செவ்வாய், 19 ஏப்ரல், 2011

முதலில் மும்பை,இப்போது சென்னை - பின்னி எடுக்கும் கொச்சி

| | Leave a Comment
சென்னை இரண்டாவது முறையாக ஐபிஎல் 2011 இல் தோல்வி அடைந்தது. கொச்சி அணி சென்ற போட்டியில் மும்பை அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது. அப்போதே ஒரு இலங்கைக்காரர் தலைமை தாங்கும் அணியிடம் சச்சின் அணி தோற்றது ஒரு மாதிரி இருந்தது. இப்போது சென்னை அணி தோற்கும் போது அதனினும் வருத்தமாகவே உள்ளது.

ஆனாலும் திறமை இருக்கிறது வெற்றி பெறுகிறார்கள் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று கொச்சி களத்தடுப்பை தெரிந்தெடுத்தது. சென்னை வீரர் ஹஸ்ஸி 8 ரன்களில் வெளியேற, முரளி விஜய்,சுரேஷ் ரெய்னாவின் சிறப்பான மட்டை வீச்சில் நன்றாகவே விளையாடி வந்தது சென்னை. ஆனால் விஜய் ஆட்டமிழக்க, பத்ரிநாத் வந்து சில நேரம் ஆட்டத்தை தொடங்குமுன் மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர்களாக மாறியது. ஆட்டமும் மாறியது.
வழக்கம் போல கஷ்டப்பட்டு(?) விளையாடிய பத்ரிநாத் 19 ரன்களில் அவுட் ஆனார்.இதற்கிடையில் எப்போதும் நம்பிக்கையுடன் விளையாடும் ரெய்னா ஐம்பது ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

கடைசி ஓவரில் மார்கல்,தோனி ஒரு சிக்ஸர் அடித்து ரன்களை ஏற்றினர். கொச்சி அணியின் களத்தடுப்பு பிரமாதமாக இருந்தது, அதிலும் மெக்கல்லம் மிக சிறப்பாகவே பீல்டு செய்தார்.
எனக்கென்னவோ ஜெயவர்த்தனே கிளம்பியதும் அணித் தலைவராக இவர் தான் இருப்பாரோ எனத் தோன்றுகிறது.

D/L முறையில் சென்னை அடித்த 131 ரன்கள் 134 ஆக மாற்றப்பட்டது.
135 எனும் துரத்தக்கூடிய இலக்கை விரட்டிய கொச்சின் அணிக்கு சென்ற போட்டியை போல இதிலும் மெக்குல்லம்(ஆட்ட நாயகன்) அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். நம்ம பொறியாளர் அஷ்வின் ஜெயவர்தனே மற்றும் மெக்கல்லம்(47) விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பார்த்திவ் படேலும் பொங்கி எழ அந்த அணியின் கேட்கும் ரன் விகிதம் குறைந்தது. கடைசியில் எல்லாவற்றையும் முடித்து கொடுக்க ஜடேஜா வந்தார், இரண்டு சிக்ஸர் மூலம் விரைவாகவே போட்டியை முடித்து விட்டார்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..! 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக