வீர மங்கை - பகுதி 1

on வெள்ளி, 4 மார்ச், 2011

காலை 6.00 மணி.

தான் வாழப்போகும் கடைசி நாள் இன்றுதான் என தெரிந்த பின்னர் தூங்க முடியுமா யாராலும்? அப்படி ஒரு நாள் தான் இன்று அவளுக்கு. அவள் சாவகாசமாய் தூங்கி எழுந்தாள் என்பதை விட சாவு வாசமாய் எழுந்தாள் என்பதே பொருத்தமாய் இருக்கும்.

விமலா, தன் மரண நேரத்தை இன்று மாலை 7.00 மணிக்கு குறித்து விட்ட நடுத்தரத்துக்கும் கீழ் வாழும் குடும்பத்தின் மூத்த மகள். ரொம்ப கலரா இல்லன்னாலும் கலையான முகம், நீண்ட கருங்கூந்தல் என அக்மார்க் தமிழ்ப்பெண். எலக்ட்ரானிக்ஸ் படித்து விட்டு தகுந்த வேலை கிடைக்காமல் நியூ ஏஜ் பிரிண்டர்ஸ்-ல் வேலை செய்கிறாள்.

தம்பி சிவா எட்டாம் வகுப்பு படிக்கிறான். மட்டையும் கையுமா திரியும் கிரிக்கெட் வெறியன்.
தங்கை கீர்த்தனா, எப்பவும் நாலு பசங்க பின்னாடி சுத்தற அளவுக்கு அழகு. அழகு இருக்கிற இடத்தில் அறிவு இருக்காதுன்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். கீர்த்தனா பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி இரண்டாமாண்டில் வகுப்பின் முதல் மாணவி.

எவ்வளவு இருந்தென்ன குடும்ப சாபமோ என்னவோ அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்குமே இதய நோய். அக்காவிற்கு ஏற்கனவே இரண்டு அட்டாக் வந்து விட்டது, இரண்டாவது அட்டாக் வர காரணம் தன் அன்பு தங்கையும் இந்நோய்க்கு ஆளனதுதான்.
கீர்த்தனாவை காப்பாற்ற டாக்டர் சொன்ன மருந்து உடனடி ஆபரேஷன்’. ஆனால் அதற்கு அவர் மாத்திரையாய் மூன்று இலட்சம் செலவு ஆகும் என்றார்.

எல்லாம் சரி விமலா எதற்கு சீக்கிரமே தன் மரணத்தை குறித்தாள்?

முந்தைய நாள்

வீரவேங்கையர்கள், தங்களை சமூக சீர்திருத்தவாதிகள் என அடையாளம் காட்டி கொண்ட இயக்கம். ஆனால் அவர்கள் செய்த தீவிரவாத செயல்களுக்கு பல உயிர்கள் பலி ஆனதால் அரசாங்கம் அந்த இயக்கத்தை தடை செய்தது.

அவர்கள் நடத்திய இரயில் மறியல் போரட்டத்தின் போது போலீஸ் வீரவேங்கையர்களின் தலைவனை கைது செய்து விசாரித்தது.
டெபடி கமிஷனர் அவனை துறுவ ஆரம்பித்தார்.

சொல்ட்றா என்னத்த கிழிக்க உங்களுக்கு இந்த இயக்கம்

எங்களுக்கு இந்த அரசாங்கத்தை பிடிக்கவில்லை. தனி நாடு கிடைக்கும் வரை விட மாட்டோம்

ஏண்டா எத்தன பேர்றா இப்படி கிளம்பி இருக்கீங்க? 
கேட்ட உடனே பிரிச்சி கொடுக்க இது என்ன பஜ்ஜியாடா ?...
நாலு பேர் ஒண்ணா சேர்ந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா?”

நாங்க நாலு பேரு இல்ல சார்.. மூவாயிரத்து நானூறு பேர். இன்னும் எங்க இயக்கம் வளரும்.”

எத்தன பேர் இருந்தா என்னடா? நான் நெனச்சா உன்ன இங்கயே தீர்த்து கட்ட முடியும்.”

என்ன அர்ரெஸ்ட் பண்ணதுக்கான பலன் இன்னும் 24 மணிக்குள்ள உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் சார்

என்னடா செய்வீங்க..”

என்ன வேணும்னாலும்.”

உன்ன….”

பொறுமை இழந்த டி.சி அவனை அடிக்க ஆரம்பித்தார்.

ஜெகதீஷ், ஃபரீத் வீரவேங்கையரின் இரண்டு முக்கிய தலைகள்.
தங்கள் தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்து கொதித்து போயினர்.

இங்க அங்கன்னு சுத்தி கடைசியில தலைவரையே அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்களேடா பரீத்

நம்மல அவுங்க சாதரணமா நெனச்சுட்டாங்க

எனக்கு என்ன பண்றதுன்னே புரியல

நாளைக்கு அண்ணா நகர்ல உள்துறை மந்திரி கலந்துக்கிற பாராட்டு விழா நடக்குது

நானும் கேள்வி பட்டேன்..”

அந்த விழாவே அவனுக்கு இறுதி விழாவா அமைஞ்சா நல்லா இருக்கும்னு நெனக்கிறேன்

என்ன சொல்ட்ற?”

மனித வெடிகுண்ட அனுப்பி அவன மட்டும் இல்ல ஒரு கூட்டத்தையே கொல்வோம்……!”

சும்மா இரு ஃபரீத். ஏற்கனவே நம்ம மேல போலீஸ் கண்ணா இருக்கு. இந்த   நேரத்தில இப்படி ஏதாவது பண்ணி மாட்டிகிட்டா…”

நாம பண்ண வேண்டாம் வேற ஆள் வச்சி முடிச்சிடலாம்

பேசறதா பாத்தா ஆள கூட ரெடி பண்ணிட்ட போலிருக்க?”

இல்ல ஜெகதீஷ்.. இனிமே தான்
ஒரு அஞ்சு லட்சம் இருந்தா போதும் ஆள ரெடி பண்ணிரலாம்

ஈவ்னிங் வாங்கிக்கோ..
ஒரு 25 வயசு பொண்ணா ரெடி பண்ணு அப்பதான் அதிகம் சந்தேகம் வராது
சரி என்று சொல்லி விட்டு கிளம்பினான் ஃபரீத்.

வீர மங்கை பகுதி 2 

1 பின்னூட்டங்கள்:

Mahan.Thamesh சொன்னது…

அருமையான பதிவு

கருத்துரையிடுக