இரு பிரதமர்கள் பார்வையில் இந்திய-பாகிஸ்தான் அரை இறுதி போட்டி

on ஞாயிறு, 27 மார்ச், 2011

இந்திய பாகிஸ்தான் அரை இறுதி போட்டி நடக்கவிருப்பது என்னவோ 30 ஆம் தேதி தான் ஆனால் எந்த தொலைகாட்சியை திருப்பினாலும் ஏதோ போர் மூலப்போவதை போல ஏற்றி விட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே எங்களுடன் சச்சின் எங்களுடன் நூறாவது சதத்தை அடிக்க முடியாதென அப்ரிடி சொல்லி இருக்கிறார். பொதுவாகவே இது போன்றவற்றிற்கு சச்சினின் பதில் அவர் பேட்டிலிருந்து தான் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியா பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்ற உள்ள மொகாலியில் வரலாறு காணாத உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
.
போட்டியைக் காண வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஏற்றுக்கொண்டுள்ளதை யடுத்து விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தும் பீரங்கிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் காலிறுதி போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே அரையிறுதியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி வரும் புதன் கிழமை மொகாலியில் மோதுகிறது.

இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் முதல் போட்டியானதால், மொகாலியில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்திய பாகிஸ்தான் அணிகள் நீண்ட காலத்திற்கு பிறகு மோதுவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த போட்டியையொட்டி மொகாலி டிசிஏ ஸ்டேடியம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுமார் 3 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டேடியம் உள்ள பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் விமானம் ஏதேனும் பறந்தால் அதனை உடனடியாக சுட்டு வீழ்த்தும் வகையில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிலானி வருகிறார் :இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நல்லெண்ண ரீதியில் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை காஸ்தான் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இந்த அரசுக்கு தெரிவித்துள்ளது.

இரு நாட்டு பிரதமர்களும், முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் இந்த போட்டியை காண உள்ளதால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இறுதிப் போட்டி நடைபெற உள்ள மும்பை வான்கடே ஸ்டேடியத்தை பாதுகாக்கும் பணியில் முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக