.

காணொளி :

                      

சதம் #3


ரன்கள் : 114
எதிரணி : ஆஸ்திரேலியா
இடம் : பெர்த்,ஆஸ்திரேலியா
நாள் :  பெப்ரவரி 3,1992
ஆட்ட முடிவு : தோல்வி

ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று விட்டிருந்த நிலையில் ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்று களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 346 ரன்கள் எடுத்தது, ஸ்ரீகாந்த் ஐந்து கேட்சுகள் பிடித்து அசத்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸ் ஐ ஆடத் தொடங்கிய இந்திய அணியில் ஸ்ரீகாந்த் தாம் தூம் தொடக்கம் அளித்தாலும், அதற்கு பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்த வீதம் சீரான இடைவெளி என்று கூட சொல்ல முடியாது குறைந்த இடைவெளி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சச்சின் மட்டும் தனி ஆளாக ஒரு பக்கம் ஆஸ்திரேலிய வகத்தை சமாளித்து கொண்டிருக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கத் தொடங்கினர். ஆனால் கடைசியில் கிரண் மோரே கம்பெனி கொடுக்க சச்சின் கொஞ்ச நேரம் ஆஸ்திரேலிய பந்துகளை சிதறடித்தார்.

போட்டியில் மொத்தம் 16 பவுண்டரிகள் அடித்தார் சச்சின், அதில் பெரும்பான்மையானவை ஸ்கொயர் கட் ஆகும்.இதற்காக ரிச்சி பேனாட் போட்டி முடிந்ததும் சச்சினை வெகுவாக பாராட்டி இருந்தார். பார்ட்னர்ஷிப் அமையாமல் கஷ்டப்பட்ட சச்சின் தனது இரண்டாவது ஐம்பது ரன்களை 55 பந்துக்கெல்லாம் அடித்தார்.

இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததும் களமிறங்கிய சச்சின் ஒன்பதாவது விக்கெட்டாகத் தான் ஆட்டம் இழந்தார்.இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் மோசமான ஆட்டத்தால் இந்திய தோல்வி அடைந்தது ( சச்சினும் 5 ரன்கள் தான் அடித்தார்).

சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்று விடுகிறது என்று பேசுபவர்கள் கவனிக்க : சச்சின் அடித்த 114 ரன்களுக்கு அடுத்து இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் 43 அதுவும் பத்தாவது ஆட்டக்காரராக விளையாடிய கிரண் மோரே உடையது. இப்படி இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்?

காணொளி :

                    

முழு காணொளி இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்..

நாளை : சென்னையை சச்சினுக்கு ரொம்ப பிடிக்கக் காரணம்??

பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து பலரையும் சேர உதவுங்கள்...
  

புதன், 27 ஏப்ரல், 2011

நேற்று வால்பேப்பர் ஃபோல்டர் ஓரளவிற்கு பலரையும் சேர காரணமாய் இருந்த, பதிவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி..!

கவியரசு கண்ணதாசனின் பாடல்களை ரசிக்காத தமிழ் பிடித்த தமிழர்கள் யாரும் இருக்க முடியாது.அவரின் பாடல்களை தொகுத்து வைத்திருக்கும் ஒரு இணைய ஃபோல்டரைத் தான் இன்று பகிரப் போகிறேன்.

இணைப்பு 1 :  கண்ணதாசன்
 

இணைப்பு 2 : தத்துவம் 

கவியரசரின் வரிகளில் பலருக்கும் பலவும் பிடித்திருக்கும்,
எனக்கு மிகப் பிடித்த அவரின் பாடல்,

படம்: அவள் ஒரு தொடர் கதை
பாடல்: தெய்வம் தந்த வீடு வீதியிருக்குதெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாயென்ன
மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்காக கடவுள் அனுப்பி வைத்த தூதுவர்.
இந்தியாவின் நூறு கோடி பேருக்கும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றால் அது சச்சின் சதமடிப்பதாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

இருபது ஆண்டுகளை தாண்டியும், ஒரு இருபது வயது இளைஞனை போல விளையாடி வருகிறார் அவர். 1989 ல் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து நாட்டின் கிரிக்கெட் பசிக்கு இன்று வரை தீனி போட்டு வருகிறார் சச்சின்.

எல்லோரும் ஒரு சதம் அடிப்பதே பெரிய விசயம் என்றால் இவர் இப்போது சதத்தில் சதம் அடிக்கப் போகிறார். 99 சர்வதேச சதங்கள் அடித்து இருக்கும் அவர், இன்னும் கொஞ்ச நாட்களில் நூறாவது சதம் அடித்து விடுவார்.

சரி, இதுவரை அவரடித்த சதங்களின் தொகுப்பாக இந்த தொடர் பதிவை இடலாம் என்றிருக்கிறேன்.

இன்று :

1) 119* vs இங்கிலாந்து

இந்த போட்டியில் மட்டும் மொத்தம் ஆறு சதங்கள் அடிக்கப்பட்டன. ஆனால் சச்சின் அடித்த அந்த முதல் சதம், எல்லாவற்றிற்கும் மேலானது. தன் வருகையை கிரிக்கெட் உலகிற்கு உணர்த்திய சதம் அது.

சச்சின் நான்காவது இன்னிங்ஸ்-ல் சரியாக விளையாடமாட்டார் என்பவர்கள் கவனிக்க : சச்சினின் முதல் சதமே இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் இங்கிலாந்து வீரகளிடம் தஞ்சம் புக மனோஜ் பிரபாகர் உடன் கூட்டணி அமைத்து சதமடித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு எடுத்தார்.

இதில் மொத்தம் 17 பவுண்டரிகள் அடித்து இருந்தார்.முதல் இன்னிங்க்ஸ்-ல் 68 ரன் அடித்து இருந்தார். ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டதில் வியப்பு ஏதுமில்லை.

Cricinfo ஆட்ட விவரம் 

                    

நாளை முதல் நாளொன்றுக்கு இரண்டு சதம் வீதம் இடலாமா? என்றிருக்கிறேன்..
பதிவு பிடித்தால் வாக்கு அளியுங்கள்..
என் முதல் சிறுகதையை வெகுசிலரே படித்து அதிலும் மிக சிலரே "பரவாயில்லை" என்று சொல்லி இருந்தனர். இருந்தாலும் தொடர்ந்து எழுதினால் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுத தெரிந்து கொள்ள மாட்டோமா என்ற நப்பாசையில் தான் இந்த சிறுகதை..
                                             -----------------------------------

"ம்ம்.. அதுக்குள்ளே என்னம்மா?
இப்பதானே மணி 8 ஆகுது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே ம்மா"
தட்டி எழுப்பிய அம்மாவை கெஞ்சினான் கார்த்திக். இளம் வயது, ரெண்டு நாள் தாடி, கர்லிங் முடி, மாநிறம் என 2011 ன் தமிழ் மகன் அவன்.

அம்மா தொடர்ந்து அவனை எழுப்ப முயற்சித்து கொண்டே சொன்னாள்.
"அந்த ஆளு ஏற்கனவே ரெண்டு தடவை போன் பண்ணிட்டாரு டா..
சீக்கிரம் எழுந்து கெளம்புடா"

"யாரு அந்த வழுக்கை தலையனா?"

"டேய்.. எத்தன தடவ சொல்லி இருக்கன்..
பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு"

"அடப் போம்மா.. அவருக்கு வேற ஆளே கிடைக்க மாட்டாங்களா..
எதுக்கு எடுத்தாலும் என்னையவே கூப்பிட்டு உசிர எடுக்கிறார் மா"

"என்னவாச்சும் முக்கியமான சோலியா இருக்கும்டா. அதான் காலையிலேயே கூப்பிடுறார்"

"சரி.. நீ போய் காபி போடும்மா நான் வந்துர்றேன்"

மணி 8.20 ஐ கடந்து கொண்டிருந்தது.

"டேய்.. கார்த்திக் காபி போட்டு கால் மணிக்கு மேல ஆவுது டா. எந்திரிச்சு வாடா"

கார்த்திக் அந்த கடைசி நிமிடத்து தூக்கத்தை விட முடியாமல் எழுந்து சென்று பல் கூட துலக்காமல் காபி குடித்தான்.அதை பார்த்த அம்மா வழக்கமான சொற்களை உதிர்க்க தொடங்கினாள்.

"ஏண்டா ஏழு கழுதை வயசு ஆகுது. பல்ல கூட வெளக்கமா காபி குடிக்கிறியே டா. இப்படியே இருந்தா நாளைக்கு வரப்போரவ என்னை , 'ஏன் இப்படி உம்புள்ளைய லட்சணமா வளர்த்து வெச்சிருக்கே'ன்னு கேட்டா நான் என்னத்த சொல்ல.."
அவள் தொடர்ந்து கொண்டே இருக்கே எதையுமே காதில் வாங்காமல் கார்த்திக் குளிக்க சென்று விட்டான்.

குளித்து விட்டு வந்த அவன், தன் கைப்பேசியில் ஏழு முறை தவறிய அழைப்புகள் இருந்தததை பார்த்து எடுத்தான்.

"யார் இது?
புது நம்பரா இருக்கு.."

அந்த எண்ணுக்கு அழைத்தான்.

"ஹலோ.."

"கார்த்திக்.. நான் சண்முகதாசன் பேசறேன் பா"

கார்த்திக் மனதிற்குள்,
"அய்யய்யோ.. இந்த ஆளா, இவன் ஏன் அவன் நம்பர்ல இருந்து கூப்பிடமா.. "

"ஏம்பா.. என் நம்பர் னா தான் எடுக்க மாட்டேங்கிற புது நம்பர்ல இருந்து பண்ணாலும் எடுக்கமாட்டீங்கிறியே.."

"இல்லை சார். ஆபிஸ் கெளம்பி வந்துட்டு இருக்கன், அதான் போன கவனிக்கல,
சொல்லுங்க சார், எதாவது முக்கியமான விஷயமா?"

"ரொம்ப முக்கியமான விஷயம் எல்லாம் ஒண்ணுமில்ல,
நீ இன்னிக்கு ஆபிஸ்க்கு வர வேண்டாம்"

"சார்....  ரொம்ப தேங்க்ஸ் சார்.."

"அவசரப்படாதப்பா.. உனக்கு இன்னிக்கு வேற வேலை இருக்கு"

"என்ன சார்?"

"நம்ம கயல்விழி அண்ணனுக்கு இன்னிக்கு கல்யாணம் இல்லையா"

"அங்க போயிட்டு வரணுமா சார்?"

"சொல்றத முழுசா கேளுய்யா"

"சொல்லுங்க சார்"

"அதனால, அவ இன்னிக்கு வரல, சோ... அவ போய் பேட்டி எடுக்க வேண்டிய ஒருத்தர நீ போய் பேட்டி எடுக்கணும்"

"சார் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது சார்..
எனக்கு இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரம் மட்டுந்தான் தெரியும்னு உங்களுக்கே தெரியும்"

"கார்த்திக்.. பத்திரிக்கையில வேலை செய்யறவன் இப்படி எல்லாம் சொல்லக் கூடாது,
நீ கண்டிப்பா இத செஞ்சி தான் ஆகணும். இந்த வார எடிஷன்ல அவர் பேட்டி வருது,
என்ன சரியா?"

"என்ன பண்றது.. சரின்னு சொல்லலைன்னா விட்ருவீங்களா என்ன?"

"அவர் யாரு என்ன விவரங்கிறத மெயில் பண்ணி இருக்கன்.. பாத்து போய்ட்டு வா"

"சரிங்க சார்.."
என்று ஒப்புக்கு சொல்லி விட்டு மனதிற்குள் அவரை கரித்துக் கொட்டத் தொடங்கினான்.
"அம்மா சாப்பாடு எடுத்து வைம்மா"
என்று சொல்லி விட்டு மடிக்கணினியில் தலையை விட்டு,
மின்னஞ்சலில் இருந்து அவன் எடிட்டர் அனுப்பியதை பார்த்து நொந்து போய் விட்டான், கார்த்திக்.

இருக்காதா பின்னே?
அவன் எதை மிக வெறுக்கின்றானோ அதைப் பற்றிய ஒருவரிடம் கேள்விகள் கேட்க வேண்டுமானால், அவன் என்ன செய்வான்.
ஒரு ஆன்மீகவாதியை கண்டு கேட்டு வரச் சொல்லி மின்னஞ்சல் வந்திருந்தது.

அது ஏனோ தெரியவில்லை, சிறு வயதில் இருந்தே கார்த்திக்கிற்கு கடவுளை பிடிக்கவில்லை.
தனது பெயர் முருகப் பெருமானை குறிப்பதை அறிந்து அதை மாற்றிக் கொள்ளவும் சில காலம் சிந்தித்தான். ஆனால் அவன் பெற்றோர் இட்ட பெயர் ஆதலின் அந்த எண்ணத்தைக் கைவிடல் ஆனான்.

"டேய்.. எந்த நேரம் பாத்தாலும் கம்ப்யூட்டர் தானா,
குளிச்சதும் நாங்க சாமிய கும்பிட்டா,
இவன் கம்ப்யூட்டர கும்பிட ஆரம்பிச்சிர்ரான்..
சீக்கிரம் வந்து சாப்புட்டுட்டு விடறா, எனக்கு நெறைய வேல கெடக்கு"

"இதோ வந்துட்டன்மா" என்றவாறு தனது மடிக்கணினியில் இருந்து அந்த ஆன்மீகவாதியின் முகவரியை குறித்துக் கொண்டு சாப்பிட வந்தான்.

உணவை முடித்து, பெரும் யோசனையுடனே வீட்டை விட்டு கிளம்பினான்.
தன் மனதில் நீண்ட நாட்களாக கடவுள் குறித்தும், அவர் பெயரால் நடக்கும் கூத்துகள் குறித்தும் இன்று கேட்டு விடுவது என்று முடிவெடுத்தான்.

தன் மோட்டார் வண்டியை ஸ்டார்ட்  செய்து பயணிக்க தொடங்கிய அவனுள் எண்ணங்கள் படரத் தொடங்கியது.

அந்த சாமியாரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகளை அவன் மனம் தாயார் செய்தது.
அமரர் சுஜாதாவின் அந்த கேள்வியையே முதலாவது கேள்வியாக வைப்பதென முடிவெடுத்தான்.

"கடவுள் இருக்கின்றாரா?"

இதனை தொடர்ந்து அடுக்கடுக்காய் அவன் மனம் கேள்விகளை தயாரித்தது.

"கடவுள் இருக்கிறார் எனில் அவர் ஏன் எல்லா மனிதர்களையும் தன் பக்கம் இழுக்கவில்லை
என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கை அற்றவர்களை ஏன் படைக்க வேண்டும்"

"ஏன் ஒரே மதத்தை படைக்காமல், இப்படி வன்முறைகளை வளர்க்கும்படி மதங்களை வளர்த்து விட வேண்டும்?"

"பிரார்த்தனைகள் மூலம் எதையும் சாதிக்கலாம் என்றால், ஏன் 100 கோடி பேர் வேண்டியும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைகிறது? மகான்கள் இறந்து போகிறார்கள்"

"சின்னஞ்சிறு குழந்தைகளை துன்புறுத்தும் பலரையும் காண்கிறோமே, அவர்களின் அந்த நிலைமைக்கு காரணம் யார், கடவுளா?"

"எல்லோரும் ஒரே கடவுளைத் தானே வணங்குகிறார்கள்,
ஏன் சிலரை வளம் பெற்றவராகவும்,சிலரை ஏழைகளாகவும்,
சிலரை நலம் உடையவராகவும், சிலரை நோயுற்றவராகவும் படைக்கிறான்?"

''தெய்வம் நின்று கொல்லும் என்கிறீர்களே,
இப்போதெல்லாம் தவறிழைத்தால் தவறியும் அவர்கள் தண்டனைக்கு உட்படுவதில்லையே ஏன்?"

"எல்லாமே அவரவர் கர்ம விதிப்படி தான் நடக்கும் என்றால், கடவுள் என்ற பாத்திரம் எதற்கு?"

"அறிவியலின் படி உலகம் தோன்றியது வரை ஆதாரம் இருக்கையில், மொத்தமாக இறைவன் தான் உலகை சிருஷ்டித்தார் என்று இன்னும் எத்தனை காலம் ஏமாற்றப் போகிறீர்கள்"

"சாமியே கிடையாது என்று நினைக்கையில் உங்களுக்குள்ளேயே பல போலி சாமியார்கள் இருக்கின்றனர், கடவுளே தான் இவர்களை வளர்க்கிறாரா?"

இன்னும் அடுக்கடுக்காய் அவன் மனம் கேள்விகளை தயார் செய்து வைத்து இருந்தது. மெல்ல அவன் வர வேண்டிய இடம் வந்து விட்டிருந்தது.
பைக்கை விட்டு கீழிறங்கி நடக்கலானான், என்னதான் கடவுளை இல்லை என்று சொன்னாலும், கோயில்களிலும் இது போன்ற ஆசிரமங்களிலும் கிடைக்கும் அமைதி நிச்சயம் மனிதனின் மனதை பாதிக்கக் கூடியது தான்.

'பக்த பீடம்' என்னும் வார்த்தைகளோடு, அவனை வரவேற்றது ஆசிரமம்.
தனக்கு முன்னர் இன்னும் சிலர் அவரை பேட்டி காண வந்து காத்து கிடப்பது அறிந்து, மீண்டும் ஒரு முறை எடிட்டரை நொந்து விட்டு அவர்களோடு சேர்ந்து இவனும் வரிசையில் காக்க தொடங்கினான்.

அவன் பக்கத்தில் இருந்தவரிடம் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?" என்று கேட்டான். பதிலே வரவில்லை, ஏதோ சைகையால் சொன்னார், இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அரை மணித்துளிகளுக்கு பின்னர் இவனுக்கு அழைப்பு வந்தது.

போய் பார்த்து ஒரு சம்பிரதாயமாக கையெடுத்து வணங்கி விட்டு
"எப்படி இருக்கிறீர்கள், சுவாமி"  என்று இவன் ஆரம்பிக்க, சாமியாரின் பக்கத்தில் இருந்தவர். ஏதோ சொல்ல முயல, அதற்குள் இவன் அடுத்து பேசத் தொடங்கினான்.

ஆனால், சில நொடிகளிலேயே அவனுக்கு இருந்த எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்து விட்டது.
அந்த வினாக்கள் அனைத்துக்கும் ஒரு மெல்லிய புன்னகை தான் பதில்.
ஆம், சாமியார் வாய் பேச முடியாதவர்.அதனால் தான் அவரை சுற்றி உள்ளோரும் பெரும்பாலும் அவ்வாறே நடக்க விழைகின்றனர்.

இறுதியில் சைகையால் என்ன என்ன கேட்க முடியுமோ அவற்றை கேட்டு முடித்து விட்டு, வெளியில் வந்த கார்த்திக்கின் கைபேசி அழைத்தது,சண்முகநாதன் பேசினார்.

"ஹலோ.. சாரிப்பா ஒரு விஷயத்தை மெயில்ல சொல்ல மறந்துட்டன், அவர் வாய் பேச முடியாதவர் பா..."

இவனாகவே இணைப்பை துண்டித்ததும், கார்த்திக் மனம் புதிதாய் ஏதோ அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தது. இங்கு வரும் முன் கடவுள் விஷயத்தில் தெளிவாக"இல்லை" என்னும் முடிவோடு இருந்த அவன், இப்போது "இருக்கிறாரோ?" என்னும் நிலைக்கு அவனது விட்டான்.

"கடவுளே இல்லை என்னும் நான் ஏன் இவரை பேட்டி காண வேண்டும்?"

"ஏன் ஏன் வினாக்கள் அனைத்துக்குமே அந்த சிரிப்பு தான் பதிலாக வந்தது?"

எனுமாறு, இவன் நடந்தவற்றை சிந்திக்க தொடங்கினான்.அடுத்த சில வாரங்களில், கம்ப்யூட்டரோடு சேர்த்து கடவுளையும் நம்ப ஆரம்பித்தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவன் வைத்திருந்த கேள்விகளுக்கு வாய் பேச முடிந்த சாமியாராக இருந்திருந்தாலும் பதில் இதுவாக தான் இருக்க முடியும். "மௌனம்"

---

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நாம் சில வேளைகளில் நிறைய கோப்புகளை இணையத்தில் தேடிக் கொண்டிருப்போம். திடீரென்று நமக்கு நாம் தேடும் கோப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுண்டு.

அப்படி நான் கண்ட சில இணையதள கோப்பு உரைகளை (Web File Directories) பகிரலாம் என்று இருக்கிறேன்.
இதன் மூலம் நீங்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். எந்த வித சுற்றலும் இருக்காது.

இன்று :

வால்பேப்பர்கள் மூலம் நம் கணினியின் முகப்பு திரை அலங்கரிக்கப்பட எல்லோரும் விரும்புவோம்.
இந்த தளத்தில் நிறைய வால்பேப்பர்கள் கிடைக்கின்றன.

பின்வரும் இணைப்பை சொடுக்கி காணுங்கள்.

கோப்புறை இணைப்பு  

சில படங்கள் :


 முயற்சி பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..
அடுத்தடுத்த நாட்களில் இதனை தொடர உதவும்..

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

உங்கள் ப்ளாக்கினை திறக்கும் போது எப்போதும் கீழ்காணும் ஐகானை மட்டும் காண்கிறீர்கள் என்றால், அதனை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு வைத்து கொள்ளுதல் மிகவும் எளிது.

முதலில் உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டை திறந்து, டிசைன் மெனுவில் செல்லவும்.
Edit HTML என்பதினுள் நுழையவும்.

பின்னர்,

1 ) என்பதை தேடவும்.

2 ) அதற்கு முன்னர் கீழ்க்காணுமாறு இரண்டு வரிகளை Paste செய்யவும்.

இப்போது இம்மாதிரி வரிகள் தோற்றமளிக்கும்.


இங்கு http://s1.postimage.org/126wc235w/favicon.gif என்ற முகவரிக்கு பதில் தங்கள் படத்தின் முகவரியை உள்ளீடு செய்யவும்.

இந்த படம் 32*32 அளவில் இருக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்க.

ஐயங்கள் இருப்பின் பின்னூட்டப்படுத்துக..

மறவாமல் வாக்களித்து பலரிடமும் பதிவை சேர்த்திடுங்கள் 


வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இன்று உலக சிங்கங்கள் தினம்...

என்று எல்லாவற்றிற்கும் எதாவது தினம் என்றால் மட்டுமே நினைவு கொள்ள வேண்டுமா என்ன?
தங்கை சிங்கம் சிரித்து பேசும் கார்ட்டூன் தொடர் பார்த்துக் கொண்டிருக்க எனக்கும் சிங்கங்கள் பற்றி ஆசை வர நெட்டில் சுட்ட கொஞ்சம் நல்ல 'சிங்கம்' படங்கள் இங்கே..

படத்தின் மீது சுட்டினால் பெரிய அளவில் கிடைக்கும்..


நீங்க மட்டும் தான் ரொமான்ஸ் பண்ணுவீங்களா?
நாங்களும் பண்ணுவோம்ல...

பால் கொடுத்தால் அழகு கெட்டுடும்னு அம்மா நெனச்சிருக்குமோ ?" என்னப்பா இது மட்டன் இவ்வளவு காரமா இருக்கு..
இதுக்கு தான் பச்சையாவே கொன்னு சாப்பிடனுங்கிறது"


"இவ்வளவு நேரமாச்சு எவனையுமே காணோம்..
இன்னிக்கு பட்டினி தானா""டேய்.. போட்டோ புடிச்சது போதும்.. கிளம்புடா..
பசிக்குது.. கடிச்சி தின்னுட போறேன்" 
இன்டீசென்ட் ஃபெல்லோ..
தூங்கரவங்கள டிஸ்டர்ப் பண்ற (தமிழ்? குழந்தை அல்லவா? )

 

சிங்கம்.. புலி..
பயப்படாதீங்க.. ஜீவா படம் கிடையாது..
நாங்கதான்..
ம்ம்ம்.. மம்மி..
எங்க போற.. நானும் வரேன்..
ம்ம்ம்...

வியாழன், 21 ஏப்ரல், 2011


1) twitter.com/rsekar007

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு : சோனியா பதில் #
இது திருடனே போலீசுக்கு ஆதரவு மாதிரி இருக்கு... #TNfisherman #Defeatcongress

2) twitter.com/minimeens 

பஞ்ச பாண்டவர் அஞ்சு பேரு.
பாஞ்சாலிக்கு பிரச்னையே இல்ல. கண்ணகி மாதவி ரெண்டு பேரு. கோவலன் செத்தே போனான்..! #நீதிக்கதைகள்

 3) twitter.com/g_for_guru

சொத்துக்களை ரம்லத்துக்கு எழுதிக் கொடுத்தார்
பிரபுதேவா!#சொத்த வித்து செகண்ட் ஹான்ட் வண்டி வாங்குன முத கூமுட்ட நீதான்ய்யா!!!

4) twitter.com/kolaaru 

ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்குகள் # பரவாயில்லையே இப்ப இருந்தே எதிர்கட்சியா செயல்பட ஆரம்பிச்சுடீங்க .. வாழ்த்துகள் !!

5) twitter.com/Nila_Here

'நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை'
இருக்கனும்னு நெனைச்சாலும் இன்னும் தலை குனிந்து தான் நடக்க வேண்டியது இருக்கு # ரோடு லட்சணம் அப்படி

6) twitter.com/iamkarki 

தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான்
தானே உன‌க்கு ரானி? எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே

8) twitter.com/Kaniyen

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத்
திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார் !

9) twitter.com/karaiyaan 

நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்:
கே.வி.தங்கபாலு - எறியும்னு எழுதறதுக்கு எரியும்னு போட்டுட்டாய்ங்களோ #டவுட் - RT

10) twitter.com/tamiltel

ஒரு மணி நேரத்தில் உடம்பு இளைக்க வழி #
போட்டோஷாப் கத்துக்கங்க ..புதன், 20 ஏப்ரல், 2011

ஐபிஎல் போட்டிகளில் மும்பை-புனே இடையே நடந்த போட்டி மிக எளிதாக மும்பை அணிக்கு சாதகமாகும் என்று பார்த்தால், புனே அணி ஆட்டத்தின் பின் பகுதியில் திறமை காட்டி போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நீளச் செய்தனர்.

நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. முர்டாசா முதல் ஓவரை வீசினர். அவரின்  ரன் எடுக்க முடியாதபடியான பந்துகளால் சிரமப்பட்ட புனே அணி 3.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நெச்சிம்,முனாப் அடுத்தடுத்து புனே வீரர்களை அவுட் ஆக்கி ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
சச்சின் பின்புறமாக நகர்ந்து கேட்ச் பிடித்து முதல் விக்கெட்டை தொடக்கி வைத்தார்.

கேப்டன் யுவராஜ் சிங் அவுட் ஆனதும் கிட்டத்தட்ட உத்தப்பாவே கதி என்ற நிலைக்கு புனே போனது. சைமண்ட்ஸ் ஒருவேளை அடுத்த ஓவரில் தனது கீழாக ஸ்டம்பை நோக்கி அடித்த (Under Arm) பந்தை துல்லியப்படுத்தி இருந்தால், புனே 100 ரன்கள் எடுப்பதே சிரமம் ஆகி இருக்கும்.

முர்டசா, மலிங்கா சேர்ந்து உத்தப்பாவுக்கு நல்ல இணை யாரும் அமையாமல் பார்த்து கொண்டனர். ஆனாலும் உத்தப்பா சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் அதிகபட்ச தனி நபர் ஓட்டங்களும் அது தான்.

இறுதியில் வெறும் 119 ரன்களை இலக்காக நிர்ணயித்து புனே தன் ஆட்டத்தை முடித்து கொண்டது. பின்னர் ஆடத் தொடங்கிய மும்பை அணியின் பிராங்க்ளின் விரைவாக ஆட்டம் இழக்க நம்பிக்கை ஜோடி சச்சின்-ராயுடு சேர்ந்தனர். ஆட்டம் ஏதோ 50 ஓவர் போட்டியின் நடுப்பகுதியை போல் போய்க் கொண்டிருந்தது.

புனேவும் தனது களத்தடுப்பாளார்களை மைதானம் முழுக்க சிதற விட்டு விக்கெட்டுகள் எடுக்க முனையாது ரன்களை கட்டுப்படுத்த நினைத்தது. மும்பை அணியும் விரைவாக ரன் குவிக்க ஆசைப்படாமல் மெதுவாக ஸ்கோரை உயர்த்தியது.

சச்சின் 35 ரன்களும், ராயுடு 39 ரன்களும் எடுத்தனர். இருவருமே இடை இடையே தங்களுக்கு கிடைக்கும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். சச்சின் ஒருமுறை தனது Exclusive ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்க அது ராயுடு கையில் பட்டது, உடனே ஆறுதல் சொல்லி உதவ வந்தார் முரளி கார்த்திக். ஆனால் அடுத்த ஓவரில் லெக் சைடில் தூக்கி அடிக்க முனைந்து பந்தை தவறவிட்டு வயிற்றில் வாங்கி கொண்ட ராயுடு மீண்டும் கார்த்திக்கிடம் அனுதாபம் பெற்று, பின் இருவரும் பேசி சிரித்தது, அப்பாடா.. ஐபிஎல் இந்திய வீரர்களை விரோதிகளாக மாற்றவில்லை என பெருமூச்சு விடச் செய்தது.

சச்சின், ராயுடு அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆக, புனே சுதாரித்து ஆட்டத்தில் எதாவது செய்து தம் பக்கம் கொண்டு வர பல முயற்சிகளை எடுத்தது. சச்சின் விக்கெட்டை எடுத்த ராகுல் சர்மாவை பார்த்த போது அவர் எந்தளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் என நம்மாலும ஊகிக்க முடிந்தது.

ஆனால் சைமண்ட்ஸ், ரோஹித் சர்மா  சேர்ந்து அவசரம் காட்டாமல் கடைசி வரை பொறுமையாக விளையாடினர்.கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய  முரளி கார்த்திக் கையில் சரியாக பந்து வந்திருந்தால் சைமண்ட்ஸ் ரன் அவுட் ஆகி இருப்பார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற போது, 2008 ஐபிஎல் லில் யுவராஜ் விளையாடிய பஞ்சாப் அணி கடைசி பந்தில் மும்பையை தோல்வி அடைய செய்தது நினைவிற்கு திரும்பினாலும், ரோஹித் சர்மா கடைசியில் சிக்ஸ் அடித்து வெற்றியை கொண்டாட தொடங்கினார். ( எனக்கே தெரியாம அஞ்சு 'கடைசி' வந்துருச்சுங்க)

மூன்று விக்கெட் எடுத்த முனாப் படேல் ஆட்ட நாயகன் ஆனார்.


பதிவு பிடித்திருப்பின் ஓட்டு போடுங்கள்.. 
இதற்கு முன்னர் நிறைய முறைகள் வேற்றுகிரகவாசிகள் பற்றி படித்தும், திரைப்படங்களில் பார்த்தும் விட்டாயிற்று. அதனால் இம்முறை பெரிதாக எதுவும் இந்த செய்தியின் பால் நம் கவனம் வருவதில்லை.

முதலில் இந்த படத்தை பாருங்கள்.

  


இந்த படத்தை பார்த்ததுமே எனக்கு அமரர் சுஜாதாவின் ஞாபகம் தான் வந்தது. அவர் ஒரு முறை சொல்லி இருப்பார் அதென்ன கிடைக்கிற எல்லா ஏலியன்களுமே இரண்டு கால்,இரண்டு கை,மூக்கு,வாய்,கழுத்து என எல்லாமே மனிதனை ஒத்தே இருக்கிறது, வேற்று கிரகம் தானே வேறு மாதிரி உடலமைப்புகள் இருக்கக் கூடாதா என்று கேட்டிருப்பார்.

இதிலும் பாருங்கள் உருவம் ஏதோ வித்தியாசமாக இருந்தாலும் மற்றபடி மனித உருவ அமைப்பு வரும்படி இருக்கின்றது. மனிதன் தான் படைக்கும் கற்பனைகள் கூட தன்னை வெல்லக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பான்.

ஐயோ.. ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருந்து தொலைத்து விடப்போகிறது, அப்புறம் விசா எதுவும் இல்லாமல் வீடு தேடி வந்து உதைக்க போகிறார்கள் வெற்று கிரகவாசிகள் இல்லை.. வேற்று கிரகவாசிகள்.

சைபீரியாவில் இரண்டு வழிப்போக்கர்களால் இந்த பனியினில் உறைந்த உருவம் கிடைக்கப்பெற்றிருக்கும் இடம் ஏற்கனவே அடையலாம் தெரியாத பறக்கும் தட்டுகள் தோன்றிய இடமாம். அதனால் இப்போது அந்த நிகழ்வுகளுக்கும் இதற்கும் முடிச்சு போட்டு, வேற்றுகிரகவாசிகள் வந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போகும் இடம் என்றெல்லாம் இணையத்தில் முடிக்கி விடுகின்றனர்.

அந்த உருவம் ரொம்பவே பழுது பட்டு கிடைத்ததாம். வலது கால் உடைந்திருக்க, மண்டை ஓடு போன்ற பகுதியில் கண்கள் இருந்ததற்கான ஆதாரமாக ஓட்டைகள் இருப்பதாக படத்தில் தெரிகிறது.மேற்கண்ட காணொளியை கண்ட பலரும் " நிஜந்தான், வேற்று கிரக வாசிகள் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து போகின்றனர், அதனால் தான் முன்பெல்லாம் அங்கே பறக்கும் தட்டுகள் காணக் கிடைத்தன"  என்று சொன்னாலும்.

சிலர் ஆதாரம் இல்லாமல் இதெல்லாம் டேதுவும் நம்ப முடியாது என்கின்றனர்.

ஆனாலும் அறிவியலின் படி இது போன்ற உருவங்கள் பூமியிலியே சாத்தியம் தான். ஜீன் குறைபாடு, வேற்றினச் சேர்க்கை என பல காரணிகளால் இது போன்ற உருவங்கள் உருவாக வாய்ப்பு உண்டு. நாமே சில நேரங்களில் பத்திரிகைகளில் வித்தியாசமான உருவ அமைப்பில் குழந்தைகள் பிறப்பதை பார்க்கிறோமே.

பதிவு பலரையும் சேர வாக்களியுங்கள்...  தற்கொலை செய்து கொள்வது எந்த நிலையிலும் பிரச்னைக்கு ஒரு முடிவு ஆகாது. ஏற்கனவே சில பேர் இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் என்ன நடந்ததோ அதே தான் இப்போதும் நடக்கப் போகிறது. இருந்தாலும் தன் இனத்தவன் படும் இன்னலுக்கு தன்னை தீக்கு இறை ஆக்கிய கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா அமைதி அடைய வேண்டுமாயின் அவர் எண்ணியது நடக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மனவேதனை அடைந்திருந்ததாகக் கூறப்படும் தமிழக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட 25 வயது பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

தீக்காயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களால் விரக்தி அடைந்தே தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் உறவினர்களிடம் கிடைத்துள்ளது.

மரணத் தருவாயில் கிருஷ்ணமூர்த்தி அளித்த வாக்குமூலத்தை போலிசார் பதிவுசெய்தனர் என்றாலும் அவரால் சரிவர பேச முடியாததால் அந்த வாக்குமூலத்தை பொலிசார் ஏற்கவில்லை.

மாறாக கிருஷ்ணமூர்த்தியுடைய பெற்றோர்களின் வாக்குமூலத்தை போலிசார் பதிந்துகொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

 சங்கக்காரா மற்றும் சொஹல் இடையேயான வலுவான கூட்டாளி ஆட்டம் (Partnership?) காரணமாக டெக்கான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலியே சொஹல் பவுண்டரி அடிக்க, அதே ஓவரில் தவான் மேலும் இரண்டு பவுண்டரி அடித்து மிகச் சிறப்பானதொரு தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் டெல்லி அடுத்த ஓவரிலியே பதான் பந்தில் தவானை வெளியேற்றியது.

இந்த விக்கெட் அப்போதைக்கு டெல்லிக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த சங்ககரா சொஹல் இணை 92 ரன்கள் அடித்து டெக்கான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு விட்டனர்.

சொஹல் டெக்ஸ்ட்புக் ஷாட்களை விளையாடிய அதே நேரத்தில் சில வித்தியாசமான வீச்சுகளிலும் ரன் குவித்தார். சங்ககரா தனக்கு உரிய நேர்த்தியான ஆட்டம் மூலம் தொடர்ந்து ரன் குவித்தார். அதுவும் ஸ்பின்னர் பந்து வீசும் போதெல்லாம் அவர் ஏதோ தனக்காகவே அவர் பந்து வீச வருவதாக நினைத்து பவுண்டரிகள் அடித்தது, அவர் இலங்கைக்காரர் என்பதையும் மறந்து ரசிக்க செய்தது.

200 ரன்களை கூட எட்டி விடலாம் என்ற நிலையில் விளையாடிய டெக்கான் அணியில் சங்ககரா 49 ரன்களுக்கும், சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்து  சொஹல்  62 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க கொஞ்ச நேரம் டெல்லி நன்னிலைமைக்கு வந்தது. ஆனாலும் ஒயிட் கடைசியில் 31 ரன்கள் சேர்க்க டெக்கான் அணி 168 ரன்களை எடுத்தது.

டெல்லியில் திண்டா,பதான்,ஹோப்ஸ்,நதீம் ஆளுக்கொரு விக்கெட எடுத்தனர். அதே போல் டெக்கான் அணியிலும்  சொஹல்,சங்ககரா,ஒயிட் ஒரு சிக்ஸர் அடித்தனர்.

பின்னர் கொஞ்சமே கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நான்கு ஓவர்களுக்கு 28 ரன்கள் என்ற நல்ல விகிதத்தில்  போன டெல்லி அணிக்கு கேப்டன் சேவாக் ரூபத்தில் முதல் விக்கெட் போனது. அவர் மூன்று பவுண்டரிகள் அடித்தார்.

வார்னர் தான் எப்போதும் நம்பகமான பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். அவர் களத்தில் இருக்கும் வரை ஆட்டம் டெல்லி கையை விட்டு போகவில்லை.

நாமன் ஓஜா,ஃபின்ச் அடுத்து வந்து உடனே பெவிலியனுக்கு நடையை கட்ட டெல்லி, 38 ரன்களுக்கெல்லாம் மூன்று பேரை இழந்து தவித்தது. ஆனால் அதன் பின்னர் வேணுகோபால் ராவ் சற்று நேரம் வார்னருக்கு ஜோடி போட்டு விளையடியானர். அவர் மூன்று பவுண்டரி அடித்தார். சிக்ஸர் தான் அடிக்கிறார் என்று நினைத்தேன் பார்த்தால் நடுவர் கையை தூக்கி காட்ட அப்போது தான் தெரிந்தது அவர் அவுட் என்று.(டிவியில் சிக்ஸ் மாதிரி கேமராவை காட்டினார்கள்).

வார்னரும் தன்னால் முடிந்தளவிற்கு போராடினார். ஆனால் அவராலும் ஆட்டத்தை திருப்ப முடியாமல் போனது. ஐந்து பவுண்டரி,ஒரு சிக்ஸர் சேர்ந்து 51 ரன் எடுத்தார்.

பதான் மீண்டும் சொதப்ப, யாகர் இரண்டு சிக்ஸர் அடித்து கொஞ்சம் கண்ணுக்கு விருந்து கொடுத்தாலும், யாருமே நீண்ட நேரம் நிலைக்காமல் எல்லோரும் எல்லைக் கோட்டிலேயே பந்தை கேட்சாக அனுப்பி அவுட் ஆகினர்.

மார்கலும் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் தேவையான ரன்னை என்ன செய்தாலும் எடுக்க முடியாத நிலைக்கு டெல்லி எப்போதே வது விட்டிருந்தது.

முடிவில் டெல்லி அணி 158 ரன்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டது.


பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..!

நாம் பல வேளைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஃபோல்டரினுள் உள்ள மற்ற ஃபோல்டர்களின் பெயர்களை மட்டும் பிரதி எடுக்க விழைவோம்.

உதாரணமாக நம்மிடம்
Music என்று ஒரு ஃபோல்டர் இருக்கிறது, அதனுள் இருக்கும் ஃபைல்களை விடுத்து A.R.Rahman,Iaiyaraja,SPB என்னும் மற்ற ஃபோல்டர்களின் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கு மீண்டும் புதிதாக ஒவ்வொரு ஃபோல்டராக உருவாக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மென்பொருளைக் கொண்டு ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்கலாம்.

இதனை நிறுவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை.(Portable Software)

தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்...
 
TreeCopy


1.இடது புறம் பிரதி எடுக்கப் பட வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும்.

2.வலது புறம் பிரதி சேர வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும்.

3.GO வை சொடுக்கி, உங்கள் ஆணையை நிறைவேற்றலாம்.


பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..! 


விண்வெளி வீரர்கள் தலைவலியில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் பாராசிட்டமால் போன்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகள் பலவும் விண்வெளியில் செயலற்று போவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் நோய் எதிர்ப்பு மருந்துகள் விண்வெளியில் மிக விரைவிலேயே தங்கள் வீரியத்தை இழக்கின்றன என்று நிரூபித்துள்ளனர்.

நாசாவின் ஜான்சன் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சியின் முடிவில் விண்வெளியின் குறைந்த ஈர்ப்பு திறன், அதிக கதிர்வீச்சு தான் இதற்கு காரணங்கள் என பட்டியல் போட்டுள்ளது.

நாம் வாங்கும் சாதாரண மருந்துகள் அனைத்தும் ஒரு சில மாதங்களாவது திறன் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் நாம் அம்மருந்துகளை தகுந்த சூழ்நிலைகளில் வைத்து பாதுகாத்தால் மட்டுமே அவை குறிப்பட்ட காலம் வரை செயல் புரியும்.

நேரடி சூரிய வெளிச்சம், மிக குளிர்ந்த இடம், சூடான இடம் என பல காரணிகளும் அதன் செயல் திறன் மாறுபாட்டை நிர்ணயம் செய்கின்றன.

நீண்ட நாட்களுக்கு பயணம் செய்யும் விண்வெளி வீரர்கள் திடீரென ஏற்படும் தலைவலி போன்ற துன்பங்களுக்கு தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகள் பல நேரங்களில் எந்த வித மாறுதலும் ஏற்படுத்துவது இல்லை என்று புலம்பியதன் விளைவாக, இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட நாசா அதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்லியது.

அதன் ஆய்வுக்காக ஜான்சன் விண்வெளி மையத்தில் நான்கு பெட்டிகளில் அடைக்கப்பட்ட 35 வகையான மருந்துகள்  வைக்கப்பட்டு, ஒரு பெட்டி 13 நாட்களிலும், சில அதற்கு பிறகும் கடைசி பெட்டி 28 மாதங்கள் கழித்தும் சோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவாக மருந்துகளில் குறிப்பிட்ட காலத்திற்கு வெகு சீக்கிரமே அவை காலாவதி ஆகி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மாற்று என்ன என்பது குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

பி.கு : காலாவதி ஆன மருந்தை வீணாக்கி விடாதீர்கள், இங்கே கொடுங்கள் இந்திய நாட்டில் அதை விற்று பணம் ஆக்குவது மிக எளிது.
உங்கள் வலைப்பூவில் இப்போது புதிய பதிவுகளை காண்பிக்கும் நிரல் பலகையை காண்பிப்பது மிக எளிது.

இந்நிரல் பலகை தலைப்புகளை மட்டும் காட்டக் கூடியது.
40*40 அளவில் சிறிய படத்தையும் இது காட்டும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்

1.கீழ்காணும் CODE ஐ பிரதி (Copy) எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பிளாக்கர் டாஷ்போர்ட் செல்லவும். டிசைன் ஐ திறந்து அதில் நீங்கள் விரும்பும் இடத்தில் Add a gadget என்பதை சொடுக்கவும்.

மாதிரி நிரல் பலகை
3. பின்னர் அதில் HTML/Javascript ஐ தெரிந்தெடுத்தால் கிடைக்கும் பெட்டியில் நீங்கள் விரும்பும் தலைப்பை கொடுக்கவும், உ.ம் -- புதிய இடுகைகள்

4. அடுத்து உள்ள பெட்டியில் ஏற்கனவே பிரதி எடுத்த Code ஐ உள்ளீடு செய்யவும்.
செய்த பின் home_page = "https://tamiltel.in/"; என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை இடவும்.

5. தங்கள் விருப்பத்திற்கேற்ப படங்கள் இல்லாத பதிவிற்கு காட்டும் படத்தை மாற்ற
http://s1.postimage.org/1l2zfzts4/40f.jpg என்ற முகவரிக்கு பதில் உங்கள் படத்தின் முகவரியை உள்ளீடு செய்யவும்.
numposts = 10; எனுமிடத்தில் எத்தனை பதிவுகள் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கவும்.

6. பின்னர்,Save ஐ சொடுக்கிய பின் உங்கள் வலைப்பூவை பாருங்கள். புதிய நிரல் பலகை இணைக்கப்பட்டிருக்கும்.

சென்னை இரண்டாவது முறையாக ஐபிஎல் 2011 இல் தோல்வி அடைந்தது. கொச்சி அணி சென்ற போட்டியில் மும்பை அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது. அப்போதே ஒரு இலங்கைக்காரர் தலைமை தாங்கும் அணியிடம் சச்சின் அணி தோற்றது ஒரு மாதிரி இருந்தது. இப்போது சென்னை அணி தோற்கும் போது அதனினும் வருத்தமாகவே உள்ளது.

ஆனாலும் திறமை இருக்கிறது வெற்றி பெறுகிறார்கள் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று கொச்சி களத்தடுப்பை தெரிந்தெடுத்தது. சென்னை வீரர் ஹஸ்ஸி 8 ரன்களில் வெளியேற, முரளி விஜய்,சுரேஷ் ரெய்னாவின் சிறப்பான மட்டை வீச்சில் நன்றாகவே விளையாடி வந்தது சென்னை. ஆனால் விஜய் ஆட்டமிழக்க, பத்ரிநாத் வந்து சில நேரம் ஆட்டத்தை தொடங்குமுன் மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர்களாக மாறியது. ஆட்டமும் மாறியது.
வழக்கம் போல கஷ்டப்பட்டு(?) விளையாடிய பத்ரிநாத் 19 ரன்களில் அவுட் ஆனார்.இதற்கிடையில் எப்போதும் நம்பிக்கையுடன் விளையாடும் ரெய்னா ஐம்பது ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

கடைசி ஓவரில் மார்கல்,தோனி ஒரு சிக்ஸர் அடித்து ரன்களை ஏற்றினர். கொச்சி அணியின் களத்தடுப்பு பிரமாதமாக இருந்தது, அதிலும் மெக்கல்லம் மிக சிறப்பாகவே பீல்டு செய்தார்.
எனக்கென்னவோ ஜெயவர்த்தனே கிளம்பியதும் அணித் தலைவராக இவர் தான் இருப்பாரோ எனத் தோன்றுகிறது.

D/L முறையில் சென்னை அடித்த 131 ரன்கள் 134 ஆக மாற்றப்பட்டது.
135 எனும் துரத்தக்கூடிய இலக்கை விரட்டிய கொச்சின் அணிக்கு சென்ற போட்டியை போல இதிலும் மெக்குல்லம்(ஆட்ட நாயகன்) அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். நம்ம பொறியாளர் அஷ்வின் ஜெயவர்தனே மற்றும் மெக்கல்லம்(47) விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பார்த்திவ் படேலும் பொங்கி எழ அந்த அணியின் கேட்கும் ரன் விகிதம் குறைந்தது. கடைசியில் எல்லாவற்றையும் முடித்து கொடுக்க ஜடேஜா வந்தார், இரண்டு சிக்ஸர் மூலம் விரைவாகவே போட்டியை முடித்து விட்டார்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..! 
நாம் சில வேளைகளில் தவறுதலாக சில கோப்புகளை அழித்து விட்டு திரும்பப் பெற முடியாமல் தவிப்பதுண்டு.

வெறும் டிலெட் மட்டும் அழுத்தி இருந்தால் எளிதாக மறுபயன்பாட்டு பெட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் SHIFT+DELETE அழுத்தி இருந்தால் மீண்டும் பெறுவது கடினம்.

இதற்கு பல்வேறு மென்பொருள்கள் பல காலமாக கிடைக்கப்பெறுகிறது.
அவற்றுள் மிக எளிமையான ஒன்று தான் இந்த "Undelete Plus"

மென்பொருளை தரவிறக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்

Undelete Plus

இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்துசெல்லத்தக்க (Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.

இதன் பயன்பாடு குறித்து எளிதாக விளக்க முற்பட்டுள்ளேன். பிழைகள் இருப்பினோ அல்லது ஐயம் உண்டானலோ பின்னூட்டப்படுத்தவும்.

1.மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி, உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scan ஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும்.

2.உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள்.

3.இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில்,
பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம்.


4. டாகுமென்ட் கோப்புகளை மட்டும் தேட விரும்பினால் *.docx என முதல் பேட்டியில் நிரப்பி தேடலாம். அல்லது draftcopy என்று அதன் பெயர் இருக்குமேயானால் அதனை உள்ளிட்டும் தேடலாம்.

5.மாற்றி அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திகதியை கொண்டும் தேடலாம். குறைந்தபட்ச கோப்பு அளவு நிர்ணயித்து தேடும் வசதியும் காணப் பெறுகிறது (Ex. 100KB).


குறிப்பு : நீங்கள் எந்த டிரைவின் கோப்புகளை திரும்பப் பெற வேண்டுமோ அங்கு இந்த மென்பொருளை பிரதி எடுத்து பயன்படுத்தினால் முடிவுகள் வேகமாக கிடைக்கும்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..! 

திங்கள், 18 ஏப்ரல், 2011


தலைவனை இழந்து தவித்து
தன் உரிமைக்கு போராடியவனை
தினம் பல உயிராய் குடித்தாய்..!

வாழ வழி கேட்டவனுக்கு
வளியுங் கூட கொடாது
வலிகளை கொடுத்தாய்...!

தகுந்த நேரம் பார்த்து
துரோகிகள் கரங் கோர்த்து
விரோதியென வீழ்த்தி விட்டாய்..!

உடல் என்னும் எண்ணெய்யில்
தமிழப் பற்று என்னும் திரிக்கு
உயிர் என்னும் தீ வைத்திட்டாய்..!

அன்று அனுமன் கொளுத்திய இலங்கைக்கு
இன்று அதர்மம் கொழுக்கும் இலங்கைக்கு
என்றேனும் இல்லை வென்றேனும்
வருவோம் அந்த இலங்கைக்கு
விரைவாக..!
ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஹோப்ஸ் வருகை:
டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார்.

ரைடர் அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணிக்கு, ஜெசி ரைடர் அதிரடி துவக்கம் கொடுத்தார். வேணுகோபால் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரைடர், இர்பான் பதான், உமேஷ் யாதவ் பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் (12), அசோக் டின்டா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ரைடர், நதீம் வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் பின்ச்சிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். இவர் 27 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ் அபாரம்:
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா (4), மோனிஷ் மிஸ்ரா (7) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடி காட்டிய யுவராஜ் சிங், "சிக்சர்' மழை பொழிந்தார். டின்டா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய யுவராஜ், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. யுவராஜ் (66 ரன்கள், 32 பந்து, 5 சிக்சர்), பார்னல் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் டின்டா, நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் ஜோடி:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி, புனே அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ராகுல் சர்மா வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட வார்னர் 28 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து "ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சேவக், 23 பந்தில் 37 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து, ரைடர் பந்தில் போல்டானார்.

"ஹாட்ரிக்' நழுவல்:
அடுத்து வந்த இர்பான் பதான், நமன் ஓஜா ஜோடி நிதானமாக ஆடியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் (14), யுவராஜ் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 3வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக்கிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். நான்காவது பந்தில் நமன் ஓஜா (11), "ஸ்டெம்பிங்' செய்யப்பட்டார். ஐந்தாவது பந்தை வேணுகோபால் எளிதாக சமாளிக்க, யுவராஜ் சிங்கின் "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.

வேணுகோபால் அபாரம்:
அடுத்து வந்த மாத்யூ வாடே (3), ராகுல் சர்மாவின் சுழலில் எல்.பி.டபிள்யு., ஆனார். பின் இணைந்த வேணுகோபால், பின்ச் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது பின்ச் (25), யுவராஜ் சுழலில் சிக்கினார். அபாரமாக ஆடிய வேணுகோபால் 20 பந்தில் 3 சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் வெளியேறினார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது ஹோப்ஸ், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார். புனே சார்பில் யுவராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி : தினமலர்
ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது."வேகத்தில்' மிரட்டிய பாலாஜி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி 81 ரன்களுக்கு சுருண்டு, ஏமாற்றம் அளித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

பாலாஜி மிரட்டல்:
முதல் ஓவரே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரட் லீ அனல் பறக்க பந்துவீச... அதனை சக ஆஸ்திரேலிய வீரரான வாட்சன் எதிர்கொண்டதை காண முடிந்தது. போட்டியின் 3வது ஓவரை வீசிய பாலாஜி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் வாட்சன்(11) போல்டாக, கோல்கட்டா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்துவந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். பவுனிக்கர்(15), பசல்(3) ஏமாற்றினர். ராத்(11) ரன் அவுட்டானார். இக்பால் அப்துல்லா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த அசோக் மனேரியா ஓரளவுக்கு நம்பிக்கை தந்தார். யூசுப் பதான் பந்தில் ராஸ் டெய்லர்(6) வெளியேறினார். போட்டியின் 14வது ஓவரை வீசிய
பாலாஜி இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் ரஹானே(6) போல்டானார். 6வது பந்தில் மனேரியா(21)காலியானார். சாகிப் அல் ஹசன் சுழலில் அமித் சிங்(0), டெய்ட்(0) அடுத்தடுத்து அவுட்டாகினர். பிரட் லீ வேகத்தில் திரிவேதி(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 15.2 ஓவரில் 81 ரன்களுக்கு சுருண்டது.
கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி, இம்முறை கோல்கட்டா அணி வீரராக அசத்தினார். இவர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

சுலப வெற்றி:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே ஷான் டெய்ட் "ஷாக்' கொடுத்தார். இவரது வேகத்தில் அனுபவ காலிஸ் "டக்' அவுட்டானார். வார்ன் சுழலில் பிஸ்லா(9)சிக்கினார். இதற்கு பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தலாக ஆடினர். மிகவும் விவேகமாக பேட் செய்த இவர்கள், துடிப்பாக ரன் சேர்த்தனர். இவர்களை வெளியேற்ற ராஜஸ்தான் கேப்டன் வார்ன் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. டெய்ட் ஓவரில் ஒரு இமாலய சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார் திவாரி. மறுபக்கம் காம்பிர் ஒரு பவுண்டரி அடித்து, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். கோல்கட்டா
அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. காம்பிர்(35), திவாரி(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே டெக்கான், ராஜஸ்தான் அணிகளை வென்ற கோல்கட்டா அணி மீண்டும் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, தொடரில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
ஆட்ட நாயகன் விருதை பாலாஜி வென்றார்.

மிக குறைந்த ஸ்கோர்
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 81 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இத்தொடரில் மிக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக, மும்பை அணிக்கு எதிராக டில்லி அணி 95 ரன்கள் எடுத்தது.
* ஐ.பி.எல்., அரங்கில் மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி(81 ரன்கள்). முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் (58 ரன்கள், எதிர்-பெங்களூரு, 2009), கோல்கட்டா (67 ரன்கள், எதிர்-மும்பை, 2008) அணிகள் உள்ளன.
மூளையின் கட்டமைப்பை வைத்துப் பார்த்தால் எல்லா மனிதர்களுக்கும் 94% அது ஒரே மாதிரியே இருக்கிறது. ஆம்,நம் மூளைக்கும் ஐன்ஸ்டீன் மூளைக்கும் எதாவது வேறுபாடு இருக்குமேயானால் அது அந்த 6% மீதியில் தான் இருக்க வேண்டும்.


மனித மூளை அமைப்பு (பழையது)

உலகின் மிக சிக்கலான வடிவங்களுள் ஒன்று மூளை, அறிவியல் ஆய்வாளர்களின் மூளையை கசக்கிய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த உலகின் முதல் கணினிமயமாக்கப்பட்ட ஜீன் வரைபட நிறுவனம் ஆலன் ஹுமன் பிரைன் அட்லஸ் இத்தகவல்களை வெளியிட்டுதுள்ளது.

55 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நான்கு ஆண்டுகள் அயராத உழைப்பில்,ஆய்வில் விஞ்ஞானிகள் மனித மூளையின் செயல்களை விளக்க முற்பட்டுள்ளனர். மூளை செயல் இழத்தல்,மன நோய்கள் உள்ளிட்ட பல நோய்களும் இதன் மூலம் விரைவில் குணமாக்க ஆய்வு பயன்படும்.

முக்கியமான ஜெனிடிக் வரைபடங்கள் மூலம், மனிதனின் ஜீன்களில் குறைந்தபட்சம்  82% மூளையில் தான் இருக்கிறது என்றும், 94% எல்லா மூளைகளும் ஒரே மாதிரி என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள உருவ வரைபடங்கள் பிற்காலத்தில் பெறும் நோய்களை தெற்க்க உதவும் என்று அவர்கள் உறுதி தெரிவித்து இருக்கின்றனர்.

முதன்மை அலுவலர் ஆலன் ஜோன்ஸ், மூளை பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆர்என்ஏ,ரைபோ நியூகிளிக் அமிலம்,டிஎன்ஏ மற்றும் புரதங்கள் என ஒவ்வொரு பகிதியும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சற்றேறத்தாழ 25,00 ஜீன்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிலிருந்து தான் இந்த மூளையின் வரைபடம் உருவானது என்று கூறி இருக்கிறார்.

இந்த அட்லஸ் ஒரு ஜிபிஎஸ் சிஸ்டம் போன்று செயல்படபோவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. மூளையின்  1000 த்திற்கும் மேலான அமைப்புகளில், நூறு மில்லியன் தகவல் புள்ளிகளை இணைத்து இருக்கும் இந்த வரைபடம் எந்த ஒரு ஆய்வாளரும் தான் விரும்பும் உயிரி-வேதிப் பகுதியை முப்பரிமானமாக உருமாற்ற உதவும்.

மூளையில் ஏற்படும் காயங்கள், மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இனி வெகு காலத்திற்கு நமக்கு பிரச்னைகளை தராது. மருத்துவ முறைகளில் மாற்றம் ஏற்படும், எந்த நுண்ணிய மூளையின் இடத்தில் ஊசி போட்டால்  நோய் தீரும் என்பது வரை இதன் மூலம் சாத்தியப் படுகிறது.

உலக நல வாழ்வு அமைப்பு மூளை சார்ந்த நோய்கள் 2020 இல் பெறும் பாதிப்பை உண்டாக்கும், என கூறி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மேற்கொண்டு தகவல்கள் அறிய

மூளை வரைபடம்

தகவலை பகிர வாக்களியுங்கள் .!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

எனும் பாரதியின் வரிகளை விட இந்த பதிவிற்கு பொருத்தமான தொடக்கம் வேறு எதுவும் படவில்லை. 

உலகில் தமிழை தாய்மொழியாக கொண்டு மக்கள் வாழும் நாடுகள் வெறும் இரண்டு தான். இந்தியா,இலங்கை. என்ன தான் அமெரிக்கா,சவூதி,சிங்கப்பூர்,இங்கிலாந்து,அரபு,கனடா என்று உலகம் முழுவதும் தமிழர்கள் நிறைந்து இருந்தாலும், அவர்களெல்லாம் தமிழகத்தில் இருந்தோ இலங்கையில் இருந்தோ குடி பெயர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

இப்படி வெறும் இரண்டு நாடுகளுக்குள் குறுங்கி இருந்த நம்மை இப்போது கிட்டத்தட்ட ஒரே நாட்டுக்குள் அடக்கி விட்டார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறான் என்று அடக்கி ஆள நினைத்த சிங்களனுக்கு எதிராக தமிழர் கூட்டம் திரும்பியது, எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தில்  எத்தனையோ குழுக்கள் இருந்தாலும் அவை எல்லாம் காந்தியின் கீழ் வந்ததோ அதே போல் (நான் வெறும் குழுவைத்தான் சொல்கிறேன் போராட்ட முறையை அல்ல), பிரபாகரன் என்னும் ஒரு புலியின் கீழாக ஒரு பெருங்கூட்டமே சேர்ந்தது. தமிழர்களுக்கு சொந்த நாட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் அடிமைத்தனம் பிடிக்காமல் சுதந்திரம் நோக்கி பயணிக்கும் உத்வேகம் வந்தது.

இதற்கெல்லாம் அவன் உதவி என்று யாரிடமும் போய் கை கட்டி நின்று விடவில்லை, ஆனாலும் அவனுக்கு உதவ வேண்டியது நம் கடமை அன்றோ? உயிர் பிரிய கிடக்கும் உன் சகோதரனையோ சகோதரியையோ பார்த்து விட்டும் உன்னால் சும்மா இருக்க முடியுமா?
இல்லை உதவி ஏதும் கேட்கவில்லை என்று மரணத்திடம் தான் அவர்களை உன்னால் தாரை வார்த்து கொடுக்க முடியுமா? நிச்சயமாய் முடியும் ஏனென்றால் நீ தான் ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான உன் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்ட போதும் வாயைக் கூட திறவாமல் இருந்தவனாயிற்றே?

பிரபாகரன் என்னும் அச்சத்தை வென்ற தலைவனின் கீழ் ஒரு அரசாங்கமே நடந்தது. உலகின் எந்த புரட்சியாளர்களும்,விடுதலை போராளிகளும் தனி அரசாங்கம் நடத்துமளவுக்கு திறன் பெற்றிருக்கவில்லை ஆனால் தமிழன் பெற்றிருந்தான். உலகின் எந்த மொழிக்காரனும் தன் இனத்தவன் கொல்லப்படும் போது சும்மா இருந்ததில்லை ஆனால் அதுவும் தமிழனால் தான் முடிந்தது.

நாட்டை சுத்தப்படுத்துகிறோம், தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று தமிழ் மக்களை எமது சகோதர இனத்தவரை சாரை சாரையாக கொன்று குவித்தானே சிங்களவன், அவனை நீ என்ன செய்தாய்? ஐநா சபையிலே இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட போது(மனிதாபிமானம் இருக்கும் வேறு நாட்டில் இருந்து) அதை வன்மையாக எதிர்த்து இலங்கைக்கு வக்காலத்து வாங்கியது இந்தியா.

இந்தியாவின் ஏகபோக உதவியால் இலங்கை எந்த வித பிரச்னையுமின்றி தமிழர்களை தீர்த்து கட்டியது. தான் ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யாமால் அப்போது இலங்கை தமிழக்கு நான் முழு ஆதரவு என்று ஒருவர் கூற, இலங்கை தமிழர் உட்பட உலகத் தமிழ்களின் தலைவன் தான் தான் எனத் தம்பட்டம் அடித்து கொண்டவரோ அவ்வப்போது ஏதோ சளி பிடித்தவனை விசாரிக்க எழுதும் கடிதம் கணக்காய் தந்தி அடித்து கொண்டிருந்தார்.

இடை இடையே உண்ணாவிரத நாடகம் வேறு, இவர் உண்ணாவிரதம் ஆரம்பிப்பாராம் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்னைகள் சுமுகமாக பேசி தீர்க்கப்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பாராம். இதில் உச்சகட்ட மோசடி என்னவெனில் அப்போது தான் கொல்விகிதம் (கொலைகளின் எண்ணிக்கை) மிக அதிகமாகி கொண்டிருக்கும்.

சரி இவர்களை விட்டால், வேறு கதியே இல்லை என்றால் வைகோ,சீமான் போன்றவர்கள் இருக்கிறார்கள். இருந்தென்ன பயன் வெறுமனே பேசுவதால் இதில் எதுவும் நிற்க போவதில்லை, பேச்சைக் கேட்டு நம் தமிழன் உணர்ச்சி பொங்க சிங்களவனை கேட்கப் போவதும் இல்லை எனும் அசட்டு தைரியம் தானே இன்று இலங்கையை செந்தூய்மை(RED WASH) படுத்தியிருக்கிறது.

இப்போது அதெல்லாம் பழைய கதையாகி விட்டது, நமக்கென்ன எவனோ சாகிறான் என்று இருந்தோம் அல்லவா? நம் பங்காளிகளை அழித்த சிங்களவன் இதோ வருகிறான்  நம் வீட்டிற்குள்ளும், ஆம் நம் வீட்டின் குளக்கரையை தொட்டு விட்டான். மீனவனை கொல்லத் தொடக்கி விட்டான். எப்போதே தொடங்கினான் ஆனாலும் இப்போது தான் வேகம் கொடுத்திருக்கிறான். தமிழா,இத்தனை நாளும் யாருக்கோ ஆபத்து என்று ஒதுங்கி இருந்தாயா இன்று உன் அடிமடியில் கை வைத்து விட்டான். இப்போதும் நீ மீனவன் தானே என ஒதுங்கி நின்றால், அடுத்த குறி நீயாக இருக்கமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இப்போது தான் நினைவுக்கு வருகிறது, ஒரு அம்மையார் தேர்தல் பிரச்சாரத்துக்கு சில நாட்களுக்கு முன் வந்தார், சொன்னார், இனி ஒரு தமிழனுடைய உயிரும் பிரியாது என்று. அவரின் பேச்சுக்கு எவ்வளவு மரியாதை, உடனே கேட்டு விட்டார்களே?

"உயிரை மட்டும் இன்றி,உடலையும் அல்லவா பிரித்து விட்டார்கள் துண்டு துண்டாக..!"

பாகிஸ்தான் நமக்கு எதிரி தான், ஆனாலும் எல்லை கடந்த மீனவரை (22 பேர்) கைது மட்டும் தான்  செய்து இருக்கிறார்கள். ஆனால் வெறி பிடித்த இந்த மிருகங்கள் நம் எல்லையில் இருக்கும் மீனவரை கடத்தி சென்று அவர்கள் எல்லையில் இருந்ததாய் சாடுவது ஒரு பக்கம் என்றால், இப்படி பல வேளைகளில் கொன்று குவிப்பது எவ்வகை நியாயம்?
என்ன நியாயமா,அப்படி ஒரு வார்த்தையே சிங்கள மொழியில் கிடையாதே?

ஆனாலும் இந்த பிரச்னைக்கெல்லாம் சிங்களவன்தான் காரணம் என்று மட்டும் கூற முடியாது நீயும் தான் காரணம் தமிழா, இந்தா பிடி நீ செய்த துரோகத்திற்கான விலை.. என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

புதுக்கோட்டையில் இறந்து கரை ஒதுங்கியிருக்கும் நம் சகோதரனுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில்,
குறித்துக்கொள் சிங்களனே, இது நாள் வரையிலும் எல்லை தாண்டிய பிரச்னை, ராஜீவை கொலை செய்தவர்கள் என்று உனக்கு உதவியாய் இருந்தவரும் உனக்கு எதிராக திரும்பிடுவர். இன்னொரு பங்களாதேஷ் வெகு சீக்கிரம் அமைய போகிறது, பார்..!

பலரும் படித்திட ஓட்டு போடுங்கள் நண்பரே..! 

சனி, 16 ஏப்ரல், 2011

மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக வெளிப்பட்ட சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.பெங்களூர் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் வகையில் விளையாடினாலும் பின்னர் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வி அடைந்தது.


8 ஓவர்கள் வீசி 46 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ரன்தீவ், அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது.

சென்னை சேப்பாகம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமாக இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி, திலகரத்னே தில்சானை முதல் பந்திலும், அதன் பிறகு அதிரடியாக ஆடி 14 ரன்களை 5ந்தே பந்துகளில் குவித்த யூசுஃப் பத்தானை 2வது ஓவரிலும் இழந்தது. நின்றாடி ரன்களை எடுக்க முயன்ற அகர்வால் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே அதன் வெற்றிக் கனவு சரிந்தது.

ஆனால் விராத் கோலியும், டி வில்லியர்ஸும் மிக அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் 52 ரன்களைக் குவித்தனர். 28 பந்துகளில் 4 பெளண்டரிகளுடனும், ஒரு சிக்கசருடனும் 35 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் டி வில்லியர்ஸ் ரன்களைக் குவிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 19வது ஓவரில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்க தோல்வி உறுதியானது. டி வில்லியர்ஸ் 44 பந்துகளை ஆடி 5 பெளண்டரிகளுடனும், 2 சிக்சர்களுடனும் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழிந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள், எங்கிருந்து வரும் தைரியம் இவ்வளவும்?
ஒருவேளை அவர் ஆதரவு யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமா?,
ஆட்சியை பிடிக்க நினைக்கும் கட்சியின் தூண்டுதலா?
அல்லது ஆட்சியில் தொடர நினைக்கும் கட்சியினரின் அடாவடித்தனமா?
எதுவாக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிடும் உரிமையை மீடியாவுக்கு கொடுப்பது யார்?

ரஜினிகாந்த் வாக்குப் பதிவு செய்வதை வேண்டுமென்றே பதிவு செய்து விட்டார்கள். ஏற்கனவே பிரபலங்களின் கலவு தொடர்பான விஷயங்களில் ஏகத்திற்கும் மூக்கை நுழைக்கும் மீடியா, விட்டால் அவர்கள் கழிவு போவதையும் படம் பிடித்து எக்ஸ்க்ளுசிவ் என்று போட்டாலும் போட்டு விடுவார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா,மட்டாரா என்று அவருக்கே தெரியாத நிலையில் அவரின் ரசிகர்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஒவ்வொரு மேடையிலும் தன் அருகே அழைத்து அமர வைப்பதும், ரஜினி புகழ தானும் தமிழகமும் கேட்பதாய் எத்தனை விழாக்களில் கலைஞர் அரங்கேற்றம் செய்துள்ளார்.

ஆனாலும் ரஜினிகாந்த் என்ற தனி மனிதர் அவரின் வாக்கினை யாருக்கு செலுத்த வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் இருப்பர என்ன? அவரை உங்களின் வசீகரிக்கும் பேச்சினால் மயக்கி விட்டதாக தப்புக்கணக்கு போட்டு விட்டு, பின்னர் தனக்கு ஓட்டு போடவில்லை என்று தெரிந்ததும் மாலையே அழைத்து  திரைபடம் போட்டுக் காட்டி, சிலரை விட்டு பேசியும் "காட்டி"யுள்ளராம் தலைவர்.

தான் வாக்களித்ததை படம் பிடித்ததும், நிலைமையை புரிந்து வேகமாக அங்கிருந்து கிளம்பினார் ரஜினி,மீடியாக்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு. பின்னர் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் லஞ்சம்,ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று வேறு சொல்லி இருப்பது ஆட்சி பீடத்தில் இருப்பவர்களை கோபத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.

சரி,விடுங்கள் அவர் யாருக்கு ஓட்டு போட்டால் என்ன? நம் தலைவிதி மாறி விடப் போகிறதா என்ன யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் விரும்பியதாக சொன்ன அதெல்லாம் நடக்க போவதில்லை.

பிடித்திருந்தால் பதிவு பிரபலமடைய  வாக்கு போடுங்கள்..

வரலாறு புராணம் இரண்டுமே நடந்து முடிந்து விட்ட சம்பவங்களின் தொகுப்பு தான். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது. புராணம் ஆதாரங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் கடவுள் நம்பிக்கை, மன்னர்களை போற்றுவது என்றே பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆதாரங்கள் தொடர்புடையது. சிறிதளவேனும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் திருக்கோயிலை கட்டியது வரலாறு, அதுவே அவன் கனவில் வந்து சிவபெருமான் கட்ட சொன்னது புராணம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு,முன்னதற்கு ஆதாரமாக அந்த கோயில் இன்றும் கம்பீரத்துடன் நிற்கிறது. பின்னதற்கு பெரிதாக ஏதும் ஆதாரங்கள் இல்லை.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் தெருவிலுள்ள கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என நீங்கள் பிரார்த்தித்து அது நடந்தும் விடுகிறது எனில், இந்தியா வெற்றி பெற்றது வரலாறு,அதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கும். ஆனால் உங்கள் பிரார்த்தனை கடவுள் எல்லாமே வெறும் புராணத்துடன் நின்று கொண்டாக வேண்டியது தான்.

சரி, அப்படியானால் வரலாற்றில் சொல்லப்பட்டன எல்லாமே உண்மையா என்று பார்த்தால்,நீங்கள் எந்த அளவிற்கு வரலாற்றை அணுகி உள்ளீர்கள் என்பதை பொறுத்து தான் அந்த வரலாறு எந்த அளவிற்கு உண்மை என்பதை சொல்ல முடியும். என் போன்ற சிறுபிள்ளைத்தனமானவர்கள் யாரேனும் அவர்கள் விருப்பத்திற்கு என்னத்தையாவது எழுதி வைத்ததை எல்லாம் படித்து அது வரலாறு என்று நாம் நினைத்து கொண்டிருந்தால் அதற்கு வரலாறால் அதுவும் செய்ய முடியாது. வரலாறு என்றைக்கும் உண்மை தான் நாம் தான் அதனை வெவ்வேறு விதமாக அணுகுகிறோம்.

நடப்பது என்னவோ ஒரே தேர்தல் தான்,ஒரே நிகழ்வுகள் தான் ஆனால் பச்சை தொலைக்காட்சியில் ஒரு மாதிரியும் மஞ்சள் தொலைக்காட்சியில் ஒரு மாதிரியும் அவர்கள் விருப்பத்திற்கு இணங்க மாற்றிக் கொள்(ல்)கிறார்களே, அதெல்லாம் வரலாற்றில் இடம் பெற்றால் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

நாலே வரியில் தொடங்கலாம் என நினைத்து இவ்வளவு நீளமாக இழுத்து விட்டது வருத்தம் தான், சரி அந்த வெற்று வரலாற்று கற்பனைகள் என்று தலைப்பிட்டிருந்தேனே அது வேறொன்றுமில்லை நாம் பல ஆண்டுகளாக,தலைமுறைகளாக ஏன் நூற்றாண்டுகளாக கூட சில விஷயங்களை தப்பான கோணத்திலேயே பார்த்து கொண்டிருக்கிறோம். அவற்றுள் எனக்கு தெரிந்த சிலவற்றை பதிந்துள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டப்படுத்துங்கள்.

20.ஏவாள் கெட்ட ஆப்பிளை சாப்பிட்டாள்.

 'தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவனுக்கு வேலை இல்லை' என்பார்கள். ஆனால் ஏவாள் சாப்பிட்ட அந்த மறைத்து வைக்கப்பட்ட சாப்பிடக்கூடாத ஆப்பிளால் தான் இன்றைக்கும் நாம் துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம் என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். பைபிளை பார்த்தீர்கள் என்றால் அப்படி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்பட்டிருப்பதாக தெரியவில்லை "தோட்டத்தின் நடுவே இருந்த அந்த மரத்தின் பழம்"(Genesis 3:3) என்று தான் இருக்கிறது. ஏன் அது மாம்பழமாகவோ,இலந்தைப் பழமாகவோ கூட இருந்திருக்கலாம் இல்லையா?
  
19.நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தது.

அடுத்ததும் ஆப்பிள் பற்றி தான், நாம் சிறு வயதில் படித்திருப்போம். மரத்தில் இருந்து நியூட்டன தலையில் ஆப்பிள் விழ அதனாலேயே அவர் புவி ஈர்ப்பு விசையை பற்றி கண்டு பிடித்தார் என்று. ஆனால் ஐசக் நியூட்டன் தான் சாகும் வரை அப்படி யாரிடமும் கூறவில்லை. வால்டர் என்பவர் ஒரு கட்டுரையில் விளையாட்டாக அப்படி எழுத நன்றாக இருக்கிறதே என்று எல்லோரும் மறுபிரசுரித்து அதை உண்மையாகவே மாற்றி விட்டனர்.

18.வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸை வரைந்தார்.

உலகின் மிகப் பிரபலமான கற்பனைக் கதாபாத்திரங்களில்  எப்போதும் மிக்கி மௌசிற்கு தனி இடம் உண்டு. ஆனால், மிக்கி மௌசிற்கு வடிவம் கொடுத்தது வால்ட் டிஸ்னி என்று நீங்கள் நினைத்திருந்தால் கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள், மிக்கி மௌசின் ஒலி (குரல்) தான் அவருடையது. ஒளி(வடிவம்) அவரது நண்பர் உப் இவேர்க்ஸ் உடையது. தனி ஆளாக வரைந்து முதல் படத்தை வெளியிட உதவினாரம் அவர், நாளொன்றுக்கு 700 சித்திரங்கள் வரைவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் எல்லாம் வருவதற்கு முந்தைய அந்தக் காலத்தில்.

17.மேரி ஆண்ட்வாநெட் (பிரெஞ்சு மகாராணி) இனிப்பு ரொட்டிகளை சாப்பிடச் சொன்னாள்.

1776 இல் ஜாக்ஸ் ரவுசே என்பவர், தனது 25 ஆண்டுக்கு முந்தைய நிகழ்வு ஒன்றை எழுதும் போது "ஒரு பெரிய மகாராணி" மக்களுக்கு ரொட்டி துண்டுகள் கூட சாப்பிட கிடைப்பதில்லை என்ற போது "அப்படி என்றால் இனிப்பு ரொட்டிகளை(Cakes) கொடுங்கள்" என்று சொன்னாளாம். ஆனால் அப்போது  மேரி ஆண்ட்வாநெட் 11 வயது மட்டுமே உடையவள். பின்னாளில் பிரெஞ்சு புரட்சிக்காரர்கள் புரட்சியின் வேகத்தை அதிகரிக்க மக்கள் நலனில்,துயரத்தில் அக்கறை இல்லாமல் ராணியார் தான் இவ்வாறு  கூறியதாக கிளப்பி விட்டு விட்டார்கள்.


16."தி கிரேட் ட்ரெயின் ராப்பரி" தான் முதல் முழு நீளத் திரைப்படம்

பல ஹாலிவுட் ரசிகர்களும்  1903 இல வெளியான "தி கிரேட் ட்ரெயின் ராப்பரி" தான் முதல் முழு நீளத் திரைப்படம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். சினிமாவில் க்ளோஸ்-அப் காட்சிகள்,ஒழுங்கான கதை என பல விதத்திலும் இத்திரைப்படம் ஒரு மைல் கல் என்றாலும் முதல் முழு நீள திரைப்படம் , இப்படம் வந்து சில ஆண்டுகளுக்கு பிறகு வெளியான "தி ஸ்டோரி ஆப் தி கெல்லி கேங்" என்ற ஆஸ்திரேலிய திரைப்படம் தான்

அடுத்த பதிவில் : நெப்போலியன்,ஷேக்ஸ்பியர்,நீரோ மன்னன்..,

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. 
  

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சச்சின் ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை கொச்சி அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார். உலக கோப்பை முடிந்தவுடன் சச்சின் ஒய்வு பெற வேண்டும் என ஓதிய வாய்கள் வாவ்.. என்று வியக்கும் அளவுக்கு விளாசி தள்ளிய சச்சின் இன்னிங்க்ஸ் ன் கடைசி பந்தில் சதமடித்தார். ஆனால் பின்னர் விளையாடிய கொச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறந்த ஆட்டத்தால் அவ்வணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொச்சி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச தீர்மானித்தது.
முதலில் ஜேகப்ஸ் உடன் களம் இறங்கிய சச்சின்  அவர் சரியாக விளையாடாததால் கொஞ்சம் வேகமாக ரன் குவிக்கும் கட்டாயத்தில் இருந்தார். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்ந்த நிலையில் ஜேகப்ஸ் அவுட் ஆனார். அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சச்சின் அந்நேரத்திர்கெல்லாம் நாற்பது ரன்களை கடந்திருந்தார். இதில் பெரேரா பந்தில் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ், ஆர் பி சிங் பந்தில் அடித்த ஸ்கொயர் பவுண்டரி என எல்லாமே கண்கொள்ளா காட்சிகள்.

சென்ற போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் அடுத்ததாக அம்பத்தி ராயுடு களம் கண்டார். அவர் வந்த வேகத்தில் மளமள என ரன் குவிக்க ஆரம்பித்தார். ஸ்கோர் வேகமாக ஏற தொடங்கியது.ராயுடு நான்கு சிக்ஸர்கள் அடித்தார். சச்சின்-ராயுடு இணை 50 ரன்களை கடந்த போது அதில் சச்சினின் பங்களிப்பு வெறும் 12 ரன்கள் தான்.

சச்சின் அரை சதத்தை கடந்து தனக்கே உரிய பாணியில் சற்று நேரம் இளைப்பாற பொறுமையாக விளையாடினார். அந்த நேரத்தில் அருமையாக விளையாடி ராயுடு இருபத்தி சொச்சம் பந்துகளில் அரை சதம் கண்டார் (28?). அது வரை பொறுமையாக விளையாடி வந்த சச்சின் அடுத்து பூதாகரமாக வெடிக்க தொடங்கினார். ராயுடு 44 ரன்கள் எடுத்திருந்த போது சச்சின் 55 ரன்கள் தான் எடுத்திருந்தார் பின்னர் ராயுடு 50 ரன்களை தொடும் போதெல்லாம் சச்சின் எண்பதை தாண்டி நின்று கொண்டிருக்கிறார்.

வினய் குமாரின் ஒரே ஓவரில் ராயுடு இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, சச்சினோ அதே ஓவரில் தனது ட்ரேட்மார்க் ஸ்வீப் ஷாட்டை அடித்து 4 ரன் சேர்த்தார். பின்னர் லெக் சைடில் கால்களை தூக்கி பந்தை லாவகமாக எல்லைக்கோட்டை தாண்டி விழுமாறு அடிக்கும் அந்த சிறு வயது சச்சினும் நமக்கு காண கிடைத்தார். பின்னர் தோனி ஸ்டைலில் ஒரு காலை அகற்றி பந்தை சிக்ஸர்க்கு சச்சின் விரட்டியது பார்க்க ஒரு மாதிரி இருந்தது.(சச்சின் ஸ்டைலாக விளையாடுவதை பார்த்தே பழகி விட்டது).

சரி எப்படியும் இன்று சச்சின் சதம் போட்டு விடுவார் நாம் பதிவு எழுதலாம் என்று இருந்தேன். ஆனால் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தேன். நான் பதிவு எழுத ஆரம்பிக்க போதாத காலம் , ஒருவேளை அதற்கு பின்னர் சச்சின் அவுட் ஆனால் நான் அவசர குடுக்கையாக பதிவு எழுத ஆரம்பித்ததால் தான் சச்சின் அவுட் ஆனார் என்று அவர்கள் பேசும் அற்ப காரணங்களுக்கு இடங்கொடாமல் பொறுமையாய் ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தேன்,சச்சின் சற்றும் பொறுக்காமல் ரன்னை ஏற்றி கொண்டிருந்தார்.

சச்சின் நூறை நெருங்கும் நிலைமையை புரிந்து கொண்ட ராயுடு சச்சினுக்கு சிங்கில்ஸ் ஆடினார். சச்சினும் இடை இடையில் தனது நுணுக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை ஏற்றி கொண்டே இருந்தார்.

18 வது ஓவரில் இருந்தே சச்சின் எப்போது சதம் அடிப்பார் என்று ஆர்வம் தொற்றிக்கொண்டது. பெரேரா பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து சச்சின் 85 ஐ தாண்டி விட்டார்.

19 வது ஓவரில் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் அவசரமாக ஒரு ரன் ஓட பீல்டர் ஸ்டம்பை நோக்கி எறிந்த பந்து ஸ்டம்பில் படாது விலகி செல்ல மீண்டும் ஒரு ரன் ஓடினார். நல்ல வேலைக்கு அடுத்த ஓவரின முதல் பந்திலியே ராயுடு சின்கிள் எடுத்தார். ஐந்து பந்துகள் பத்து ரன்கள். சச்சின் ஃபோர் அடித்து 95ற்கு சென்றார். பின்னர் அடுத்த பந்தில் ராயுடு தனது விக்கெட்டை சச்சினுக்காக கொடுத்த போது பாவமாக இருந்தது(பெயருக்கு ஏற்றாற் போல் அவர் அம்பத்தி சொச்சத்தில் அவுட் ஆனார்). ஆனாலும் ராயுடு எல்லாம் இந்திய அணியில் இன்னும் ஏன் சேர்க்கப்படவே இல்லை என்பது தெரியவில்லை மனிதர் என்னமாய் பந்தை விரட்டி விரட்டி அடிக்கிறார்.

அடுத்து பொல்லார்டு வந்தார், மும்பை மைதானத்தினர் என்ன நடக்க போகிறதோ என்று மயான அமைதியில் கிடக்க ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து 99ற்கு தாவினார் சச்சின். கடைசி பந்தில் சின்கிள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்ததும் என்னமோ நாமே நூறு ரன்கள் அடித்தது மாதிரியான உணர்வு வருவதை எல்லாம் தடுக்க முடிவதில்லை.

பின்னர் ஆடத் தொடங்கிய கொச்சி அணியின் ப்ரேண்டான் மெக்குல்லம் மற்றும் ஜெயவர்தனே இணை தொடக்கம் முதலே ரன் விகிதத்தை சரியாக கடை பிடித்து ஆடி வெற்றி பெற்றது.

மலிங்கா இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கி விட்டார் அதுவுமில்லாமல் அவர்களின் தேவைப்படும் ரன் விகிதம் எடுக்கப்பட்ட ரன்களின் விகிதத்துடன் எப்போதும் ஒத்தே இருந்தது.

பொல்லார்டு பிடிவாதமாக சென்று ஒரு பந்தை பவுண்டரிக்கு தள்ள கூட்டம் அவரை கரித்து கொட்டியது. ஆனால் அடுத்த பந்தில் மனிதர் என்னமாய் ஐந்து ரன்களை சேமித்தார். சிக்சருக்கு செல்ல வேண்டிய பந்தைத் தடுத்து விழுந்த வேகத்தில் மீண்டெழுந்து அப்பப்பா... உடனே அதே கூட்டம் அவரை புகழ்ந்து தள்ளியது வேறு விஷயம். நம்மவர்கள் எப்போதும் அப்படித்தானே.

ஜெயவர்தனே 56 ரன்களும் மெக் குல்லம் 81 ரன்களும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இது என்ன இந்திய அணியா? தோற்றதும் கவலைப்படுவதற்கு மும்பை தானே சச்சின் விருந்து கிடைத்தால் சரி என்று தேற்றினாலும் சச்சின் சதமடித்து தோற்றதால் நண்பர்களின் அந்த
"சச்சின் சதமடிச்சா டீம் ஜெயிக்காது" வாதம் மீண்டும் களை கட்டியது.

"சச்" ஆட்டங்கள் தொடரட்டும்...

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. மனதை தேற்றுவதற்கு உதவும்...! 
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு