வாக்குகள் விற்பனைக்கு...! | அதிமுக தேர்தல் அறிக்கை

on வியாழன், 24 மார்ச், 2011

திமுக இலவசங்களால் ஒரு முறை ஆட்சியை பிடித்து அதே பாணியை இம்முறையும் பின்பற்றுகிறது. அதிமுக, உங்களுக்கு நாங்கள் ஒன்றும் விலக்கல்ல என்பது போல தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாரி இரைத்துள்ளது.

பேசாமல் தமிழர்கள் எல்லோரும் தங்களுக்கு , தங்கள் வாக்குக்கு ஒரு விலையை நிர்ணயித்து விட்டால் அரசியல் கட்சிகள் தாரளமாய் அந்த விலையை கொடுத்து வங்கி விடுவார்கள்.

சிந்தித்து வாக்களிக்கலாம் என்று எவரேனும் நினைத்தால் , சிந்தனையில் தோன்றும் எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருக்கின்றன எந்திரன் ரஜினி மாதிரி.

அதிமுக வின் தேர்தல் அறிக்கை : 

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., ‌பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.




மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.



கேபிள் டி.வி., அரசுடைமை : கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.



பேன், மிக்சி, கிரைண்டர் : அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.



மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.



அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.



மீனவர்கள் பாதுகாப்புக்கு உறுதி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.



0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக