இறுதிப் போட்டியில் இலங்கை : 6 வது முறையாக அரை இறுதியில் நியூசி தோல்வி

on செவ்வாய், 29 மார்ச், 2011

2011 உலக கோப்பைக்கான இறுதி போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. நியூசிலாந்து 6 வது முறையாக தோல்வி அடைந்து இறுதி போட்டி வாய்ப்பை நழுவ விட்டது.

அடுத்தடுத்த ஓவர்களில் இலங்கையின் முன்னனி வீரர்கள் தில்ஷான்,சங்கக்காரா,ஜெயவர்தனே ஆட்டம் இழக்க நியூசிலாந்து மீண்டும்

ஒரு த்ரில்லரை படைக்கும் என்று ஆர்வத்தோடு பார்த்தாலும், இலங்கை இறுதியில் மேத்யூஸ் ன் அதிரடியால் விரைவாகவே வெற்றி பெற்றது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மென்டிஸ்,மலிங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கையில் தனது கடைசி போட்டியில் விளையாடிய முரளிதரன் தான் வீசிய கடைசி பந்தில் எடுத்த விக்கெட் உட்பட இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

நியூசிலாந்து வீரர்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை எனினும் ஸ்டைரிஸ் 57 ரன்களும் டைலர் 36 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தனது கடை ஆறு விக்கெட்டுகளை 25 ரன்களுக்கு இழந்தது.

பின்னர் ஆட தொடங்கிய இலங்கை அணியின் கை தொடக்கம் முதலே ஓங்கி இருந்தது.தில்ஷான் 73 ரன்கள் எடுத்தார். மூன்று கேட்சுகள் மற்றும் 54 ரன்கள் எடுத்த சங்கக்காரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் இலங்கை அணி மும்பையில் நடைபெறும் இறுதிபோட்டியில் இலங்கை சனிக்கிழமை விளையாட போகிறது.

இலங்கையுடன் இன்னொரு "இ" யும் இறுதி போட்டியில் இனிதே நுழைய விரும்பினாலும்,

நான் என் செய்வேன்?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக