வீர மங்கை பகுதி 3

on திங்கள், 7 மார்ச், 2011


முந்தைய பகுதிகளை படிக்க வீர மங்கை பகுதி 1
                                           வீர மங்கை பகுதி 2 

 ....தம்பி விளையாடும் இடத்தை அடைந்த விமலா, அவன் விளையாடாமல் மரத்தருகில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவனை நெருங்கினாள்.

என்னடா விளையாடாம சும்மா இருக்க?”

இன்னிக்கி ஃபர்ஸ்ட் பால்லே போல்டு ஆயிட்டன்கா..”

அதான் அவுட்டு ஆயிட்ட இல்ல வீட்டுக்கு கிளம்பி போ..
அம்மா உனக்காக வெயிட் பண்றாங்க..”

இல்லக்கா நான் அப்பறம் போரேன்

ஏண்டா?”

நான் ஒண்ணும் செல்ஃபிஷ் கிடையாதுக்கா…”

என்னடா சம்மந்தமே இல்லாம பேசற?”

நான் அவுட்டு ஆனா என்ன?
மத்த பசங்க விளையாடனும் இல்ல.
நான் போயிட்டா எனக்கு பதில் யார் ஃபீல்ட் பண்ணுவாங்க?"

மிக சாதரணமாய் அவன் சொன்ன வார்த்தைகளால் குழப்பமான விமலா அவனிடமிருந்து கிளம்பினாள்.

அவள் மனம் திடீரென பேச ஆரம்பித்தது.

என்ன விமலா தம்பிக்கு இருக்கிற மனசு கூட உங்கிட்ட இல்லையே?”

என்ன சொல்ட்ற?”

தங்கச்சி நல்லா இருக்கனும்னு இப்படி சுயநலமா இருக்கியே?”

எனக்கு வேற வழி தெரியலயே

ஒரு உயிரை காப்பாத்த பல பேர் உயிரை பிரிக்க போறியா?”

நான் இல்லன்னாலும் இத வேற யாராவது வெச்சி செய்யத்தான் போறாங்க

உன்னால சாகப்போறவங்க குடும்பத்த நெனச்சி பாத்தியா?”

இப்ப என்னை என்ன பண்ண சொல்ட்ற?”

நான் எதுவும் சொல்லல.. நீயே யோசிச்சி முடிவு பண்ணு.” 
என்று சொல்லி மனம் ஆஃப் ஆனது.

விமலா யோசித்து முடிப்பதற்குள் அவள் ஏறியிருந்த பேருந்து அம்பத்தூர் வந்து விட்டிருந்தது.

தன் திடமற்ற தன் மனதை ஒருவாறாக திடப்படுத்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.
நிச்சயமாய் வெடித்து சிதறுவது என்று.

மணி சரியாக மதியம் 2.10
நாராயண் பட்டாசு ஃபேக்டரியை சென்றடைந்த விமலாவை மகிழ்ச்சியோடு வரவேற்றனர் வீரவேங்கையர்கள்.

உள்ளே செல்லும் போது நிறைய மூட்டைகளை பார்த்த விமலா ஜெகதீஷிடம் கேட்டாள்.

இது என்ன ஒரே மூட்டையா இருக்கு?”

வெல்ல கட்டிங்க

“…………..”

என்ன முழிக்கிற? 
எல்லாம் அம்மோனியம் நைட்ரேட் கட்டிகள். சொன்னா நம்ப மாட்ட இங்கிருந்து நாலு ஸ்டேட்டுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூல பொருள்கள் சப்ளை ஆவுது

தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்ட விமலாவிற்கு உடுத்தி கொள்ள சிறப்பு ஆடை கொடுக்கப்பட்டது.

நைட்ரோ கிளிசரின் கொண்டு தயாரிக்கப்பட்ட குண்டு அவளின் மெல்லிடையை அலங்கரித்தது.

மனித வெடிகுண்டுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெல்ட்டும் கோட்டும் விமலாவிற்கு அணிவிக்கப்பட்டது.

அந்த பெல்ட்டில் வெடிகுண்டை ஆக்டிவேட் செய்யும் டைமரை இரவு 7.00 மணிக்கு பொருத்தி ஃபரீத் சொன்னான்,
யூ ஆர் நவ் பர்ஃபெக்ட் ஹுமன் பாம்

எல்லாம் முடிந்ததா?”விமலா கேட்டாள்.

ம்ம்.. இட்ஸ் ஆல் ஓவர்”.

மறுநாள் தலைப்பு செய்தி
வீரவேங்கையரை சாய்த்த வீரமங்கை

சென்னை அம்பத்தூரில் ரகசியமாக இயங்கி வந்த தீவிரவாத அமைப்பினரின் வெடிகுண்டு தொழிற்சாலையை அடையாளம் தெரியாத தீர இளம்பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி அழித்தார்.

என்ன நடந்தது? எப்படி இதெல்லாம்?

சற்று பின்னால் பயணிப்போம்..
விமலா ஆழ்ந்த யோசனைக்கு பின் முடிவெடுத்து இருந்தது வெடிக்கத் தான் ஆனால் அது அமைச்சர் கூட்டத்தில் அல்ல அயோக்கியர்களின் பட்டறையில்.

தன்னை முழுதும் வெடிக்க தயார் செய்த பின்னர் விமலா கேட்டாள்.

நான் கொஞ்சம் பாத்ரூம் போகணும்……..”

லெஃப்ட்ல ரெண்டாவது ரூம்

தான் படித்த எலக்ட்ரானிக்ஸை முதன் முதலாக நடைமுறையில் பயன்படுத்தினாள். தன் இடுப்பில் இருந்த டைமர் சர்கியூட்டை நான்கு நிமிடத்தில் வெடிக்கும்படி திருத்தி அமைத்துக் கொண்ட விமலா அவர்களிடம் திரும்பி வந்து வினவினாள்,

எனக்கு சீக்கிரமே செத்து விடணும் போலிருக்கு

அவசரப்படாதே இன்னும் நாலே மணி நேரம் தான்..”

விமலா மனதில் நினைத்து கொண்டாள்.

நாலு மணி நேரம் இல்லடா முட்டாள். நாலு நிமிஷம் தான் எல்லாரும் சேர்ந்து சாக போறோம்

230 நொடிகள் கரைந்து போயின.

விமலா கடவுளிடம் வேண்டினாள்.

எப்படியாவது என் தங்கச்சிய காப்பத்து முருகா…”

நாமும் வேண்டி கொள்வோம் அவள் தங்கை உயிர் பிழைக்க.

அந்த நேரம் வந்தது 
விமலாவோடு சேர்ந்து அந்த தொழிற்சாலையே வெடித்து சிதறியது.

                         ----------- முற்றும் ----------- 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக