வெள்ளி, 29 ஏப்ரல், 2011

99 நாட் அவுட்.! (3)

| | Leave a Comment
பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும் மூன்று இலக்க ரன்கள் அடிக்கவில்லை என்பது சச்சின் தன் திறமையை எந்த ஆடுகளத்திலும் மிகச் சிறப்பாக பயன்படுத்துவார் என்பதற்கு நல்ல சான்று.


சதம் #4

ரன்கள் : 111
எதிரணி : தென் ஆப்ரிக்கா
இடம் : ஜோஹன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா
நாள் :  நவம்பர் 28,1992
ஆட்ட முடிவு : டிரா
ஆட்ட நாயகன் : இல்லை

போட்டியின் முதல் இன்னிங்க்ஸ்-ல் 292 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்ரிக்கா. இந்த டெஸ்ட் போட்டியின் எந்த இன்னிங்க்ஸ்-லும் ரன் விகிதம் 3 ஐக் கூட தொடவில்லை. ஜான்டி ரோட்ஸ் 28 ரன்கள் எடுத்த பொது ரன் அவுட் ஆனார். ஆனால் பக்னர் மூன்றாவது நடுவரைக் கூடக் கேட்காமல் அவுட் இல்லை என்று சொல்லி அவருக்கு நல்ல வாய்ப்பு கொடுக்க அவர் 91 ரன்கள் எடுத்து இந்தியா கையில் இருந்து ஆட்டத்தை பறித்தார்.

முதலில் மனோஜ் பிரபாகரின் ஸ்விங் பந்து வீச்சில் சிக்கி நான்கு விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு பறி கொடுத்தது தென் ஆப்ரிக்கா. பின் மேக்மில்லன்,ரோட்ஸ்-ன் ரன்களால் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்தது.

இரண்டாவதாக ஆடத் தொடங்கிய இந்திய அணியினர் எந்த நிலையிலும் தென் ஆப்ரிக்கா பந்துகளை சமாளிக்க முடியாமல் போயிற்று. சச்சினுக்கு பத்து ரன்களில் ஒரு டாப் எட்ஜ் மூலம் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வேளை அந்த கேட்ச் மட்டும் பிடிக்கப்பட்டிருந்தால் இந்திய அணி 100 ரன்களை கடந்திருப்பது கூட கஷ்டமாக மாறி இருக்கும்.

திணறிக் கொண்டிருந்த அணியின் நடுவில் சச்சின் மட்டும் நம்பிக்கையுடன் விளையாடி தொடர்ந்து எந்த பார்ட்னர்ஷிப்பும் கிடைக்காவிட்டாலும் நூறு ரன்களை கடந்தார்.இந்த போட்டியில் 33 ரன்கள் அடித்திருந்த பொது சச்சின் 1000 ரன்களைக் கடந்த மிக இளம் வீரர் (19 வயது 217 நாட்கள்) என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே அந்த பெருமையை வைத்திருந்தவரும் ஒரு இந்தியர் தான், அவர் கபில் தேவ். சச்சின் அவரை விட இரண்டு வயது முன்னதாகவே இந்த சாதனையைப் படைத்தார்.

270 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரிகளின் உதவியுடன் சச்சின் 111 ரன்கள் அடித்தார். அற்புதமான ஸ்ட்ரைட் டிரைவ் மூலம் தொடங்கி, கண்ணுக்கு விருந்தாக ஸ்கொயர் டிரைவ், லெக் க்லான்ஸ் என பல வகை ஷாட்களும் இந்த போட்டியில் பார்க்க கிட்டியது. சச்சினுக்கு அடுத்து இந்திய வீரர் ஒருவரின் சிறப்பான ஆட்டம் வெறும் 25 ரன்கள் தான், கடை நிலையில் களமிறங்கிய கபில் தேவ் தான் அதையும் அடித்தார். இந்த ஆட்டத்தில் அவரது பேட்டிங்கிற்கு சவாலாக விளங்கியவர் டொனால்ட், இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் அவர் சச்சினின் விக்கெட்டை தன் வேகத்தால் கைப்பற்றவும் செய்தார்.

கடைசி நாளில் இந்தியா வெற்றிக்கு 303 ரன்கள் அடிக்க வேண்டும், ஆனால் இரு அணிகளும் வெற்றி பெற நம்பிக்கை இல்லாமல் போட்டியை சீக்கிரத்தில் முடித்துக் கொண்டார்கள்.

காணொளி : 

                            

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்...

அந்த சென்னையை சச்சினுக்கு ஏன் பிடிக்கும் எனும் காரணம், நாளை...!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக