விலை மாந்தர்கள் - பகுதி 2

on வியாழன், 24 மார்ச், 2011

விலை மாந்தர்கள்- பகுதி 1

ரொம்ப சுருக்கமாக மக்களாட்சி மலர்ந்த விதத்தை பார்த்தோம். இப்போது தொடர்வோம்..

இந்தியா ஆங்கிலேயரின் பிடியில் இருந்து 1947ல் விடுபட்டதும், அரசியலமைப்பை உருவாக்க அம்பேத்கர் தலைமையில் குழு ஒன்று உருவானது. அது அடுத்த ஆண்டே தனது மாதிரி வரைவை சமர்ப்பித்தது.

இறுதியில் 1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடக மாறியது. மக்களுக்கு விருப்பமான, மக்கள் நலனில் அக்கறை காட்டுபவரை மக்களே வாக்களித்து தெரிந்தெடுக்கும் மக்களாட்சி இந்தியாவிலும் மலர்ந்தது.
வாக்குரிமை அனைத்து இந்தியர்களுக்கும் இருந்தது. அது கடமை இல்லை எனினும் தங்கள் உரிமையை கடமையை போல் எண்ணி வாக்கு அளிக்கலையினர் மக்கள்.

ஆனால் முதல் சில காலங்கள் கிட்டதட்ட பெயரளவிற்கு தான், ஏனெனில் காங்கிரசை எஹிர்க்கும் அளவுக்கு வலிமை வாய்ந்த எந்த கட்சியும் அப்போது இல்லை. ஏன் இப்போதும் கூட நாடே காங்கிரஸ் பிடியில் தானே இருக்கிறது. எதிர்ப்பதற்கு ஆள் இல்லாதவரை அவர்கள் வைத்தது தான் சட்டம். நல்ல எதிர்ப்பாளர்கள் தோன்றாத வரை நல்ல ஆட்சியாளர்கள் தோன்றவே முடியாது.

ஜவஹர்லால் நேரு இந்திய திருநாட்டின் முதல் பிரதமராக பொறுப்பெடுத்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செய்தார் என்பதை மறுத்தாலோ அல்லது மறைத்தலோ எவரும் நம்பி விட போவதில்லை. ஒரு தலைமுறையில் ஒருவர் நல்லவர் என்பதால் எல்லோரும் அப்படியே அமைந்து விடுவார்கள என்ன? அதே போல் தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பதெல்லாம் எப்போதும் மெய்ப்பதில்லை. அபூதைய காங்கிரஸில் எந்த அளவிற்கு தேச நலனுக்கு பாடுபட்டவர்கள் இருந்தார்களோ அதே அளவில் தங்கள் நலனையும் வளத்தையும் பெருக்கி கொள்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

எனக்கு நெடு நாட்களாகவே ஒரு சந்தேகம் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முதலிடம் வகிக்கும் நம் நாட்டில் , 110 கோடி பேரில் அந்த ஒரு நேரிய குடும்பத்தின் வாரிசுகளை தவிர எவருமே நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லையா?
ஆட்சி திறன் மிக்கவர்கள் இல்லையா?
நவீன உத்திகள் தெரிந்தவர்கள் இல்லையா?
தேச நலன் கொண்டோர் இல்லையா?
இல்லை, மற்ற எல்லோரை விடவும் அவர்களிடத்து இவை எல்லாம் மிக அதிகமோ.

அது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் 60 ஆண்டுகள் கடந்தும் பெரிதாய் எந்த மாறுதலும் மக்களின் வாழ்வில் உண்டாகவில்லையே?  ஏன் ?

இந்தியாவிற்கு பணியாற்றிய ஒரே குடும்பம் :

1 ) ஜவஹர்லால் நேரு
2 ) இந்திரா காந்தி
3 ) ராஜீவ் காந்தி
4 ) ராகுல் காந்தி ( இன்னும் கொஞ்ச நாளில் )

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக