தாங்க முடியலடா சாமி... இந்த கிரிக்கெட்டும் அரசியலும்

on செவ்வாய், 29 மார்ச், 2011

நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் செய்தி அலைவரிசைகள் பலவற்றை தொலைகாட்சியில் திருப்பினேன். ம்ம்ம்..

எல்லா இடத்திலும் அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்று, இந்திய-பாகிஸ்தான் போட்டி.

ஏதோ உலக போர் மூல போவதை போல் உசுப்பேற்றி கொண்டு இருக்கிறார்கள். இப்படி விளையாடும் முன்னரே இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என ஏதாவது ஒரு பழைய ஆட்டக்காரரை கொண்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொன்னவது பரவாயில்லை, நடிக நடிகையரை விட்டும் இதே காட்சியைப் பதிகிறார்கள்.
கிரிக்கெட் நடக்கும் போது சுய விளம்பரத்துக்காக போட்டியை காண வரும் நடிகர்களைஎல்லாம் ஏதோ கிரிக்கெட் பிதாக்கள் போல பாவிக்கிறது தொலைக்காட்சி அலைவரிசைகள்.
24 மணி நேர செய்திகளில் இதுவே 20 மணி நேரத்தை அடைத்து கொள்கிறது.

இரண்டு,
ஆங்கில செய்தி அலைவரிசைகள் இப்படி என்றால் தமிழ் தொலைகாட்சிகளில் அதை விட மோசம், எல்லோருக்கும் தெரிந்தது போலவே ஒவ்வொரு அலைவரிசையும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக 24 மணி நேரமும் ஓயாமல் பிரச்சாரம் செய்கிறது.
அதுவும் நடிகர்கள் தான? எனும் போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.
நம் நாட்டில் மட்டும் தான் நடிகன் கிரிக்கெட்டுக்கும் வருவார்கள், அரசியலுக்கும் வருவார்கள்.
நான் சொல்வது பேசுவதற்கு மட்டும் தான் மற்ற படி திறமை இருக்கும் அனைவரும் எதிலும் வரலாம்.

நாட்டில் இப்போதைக்கு இதை தவிர வேறு செய்திகளே இல்லையா என்ன?

இணையம் மட்டும் இல்லையேல் எதுவுமே தெரியாமல் போய் விடும்  நம் மக்களுக்கு...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக