இதுவரை நான் எந்த முடிவு எடுப்பதற்கும் இவ்வளவு சிந்தித்தது இல்லை. ஆனால் எந்த கட்சிக்கு இம்முறை ஓட்டு போடுவது... ம்ஹூம் இந்த இடத்தில் இம்முறை பொருந்தாது என நினைக்கிறேன். ஏனென்றால் இது தான் எனக்கு முதல் அனுபவம்,ஓட்டு போடுவதில்!
எப்போதுமே ஒரு செயலை முதல் முறை செய்யும் போது பொதுவாகவே நமக்குள் சில எண்ணங்கள் வரும், நமக்கு அதை பற்றி எல்லா விசயங்களும் தெரிந்து இருக்கிறதா?
எந்த பட்டனை அழுத்த வேண்டும், எப்போது அழுத்த வேண்டும் என்பன போன்றவை.
சரிவர செய்யாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
ஒருவேளை தவறான இடத்தில் கை வைத்து விட்டால், வேறு யாருக்காவது ஓட்டு போய் விட்டால்?
எல்லாம் முடிந்த பின்னரும், முடிந்தது தெரியாமல் அவ்வளவுதானா என நினைத்தல்.
பீப் சத்தம் வந்த பின்னரும் அங்கேய நிற்றல்.
மற்றவர்கள் நம் அனுபவத்தை பற்றி கேட்டால் மழுப்புதல்.
"யாருக்கு ஓட்டு போட்டீங்க?" என்று பலரும் கேட்கத்தான் செய்கின்றனர்.
சரி, அந்த சிந்தித்தது பற்றி சொல்லி விடுகின்றேன். எங்கள் தொகுதியில் தமிழகத்தின் மிக முக்கிய இரண்டு கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஒருவர் ஊழலை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் நவீன முறையில் செய்யும் கட்சியை சார்ந்தவர், அவருக்கு வாக்களிக்க பிடிக்கவில்லை. இன்னொருவர் சின்ன சின்ன ஊழலை கூட சரியாக செய்ய தெரியாமல் மாட்டி கொண்டு தவிப்பவர், அவருக்கும் வாக்களிக்க முடியவில்லை. சரி தான் போ என்று 49'ஓ போடலாம் என்றால் எமகாதகர்கள் (ஏஜெண்டுகள்) அங்கேயே அமர்ந்து இருக்கிறார்கள்.
கடைசியில் எல்லாமே ஒரே குட்டை தான் அதில் கொஞ்சம் சக்தி குறைச்சலான குட்டையில் விழுவோம் என்று ஓட்டு போட்டு விட்டு வீடு திரும்பினேன்..!
ம்ம்... ஐஸ்வர்யா ராய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டதாக தலைப்பு போட்டிருக்கே?
இந்த காணொளியை பாருங்களேன்..
என்ன இப்போது திருப்தியா?
அந்த படத்தில் மோகன்லால் யார் அவர் என்ன கட்சி என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?
பிடிச்சா ஓட்டு போடுங்க...

thalaiva, idhu mohanlal illaiya, onnu sariya parunga
பதிலளிநீக்குகாலையில் வாக்குச் சாவடியில் இப்ப இங்கே-ஓட்டுப் போட்டாச்சு!
பதிலளிநீக்குநன்றி நண்பரே.. ஐஸ் மழையாக இருந்ததால் மாறி விட்டது.
பதிலளிநீக்கு