வியாழன், 26 மே, 2011


என்ன இது மிக எளிதான போட்டியாகி விட்டதே என்று போட்டியின் முதல் ஆறு ஓவர்கள் முடிவில் எல்லோருமே எண்ணி இருப்பார். ஆனால் டச்சு பேட்ஸ்மேன் ரியான் டென் டாஸ்சாடே மிக சிறப்பாக விளையாடியதுடன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து போட்டியை வெறுமனே மும்பையிடம் ஒப்படைக்காமல் கொல்கத்தாவை காப்பாற்றினார்.


முனாப் படேலின் துல்லியமான ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்துகள் மீண்டும் ஒருமுறை அவரை வெற்றி வீரராக மாற்றியது. முதலிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தாவை திணறடித்தார். முதல் விக்கெட்டின் கேட்சை பிடித்தது சச்சின், நிச்சயம் அவர் இன்னும் பத்தாண்டுகள் விளையாடலாம். என்ன ஒரு கேட்ச் அது,
The Ever Youth Sachin took the brilliant catch..

பவர்ப்ளே முடியும் போதெல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி   டாஸ்சாடே மற்றும் பதானின் பொறுமையான ஆட்டத்தால் பெறும் சரிவில் இருந்து மீண்டது. எதிர்ப்பார்த்தது போலவே யூசுப் பதான் கொஞ்சம் அவசரப்பட்டு அடிக்க பொல்லார்டு சிறப்பன கேட்ச் மூலம் அவரை வெளியேற்றினார்.

வெற்றிக்கு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணியின் சச்சின், பிளிச்சார்டு முதலிலேயே அதிரடியாய் விளையாடி ரன்  குவித்தனர். எட்டு ஓவர்களில் என்பதை கடந்தனர்.
சச்சின் யூசுப் வீசிய ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகள் தொடர்ந்து அடித்து அசத்தினார்.


ஆட்டத்தின் பின் பாதியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் பிராங்க்ளின் நிதானமாக விளையாடி வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் பாஜ்ஜி சிக்ஸ் அடித்து மும்பை அணியை அடுத்த போட்டிக்கு இட்டுச் சென்றார்.

விவரம் :  4tamilmedia

மும்பையில் இடம்பெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.


இதன் மூலம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) சென்னையில் இடம்பெறும் அரையிறுதி போட்டியில் பெங்களூரை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்டவீரர்கள் கம்பீர், கேலிஸ், கோஸ்வாமி, திவாரி ஆகியோர் 10 க்கும் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். எனினும் அடுத்து களமிறங்கிய பதான் (26), டோஷெட் (70), அல் ஹசான் (26) ஆகியோரின் அதிரடியான இணைப்பாட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை பெற்றது.

பந்துவீச்சில் முனாப் படேல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்லிசார்ட் 51 ரன்களையும், டெண்டுல்கர் 36 ரன்களையும் பெற்றனர். அவர்கள் முதலாவது விக்கெட்டுக்காக 81 ரன்களை பகிர்ந்துகொண்டனர். எனினும் இருவரும் ஆட்டமிழந்ததும் மும்பை அணி தடுமாறியது. இறுதி இரண்டு ஓவர்களில் 15 ரன்களும், இறுதி ஓவரில் 7 ரன்களும் எடுக்கவிருந்தது.

ஹர்பஜன் சிங் இறுதி ஓவரை எதிர்கொண்டு, இரண்டாவது பந்தில் சிக்ஸர் ஒன்றை அடித்ததன் மூலம், போட்டியை முடித்துவைத்தார். நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியின் போது இறுதி பந்தில் ராயுடு சிக்ஸர் அடித்து போட்டியை முடித்துவைத்தார். இரு தடவையும் கொல்கத்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வெற்றியை பகிர்ந்து கொள்ள மைதானத்திற்கு விரைந்த சச்சின் கால்களில் Pads உடனேயே இருந்தார். வெற்றியை தேடித்தரும் என்ற அதிஷ்ட நம்பிக்கையால் போட்டி முடிவடையும் வரை இப்படி இருந்திருக்கலாம் என கமெண்டேட்டர்கள் தெரிவித்தனர்.

பரிசளிப்பு விழாவின் போது, கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் கருத்து தெரிவிக்கையில், சிறந்த கேப்டன்களே, அணியை சிறந்த முறையில் வழிநடத்த முடியும். தனது கேப்டன் பதவி அணிக்கு அதிஷ்டமில்லை என கவலைப்பட்டார்.

போட்டி நாயகனாக முனாஃப் படேல் தெரிவானார்.

ஹி..ஹி..

எனக்கு ஒரு பால் போடுங்கப்பா...

 கண்டனம் :


போட்டியின் போது பல நேரங்களில் கம்பீர் வலியால் அவதிப்படுவதை காண முடிந்தது, காயம் எனத் தெரிந்தும் விளையாடுவது ஏன்?
அதுவும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கேப்டன் என்பதையும் மீறி,
பணத்திற்காக நாட்டை புறக்கணிக்கிறார்களா?


புதன், 25 மே, 2011

போட்டியை பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே சென்னை தோற்று விடும் என்றிருக்க பதினோரு பேர் மட்டும், சென்னை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்,அவர்கள் மஞ்ச சட்டை போட்ட சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள்.
கிட்டத்தட்ட தோற்று விடும் என்ற நிலையில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களை 59 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

பெங்களூர் முதலில் பேட்டிங் :

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். நிச்சயம் அது கெய்ல்-ஓ-போபியா வால் தான். முதலில் போல்லின்கர் மற்றும் மார்க்கல் பந்து வீசினர்.
கெய்ல் அடிக்க ஆரம்பிக்கும் முன்னே அகர்வால் நன்றாக விளையாடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். ஆனால், அஸ்வின் பந்து வீச வந்ததுமே சென்னைக்கு ஒரு விக்கெட் உறுதி என தெரிந்தது, கெய்ல்  அஸ்வின் பந்தை சிக்சருக்கு விரட்ட, அடுத்த பந்திலேயே கெய்லை பெவிலியனுக்கு விரட்டினார் அஸ்வின்.


சென்னை அணி வீரர்கள் பெறும் நிம்மதி உடன் அடுத்தடுத்த ஓவர்களை வீசினர். ஏ பி டி வில்லியர்ஸ் சிக்ஸர் அடித்து பயமுறுத்தினாலும் அதே ஓவரில் அவுட் ஆகி நிம்மதி அளித்தார். போமேர்ஸ்சர்ச் என்பவர் கொஞ்ச நேரம் ரன் மழை பொழிய, பெங்களுருக்கு ரன்கள் ஏறிக் கொண்டே இருந்தது.

கோலி சீரான ஆட்டம் :

இதற்கெல்லாம் இடையில் விராட் கோலி மட்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தபடி இருந்தார்.
போல்லின்கர் வீசிய 17வது ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது, முதலில் ஒரு அற்புதமான கேட்ச் முயற்சி செய்து தவறவிட்ட அவர், பின்பு போல்டு ஆக்கி பேட்ஸ்மேனை வெளியேற்றினார்.

அடுத்த ஓவரை வீசிய அஸ்வின் கடைசி பந்தில் திவாரி அடித்த ஷாட் தலையில் பட்டு, வலியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். கோலி ஐம்பது ரன்களை ஒரு பவுண்டரி அடித்து தொட்ட பின்பு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து கலக்கினார்.

கடைசி ஓவரில் பெங்களூர் அதிக ரன்கள் அடிக்காததால் சென்னைக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் ஆனது.


ஜாகிர் துல்லியம் :

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே ரன்கள் எடுக்க சிரமப்பட்டது. ஜாகிர் கான் மைகேல் ஹசியை ரன் கணக்கை தொடங்கும் முன்பே அவுட் ஆக்கினார். சென்னையின் ப்ரீமியர் பேட்ஸ்மேன் அவுட் ஆன நிலையில், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இந்த ஐபிஎல் போட்டிகளில் மோசமாக விளையாடி கொண்டிருக்கும் முரளி விஜயும் அவுட் ஆனார்.

பின்னர் எப்போதுமே நம்பத்தகுந்த வகையில் விளையாடக்கூடிய ரெய்னாவும்,பத்ரினாத்தும் இணைந்தனர். இந்த இணை ரன் விகிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக் கொண்டிருந்தது, விக்கெட்டுகள் விழாமல் இருக்க வேண்டியது முக்கியம் என்பதால் இவ்வாறு விளையாடிய இவர்கள், ஆறு ஓவர்கள் முடிவில் வெறும் 25 ரன்களை மட்டுமே சென்னை அணியை கடக்க வைத்து இருந்தனர்.

ஐந்தாவது ஓவரின் முதல் நான்கு பந்துகள் டாட் ஆக கடைசி இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் ரெய்னா.

பத்ரிநாத் அவுட் ஆனதும் பொறுமை காட்டி வந்த சென்னை வேகமாக ரன் குவிக்க தொடங்கியது.


இடை இடையே கெய்ல் பந்து வீசி ரன் விகிதத்தை ஏறாமல் பார்த்துக் கொண்டார். அவரின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது, ரெயினாவுக்கு நேராகவும், தோனிக்கு விலகியும் பந்து வீசி ரன்களை மட்டுப் படுத்தினார் அவர். 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார் அவர் , போட்டியின் குறைந்த ரன் விகிதத்தை கொண்ட பந்து வீச்சாளர் அவரே.

44 பந்துகளில்  89 ரன்கள், முடியுமா?

அதிக ரன்கள் அடிக்கப்பட வேண்டும், குறைந்த ஓவர்களே உள்ளன. சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் விளையாடுகின்றனர். போட்டி நல்ல விறுவிறுப்பு அடைந்து இருந்தது.

மிதுன் வீசிய 13வது ஓவர் தான் சென்னைக்கு வெற்றி நம்பிக்கையைக் கொடுத்தது. அவர் அந்த ஓவரில் 23 ரன்களை கொடுத்தார்.

முதலில் சிறப்பாக பந்து வீசிய ஜாகிர் கடைசியில் சொதப்ப சென்னையின் வாய்ப்புகள் அதிகரித்தன. அவர் தோனியின் விக்கெட்டை எடுத்த போதிலும் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை வழங்கினார்.

இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்றிருந்தது ஒரு ஓவரில் 12 என்ற நிலைமைக்கு மாறியது. மார்க்கல் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர் அடித்து சென்னையின் செல்லப் பிள்ளையாக தொடர்ந்தார்.


கடைசி ஓவரை வெட்டோரி வீச, முதல் பந்தில் சின்கிள் எடுத்தார் ரெய்னா அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியும் பின்னர் அற்புதமான ரன்னிங் மூலம் இரண்டு ரன் எடுத்தும் மார்க்கல் களத்தில் நிற்க நான்காவது பந்தை சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் மார்க்கல்.

ரெய்னா தான் எவ்வளவு நம்பகமான மட்டை வீச்சாளர் என்பதை இந்திய அணிக்கு எப்படி முக்கிய கட்டங்களில் நிரூபித்தரோ அதே போல் இப்போதும் 50 பந்துகளில் 73 ரன் சேர்த்து அணிக்கு வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் மும்பை கொல்கத்தாவை சந்திக்கிறது....செவ்வாய், 24 மே, 2011

பல படங்களை ஒருங்கிணைத்து GIF அனிமேஷன் ஒன்றை உருவாக்கும் மென்பொருள் ஒன்றை தேடும் போது இந்த தளம் கிடைத்தது. இந்த இணைய கோப்புறையில் நிறைய மென்பொருள்கள் சீராக வரிசைபடுத்தப்பட்டு கிடைக்கின்றன.மென்பொருள்கள் பெரும்பாலும் இலவசமாக உபயோகிக்கக் கூடியவை. சில அப்படியானதல்ல, அவர்களே சில கோப்புகளை இணைத்து இலவசமாக்கி வைத்து இருக்கிறார்கள்.

இவ்விணைப்பை சொடுக்கி உள்நுழைக,

மென்பொருள்கள் 

JPG to GIF  

திங்கள், 23 மே, 2011

சென்ற தி.மு.க ஆட்சியில் சமச்சீர் கல்வி முறை குறித்து பெரிதும் ஆலோசிக்கப்பட்டு,கடைசியில் அவசர அவசரமாக முடிவுகள் எடுக்கப்பட்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டும் அமலாக்கப்பட்டது. பல கல்வியாளர்களும் அதன் குறைப்பட்ட பாடத்திட்டத்தை எதிர்த்து இருந்தனர். தனியார் பள்ளிகளும் பாடத்திட்டம் செம்மையாக இல்லை என்று புகார் கூறினர்.


நான் என் தங்கையின் ஆறாம் வகுப்பு புத்தகங்களை சில நேரங்களில் பார்த்திருக்கிறேன், வடிவமைப்பு முந்தைய புத்தகங்களினும் பன்மடங்கு மேல் தான். புத்தகம் படிக்க இல்லை என்றாலும் அடிக்கடி பார்க்கவாவது ஆசை வரும் அப்படி இருந்தது, ஆனால் கருத்துகளும் பாடங்களும் அறிவுக்கு உகந்தவையாக நிச்சயம் இல்லை.

நான் படித்த காலத்தில் இருந்த அந்த கோர்வையான பாடங்கள் இதில் இல்லை. உதாரணமாக, தமிழ் பாடம் முன்பெல்லாம் செய்யுள் தனியே,உரைநடை தனியே,துனைப்பாடம் தனியே என பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது அவை ஒன்றிணைக்கப்பட்டு பாடக் குழுக்களாக இருந்தன. அது முதல் முறை படிக்க நன்றாக இருந்தாலும், பின்னர் மீள்பார்வை இடும் போது நிச்சயம் மிகவும் தொந்தரவாக இருக்கும் என்பது புத்தகத்தை பார்க்கும் எவரும் உணரலாம்.

இதற்கிடையில், இந்த ஆண்டு மற்ற அனைத்து வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட இருந்தது. என்ன தான் இது முந்தைய ஆட்சி கொண்டு வந்ததாக இருந்தாலும், பாடத்திட்டம் சரியாக இல்லை என்றாலும் அதனை ஆராய குழுக்கள் அமைத்து அடுத்த ஆண்டு முதல் சரி செய்ய புதிய அரசு முயற்சி எடுத்து இருக்கலாம். அதனை விடுத்து இவர்களும் அவர்களை போன்றே அவசர அவசரமாக முந்தைய பாடத்திட்டத்தை ரத்து செய்து புதிய சமச்சீர் கல்வி இந்த ஆண்டு கிடையாது என்றும் பழைய முறையே கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்கள்.

புது அரசு குழு ஒன்றை அமைத்து அடுத்த ஆண்டு முதல் சமச்சீரக்க் கல்வித் திட்டம் நன்றாக வடிவமைக்கப்பட்டு அமலாக்கப் படும் என அறிவித்து உள்ளது. இதில் சோகம் என்னவென்றால் ஐநூறு கோடி ரூபாய் வரை செலவிட்டு அச்சடிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் வீணாய் போகப் போகிறது.

புதிய நூல்கள் அச்சிட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அச்சகர்கள் அதிக தொகை கேட்கப் போவது உறுதி.

சரி என்னவாவது நடக்கட்டும், இதில் மாணவர்களுக்கு நடந்துள்ள ஒரே நல்ல விஷயம், 15 நாட்கள் அதிகமாக விடுமுறை கிடைத்துள்ளது தான்..

நடந்தது நடந்து விட்டது அடுத்த ஆண்டு முதலாவது சரியான பாடத்திட்டத்தை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். அது பிளவடைந்த ப்பட மையப்பக இல்லாமல் நவீனமும்,பழமையும் கலந்ததாக இருக்க வேண்டும் என்பது விருப்பம்.

இருந்தாலும் என் செய்வேன் நான்?
  

ஞாயிறு, 22 மே, 2011

எப்போதுமே நாசூக்காக பேசுவதிலும் செயல்படுவதிலும் கருணாநிதி வல்லவர். இதற்கு மேலும் கூட்டணியில் நாங்கள் நீடிக்க வேண்டுமா என்பதை காங்கிரசிற்கு உணர்த்தும் விதமாக தன் மகளை பார்க்க (சொல்லவில்லை என்றாலும் உண்மை அது தானே ) செல்லும் கலைஞர் சோனியாவை சந்திக்க மறுத்து இருக்கிறார்.


மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 ம் ஆண்டு நிறைவு விழா இரவு விருந்தி்ல் தி.மு.க., வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இந்த பார்ட்டியில் தி.மு.க., பார்லி., குழு தலைவர் டி.ஆர். பாலு பங்கேற்பார் என்று கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதே நேரத்தில் நாளை அவர் டில்லி சென்றாலும் காங்., தலைவர் சோனியாவை சந்திக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின், 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார். 2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு., கூட்டணி அரசு, கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள், மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர், அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில்தான்.

” 2ஜி’ ஊழலில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது ஏன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமரிடம், சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்தது. சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி போன்றோரின் கைதும், “2ஜி’ வழக்கின் மையமான நிரா ராடியா விவகாரமும், இக்கூட்டணிக்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளன. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரையே எதிர்க்கட்சிகள் முடக்கின. அதேபோல், தலைமைக் கண்காணிப்பு கமிஷனராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், மத்திய அரசு பெரும் தலைக்குனிவை சந்தித்தது.

விலைவாசியும், செயலின்மையும்: பொருளாதார மேதைகளான, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட, அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது. விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில், தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில், மத்திய விவசாய அமைச்சர், அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி, கண்டனம் தெரிவித்தது.

இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான, வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட, பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.

ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு, வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான காங்கிரசின் முரண்பாடான செயல்பாடுகள், 2012ல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை.

சமீபத்தில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம். இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில், இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு, மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி: இன்றைய 2 ம் ஆண்டு நிறைவு விழாவின் பிரதமர் அளிக்கும் விருந்தில் தி.மு.க., பங்கேற்குமா என்று கருணாதியிடம் கேட்ட போது அவர் கூறுகையில் கட்சியின் சார்பி்ல் பார்லி., குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்பார். என்றார். கூட்டணி உறவு எந்த அளவில் உள்ளது என்று நிருபர்கள் கேட்ட போது நீங்கள் நினைக்கும் படியாக எதுவும் இல்லை என்று பதில் அளித்தார். சோனியாவை சந்திக்கப்போவதில்லை என்று சொன்னாலும் , மகள் கனிமொழியை பார்‌க்கத்தான் டில்லி செல்கிறேன் என்று கருணாநிதி எதுவும் கூறவில்லை. என்றாலும் அவர் நாளை கோர்ட்டிலோ , ஜெயிலிலோ கனிமொழியை சந்திக்கலாம் .

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பெரிய கட்சி தி.மு.க., : 2 ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் மத்திய அரசில் 18 எம்.பி.,க்களை கொண்ட தி.மு.க., வே பெரிய கட்சியாகும். இந்த கட்சியின் சார்பில் 6 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க மாட்‌டார்கள் என தெரிகிறது. கனிமொழி கைதாகி இருக்கும் இந்நேரத்தில் அந்த அமைச்சர்கள் பார்ட்டியை புறக்கணித்திருக்கலாம் என தெரிகிறது.

வெள்ளி, 20 மே, 2011

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமாக ஒரு இடத்தை கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சில மாதங்களில் பெற்று விட்டார். ஆனால் ஒரு தின போட்டிகளை பொறுத்தவரை நிலைமை அப்படி இருந்திருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக 82 ரன் குவித்த அந்த ஒரே போட்டி அவரை ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரர் ஆக்கியது. இப்போது (20/05/2011) சச்சின் 48 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் தனது முதல் சதத்தை அடிக்க அவர் 79 போட்டிகள் கடக்க வேண்டி இருந்தது.


சதம் #8

ரன்கள் : 110
எதிரணி : ஆஸ்திரேலியா
இடம் : கொழும்பு,இலங்கை
நாள் : செப்டம்பர் 9, 1994
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : ஆம்

சச்சின் எப்போதுமே ஆஸ்திரேலியா அணி என்றாலே புது உத்வேகத்துடன் விளையாடுவார். இந்த போட்டிக்கு சில ஆட்டங்களுக்கு முன்பு தான் சச்சின் தொடக்க வரிசை வீரராக களம் கண்டார்.

சச்சின் மனோஜ் பிரபாகர் உடன் களமிறங்கினார். மெக்ராத்,வார்னே என சச்சினின் திறமைக்கு சவால் விடும் வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலியா அணியின் பந்துகளை தனது திறமை மூலம் ஒடுக்கினார்.

வியாழன், 19 மே, 2011

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி சிறந்தது பாக்ஸ் ஆபிஸ் மட்டிற்குமல்ல விருதுகளுக்கும் தான் போலிருக்கிறது. இதுவரையில் சிறந்த படம் நடிகர் என எல்லாமே பாலிவுட் அல்லது மலையாள திரை உலகம் என்று இருக்க இப்போது தமிழ் திரைப்பட உலகம் மொத்த விருதுகளையும் குவித்து உள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.


அதுவும் வளரும் நடிகர்,இயக்குனர்கள் பெறுவது அதிலும் மகிழ்ச்சி. தேர்வுக் குழுவினர் இப்போது தான் மக்கள் பார்க்கும் படங்களிற்கும் விருது கொடுகமுனைந்துள்ளனர் இது தொடர வேண்டும் என்பதே எமது விருப்பம்.

இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தமிழ் நடிகர் தனுஷூம், சிறந்த நடிகைக்கான விருதுக்கு தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.


58 வது தேசிய விருதுகள் பெற்றோர் விபரம், சிறந்த நடிகருக்கான விருது, சலிம் குமார் மற்றும் தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடிகைக்கான விருது, தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும், மராத்தி நடிகை மிடாலிக்கும் கிடைத்திருக்கிறது. சிறந்த துணை நடிகருக்கான, விருது மைனா படத்திற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த திரைக்கதை மற்றும் இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது, வெற்றி மாறனுக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடனத்திற்கான விருது, தினேஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கான விருது, மலையாளத்தில் வெளிவந்த அதாமந்தே மக்கான் அபு படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த பொழுதுபோக்கு படமாக சல்மான் நடித்த தபாங் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிவியல் படத்திற்கான விருது, ஹார்ட் அன்ட் ஹார்ட் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிறந்த விளையாட்டு படத்திற்கான விருது, பாக்சிங் லேடிஸ் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது, லிவிங் ஹோம் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

செவ்வாய், 17 மே, 2011

கண்மூடித்தனம்,செம அடி,வெளுத்து வாங்குறது,அதிரடி இப்படி எப்படி இவரை வர்ணித்தாலும் கடைசியில் தன் திறமையால் அனைத்துக்கும் தான் சொந்தக்காரன் என்பதை நிரூபிப்பார் கில்க்ரிஸ்ட். இந்த ஐபிஎல்லில் சதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன கெய்ல்,வால்தாட்டி,சச்சின் என இப்போது கில்லி தனது ஸ்டைலான அதிரடி மூலம்.

பொறுமையாக விளையாட தொடங்கி அசுர வேகத்தில் சிக்ஸர்களை அடித்து ஐம்பதை நோக்கி சென்ற கில்லி பின்னர் மார்ஷை அடிக்க விட்டு கடைசியில் மீண்டும் வெளுத்து வாங்கி இன்னமும் பஞ்சாப் அணியை அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடிக்க வைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய காலங்களில் பார்த்த கில்லியை மீண்டும் காட்டிய ஐபிஎல்லிற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இவ்வளவு தொடர் நீளமாக இருப்பதால் என்ன இவ்வளவு விரைவாக முடிந்து விட்டது என்பதிற்கு பதிலாக, எப்படா இறுதிப் போட்டி வரும் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

தர்மசேலாவில் நடந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒரு புயலே அடித்தது மாதிரி இருக்கிறது.
"நான் நிறைய முறை அவர் விளையாடி பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து விளையாடும் போது அவர் ஒருபுறம் விளையாட நான் அதை மறுபுறம் இருந்து பார்ப்பது மிக சந்தோசமாக இருந்தது" என்று மார்ஷ் கூறியதில் வியப்பேதும் இல்லை.

ஷான் மார்ஷும் தன் பங்குக்கு சில நேரம் பெங்களூரை போட்டுத் தள்ளினார். பதினைந்தாவது ஓவரில் அவர் மூன்று சிக்ஸர்களும்,மூன்று பவுண்டரிகளும் அடித்தார். இவர் மொத்தம் 79 ரன்கள் சேர்த்தார். கில்லி முதல் ஆறு ஓவர்கள் 9 பந்துகளில் வெறும் 2 ரன் தான் சேர்த்து இருந்தார், ஆனால் மித்துன் வீசிய அந்த ஷாட் பிட்ச் பந்து அவரை பழைய நினைவுகளில் கொண்டு சேர்த்ததோ என்னவோ பவர் ப்ளே முடிந்த பின்னர் கில்லி தன் பவர் எண்ண என்பதை அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்துக் காட்டினார்.

லாங்க்வேல்ட் வீசிய பத்தாவது ஓவரில் கில்க்ரிஸ்ட் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் அதில் கடைசி  ஒன்று 122 மீட்டர் பாய்ந்து மிக அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர் ஆக மாறியது.

இறுதி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கில்லி சத்தத்தைக் கடந்த பின்பு ஒரு வழியாக தன் விக்கெட்டை கொடுத்து விட்டு பெங்களூருக்கு 233 என்னும் எண்ண முடியாத இலக்கை விட்டு சென்றார்.

இவ்வளவு பெரிய இலக்கெல்லாம் கெய்ல் எதாவது சூரபத்ம ஆட்டம் ஆடினால் அன்றி வழி இல்லை என்ற நிலையில் அவரும் அவுட் ஆக கடைசி வரை பெங்களூர் போட்டியில் திரும்பாமலேயே 121 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.

கில்லி ஆட்ட நாயகன் ஆனார் சந்தேகம் ஏதுமின்றி...

ஞாயிறு, 15 மே, 2011

சினிமாவில் சில பேர்வழிகள் இருப்பார்கள், தாம் நடிப்பதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமல், தொடர்ந்து வரிந்து கட்டிக் கொண்டு படங்களை நடித்து தள்ளுவார்கள். அப்படித்தான், நானும் பிறருக்கு பிடிக்கிறதா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் என் விருப்பத்திற்கு இது நாள் வரை எதை எதையோ எழுதி பதிந்திருக்கிறேன், என்னுடைய அந்த மோசமான வரிகளையும் படித்து பொறுமை காத்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.


என்னடா இவன் இவ்வளவு பீடிகை போடுகிறான். எதாவது விவகாரமா இருக்குமான்னு எல்லாம் நினைக்காதீர்கள், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. பதிவுலகிற்கு எழுத்துகள் மூலம் அறிமுகம் ஆகும் முன்னரே பலரின் பதிவுகளையும் வாசித்ததுண்டு. அவர்களில் பெரும்பாலோனோர் ஒரு தலைப்பில் நிச்சயம் பதிவிட்டு இருப்பார்கள்..

அது..  நூறாவது பதிவு..
நாமும் என்றாவது ஒரு நாள் இது போன்று நூறாவது பதிவு எழுத வேண்டும் என்று அப்போதெல்லாம் நினைத்ததுண்டு. அந்த பருவம் எனக்கு எப்படி என்றால் முதல் 99 ரன்களை அடிக்காமலேயே 100 வது ரன்னை அடிக்க வேண்டும், சதம் அடித்ததாய் பெருமை கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிறு பிள்ளையை போன்ற பருவம். ஆனால் அந்த ஒரு பதிவு எழுதுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று முழுதாய் இப்போது தான் புரிகிறது.

எழுதியதில் ஏதேனும் தவறு என்றால் பதிவின் பக்கத்திலியே இருக்கும் இடுகையை திருத்து வசதியை பயன்படுத்தி விடுவேன். அதனால் எடிட் போஸ்ட்ஸ் பகுதியை எப்போதாவது தான் பார்ப்பேன். அப்படி சில நாட்களுக்கு முன்னர் பார்த்த போது தான் தெரிந்தது, உங்களையும் தமிழ் அன்னையையும் பதிவிடுகிறேன் என்ற பெயரில் நூறு முறைகளையும் தாண்டி கொடுமை படுத்தி இருப்பது.

நூறு ரன் அடிச்சும், அது தெரியாம விளையாடிட்டு இருக்கிற ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு உணர்ச்சிவசப் படுவானோ (இங்கு ஃபீல் பண்ணுவான் என்றால் நல்லா இருக்குமோ?) அப்படி இருந்தது எனக்கு. என்ன செய்வது, முடிந்து விட்டதே என்று சோர்ந்து விடவில்லை நான். அதெப்படி நான் பதிவெழுத தொடங்கியதற்கான முக்கியமான நோக்கங்களில் ஒன்றாயிற்றே இது (என்னா ஒரு நோக்கம்).

பிளாக்கர் வலைப்பூ வழங்கியில் இன்ட்லி,தமிழ்10 போன்றவற்றின் ஓட்டுப் பட்டைகளை உங்கள் தளத்தின் இடது புறமாக, என் வலைப்பூவில் இருப்பது போன்று விருப்பம் எனில் பின்வரும் மிக எளிதான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வலைப்போவிலும் இணைத்திடுங்கள்.. இது பதிவின் எல்லா பக்கங்களிலும் தெரியும் ஆதலால் உங்கள் பதிவை பிடித்தால் படிப்பவர்கள் வாக்களிக்க எளிதாக இருக்கும்..

1.முதலில் கீழ்காணும் HTML CODE ஐ பிரதி (Copy) எடுத்துக் கொள்ளுங்கள்.

Share

2. பின்னர் உங்கள் டாஷ்போர்டை திறந்து அதில் டிசைன் மெனுவில் செல்லவும். அங்கே உங்களுக்கு புதிய நிரலி (Add A Widget) வசதி இருக்கிமிடத்தில் சொடுக்கி HTML/Javascript என்பதை சொடுக்கவும்.

3.அங்கே நீங்கள் பிரதி எடுத்த Code ஐ உள்ளிட்டு சேமித்து விடவும்.

4. பின்னர் அந்த நிரலியை உங்கள் Blog Posts பகுதிக்கு கீழாக மாற்றி செருகி சேமிக்கவும். உங்கள் ஓட்டுப் பட்டை தயார்.

5. உங்கள் வலைப்போவிற்கு தகுந்தவாறு bottom:0%; என்பதையும் (0-50%),
 margin-left:-85px என்பதையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

சந்தேகங்களை மறு மொழி இடவும்.

சனி, 14 மே, 2011

தமிழக மக்கள் என்றைக்குமே எந்த தேர்தலிலும் அரை குறை தீர்ப்பை வழங்கியது கிடையாது, தமிழ்நாட்டில் எப்போதும் தொங்கு சட்டமன்றம் அமைந்தது கிடையாது.
மைனாரிட்டி அரசு அமைவது என்பது மிக அரிதானது தான், அதுவும் சென்ற முறை நடந்தேறக் காரணம் திமுகவின் கொட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அம்பலமானது தான்.


அப்படி இருக்க முழுதாய் தெரிந்த பின்னர் இந்த முறை திமுகவை தமிழக மக்கள்  தூக்கி எறிந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்குவார்கள் தான் ஆனால் மாய்ந்து போய் விட மாட்டார்கள் என்பதை திமுக இப்போது தெள்ளத் தெரிந்து கொண்டிருக்கும்.

என்னடா இவன் இப்படி வரிந்து கட்டி அதிமுகவிற்கு ஜால்ட்ரா தட்டுகிறான் என்று எவரும் என்னிட வேண்டாம். நமக்கு முன்னே தெரிந்தெடுக்க இரண்டு விருப்பங்கள் தான் இருந்தன, அதில் அதிமுக மோசம் தான், ஆனால் திமுக நாசம். மோசம் போனால் ஆவது பின்னர் மீள வாய்ப்பு உண்டு ஆனால் நாசம் போய்விட்டால்?

சரி, முடிவுகள் வந்த பின்பு இதெல்லாம் தேவை அற்றது என்று நினைக்கிறேன்.
ஆட்சி கட்டிலை, வைர கிரீடத்தை ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
அவர் என்ன செய்ய வேண்டும் மக்கள் நினைக்கிறார்கள்.

1. அவர்கள் அதிமுகவிற்கு செய்ததை இவர்கள் திமுகவிற்கு செய்ய முற்படாமால், அவர்கள் மக்களுக்கு செய்யாததை இவர்கள் செய்ய வேண்டும்.

2. திரைத் துறையை சிலரின் இரும்பு பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

3. இலவசங்களை அறிவித்து வெற்றி பெற்று விட்டீர்கள் என என்னிட வேண்டாம். அவர்களும் கொடுத்தார்கள். மேலும் அறிவிக்கவும் செய்தார்கள். எனவே அந்த சோம்பேறி ஆக்கும் செயலை விடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதினும், மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் என்றும் பிறரிடத்து கை ஏந்தி நிற்க வேண்டி வராது அன்றோ?

நாளை தமிழகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கும் (அப்படி ஒண்ணும் தெரியலியே?) அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமக்கு சேவை புரிய போகிறவர்கள் (சேவை என்றால் என்ன? அப்படின்னு கேள்விக் கேட்டா வெற்றி பெறுபவர்கள் பதில் சொல்ல விட்டால் பதவி பறிக்கப்படும் என்றால் எத்தனை பேரு தேறுவார்கள்?) யார் யார் என்ற விவரம் தேர்தல் முடிவுகளாக வெளி வரப் போகிறது. (மக்களவை தேர்தல் மாதிரி உள்குத்துகள் நடக்காமல் இருக்குமா?)

இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க வெற்றி பெறவில்லை எனில் என்ன நடக்கும்?

1. தொலைக்காட்சி 'அலைவரிசை'கள் கண்டிப்பாக குறையும். (நிஜமாக நம்புவோமாக)

2. செய்தி என்ற பெயரில் இயங்கும் 24 மணி நேர விளம்பர டிவி தொடராமல் போகலாம்.

3. வாரத்துக்கு ஒரு முறை நடக்கும் பாராட்டு விழா நின்று போகும். (அய்யய்யோ நடிகைகளின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அவ்வளவுதானா?)

4. பிரதான அலைவரிசையில் கூட்டம் போட்டிருக்கும் ஜால்ரா நடிகர் பட்டாளம் கழன்று கொள்ளும். (அப்பாடா சீரியல் குறையும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் எதிர் குழாமின் அலைவரிசை இருக்கிறது.)

5. தமிழின் நெம்பர்.1 நாளிதழுக்கு போட்டி குறையும்.

6. கேபிள் ராஜாக்கள் அம்போ கதியாவார்கள்.

7. "தமிழ்நாட்டுக்கு புரிந்த சேவையை தமிழுக்காக இனி தொடர்வேன்" என்று வரிசையாக கதை,வசனத்தில் படம் வெளியிட நினைத்தாலும் முடியாமல் தவிப்பார்.

8. பாவம் ரவுடிகளுக்கான பாதுகாப்பு குறைந்து விடும்.

9. இலவசங்கள் தொடரும் .. (ரெண்டு பேருமே சொல்லி இருக்காங்களே..ஹி..ஹி)

10. மச்சான்ஸ்..ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாவார்.

11. சொம்பு நடிக,நடிகையர்கள் கழகம் தாண்டுவார்கள்??

12. இன்னும் நிறைய இருக்கு...


பலன்களும் பாதகங்களும்...

நீங்களும் சொல்லுங்க கீழே பின்னூட்டத்தில்..பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
சென்ற பதிவில் சச்சினின் ஆறாவது சதத்தை தவறுதலாக ஐந்தாவது என்று பதிந்து விட்டேன் மன்னிக்கவும்..
இந்த பதிவில் சச்சினின் அடுத்த சதம், அதாங்க ஏழாவது சதம் பற்றி பார்க்கப் போகிறோம்.
இதுவும் இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்டது தான், ஆனால் போன சதம் இலங்கையில் வந்தது, இது இந்திய மண்ணில் பதிக்கப்பட்டது.

சதம் #7

ரன்கள் : 142
எதிரணி : இலங்கை
இடம் : லக்னோ
நாள் : ஜனவரி 19,1994 
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : இல்லை / அனில் கும்ப்ளே

இந்த சதத்தினை பதிவு செய்ததன் மூலம் தொடர்ச்சியாக தான் சதமடித்த   மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதற்கு நிச்சயம் சச்சின் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் சில மணித்துளிகள் விக்கிரமசிங்க பந்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் திணறிக் கொண்டு இருந்தனர். ஆனால் எல்லாம் சச்சின் களமிறங்கியதும் மாறிப் போனது. சித்துவுடன் சேர்ந்து நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இதில் சித்துவின் ஆட்டம் முரளிதரனுக்கு எதிராக வெறி ஆட்டமாய் இருந்தது. அவர் மொத்தம் எட்டு சிக்ஸர்கள் விளாசினார். இன்னும் இரண்டு அடித்து இருந்தால் அப்போதைய உலக சாதனையாக அது மாறி இருக்கும். ஆனால் யார் பந்தில் அதிகம் அடித்தாரோ அவர் பந்திலேயே அவர் அவுட் ஆகிப் போனார்.

சச்சினுக்கு இந்த தாம் தூம் என்று ரன்களை குவித்து விட்டு பின்பு அணியை அம்பேல் என்று விட்டு விட்டு போகும் பழக்கம் அப்போதெல்லாம் இருந்திருக்கவில்லை. அவர் என்றைக்குமே நேர்த்தியான தட்டி தட்டி விளையாடுவதில் சிறப்பானவர் என்பதை இந்த போட்டி மூலம் இன்னொருமுறை நிரூபித்தார்.

தான் எடுத்த 142 ரன்களில் 88 ரன்களை பவுண்டரிகள் மூலம் திரட்டினார். அதுவும் அதில் பெறும் பகுதி ஆப்-சைட் திசையில் அடிக்கப்பட்டு வந்தவை. சச்சினின் களத்தடுப்பு வீரர்களை ஏமாற்றி ரன் அடிக்கும் நேர்த்தி அவருக்கு மட்டுமே உரித்தானது.

எப்போதுமே அச்சிட்ட புத்தகங்களில் படிக்கிற அந்த அனுபவம் மின் நூல்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நமக்கு தேவையான பல நூல்கள் தேடினாலும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அதன் விலை நமக்கு ஒத்துப் போவதில்லை.

அதனால் மின் நூல்களே இது போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது.

இன்று நான் பகிரப்போகும் இணையக் கோப்புறை தமிழின் சிறந்த பல நூல்களையும் நமக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதி தருகிறது.
வழக்கம் போல எந்த விதமான சுற்றலும் இல்லாமல், நேரடியாக இணைப்பை சொடுக்கிய உடன் மின்னூல்களை தரவிறக்கம் செய்திடலாம்.

கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தளத்தினுள் நுழைக..

இலவச தமிழ் மின்னூல்கள் 

ஆனால் இந்த தளத்தில் உள்ள எல்லா நூல்களுமே இலவச பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல. சில பதிப்பகத்தாரின் அனுமதி இன்றி மின்னேற்றம் செய்யப்பட்டவையாக இருக்கக் கூடும். அப்படிப்பட்ட நூல்களை முடிந்தளவு தவிர்க்கவும்.

இந்த பதிவு பிடித்திருந்தால், தொடர்ந்து பதிவதற்கு ஓட்டு போடுங்கள்..
கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் மக்கள் பொய்யாக்குவார்கள் மக்கள் என்று திமுக முழங்கியது கடைசியில் நடந்து விட்டது.

ஆம் அறுபது சதவிகித இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணி தொண்ணூறு சதவீத இடங்களை பிடித்து மீடியாக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

அதிமுகவின் வெற்றி விகிதம் 6:1 என்ற விகிதத்தில் உள்ளது.

தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எனக்கு சிறுத்தை படம் தான் நினைவுக்கு வந்தது.


கார்த்தி : “மச்சான் எல்லாம் முடிஞ்சி போச்சு.. நம்ம ஆட்சி போச்சு.. இந்த நாள் இத விட மோசமா ஆகவே முடியாது இல்ல”

சந்தானம் : “இல்லை மச்சி, ஆகலாம்”

கார்த்தி : “என்னடா சொல்ற”

சந்தானம் : “நம்ம இனிமே எதிர்கட்சியா கூட ஆக முடியாது போல இருக்கு”

ஆர்யா : “என்ன??”

சந்தானம் : “ஆமாம், மச்சான். நம்மள விட தேமுதிக அதிக தொகுதில ஜெயிச்சிட்டாங்க போலிருக்கே”

ஆர்யா : “அதனால என்ன மச்சி”

சந்தானம் : “அய்யோ..இந்த சின்ன விசயத்த கூட தெரிஞ்சிக்க முடியாத தத்தியா இருக்கானே..டேய் நம்மள விட அவுங்க அதான் அந்த தே முதிக அதிகமா ஜெயிச்சிட்டா நம்ம ஆளுங்கட்சியுங் கிடையாது, எதிர்கட்சியுங் கிடையாது..எல்லாம் அவங்களே தான்டா …”

ஆர்யா : “விடு மச்சான்..மொதல்ல நெறைய இருந்தது.. அப்புறம் கொஞ்சமா இருந்தது..இப்ப ஒண்ணுமே இல்ல அவ்வளவு தானே”

வெள்ளி, 13 மே, 2011

பதிவர்கள் அனைவரும் இன்று பிளாக்கர் தளம் மீது கடுப்பாகி இருப்பார்கள்.
இருக்காதா பின்ன? சும்மா எதைப் பற்றியாவது பதிவு எழுதும் நமக்கு, தமிழின துரோகிகள் அடைந்த தோல்வி குறித்து மணிக்கொருமுறை பதிவு எழுதலாம் என்று ப்ளாக்கரை திறந்தாள், தற்காலிகமாக பிளாக்கர் செயல்படாது என்று வருகின்றதே ஒழிய, டாஷ்போர்டை காணவில்லை.

அப்படி என்ன நடந்தது பிளாக்கருக்கு ?
மே 9 ந் தேதி முதலே அடிக்கடி இந்த பிரச்னை உருவெடுத்து இருக்கிறது.
சமீப காலங்களில் கொஞ்சம் பெரிய இணையதளங்களை மிதப் படித்த மென்பொருள் வல்லுநர் கூட்டம், சிதைத்து(Hacking) வேடிக்கை பார்த்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் பிளாக்கர் மாட்டி இருப்பதற்கான தடயங்கள் அதிகமாகவே தெரிகின்றன.

கூகிள் ஒன்றும் இந்த மாதிரியான சிதைவுகளை பற்றி அறியாதவர்கள் அல்ல, அதனால் அவர்கள் எப்போதுமே (~ இரு தினங்களுக்கு ஒருமுறை) தங்கள் தளங்களை வன்தட்டுகளில்  பிரதி எடுத்து வைப்பார்கள்.

ஒரு வேளை, சிதைவாளர்கள் தங்கள் கைவரிசையை பிளாக்கர் தளத்தின் மீது காட்டி இருந்தால்,
எவ்வளவு விரைவாக பிளாக்கர் அதனை கான்கிறதோ அப்போதே தங்களது அந்த வன்தட்டுகளை இணைய ஏற்றம் செய்து பிரச்னையை ஓரளவு சமாளிக்கும்.

அது தான் இப்போதும்நடந்துள்ளது. அதாவது, பிளாக்கர் சிதைக்கப்பட்டதும் நாம் புதிதாக பதிவிட்டவை காணாமல் போய் இருக்கும், இதற்கான காரணம் இதுவன்றி வேறு எதுவும் இருக்கவும் கூடுமோ?

எதற்கும் நீங்கள் உங்கள் வலைப்பூவை உங்கள் கணினியில் ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்,
பின்னாளில் பெரிய பிரச்னைகள் உருவெடுத்தாலும்  கூகிள் பார்த்துக் கொள்ளும், இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே.
 பின்வரும் முகவரியில் உங்கள் ப்ளாக் ஐடி யைப் போட்டு பதிவிறக்கம் செய்திடுங்கள்..

http://www.blogger.com/feeds/BOLGID/archive

டாஷ்போர்டை திறந்தால் பின்வரும் இணைப்புகளில் ப்ளாக் ஐடி தெரியும்..
Edit Posts – Comments – Settings – Design – Monetise – Stats

இதனை பதிவிறக்கம் செய்வது  மூலம் நீங்கள் இந்தக் கோப்பைக் கொண்டு உங்களின் இந்த வலைப்பூவை வோர்ட்பிரஸ் அல்லது வேறு வழங்கிகள் மூலம் புதுப்பிக்க முடியும்.


புதன், 11 மே, 2011

தமிழ் திரை இசை உலகில் கர்நாடக இசையை நவீன காலங்களில் மிகச் செம்மையாக பயன்படுத்தியவர்களுள் கே.ஜே.ஏசுதாஸ் என்றும் முதன்மையாக திகழ்பவர்.
எழுபதுகளை அவர் வயதால் தொட்டாலும் குரலால் அவர் இன்னும் இருபதுகளில் கணீரென ஒலிக்கிறார், இந்த வயதிலும் தன் மகன் குரலுடன் அவர் குரலும் ஒத்துப் போக அவரின் அந்த சங்கீதக் காதலே காரணம்.

அவர் திரை இசையில்,

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா......என்று இழைவதாகட்டும்,
தென்பாண்டித் தமிழே......... என்று குழைவதாகட்டும்,
மலரே குறிஞ்சி மலரே........... என்று அழைப்பதிலாகட்டும்,
வாழ்வே மாயம்................ என்று வலிப்பதாகட்டும்
கண்ணே கலைமானே........... என்று தாலாட்டுவதாகட்டும்,
தண்ணித் தொட்டி தேடி வந்த...... என்று குத்துவதாகட்டும்,
அம்மா என்றழைக்காத........... என்று உருகுவதாகட்டும்

கர்நாடக இசையை எப்படி எங்கு பயன்படுத்தினால் பாடல் சிறக்கும் என்பதில் அவர் போல  நல்லறிவு கொண்டோர் மிகச் சொற்பமே.

அவரின் நூற்றுக்கணக்கான பாடல்களை பின்வரும் இணைய கோப்புறையில் சிரமமின்றி எளிதில் பெறலாம்..

கே.ஜே.ஏசுதாஸ் - 1
கே.ஜே.ஏசுதாஸ்  -2 

பதிவை பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..
உலகில் இலக்கியங்கள் அதிகம் கொண்ட மொழிகள் என்று நோக்கினால் அது நிச்சயம் ஒற்றைப்படை எண்களுக்குள் அடங்கி விடும். அதிலும் வரிசைப்படுத்தினால் தமிழ் தான் முதன்மை பெற்று நிற்கும்.

தமிழ் மொழியின் சங்க இலக்கியங்கள் ஆகட்டும்,
திரை இசைப் பாடல்கள் ஆகட்டும்,
அல்லது புதுக் கவிதைகள் ஆகட்டும் அனைத்துமே படிக்கையில் ஒரு வித சுகத்தை தருவிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்தன அல்ல.

இதனை ஒரு தொடர் பதிவாக இடலாம் என்றிருக்கிறேன்..
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
என்பார்கள், எனது வையகமே நீங்கள் தானே அதான் உங்களிடம் பகிர்கிறேன்.

1) சங்க தமிழ்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "இன்னா நாற்பது"-ல் கடைசி பாடலில் கபிலர் அடக்கமில்லாதவனுக்கு அறிவுடையோர் கூறும் அறிவுரை துன்பம் என கூற விழைகிறார்,


அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல்


விளக்கம் : 

அடக்கம் எனும் நல்மாண்பு உடையவன் கொள்ளும் ஆணவம் துன்பம்,
முயற்சியே செய்யதவனின் தற்பெருமை துன்பம்,
அடகுக்கு வரும் பொருளை அபகரிப்பது துன்பம்,
அவ்வாறே அடங்கதவனுக்கு கூறும் அறிவுரையும் துன்பம்.

நம்முள் நிறைய பேர் அறிவுரையை கேட்டாலே அலறி அடித்து ஓடுவோம், இப்படி இருக்க அறிவார்ந்த ஒருவர் நம்மிடத்து வந்து கூறும் அறிவுரை அவருக்குத் தான் நேர விரயம்.
அறிவுரை சொன்னால் மட்டும் போதாது கேட்பருக்கும் அதற்கான பொறுமை இருக்க வேண்டும், அடக்கம் இருக்க வேண்டும் என்பதை தெள்ளக் கூறி உள்ளார் கபிலர்.

2) திரை இசைத் தமிழ்

கண்ணதாசன் வரிகள் எப்போதும் எல்லோருக்கும் பிடித்த மாதிரியே இருக்கும் அது சமூகப் பாடல்களானாலும் சரி,காதல் ரசம் பொழியும் பாடல்கள் ஆனாலும் சரி,
இந்த பாடலில் காதலியை பல்வேறு வகைகளில் உருவகப் படுத்தி இருப்பார் அவர்.
இன்றும் என்றும் அதன் வரிகளும்,இசையும்,குரலும் சேர்ந்து இந்த பாடலை தமிழர்கள் மனதில் நிறுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

படம் : பாவ மன்னிப்பு
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.B.ஸ்ரீநிவாஸ்

--------------------------------------------
காலங்களில் அவள் வசந்தம், 
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி, 
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்)

பறவைகளில் அவள் மணிப்புறா, 
பாடல்களில் அவள் தாலாட்டு!
பறவைகளில் அவள் மணிப்புறா, 
பாடல்களில் அவள் தாலாட்டு!
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்!
(காலங்களில்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை, 
பனி போல் அணைப்பதில் கன்னி
பால்போல் சிரிப்பதில் பிள்ளை, 
பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை..!
(காலங்களில்)

3) எங்கத் தமிழ்

தலைப்பு : அன்னையர் தினம்
வலைப்பூ : உணவு உலகம்

ராசலிங்கம் என்பவர் எழுதிய அன்னையர் தினம் பற்றிய இந்த கவிதையும் என்னை சமீபத்தில் கவர்ந்த கவிதைகளுள் ஒன்று.

ஈரைந்து மாதங்கள் என்னை நீ சுமந்தாய் அன்னையே,
இன்றைக்கும் உன் மடிதான் சொர்க்கம் இம்மனுலகிலே!
உன் உயிரை ஊணாக்கி ஊட்டி என் உடலை வளர்த்தாய்,
உலகையே தந்தாலும் உன் அன்பிற்கு அது ஈடாகுமோ!
நடை பயில, நல்லவை நான் அறிய கற்றுக் கொடுத்தாய்,
நானிந்த உலகிலே நல் மனிதனாய் வாழ வழியமைத்தாய்!
அன்னையர் தினத்தில் என் சிறு அன்பு காணிக்கை தாயே!


கருவிலிருந்து நம்மை அணு அணுவாய் காதலிக்கும் அன்னைக்கு இந்த கவிதையை காணிக்கை ஆக்கி இருக்கிறார், அருமையான வரிகள் என்று சொல்ல முடியாவிடினும் நிச்சயம் இது அருமையான உணர்வுகள்.

அடுத்த பதிவில் மீண்டும் பார்ப்போம்..
நீங்களும் கவிதை புனைவீர்கள் என்றால் கவிதை தளத்தை எனக்கு அறிமுகப்படுத்துங்கள்...

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. 

செவ்வாய், 10 மே, 2011

மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒருமுறை பேட்டிங் சொதப்பலால் தோல்வி அடைந்து விட்டது.சச்சினில் தொடங்கி அனைத்து வீரர்களும் பஞ்சாபிடம் விக்கெட்டைக் கொடுத்து பெவிலியனுக்கு வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தெண்டுல்கர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஆனால் அது அவர்களுக்கே போய் வினையாய் முடிந்து விட்டது. அந்த அணி முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தன் கையை விட்டு போகாமல் பார்த்துக் கொண்டது.பால் வல்தாட்டி அவுட் ஆனதற்கு பின்பு ஜோடி சேர்ந்த கில்க்ரிஸ்ட் - மார்ஷ் இணை பஞ்சாப் அணியை  பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட நூறு ரன்களுக்கு இட்டு சென்றனர். ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி ஐந்து பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இவர்கள் இணை பிரிந்த பின்பு தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி அணியை வழி நடத்தினார். அவர் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு பின்பு நிலைமை மும்பை கைக்கு சென்றது, முனாப் படேல் தனது ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் பந்து வீச்சால் பஞ்சாப் வீரர்களை சீக்கிரமாக அவுட் ஆக்கினார். அவர் இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். மலிங்கா தொடர்ந்து கடைசியில் சிறப்பாக பந்து வீசும் தன் கலையை தொடர்ந்ததால், பஞ்சாப் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கும் என்ற விகிதம் மாறி, 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

164 ரன்கள் மும்பையின் பேட்டிங் வரிசைக்கு முன்னர் அவ்வளவு பெரிய ஸ்கோர் ஒன்றும் கிடையாது ஆனால் சச்சின் சீக்கிரத்தில் அவுட் ஆக அந்த அணி மளமளவென்று சரிய தொடங்கியது (மனதின் மூலையில் தொண்ணூறுகளில் இருந்த இந்திய நினைவுக்கு வந்தது ).

கடைசியில் முபையின் எந்த வீரரும் 20 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போயிற்று. அவ்வணி 87 ரன்களுக்கெல்லாம் வெகு விரைவாகவே தன்னுடைய ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

மும்பை அணி சில நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தான் அணியிடம் இதே  போன்று பேட்டிங் சரிவை கண்டது, இப்போது மீண்டும் அது அரங்கேறி இருப்பதால் மும்பை வெல்ல முடியாத அணி என்ற மாயை சற்று அகன்று விட்டதோ என்று தோன்றுகிறது.

ஆனாலும் சச்சின் விளையாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் எங்கு போட்டி நடந்தாலும் காண வரும் ரசிகர்களுக்கு இனி வரும் போட்டிகளில் நல்விருந்து படைப்பார் என எண்ணினாலும்,

நான் என் செய்வேன்..?

முன்னதாக நடத்த மற்றொரு போட்டியில் தனது விவேகமான ஆட்டத்தின் மூலம் தன்னுடைய ஐபிஎல் இன்னிங்க்ஸ்-ஐ மீண்டும் வெற்றியுடன் தொடங்கி உள்ளார் தாதா (கங்குலி என்றுதான் சொல்ல வேண்டும் என்றால் அப்படியே வைத்து கொள்ளுங்கள்) 
முரளி விஜய்,தோனியின் அசத்தல் மட்டை வீச்சு மற்றும் அணி வீரர்களின் சிறந்த களத்தடுப்பு,பந்து வீச்சு சேர்ந்து ராஜஸ்தான் அணியை சென்னையிடம் தோல்வி அடையச் செய்தன.

ஐபிஎல் 4 கிட்டத்தட்ட பொலிவிழந்து விட்டது.  ஆனாலும் அவ்வப்போது சில சிறந்த ஆட்டங்களினால் இன்னமும் கொஞ்ச பேர் ஐபிஎல்லை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையுடன் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே, வார்னே ஜெய்பூர் ஆடுகளம் மாற்றப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக ஒரு வதந்தி (உண்மை?) பரவியது. கடைசியில் அவர் எதிர்பார்த்த படியே நடந்தும் விட்டது. வழக்கமாக ராஜஸ்தானின் ஆடுகளம் சுழல் வீச்சுக்கு சாதகமாகவும் அதிக ரன்கள் அடிக்க முடியாதபடியும் இருக்கும் ஆனால், இந்த போட்டியில் முதலில் நெட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட சென்னை அணியின் அனைத்து முன் வரிசை ஆட்டக்காரர்களும் சதிராடி காட்ட, சென்னை மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 196 ரன்கள் அடித்தது.

மைகேல் ஹஸ்ஸி ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு பவுண்டரிக் கோடுகளை அடிக்கடி காண்பித்த வண்ணம் இருந்தார். அவர் எட்டு பவுண்டரிகள் சேர்த்து, 40 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் இந்த போட்டியில் வழக்கமான வந்தால் என்ன,போனால் என்ன பாணியில் விளையாடாமல் பந்தை பார்த்து அதற்கு ஏற்ப விளையாடினார். அதனால் தான் அவரால் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் குவிக்க முடிந்தது.

ஆனால் சுரேஷ் ரெய்னா தான் எப்போதும் நம்பகமான பேட்ஸ்மேன் எனபதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை விட்டு சென்றார். அவர் ஆறு பவுண்டரிகள் மூலம் 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தோனி தான் கடைசி சில ஓவர்கள் விளையாடினால் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை ஷேன் வார்னேவுக்கு அறிவிக்க எண்ணினாரோ என்னவோ மூன்று பவுண்டரி மற்றும் அதே எண்ணிக்கையில் சிக்ஸர் அடித்து வெறும் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. டிராவிட் 20 ரன்கள் அடித்தாலும், தேவைப்படும்  ரன் விகிதம் அதிகமாகவே தொடக்கம் முதல் இருந்தது சென்னை அணிக்கு பக்க பலமாக அமைந்து விட்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஷேன் வாட்சனை அவுட் ஆக்கியதும் அந்த அணியின் நம்பிக்கை தளர்ந்து போய் விட்டது.

அஸ்வின் இன்னும் சிறப்பாக வெளிப்பட வேண்டும் இல்லையேல் உங்கள் இடத்தை ராகுல் சர்மா பிடித்து  விடுவார்.

ராஜஸ்தான் அணியில் உருப்படியாக விளையாடியது அஜின்க்யா ரஹானே (52) மட்டும் தான். அவரது ஆப் டிரைவ் ஷாட்டுகள் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன. என்றாலும் அவரால் மட்டுமே அணியை வெற்றி பெறும் அளவுக்கு தேவைப்படும் ரன்கள் இல்லையே, இடையில் அபிசேக் என்பவர் ஒரு சிக்ஸ் அடிக்க சரி கொஞ்ச நேரம் பார்க்க விறுவிறுப்பாய் இருக்கும் என்று பார்த்தால் அவரையும் நம்ம அஸ்வின் ரன் அவுட் ஆக்கி விட்டு விட்டார். டக் போலிங்கர் மூன்று விக்கெட்டுகளும்,சுறேச் ரெய்னா கடைசி ஓவரை வீழ்த்தி ரன் கொடுக்காமலேயே இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.196 ரன்களை விரட்டிய அவ்வணியால் கடைசியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு சென்னை தகுதி பெற்று விடும்.


திங்கள், 9 மே, 2011

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பிரபல குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். நீண்ட காலமாக, அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசித்து வருகிறார். அவரை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டாலும், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் பதில் கூறி வந்தது.


இந்நிலையில், மே 2-ம் தேதி அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒசாமாவை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரி்க்கா கொன்றது போல், தாவூத்தை இந்தியா கொல்ல வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.


இதையடுத்து, தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.


அவரது மகன் மொயினின் திருமணம் மே 28-ம் தேதி கராச்சியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், திடீரென திருமண இடத்தை அவர் துபைக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டின் தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் தாவூத்தின் மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.


தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறுவது பச்சைப் பொய் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தளங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவான டேம்ப்லேட்கள் மிகக் குறைவே,
அந்த வகையில் கீழ்காணும் டெம்ப்ளேட் எளிமையான ஆனால் சிறப்பான ஒன்று.

பச்சை நிறமே..! 

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்,

1) இன்ட்லி,தமிழ்10,முகநூல்,ட்விட்டர் ஆகிய தளங்களில் பகிர மற்றும் வாக்களிக்க தேவையான பட்டை தளத்தின் ஊடே முன்னரே இணைக்கப்பட்டுள்ளது.

2) எளிதாக மாற்றி அமைக்கக்கூடிய மெனு பார்.

3) அதிவிரைவாக திறக்கக் கூடியது.

4) 1000 பிக்சல்கள் அகலம் உடையது.

Greenish

For Demo Visit Here

இதில் மெனுவை மாற்றியமைக்க

Dashboard -> Design சென்று அங்கு Top Menu வை தெரிவு செய்து பின்வருமாறு எடிட் செய்யவும்.


உட்பிரிவுகள் உண்டாக்க கீழ்க்காணுமாறு இணைப்புகள் உண்டாக்கவும்

பிரிவு அ
-உட்பிரிவு 1
-உட்பிரிவு 2

பிரிவு ஆ
-உட்பிரிவு 3
-உட்பிரிவு 4

வெள்ளி, 6 மே, 2011

ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெறுவது 90களின் பின் பாதியில் எவ்வளவு கடினமோ அதே மாதிரி முன் பாதியில் எளிதும் கூட என்றாலும் ரணதுங்கா,டி சில்வா போன்றோரின் வருகைக்கு பின்னர் ஓரளவு பலம் பெற்றிருந்த இலங்கை அணியை இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சியால் இந்த போட்டியில்  வெற்றி பெற முடிந்தது. இது இலங்கை மண்ணில் இந்தியா பெற்ற முதல் வெற்றி ஆகும்.
சதம் #6

ரன்கள் : 104*
எதிரணி : இலங்கை
இடம் : கொழும்பு
நாள் : ஜூலை 31,1993
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : இல்லை

ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர் தங்கள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக சிரமம் ஏதும் இல்லாத வகையில் 366 ரன்கள் குவித்தனர்.இதில் சச்சினின் பள்ளி காலத்து நண்பன் வினோத் காம்ப்ளி சதமடித்தார்.போட்டியில் இரண்டு மூன்று முடிவுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இலங்கை வீரர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டது,கபில் தேவின் எல்பிடபிள்யூ உட்பட. முதல் இன்னிங்க்ஸ்- ல் சச்சின் ஐந்து பவுண்டரிகள் உடன் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.


அடுத்து களம் கண்ட இலங்கை கும்ப்ளே மற்றும் இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையில் சிக்கி 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்ரீநாத் இரண்டு விக்கெட்டுகளும்,கும்ப்ளே மூன்று விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்-ல் முதல் தடவை குறைந்த ரன்கள் அடித்ததற்கு பதிலாக சேர்த்து சச்சின் சதமடித்தார். முன்னதாக கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் ற்கு அடுத்ததாக (200 ரன் பார்ட்னர்ஷிப் ) சிறப்பானதொரு தொடக்கத்தை மனோஜ் பிரபாகரும் -சித்துவும் வழங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 171 ரன்கள் குவித்த போதே இலங்கை ஆட்டத்தை இழந்து விட்டது. என்றாலும் அதற்கு பின்னர் தான் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது சச்சின் தனது வழக்கமான டெஸ்ட் பாணியில் இருந்து சற்று விலகி சீக்கிரகமாகவே ரன் அடிக்க, இலங்கை பந்து வீச்சாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் திணறினர்.

பேடில் ஸ்வீப் ஷாட், ஸ்கொயர் கட் என பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு அனுப்பிய சச்சின், தனக்கே உரித்தான அந்த ஸ்ட்ரைட் ட்ரைவோடு சேர்த்து மொத்தம் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்தார். சச்சின் சதமடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் இந்தியா டிக்ளேர் செய்தது.

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 359. இலங்கை அணி வெற்றி பெற 472 ரன்கள் தேவை என்ற நிலையில், டிரா செய்ய முனைந்து பொறுமையாக விளையாடியது இலங்கை. ஆனால் மனோஜ் பிரபாகரின் இரட்டை விக்கெட் ஓவருக்கு பின் இலங்கை வீரர்கள் வரிசை கட்ட போட்டி எளிதில் இந்தியா வசம் வந்தது.

இரண்டாவது இங்க்ஸ்-ல் 95 ரன்கள், இரண்டு இன்னிங்க்ஸ் - லும்  3 விக்கெட்டுகள் என சிறப்பாக விளையாடிய மனோஜ் பிரபாகர் ஆட்ட நாயகனானார்.

காணொளி : 

தங்களுக்கு கிடைத்தால் பின்னூட்டப்படுத்தவும்.

இருந்தாலும் சச்சின் முதன் முதலில் தொடக்கக் ஆட்டக்காரராக விளையாடி கோர தாண்டவம் ஆடிய போட்டியின் காணொளி இதோ. அப்போதெல்லாம் சேவாக் மாதிரி எல்லாம் யாரும் விளையாட மாட்டார்கள் ஐம்பது ஓவர்களும் விளையாடி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று விடலாம்.

                            

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்... 

எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் திரைப்படங்கள் அவ்வளவாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.ராவணன் போன்ற படங்கள் அளவிற்கு இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருந்தோர் இல்லை என்றாலும் சன் பிக்சர்ஸ் அவர்கள் டிவியில் நல்ல சீன்களை மட்டும் பொறுக்கி ட்ரைலர் காட்டி அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டனர்.

சரி,படத்தில் என்ன தான் கதை, அது ஒண்ணும் இல்லீங்க.
அட  நிஜமாகவே ஒண்ணும் இல்லேங்க.

படத்தின் ஆரம்பத்திலேயே பிரபு தேவா வந்து என்னவோ ரொம்ப நல்ல திரைக்கதை எல்லாம் அமைத்து விட்டதைப் போல .'பாரீஸிற்கு வெகேசனில் வந்திருக்கும் பிஸினஸ்மேன் & ஜாலி பேர்வழி கமலுக்கும்(ஜெயம் ரவி) பாரீஸிலேயே வாழும் தமிழ்ப்பெண் கயல்விழிக்கும்(ஹன்சிகா) காதல், இது தான் கதை..இதைத் தான் பார்க்கப்போறீங்க' ன்னு கதையை சொல்கிறார். நல்ல வேலை முதலிலேயே சொல்லி விட்டார், இல்லாவிட்டால் கடைசி வரை எப்போது கதை ஆரம்பிக்கும் எனத் தெரியாமலேயே படம் முடிந்து போயிருக்கும்.

பிரபுதேவாவுக்கு நன்றாக ஆட வரும் என்பதற்காக நம்ம எல்லோரையும் 'ஆடு' ஆக்கி படத்த ஓட்டி விடலாம் என்று பார்க்கிறாரோ?

அட அப்ப படத்தில எதுவுமே தேறலியா? தண்டமா என்று கேட்டால், நிச்சயம் ஆமாம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாரிஸின் கொள்ளை அழகை கொஞ்சமும் கஞ்சத்தனம் காட்டாமல் மொத்தமாய் அள்ளி வந்திருக்கிறார் கேமராமேன் நீரவ் ஷா, லாங் ஷாட் வந்தாலே அந்த பாரிஸ் நகரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்த தயாராகிறார் அவர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படத்தில் நிஜ ஹீரோ அவர் தான். படத்தின் முக்கால்வாசி பிரேம்களை வால்பேப்பராக வைத்து கொள்ளலாம் அவ்வளவு அழகு.


ஹாரிஸ் எப்போ ஃபார்ம் ஆவீங்க :

ஹாரிஸ் ஜெயராஜிடம் நல்லதாய் நாலு பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது, எல்லா பாடல்களும் கேட்கிற மாதிரி இருந்தாலும், நச் என்று மனதில் நிற்கும் படி எதுவும் இல்லை. ஆனாலும் அந்த வள்ளியே சக்கரை வள்ளியே பாடலின் காட்சி அமைப்பு நெஞ்சத்தை கொள்ளை கொள்கிறது. பிரபுதேவா நிற்கும் ஒரே இடம் அது தான் என்று எனக்கு தோன்றுகிறது. நம்ம ஊர் புடைவையில் ஹன்சிகாவை வெள்ளைக்காரர்கள் வழிவதைப் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. ஹன்சிகாவின் காஸ்ட்யூம் படம் முழுக்க சூப்பர், அதிலும் இந்த பாடலில் மிக அருமை. (காஸ்ட்யூம் : நளினி ஸ்ரீராம்)

கதை :

No Love,No Commitments,No Dissappointments

என்று டி-ஷர்ட் வாசகத்தை தன் கொள்கையாக வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அவர் ஜாலியாக இருப்பதற்காக பாரிஸ் போகிறார்.

ஆண்டில் 11 மாதம் கஷ்டப்பட்டு பிசினஸ் பண்ணும் ஜெயம் ரவி ஒரு மாதம் ஓய்வுக்காக பாரிஸ் வருகிறாராம். ஆனால் அந்த 11 மாத கஷ்டத்தை 11 நொடிகளாவது காட்டி இருக்கலாமே?

அங்கு அழகான பல பெண்களுடன் டேட்டிங் போகிறார். அந்த பெண்களில்  ஒரு பெண்ணின் முன்னாள் காதலன் , டிடக்டிவ் ஆன ஹன்சிகாவின் அப்பாவிடம் சென்று இருவரையும் (அந்த பெண் & ஜெயம் ரவி) போட்டுத் தள்ள கட்டம் கட்டுகிறார். விஷயம் தெரிந்து, ஹன்சிகா இருவரையும் காப்பாற்ற வரும் போது ஜெயம் ரவியை பார்த்ததுமே காதல் வயப்படுகிறார். ஆனால் இப்படி ஊர் மேயும் ஆணைத் தான் பெண்களுக்கு பிடிக்குமா என்ன? ( பதில் பிரபுதேவாவுக்கு தான் வெளிச்சம் )

ஆனால் ரவி தன் கொள்கையை (பெரிய நாட்டை காப்பாற்றுகிற கொள்கை) விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். சரி இடைவேளைக்கு பிறகாவது கதையில் எதாவது இருக்கும் என்றால் ஏமாற்றமே மிச்சம். இந்தியாவுக்கு திரும்பும் ஜெயம் ரவியை மீண்டும் 11 மாதங்கள் கழித்து பாரிஸுக்கு போவதாக காட்டி, கதையை விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறார்கள்.இந்த முறை ஹன்சிகா ரவியை காதலில் விழ வைக்க போடும் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன, வழக்கத்தை மீறாமல் க்ளைமாக்ஸ் அமைகிறது.

படத்தில் ராஜு சுந்தரம் பண்ணுவதெல்லாம் நகைச்சுவை என்று நான் எழுதினால்,தமிழ் சினிமாவிற்கு எழுத்தின் மூலம் துரோகம் செய்பவர்கள் பட்டியலில் என்னையும் தாராளமாக சேர்த்து விடலாம்.
அந்த அளவிற்கு அருவருப்பாக  உள்ளது அவரது காமெடி இல்லை ஒரே நெடி. (அவர் என்ன செய்வார், இயக்குனர் சொல்வதை செய்கிறார் கூடவே கொஞ்சம் வேண்டாத எக்ஸ்ப்ரசன் அவ்வளவுதான்)

முக்கிய அம்சங்கள் +-

வில்லன் இல்லை,சண்டை இல்லை,திருப்பங்கள் இல்லை,சுவாரசியம் இல்லை,நாலு நல்ல வசனம் இல்லை சரி விடுங்கள் இந்த மாதிரி படங்களும் வெற்றி பெறும். ஆனால் இந்த எல்லாவற்றோடு சேர்ந்து கதையும் இல்லாவிட்டால் எப்படி?

வெறும் கேமரா, ஹன்சிகா விற்காக எத்தனை நாள் படம் ஓடும்?

இதை எல்லாம் மீறி இந்த கோடையில் இரண்டு மணி நேரத்தில் பாரிஸுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் படத்திற்கு போகலாம், நீரவ் ஷாவை நம்பி.

பிரகாஷ்ராஜ் கால்ஷீட் வீணடிக்கப்பட்டு இருக்கிறது,படத்தில் கதையே இல்லாமல் யார் இருந்து என்ன பயன்?

சந்தேகம் சார்..

கமல் என்று கதாநாயகன் பெயர் இருப்பதில் எதாவது உள்குத்து?

இது பிரபுதேவாவின் (நிஜக்)கதையா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே?
எந்த திருப்பமும் இல்லையே...

பதிவு பிடிச்சா பக்கத்துல ஒரு ஓட்டு போடுங்க..
கோலிவுட்டில் நிலவிய ஹீரோயின் பஞ்சம் இந்த பஞ்சாப் பதுமையால் விலகி இருக்கிறது?

மாப்பிள்ளைக்கு அடுத்து எங்கேயும் காதல் படத்தில் கொஞ்சம் அழகாக தெரிகிறார். ஒருவேளை இந்த படம் முதலில் தொடங்கப்படவே அப்படி இருக்குமோ?

ஹன்சிகா மொத்வானியின் படங்களை பார்க்க (அதிக சிரமமின்றி ) கீழ்காணும் முகவரிக்கு செல்லுங்கள்.

ஹன்சிகா மோத்வானி - 1
ஹன்சிகா மோத்வானி - 2கதிர் நீண்ட நேரமாக தான் விரும்பும் செய்தி எப்போது கிடைக்கும் என்ற ஆவலில் மொபைல் போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  மாலை 3.30 மணியில் இருந்து  4.53 வரை ஒவ்வொரு நிமிடமும் மொபைல் சரியாக நேரத்தைக் காட்டுகிறதா என்று பார்த்துக் கிடந்தான் அவன்.

கிண்டி பார்க்கிற்கு ஒருவேளை வாய் இருந்திருந்தால் நிச்சயம் இவனின் இந்நிலையை பார்த்து சிரித்திருக்கும் அல்லது திட்டி துரத்தியாவது இருக்கும்.

புதிய எஸ்எம்எஸ் வந்திருப்பதாக மொபைல் அறிவித்த உடன் நிச்சயம் அது தான் எதிர்பார்க்கும் மெசேஜ் தான் ஆவலின் மிகுதியில் திறந்து பார்த்தான்.

அது அவனை மேலும் எரிச்சலூட்டியது.

"சிரிக்கும் சினேகா வால்பேப்பர்!!!
அவளைப் பெற கீழே சொடுக்கவும் ரூ.15 மட்டுமே".

என்று ஒரு இணைய முகவரியை காட்டியது திரை.
தன் காதலி எப்போது வருவாள், வருவதற்கு கால தாமதம் என்றால் ஒரு எஸ்எம்எஸ் ஆவது கொடுக்கலாமே என்று கோபத்தில் தகித்துக் கொண்டிருந்த அவனை இது மேலும் ஆத்திரமூட்டியது.

கதிர்,ஐஐடி யில் படிக்க ஆசைப்பட்டவன் ஆனால் நுழைவுத் தேர்வில் இரண்டு மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்க முடியாமல் சென்னையில் ஒரு அரைகுறை கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்து வேலை கிடைக்கும் வேளைக்காக காத்திருக்கும் புதிய பட்டதாரி.
அந்த கல்லூரியில் இருந்து அவனுக்கு உருப்படியாக கிடைத்தது இரண்டு தான். ஒன்று,நிறைய நண்பர்கள்.இரண்டு,ஒரே ஒரு காதலி,ரீனா(?).

3.30 மணிக்கு வருகிறேன் என்றவள் இன்னமும் வந்த பாடில்லை,இவன் மொபைலும் அவள் எண் தொடர்பு கொள்ள இயலாத இடத்தில் இருப்பதாக சொல்கிறது.
 
நேரம் 4.56 ஐ கடந்து நொடிகளால் அடுத்த நிமிடத்தை நெருங்கி கொண்டிருந்த போது, ஒரு எஸ்எம்எஸ் வந்தது.

"ஆஸ்திரேலியாவில் எம்.எஸ் படிக்க வேண்டுமா நிறைய ஊக்கத் தொகையுடன்,
இலவச கலந்தாய்விற்கு வாருங்கள்.
மேலும் விவரங்களுக்கு : சுரேஷ்,989435xxxx"

ஏற்கனவே படித்த படிப்பிற்கே பித்து பிடித்து விட்டது இதில் ஆஸ்திரேலியா ஒரு கேடா என்று நொந்து கொண்டான் கதிர்.அவனால் வேறென்ன செய்ய முடியும், ஏழு முறை அரியர் வாங்கி கஷ்டப்பட்டு அல்லவா பொறியியல் படிப்பையே முடித்தான்.

அவன் முதன் முதலாக எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,அது அவன் ஊட்டியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த ஐந்தாவது செமஸ்டரின் விடுமுறை சமயம். முடிவுகள் வந்து விட்டது என ஒரு நண்பன் சென்னையில் இருந்து அழைத்து சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தான்

நண்பர்களுள் ஒருவன் வைத்திருந்த ப்ளாக்பெர்ரி் மூலம் பல்கலைக்கழக தளத்தை இணையதளத்தில் தேர்வு முடிவுகளை சில முயற்சிகளுக்குள் பார்த்தனர். பெரும்பான்மையானோர் முடிவுகள் எதிரபார்த்த படியே சில அரியர்களுடனே வந்தது.கதிர் மட்டும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தான் பழைய அரியர்களையும் சேர்த்து. உடனே பார்ட்டி என்ற பெயரில் இவன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி காணாமல் போயிற்று.

மணி  5 ஐக் கடந்து மூன்று நிமிடங்கள் ஆகி இருந்த வேளையில் மீண்டும் ஒரு எஸ்எம்எஸ், இம்முறை என்ன என்று வெறுப்புடன் எடுத்தவனுக்கு மொபைலை தூக்கி போட்டு விடலாம் என்ற அளவிற்கு அந்த செய்தி இருந்தது.

"அக்ஷய திரிதியை ஆஃபர்
ஐந்து சவரன் நகை எடுத்தால்
இரண்டு நாள் கொடைக்கானல் சுற்றுலா "

என்று ஒரு நகைக்கடை விளம்பரத்தை அது காட்டியது.

ரீனா ஏன் இன்னும் வரவில்லை,ஒருவேளை எதாவது பிரச்னையாக இருக்குமோ என்று அவன் மனம் அவளைச் சுற்றியே இருந்தது. எதற்கும் அவள் தோழியிடம் போன் செய்து கேட்கலாம் என்று தோன்றவே தோழி எண்ணுக்கு டயல் செய்தான்.

"உங்களுக்கு இந்த பாட்டு பிடிச்சிருந்தா *9 ஐ அழுத்துங்க"
என்ற படி என்னமோ ஏதோ பாடலுடன் அழைப்பு சென்றது.
 சில நொடிகளில் அழைப்பை ஏற்ற தோழி,

"சொல்லு, கதிர் என்ன திடீர்னு போனெல்லாம் பண்ணியிருக்க"

"இல்லை,ரீனா இருக்காளான்னு கேட்கலான்னு.."

", அதுவா சங்கதி.. அவள் உங்களை பார்க்கத் தான் கிளம்பி வந்தா..
இன்னுமா வரல"

"இல்லை"

"அவள் செல்லுக்கு ட்ரை பண்ணீங்களா"

"நாட் ரீச்சப்ள் னு வருது"

"ஓகே,அவள் இங்க வந்தா உங்களுக்கு இன்பார்ம் பண்றேன், நீங்களும் வந்தா சொல்லுங்க"

"சரி" என்று இணைப்பை துண்டித்தான் கதிர்.

ரீனாவின் நினைவுகளால் அவனுக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.
அடுத்த எஸ்எம்எஸ் வந்தது, இல்லை இல்லை எரிச்சல் வந்தது.

"டாக்டர்.காத்ரா கிளினிக்,அனைத்து சுக வீனங்களுக்கும்
24 மணி நேர சேவை, ஆழ்வார்பேட்டை,அசோக் நகர்,அண்ணா நகர்,கீழ்ப்பாக்கம்
உதவிக்கு : 1800 289 xxxx"

என்று மருத்துவ சேவை மையத்தின் விளம்பரம் அவன் செல்போன் திரையில் பளிச்சிட்டது. முன்பெல்லாம் வழுக்கை தலை உள்ளவருக்கு முடி வளர விளம்பரம்,இளைஞர்களுக்கு டேட்டிங் தள விளம்பரம்,வயதானால் எல்ஐசி விளம்பரம் என்று ஆட்களுக்கு தகுந்த வாறு விளம்பரம் அனுப்புவார்கள், இப்போது சூழ்நிலைக்கு ஏற்பவும் அனுப்ப ஆரம்பித்து விட்டார்களா என்ன? என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு அவனிடம் இப்போது பொறுமை இல்லை. 

இதற்கு மேலும் தாங்கிக்க முடியாமல் மொபைலை அணைத்து விட முடிவெடுத்த நேரத்தில் அந்த அழைப்பு வந்தது.

"மிஸ்டர்.கதிர்" என்று மெல்லிய பெண்ணின் குரல் ஒலித்தது.

"எஸ்,இட் இஸ்"

"உங்களுக்கு ரீனாவைத் தெரியுமா"

"எஸ் மேம், ஐ நோ ஹர்"

"நீங்க உடனே போரூர்ல இருக்க கே.எல் ஹாஸ்பிட்டல் வாங்க"

"என்னாச்சு மேம்"

"நேர்ல வாங்க"

மிகுந்த பதட்டத்துடன் தன் மோட்டார் பைக்கை கிளப்பினான்,கதிர்.
வழி நெடுகிலும் அவளுக்கு என்ன ஆயிருக்கும் என்று பதைத்துக் கொண்டே சென்றான்.

"ஒருவேளை விபத்து நடந்திருக்குமோ,அப்படி என்றால் உயிருக்கு ஏதும் ஆபத்து இருக்காதே?"

"வேறு எதாவது இருக்குமா, இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லை நாம் தான் எந்த தப்பும் பண்ணலியே."

"யாராவது கடத்தி சென்று...." நினைக்கவே மனம் மறுக்கிறதே..

என பல்வேறு எண்ணங்களில் வேதனை ததும்ப போரூரை அடைந்து, மருத்துவமனையை தேடிச் சென்றான்.

அங்கு வரவேற்பு பெண்ணிடம் சென்று தனக்கு வந்த அழைப்பை பற்றிச் சொன்னதும்
"நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன், அதோ அந்த இரண்டாவது அறையில் போய்ப் பாருங்கள்"
வேகமாக ஓடிய இவனை ஒரு மாதிரி விநோதமாக பார்த்தாள் அவள்.

அறையை திறந்து பார்த்தால் ரீனா வெள்ளை சுடிதாரில் கால் மேல் கால் போட்டு சோபாவில் அழகாக அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.

"ரீனா, என்னாச்சு, உனக்கு ஒண்ணும் இல்லியே, நான் பயந்தே போயிட்டேன்"

"இல்லை பிளட் டொனேட் பண்ணனும்னு தோணிச்சி அதான்.."

"பிளட் டொனேசனா? அவ்வளவு தானா.. நான் என்னமோ ஏதோன்னு பதறி போயிட்டன்,
போன்லயே விஷயத்தை சொல்லி இருக்கலாமே, நான் பயப்படாம இருந்திருப்பேன் இல்ல"

"சொன்னா வருவியோ வரமாட்டியோன்னு டவுட் அதான், ஆனா நான் நல்லா தானே இருக்கேன் ஏன் இப்படி பண்ற, ஆமாம் இங்க வர சொல்லி மெசேஜ் பண்ணி எவ்வளவு நேரமாச்சு நீ இப்ப தான் வர"

"எனக்கு எந்த மெசேஜ்ஜும் வரலியே, நான் உன்ன கூப்பிட்டாலும் உன்னை தொடர்பு கொள்ள முடியாதுன்னு சொல்லிச்சே"

"என்னன்னே தெரியலே மூணு மணி நேரமா இதில நெட்வொர்க் வரவே இல்ல, ஆனா முன்னமே உனக்கு நான் மெசேஜ் அனுப்பினேனே, இங்க பாரு"
என்று தன் மொபைலை காட்டினாள் ரீனா.

மெசேஜ் சென்ட் டு கதிர்

"உடனே கே.எல் ஹொஸ்பிட்டலுக்கு வாடா."
என்று காட்டியது அவள் ஸ்லிம் நோக்கியா செல்போன் திரை.

மெசேஜ் அனுப்பியும் ஏன் வரவில்லை என்று நெட்வொர்க் காரனைக் கேட்டால் அவர்கள் நெட்வொர்க் பிசி சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்று சப்பைக் கட்டு கட்டுவான். இந்த பாழாய்ப்போன நெட்வொர்க்கை நொந்து கொள்வதை விட தேவையான நேரத்தில் தேவையற்ற செய்திகளை மட்டுமே கொடுக்கும் இந்த மொபைல் போனை எல்லாம் பேசாமல் தடை செய்து விட்டால் என்ன (தன் வாழ்வில் இருந்து) என்று கூட அவனுக்கு தோன்றியது.

ஆனால் அருகில் ஒருவன்
"சொல்லு செல்லம்,

என் பப்லூ நீ.."

என்று என்னவெல்லாமோ கொஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்ததும் ஒரு சில நேரங்களில் அதன் சேவை உதவியாகவும் இருக்கத் தானே செய்கிறது என்று மனதை தேற்றிக் கொண்டாலும் கொஞ்சம் மித மிஞ்சிய சேவையை தராமல் இருக்கலாமே என்றபடியே தன்  காதலி ரீனா உடன் இரத்த தானம் செய்ய பதிந்து காத்திருந்தான் கதிர்.
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு