ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக அமைய 600,700 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என்பதை சென்னையில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா இடையான போட்டி ஒரு சிறந்த சான்று.
ஆட்டம் தொடங்கியது முதலே சிறந்த திருப்பங்களுடன் அமைந்தது. முதலில் விக்கெட்டுக்கள் இழந்து தவித்த இங்கிலாந்து பின்னர் ஓரளவு சமாளித்து ரன்கள் அடித்தாலும் தென் ஆப்ரிக்கா பின் பாதியில் சுதாரித்து விக்கெட்டுக்களை அள்ளி வெறும் 171 ரன்களுக்கெல்லாம் இங்கிலாந்தை சுருட்டியது.
நல்ல போட்டி அமையும் என்று பார்த்தால் இப்படி ஆகி விட்டதே என்று நீங்கள் நினைத்து இருந்தால் அது முற்றிலும் தவறாகி போனது நிஜமே.
63 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வெற்றியை நோக்கி பயணித்த தென் ஆப்ரிக்கா பின் தன் 102 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் கொடுத்து தோற்று போனது.
இங்கிலாந்து விளையாடிய போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
நெதர்லாந்து உடனான போட்டிவில், டென் டெஸ் சட்டே சதம்,
இந்தியாவுடன் டை,
அயர்லாந்து உடன் தோல்வி,
இப்போது தென் ஆபிரக விற்கு எதிராக அசத்தும் வெற்றி.
போட்டியில் ஸ்ட்ராஸ் தலைமை பண்பு மிக சிறந்ததாக இருந்தது. அன்டர்சன், ப்ராட் போன்றவர்களை தக்க சமயத்தில் பயன்படுத்தியது இங்கிலாந்துக்கு வெற்றி தேடி தந்தது.

0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக