படம்: கோ
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஆலாப் ராஜு, பிரஷந்தினி, ஸ்ரீசரண், எம்சீ Jesz
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
என்னமோ ஏதோ மின்னி மறையிது விழியில்
அன்டி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ சிக்கி தவிக்கிது மனதில்
இறக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமாய் பூவே .....
முத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் பஞ்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்
ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமாய் பூவே .....
lets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ
your looking so black
மறக்க முடியலையே என் மனம் அன்று
உம்மனம் so lovley இப்படியே இப்ப
உன்னருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா
Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா
Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா
Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா
சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
காண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக