புதன், 27 ஏப்ரல், 2011

27/4 - ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : கண்ணதாசன்

| | 3 comments
நேற்று வால்பேப்பர் ஃபோல்டர் ஓரளவிற்கு பலரையும் சேர காரணமாய் இருந்த, பதிவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி..!

கவியரசு கண்ணதாசனின் பாடல்களை ரசிக்காத தமிழ் பிடித்த தமிழர்கள் யாரும் இருக்க முடியாது.அவரின் பாடல்களை தொகுத்து வைத்திருக்கும் ஒரு இணைய ஃபோல்டரைத் தான் இன்று பகிரப் போகிறேன்.

இணைப்பு 1 :  கண்ணதாசன்
 

இணைப்பு 2 : தத்துவம் 

கவியரசரின் வரிகளில் பலருக்கும் பலவும் பிடித்திருக்கும்,
எனக்கு மிகப் பிடித்த அவரின் பாடல்,

படம்: அவள் ஒரு தொடர் கதை
பாடல்: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு



தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாயென்ன
மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…

3 கருத்துகள்:

  1. அருமையான பாடலை தேர்ந்தெடுத்து
    கொடுத்தமைக்கு நன்றி
    கண்ணீர் என்பது மட்டும்
    தண்ணீர் என இருக்கவேண்டும்
    என நினைக்கிறேன்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. present

    பதிலளிநீக்கு
  3. Siva9 செப்டம்பர், 2011 8:47 முற்பகல்

    Pl. updated the links..

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...