ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுக்குமா இந்தியா?

on செவ்வாய், 22 மார்ச், 2011

உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 34 போட்டிகளாக  வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அடி கொடுத்து உள்ளது. நம் பங்காளி கொடுத்ததை நாமும் கொடுக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சச்சினின் அந்த நெடு நாள் கோப்பை கனவு மெய்ப்படும். இம்முறை நிச்சயம் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என நம்புவோம் வேறென்ன நம்மால் செய்ய முடியும்.

உலக கோப்பை போட்டிகள் தொடங்கிய புதிதில் நானும் ஏதாவது பதியலாம் என்று ஒரு உலக கிண்ண போட்டிகள் தொடர்பான பதிவை ஆரம்பித்தேன். பின் இது போன்ற எந்த பதிவு எழுதினாலும் அவர்கள் விளையாடும் முறை ஏதும் மாறபோவதும் இல்லை. அவர்களுக்கு அறிவு புகட்டும் அளவுக்கு நமக்கு கிரிக்கெட் அறிவும் இல்லை என்பதால் பிறகு பதிவு இடுவதை நிறுத்தி விட்டேன்.

ஆனால் முக்கிய கட்டமான காலிறுதி போட்டிகள் நாளையில் இருந்து தொடங்க போகிறது. இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ள போகும் இந்நேரத்தில் என்னால் ஏதும் பதியாமல் இருக்க முடியவில்லை.

கடந்த 12 ஆண்டுகளில் இப்போது தான் ஆஸ்திரேலியா வலுவிழந்து கிடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்திடல் கூடாது. ஆஸ்திரேலியா ஒரு அடி பட்ட புலி. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சொல்வது போல

"ஆஸ்திரேலியாவிற்கு ஒன்று மட்டும் தான் தெரியும்.
அது வெற்றி பெறுவது, அவர்கள் இன்னும் தோல்வி அடைவது பற்றி அதிகம் கற்காதவர்கள்"

அது என்னவோ நிஜம் தான். ஆனால் ஒருவருக்கு தெரியாத ஒன்றை சொல்லி தருவது மிகவும் அவசியம் அன்றோ அதனை நிச்சயம் நம் இந்திய அணியினர் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இந்த போட்டியில் சேவாக் ஆசை படுவது போல் 50 ஓவர்கள் எல்லாம் விளையாட வேண்டாம் அதில் பாதி அளவு விளையாடினலே ஸ்கோர் அதிகமாவது உறுதி.

அஷ்வினை ஜாகிர் கானுடன் முதல் 15 ஓவர்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ஜாகிர் கான் அளவுக்கு அவருடன் இணைந்து பந்து வீச யாரும் இந்திய அணியில் யாருமில்லை. பழைய பந்தில் ஜாகிர் சிறப்பாக பந்து வீசுவர் என்பதால் அவரை பின் பாதியில் பயன் படுத்துவது சிறந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எப்போதும் துடிப்பாக இருக்கும் பந்து வீச்சாளர்கள் சாதித்து காட்டுவது உண்டு. ஸ்ரீசாந்த் இதில் கெட்டிக்காரர் ஆதலால் அவர் அணியில் இடம் பிடித்தால் வியப்படைய ஒன்றுமில்லை.

பேட்டிங் பவர் ப்ளே குறித்து அதிகம் சிந்திக்காமல் , சாதரணமாக அதனை எதிர் கொள்வது என்று. எனக்கு என்னவோ 16 ஆவது ஓவரிலியே எடுத்து விட்டால் என்ன?

கோப்பை கனவுகள் மெய்ப்பட விரும்பும் நான்,....


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக