ஞாயிறு, 1 மே, 2011

99 நாட் அவுட்.! (4)

சச்சின் இதற்கு முன் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும் இந்த சதம் அவருக்கு மிகவும் முக்கியமானது,பிடித்தமானது. ஏனெனில் இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் சதம், சச்சின் சதமடித்து இந்திய அணி வெற்றி பெறும் முதல் போட்டி என்று அதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்த பெருமை எல்லாம் நம்ம ஊர் சென்னையில் தான் நடந்தது. இதனால் தான் சென்னையை சச்சினுக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது, பின்னரும் பல வேளைகளில் இங்கு சச்சின் நன்றாக விளையாடி அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

சதம் #5

ரன்கள் : 165
எதிரணி : இங்கிலாந்து
இடம் : சென்னை,இந்தியா
நாள் :  பெப்ரவரி 12,1993
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : ஆம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணம் இந்திய வீரர்களின் திறமையான ஆட்டம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. இங்கிலாந்து வீரர்கள் அதிகப்படியாக சாப்பிட்ட இறால் மீனும் தான். போட்டிக்கு முந்தைய நாள் சாப்பிட்ட இறால் போட்டியின் முதல் நாள் அணித் தலைவர் கிரகாம் கூச் வயிற்று உபாதைகளால் விலகிக் கொள்ள காரணமானது. அடுத்த நாள் மேலும் இரண்டு வீரர்கள் அவதியுடன் விளையாடினர். அதேர்டன் கேப்டன் ஆனார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாளில் இருந்தே இந்தியா போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. சித்து சதம் அடித்து அசத்த அணியின் ஸ்கோர் 250 ஐ தாண்டியது. ஆனால் சச்சினின் நல்ல அனுபவ வீரரைப் போன்ற ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. சில பந்துகளை அடித்து விளாசுவதும், சில பந்துகளை அப்படியே விடுவது என தான் எந்த நிலைமையில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவரானர் சச்சின்.

முதல் நாள் ஆட்டம் முடியும் போது சதம் அடித்திருந்த சித்துவும் சச்சினும் களத்தில் இருந்தனர்.ஆனால் இந்த இணையை அடுத்த நாள் சீக்கிரமே இங்கிலாந்து வீரர்கள் பிரித்து விட்டனர். பின்னர் சச்சினோடு அம்ரே சேர்ந்து அணிக்கு நல்ல ஸ்கோர்-ஐ தொட உதவியாய் இருந்தனர்.

இந்த போட்டியில் எப்போதெல்லாம் பந்து ஸ்டம்பை விட்டு விலகி சச்சினுக்கு போடப்பட்டதோ(Wide outside the off stump) அப்போதெல்லாம் அவர் அதை பவுண்டரிக்கு துரத்தினார். மல்கோம் அப்படி என்ன செய்தார் என்று தெரியவில்லை அவர் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தள்ளுவதிலியே சச்சின் குறியாய் இருந்தார். சச்சின் 90 ஐ தொட்ட பின்பு அவர் பந்து வீச வந்தார். சில பந்துகளிலேயே் அடுத்தடுத்து மூன்று ஸ்ட்ரைட் ஆன் டிரைவ் அடித்து சதத்தை கடந்தார் சச்சின்.

சில வேளைகளில் லெக் சைடில் வீசப்பட்ட பந்துகளை கொஞ்சம் பின் நகர்ந்து விளையாடிய லெக் க்லான்ஸ் இன்னும் கண்ணிற்குள் நிற்கிறது. 150 ஐ கடந்ததும் அதிரடி ஆக ஆடத் தொடக்கி ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் அடுத்த பதிளியே அவர் பந்து வீச்சளாரிடமே பிடி கொடுத்து அவுட் ஆனார்.

கடைசியில் கபில் தேவின் அதிரடி உதவியுடன் இந்திய இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை பதித்தது(560).அடுத்து ஆடிய இங்கிலாந்து இரண்டு இன்னிங்க்ஸ்-லும் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மொத்தம் வீழ்த்தப்பட்ட 20 விக்கெட்டுகளில் 17 சுழல் பந்துவீச்சாளர்களுக்குத் தான்.

அதிலும் இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் கும்ப்ளே மட்டும் ஆறு விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Cricinfo ஆட்ட விவரம்

காணொளி : 

                             

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்... 

2 பின்னூட்டங்கள்:

  1. இரா.எட்வின்1 மே, 2011 9:40 am

    ஆஹா நான் இன்றும் ஓட்டுப் போட்டேனே

    பதிலளிநீக்கு
  2. சி.பி.செந்தில்குமார்1 மே, 2011 12:48 pm

    குட் ஷேர்

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...