புதன், 8 ஜூன், 2011

நான் ஏன் இப்படி மாறிட்டேன்?

கொஞ்ச நாட்கள் முன்பு வரை நாளொன்றுக்கு இரண்டு பதிவுகள் வரை எழுதிய நான் ஏன் இப்படி ஒரு வாரம் ஆகியும் ஒரு பதிவு கூட எழுதவில்லை என்று யாரேனும் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன், ஒருவரும் கேட்கவில்லையே..
இதிலிருந்து எனக்கு புலப்படுவது என்னவென்றால் பதிவு எழுதுகிறேன் என்ற பெயரில் பெரிய அளவில் மொக்கை போட்டு இருக்கிறேன் என்பது தான்.
அதனால் இனிமேல் நான் பதிவு எழுதக் கூடாது என்று முடிவு எடுக்கலாம் என்று இருக்கிறேன்..

என்றெல்லாம் நான் கூறினால் மட்டும் நீங்கள் என்ன மனம் வருந்தி,
"வேண்டாம், உன் பதிவுகளை தொடரு நிச்சயம் ஒரு நாள் நல்ல பதிவுகள் உன்னிடமிருந்து பிறக்கும்"
என்று கூறப் போகிறீர்களா என்ன..

அய்யோ..
ரொம்ப பேசாதடா..
என்று யாரோ ஏன் பின்மண்டையில் அடிப்பது போல இருக்கிறது.

அதனால், பதிவுலகம் பக்கம் எட்டி பார்க்காததற்கு உண்மைக் காரணம் என்ன என்று சொல்லி விட்டு இந்த பதிவை முடித்து விட்டால் என்னுடைய அடுத்த மொக்கையும் பதிவேற்றம் அடையும்.

நமக்கு பொறியியல் படிப்பு வாழ்க்கை(Engineering Career) முடிந்து போயிற்று..
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அடியேனும் ஒருவன்..
வேலையும் கிடைத்த பாடில்லை..
TANCET போன்ற தேர்வுகள் எழுதி நாட்களை கடத்தினேன்..
இந்த நிலைமையில் பதிவு இட மனம் ஒத்துழைப்பதே கிடையாது..

இனிமேல் மீண்டும் என்னத்தையாவது பதிவேற்றம் செய்யும் கிறுக்கதனத்தை தொடர மாட்டேன் என  உறுதிபட பொய்யுரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

Doubt:
 ஆமாம் இந்த Google தாத்தாவிற்கு என்ன ஆச்சு,
இப்போதெல்லாம் நான் தேடுவது தொடர்பான விளம்பரங்களே (Consultancy Results While searching for a job) பெரும்பாலும் தேடுபொறி எந்திரத்தின் தரவரிசையில் (Search Engine rank) முதல் சில இடங்களை பிடித்து கடுப்பேற்றுகிறது.


3 பின்னூட்டங்கள்:

 1. சென்னை பித்தன்Jun 8, 2011 08:17 AM

  கேம்பஸ் இண்டர்வியூ இல்லையா?

  பதிலளிநீக்கு
 2. மனோவிJun 8, 2011 06:18 PM

  எங்கள் கல்லூரியில் Distinction ல் தெரியவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை.. நான் வெறும் முதல் தரம் தான் எனக்கு எப்படி?..

  பதிலளிநீக்கு
 3. Mahan.ThameshJun 9, 2011 05:01 PM

  நண்பா உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் .
  தொடர்தும் பதிவுகள் எழுதுங்கள் .

  பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...