திங்கள், 11 ஏப்ரல், 2011

அந்தர் பல்டி ராகுல் காந்தி..!

| | 4 comments
பொதுவாகவே அரசியல் கட்சிகளுக்காக பிரச்ச்ரத்தில் ஈடுபடும் கடைநிலை பேச்சாளர்கள் ஒரு மேடையில் பேசியதற்கு அப்படியே நேர்மாறாக அடுத்த மேடையில் பேசுவது இயல்பான ஒன்று தான். ஆனால் ஒரு தேசிய கட்சியின் தலைவர், அடுத்த பிரதமர் என்றெல்லாம் அறியப்படுபவர் சர்வ சாதாரணமாக இங்கொன்றும் அன்கொன்றுமாய் பேசுவது என்பது முற்றிலும் புதுமையானது.

வேறு யார்? இந்தியாவின் விடிவெள்ளி என்று காங்கிரஸ் காரர்கள் கூச்சலிடும் ராகுல் காந்தி தான் இந்த அற்புத நிகழ்வை நிகழ்த்தி உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தன் பேச்சுகளில் முக்கியமாக தெரிவித்தது இரண்டு கருத்துகளைத் தான்

1 ) தமிழகத்தின் முதலமைச்சராக அனுபவம் நிறைந்த கலைஞர் ஆறாவது முறையாக வர வேண்டும்
2 ) தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால் மக்களின் வாழ்வு மென்மேலும் வளம் பெறும்.

இப்போது அந்த முதல் கருத்தை மட்டும் நன்றாக நினைவிற் கொண்டு கீழ்க்காண்பதை  படியுங்கள் :

கேரளாவில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி " இம்மாநில முதல்வருக்கு வயதாகி விட்டது, அதனால் அவரால் சரியாக பனி புரிய முடியாது, மேலும் ஒருவேளை அவர் முதலமைச்சரானால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் வயது 93 (அச்சுதானந்தன்) ஆகி விடும். எனவே எங்கள் இளம் தலைமுறைக்கு வாக்களியுங்கள்" என்று தெரிவிக்கிறார்.

 ஐயா ராகுல்,

தமிழக முதலமைச்சராக கலைஞர் வர வேண்டும் என்கிறீர், வயதானவரை ஆட்சியில் அமர்த்த கூடாது என்கிறீர் ?

என்ன ஆயிற்று உமக்கு ஏதேனும் பித்து பிடித்து விட்டதா அல்லது எங்களை எல்லாம் பார்த்தால் உமக்கு பித்து பிடித்தவர் போல தோன்றுகிறதா?

முதல் பேசியதை நீர் மறந்து விட்டீரா? அல்லது
நாங்கள் மறந்திட வேண்டுமா?

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் , எங்கள் தமிழினத்தை தாங்கி நின்ற உம்மல பத்தி நல்லாவே தெரியும்,  அதனால நீங்க எந்த அளவுக்கு இந்த தேர்தல்ல வாக்குகளை குவிக்கிறீர் என்பதை கோவிக்கமா கொஞ்சம் பொறுத்து பாரும்...!

4 கருத்துகள்:

  1. சென்னை பித்தன்11 ஏப்ரல், 2011 8:33 பிற்பகல்

    அவருக்கு எது சாதகமோ அதைப் பேசுகிறார்!கலைஞருக்கு மட்டும் வயது குறையுமோ!

    பதிலளிநீக்கு
  2. குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.இவங்க பேச்சு மேடையை விட்டு இறங்கினாப் போச்சு.

    பதிலளிநீக்கு
  3. He is also a normal politician.

    பதிலளிநீக்கு
  4. He is also a normal politician.

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...