அடேயப்பா... மக்கள் சேவை புரிய 4280 பேர் விருப்பம்

on ஞாயிறு, 27 மார்ச், 2011

தமிழக சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிட 4280 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில்  சதவீத பேர் நிஜமாக மக்களின் எண்ணங்களை மதிக்க போகிறவர்கள் என்ற விவரமெல்லாம் எனக்கு தெரியாவிடினும் மக்களுக்கு யார் வர வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

234 தொகுதிகளிலும் மொத்தம் 4280 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சனிக்கிழமைதான், அதாவது கடைசி நாளான நேற்றுதான் அதிக அளவாக 1879 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் 152

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்தம் 152 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 145 பேர் சுயேச்சைகள் ஆவர். இவர்கள் அனைவரும் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆவர். அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனுக்களை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் 387 பேர்

சென்னை மாநகரில் மொத்தம் 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட மொத்தம் 387 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் அனைத்தும் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 13ம் தேதி வாக்குப் பதிவும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக