செவ்வாய், 29 மார்ச், 2011

2011 உலக கோப்பைக்கான இறுதி போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. நியூசிலாந்து 6 வது முறையாக தோல்வி அடைந்து இறுதி போட்டி வாய்ப்பை நழுவ விட்டது.

அடுத்தடுத்த ஓவர்களில் இலங்கையின் முன்னனி வீரர்கள் தில்ஷான்,சங்கக்காரா,ஜெயவர்தனே ஆட்டம் இழக்க நியூசிலாந்து மீண்டும்

ஒரு த்ரில்லரை படைக்கும் என்று ஆர்வத்தோடு பார்த்தாலும், இலங்கை இறுதியில் மேத்யூஸ் ன் அதிரடியால் விரைவாகவே வெற்றி பெற்றது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மென்டிஸ்,மலிங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கையில் தனது கடைசி போட்டியில் விளையாடிய முரளிதரன் தான் வீசிய கடைசி பந்தில் எடுத்த விக்கெட் உட்பட இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

நியூசிலாந்து வீரர்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை எனினும் ஸ்டைரிஸ் 57 ரன்களும் டைலர் 36 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தனது கடை ஆறு விக்கெட்டுகளை 25 ரன்களுக்கு இழந்தது.

பின்னர் ஆட தொடங்கிய இலங்கை அணியின் கை தொடக்கம் முதலே ஓங்கி இருந்தது.தில்ஷான் 73 ரன்கள் எடுத்தார். மூன்று கேட்சுகள் மற்றும் 54 ரன்கள் எடுத்த சங்கக்காரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் இலங்கை அணி மும்பையில் நடைபெறும் இறுதிபோட்டியில் இலங்கை சனிக்கிழமை விளையாட போகிறது.

இலங்கையுடன் இன்னொரு "இ" யும் இறுதி போட்டியில் இனிதே நுழைய விரும்பினாலும்,

நான் என் செய்வேன்?
ஆஸ்திரேலிய அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்து உள்ளார். இருப்பினும் ஒரு வீரராக அணியில் தொடர்வதென அவர் முடிவெடுத்துள்ளார்.

பிராட்மனை தவிர்த்து உலகின் தலிசிறந்த மட்டை வீச்சாளர்களில் சச்சினுக்கு அடுத்த இடம் எப்போதும் பாண்டிங்குக்கு தான். தன் மட்டை வீச்சு திறன் குறித்த கேள்விகளுக்கு இந்தியாவுடன் நடந்த போட்டியில் அழுத்தமான முற்றுபுள்ளி வைத்தார்.

கேப்டன் ஆக ஆஸ்திரேலிய அணியை 300 போட்டிகளுக்கும் மேலாக வழி நடத்திய பாண்டிங், ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரும் நட்சத்திர வீரரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒய்வு பெற்றதும் அணியை பழைய மகிரி வெல்ல முடியாத அணியாக தொடர்வதில் வெற்றி காண முடியாமல் போய் விட்டது.

பன்னிரண்டு ஆண்டுகளாக உலக கோப்பையை தன் வசம வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் பாண்டிங்கின் பங்கு நிச்சயமாய் பெரிது. 1999 உலக கோப்பையை வெல்ல இவரின் கலத்தடுப்பும் பேட்டிங்கும் உதவி புரிந்தது பின்னர் நடந்த இரண்டு உலக கொப்பையிலும் தலைமை தங்கி வெற்றி பெற்றவர். "மூன்று முறை" தொடர்ந்து கோப்பை வென்ற அணியாக ஆஸ்திரேலியாவை மாற்றியவர்.

ஆனால் அதே போன்ற மற்றுமொரு "மூன்று முறை" தான் அவரின் இந்த முடிவுக்கு காரணம். ஆஷஸ் தொடரில் மூன்று முறை தோல்வி அடைந்த ஒரே கேப்டன் பாண்டிங் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிந்து போய் விட்டது.

கேப்டன் பதவியில் விலகும் முடிவு முழுக்க முழுக்க தன்னால் எடுக்கப்பட்டது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தன்னை விலகுமாறு எல்லாம் நிர்பந்திக்கவில்லை என்றும் பாண்டிங் சொல்லி இருந்தாலும் பின்னாலிருந்து அந்த அணியின் பழைய வீரர்கள் குரல்கள் அனைத்தும் பாண்டிங் கேப்டன் பதவியில் இருந்து விலக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

" தனக்கு இனிமேல் ஒரு புதிய தொடக்கம்" என்றார் பாண்டிங்.

பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் 12,363 ரன்களும், ஒரு தின போட்டிகளில் 13,288 ரன்களும் குவித்துள்ளார். அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் ஒரு தின போட்டிகளில் இரண்டாம் இடமும், டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இடமும் வகிக்கிறார்.

மைகேல் கிளார்க் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் செய்தி அலைவரிசைகள் பலவற்றை தொலைகாட்சியில் திருப்பினேன். ம்ம்ம்..

எல்லா இடத்திலும் அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்று, இந்திய-பாகிஸ்தான் போட்டி.

ஏதோ உலக போர் மூல போவதை போல் உசுப்பேற்றி கொண்டு இருக்கிறார்கள். இப்படி விளையாடும் முன்னரே இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என ஏதாவது ஒரு பழைய ஆட்டக்காரரை கொண்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொன்னவது பரவாயில்லை, நடிக நடிகையரை விட்டும் இதே காட்சியைப் பதிகிறார்கள்.
கிரிக்கெட் நடக்கும் போது சுய விளம்பரத்துக்காக போட்டியை காண வரும் நடிகர்களைஎல்லாம் ஏதோ கிரிக்கெட் பிதாக்கள் போல பாவிக்கிறது தொலைக்காட்சி அலைவரிசைகள்.
24 மணி நேர செய்திகளில் இதுவே 20 மணி நேரத்தை அடைத்து கொள்கிறது.

இரண்டு,
ஆங்கில செய்தி அலைவரிசைகள் இப்படி என்றால் தமிழ் தொலைகாட்சிகளில் அதை விட மோசம், எல்லோருக்கும் தெரிந்தது போலவே ஒவ்வொரு அலைவரிசையும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக 24 மணி நேரமும் ஓயாமல் பிரச்சாரம் செய்கிறது.
அதுவும் நடிகர்கள் தான? எனும் போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.
நம் நாட்டில் மட்டும் தான் நடிகன் கிரிக்கெட்டுக்கும் வருவார்கள், அரசியலுக்கும் வருவார்கள்.
நான் சொல்வது பேசுவதற்கு மட்டும் தான் மற்ற படி திறமை இருக்கும் அனைவரும் எதிலும் வரலாம்.

நாட்டில் இப்போதைக்கு இதை தவிர வேறு செய்திகளே இல்லையா என்ன?

இணையம் மட்டும் இல்லையேல் எதுவுமே தெரியாமல் போய் விடும்  நம் மக்களுக்கு...


உலக கோப்பை கிரிக்கெட்டில் பைனலுக்கு செல்லும் வழியை தேடுகிறது நியூசிலாந்து.

உலக கோப்பை தொடர் துவங்கும் முன் இந்திய துணைக்கண்டத்தில் நடந்த பல்வேறு தொடர்களில் நியூசிலாந்து அணி மிக மோசமாக தோற்றது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-4, இந்தியாவுக்கு எதிராக 0-5 என தொடர் தோல்விகளால் துவண்டு இருந்தது. பின் சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோற்று வெறுப்பை சம்பாதித்தது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளராக, ஜான் ரைட் பொறுப்பேற்றார். பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்டு நியமிக்கப்பட்டார். இவர்கள் இணைந்து, எப்படியும் அணி அரையிறுதிக்கு கொண்டு செல்வோம் என்று சபதம் செய்தனர்.

இதற்கேற்ப, பத்தாவது உலக கோப்பை தொடரை, கென்யாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியுடன் துவக்கியது. பின் அடுத்தடுத்து சொதப்ப, பட்டியலில் நான்காவது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் காலிறுதியில் நியூசிலாந்து அணி, பி பிரிவில் முதலிடம் பிடித்த வலிமையான தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்ய நியூசிலாந்து 221 ரன்கள் மட்டும் எடுக்க, அவ்வளவு தான் தோல்வி உறுதி என்றனர். ஆனால் எதிர்பாராத திருப்பமாக, தென் ஆப்ரிக்க அணியை 172க்கு ஆல் அவுட் செய்து, ஆறாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது வெட்டோரி அணி.

இதற்கு முன், 1975, 1979, 1992, 1999 மற்றும் 2003 தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறிய போதும், ஒருமுறை கூட அதில் வெற்றி பெற்றதில்லை. இம்முறை லீக் போட்டியில் தோல்வியடைந்த இலங்கையை மீண்டும் அரையிறுதியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மற்ற இடங்களில் விளையாடியதை விட, இந்திய துணைக்கண்டத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் வெட்டோரி அணிக்கு உண்டு. இந்த அனுபவத்தை கொண்டு, இம்முறையாவது வெற்றி பெற்று, முதன் முறையாக பைனலுக்கு செல்லும் வழியை சரியாக கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காலிறுதியில் இங்கிலாந்தை இலங்கை வென்ற ஆடுகளத்தை (பிட்ச்) புதுப்பிக்காமல் அதிலேயே அரையிறுதி ஆட்டத்தை நடத்த இருப்பது குறித்து நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டம் இலங்கை - நியூசிலாந்து இடையே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 இந்த ஆட்டத்துக்குப்பின் ஆடுகளம் புதுப்பிக்கப்படாமல், அப்படியே அரையிறுதிக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து வெட்டோரி கூறியிருப்பது: பொதுவாக ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் ஆடுகளம் புதுப்பிக்கபடுவது வழக்கம். ஆனால் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் புதுப்பிக்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்த மைதானத்தில்தான் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இலங்கை இங்கிலாந்தை வென்றுள்ளது என்றார்.

 அரையிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய அவர், உலகக் கோப்பையில் இதுவரை அரையிறுதிக்கு மேல் முன்னேறியதில்லை என்ற நிலையை மாற்றி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற உத்வேகத்துடன் இருக்கிறோம் என்றார் வெட்டோரி.

திங்கள், 28 மார்ச், 2011

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகள் எண்ணிக்கை நிச்சயம் வருங்காலத்தில் இன்னும் அதிகமாகும்.

இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் படி நாட்டில் உள்ள காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1411 என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்தது.

ஆனால் புலிகள் உலவும் காட்டுப் பரப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புலிகள் வாழும் முக்கிய காட்டுப் பகுதிகளில் மனிதத் தலையீடுகள் அதிகமாவதும், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதும், பல்வேறு காரணங்களுக்காக காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் என்று ராஜஸ்தான் மாநிலம் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் கள ஆய்வாளராக இருக்கும் சுகதீப் பட்டாச்சார்யா தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதே போல அரசால் வெளியிடப்பட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை ஒரு உத்தேச எண்ணிக்கை என்றும் அவர் கூறினார்.

"இந்த முறை சுமார் 700 புலிகள் கேமாராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களில் சுமார் 30 சதவீத பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காட்டின் அளவு, புலிகள் உட்கொள்ளும் விலங்கினங்களின் எண்ணிக்கை, அங்கேயுள்ள மனித நடமாட்டம போன்ற புலிகளின் எண்ணிகைகையை பாதிக்கும் காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டு மொத்த புலிகளின் எண்ணிக்கை என்று ஒரு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இது ஒரு தோராய மதிப்பீடு." என்றார் சுகதீப் பட்டாச்சார்யா.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 1875 ஆகவும் குறைந்தபட்சமாக 1550 ஆகவும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நன்றி : பிபிசி 

எதிர்பார்த்ததைப் போலவே நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் விஜய்யின் தந்தையும் சங்க நிர்வாகியுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

காவலன் படம் தொடர்பாக விஜய்க்கு பெரும் நெருக்கடி வந்த சமயத்தில் அ.தி.மு.க.விடம் தஞ்சமடைந்தார் விஜய். அவரது சார்பில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதனால் சட்டசபை தேர்தலில் விஜய்யும் அவரது தந்தையும் அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நடக்கவில்லை. மேலும் விஜய் நடத்திவரும் இயக்கத்திற்கும் ஜெயலலிதா சீட் ஏதும் தரவில்லை. இதனால் பிரசாரத்திற்குச் செல்லாமல் வெறும் குரல் மட்டுமே தருவது என விஜய் முடிவு செய்தார். அந்தக் குரலைக் கூட இதுவரை காணவில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அழைப்பையேற்று எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சி விரைந்தார். ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை காலை சங்கம் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம். மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் தீவிரமாக உழைப்பார்கள் என்றார்.

நன்றி : OneIndia 
முடிவிலி :

கணித பாடத்தின்
'முடிவிலி' யை
விளக்கி கொண்டிருந்த
ஆசிரியர் சொன்னார்
அது ஒன்றும் இல்லை
அம்மாவின் அன்பு..!

புன்னகைப்பூ 

பூவுக்கும் புன்னகைக்கும்
என்ன ஒரு தொடர்பு!
இரண்டுக்குமே
ஆயுள்
அதிகம் இல்லை

முதல் முறையாக இப்படி கிறுக்குகிறேன்..
அதனால் மோசமாக தானிருக்கும்..
மெல்ல வளர்வேன் எனும் நம்பிக்கையில்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எந்தவிதமான சூதாட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் நன்றாக விளையாடி வரும் பாகிஸ்தானுக்கு மனதளவில் மேலும் அழுத்தம் உண்டானால் இந்தியாவிற்கு நல்லது தான் எனினும் அவர்கள் இதனை மனதில் கொண்டு மிக சிறப்பாக விளையாடி விட்டால்? அப்படி எதுவும் நடக்காது என நம்புவோமாக.

இது குறித்து உமர் குல்லிடம் கேட்ட போது மீடியாவில் வருவதை பார்க்க நங்கள் எவருமே விரும்புவதில்லை என்று தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடவிருப்பதை முன்னிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மாலிக் தெரிவித்தார்.

மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கக் கூடாது. அவ்வாறு ஏதாவது நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பாகிஸ்தான் வீரர்கள் சுத்தமானவர்களாக இருந்தாலும், அவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், யாரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கிறார்கள். லண்டனில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதால் இது அவசியம் என்றார் அவர்.

கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

பயிற்சிக் காலத்தின்போது நேரத்திலேயே தூங்கி, குறித்த காலத்தில் எழ வேண்டும். போட்டிக்காக பாகிஸ்தானுக்கு அவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என மாலிக் கூறினார்.

கிரிக்கெட் வீரர்கள் மீது அனைவருக்கும் நிறைய அன்பு உள்ளது. போட்டியில் அவர்கள் வெல்வார்கள் என நம்புகிறோம். மக்களை ஏமாற்ற மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு ஆலையின் நிலை தொடர்பாக புதிய கவலைகள் தோன்றியுள்ளன. இந்த ஆலையில் இருக்கின்ற ஒரு உலை அருகே சோதனை செய்யப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீரில் சாதாரணமாக இருப்பதை விட கிட்டதட்ட ஒரு கோடி மடங்கு அதிகளவு கதிர்வீச்சு காணப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் இருந்தே இந்த கதிர்வீச்சு கொண்ட நீர் கசிவதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு கூறுகின்றது.

ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு விட்டதாக இந்த ஆலையை நடத்தும் நிறுவனம் கூறியுள்ளது.

அணு உலையை ஸ்திரப்படுத்துவதற்காக மின்சார வசதியை ஏற்படுத்த கடுமையாக போராடி வரும் பணியாளர்களுக்கு அடிக்கடி உலையில் காணப்படும் ஆபத்தான சமிஞ்சைகள் பெரும் சவாலாகவும், இடையூறாகவும் இருக்கின்றன.

இதே நேரத்தில் ஃபுகுஷிமா அணு ஆலை இருக்கின்ற கடல் பகுதியிலும் கதிர்வீச்சின் வீரியம் அதிகரித்துள்ளது. ஆனால் கடலின் நீரோட்டம் இந்த கதிர்வீச்சின் தாக்கத்தை நீர்த்து போக செய்து விடும் என அணு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிடுகின்றது.

இந்த கடல் பகுதியில் காணப்படுகிற கதிர்வீச்சு கொண்ட ஐயோடினின் அளவானது பாதுகாப்பு என்று கூறப்படுகின்ற அளவை விட 1850 மடங்கு அதிகமாக இருப்பதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் ஆலையை சுற்றிலும் இருக்கின்ற வான் பகுதியில் காணப்பட்ட கதிரியக்கத்தின் வீரியம் குறைந்து இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர் எங்கிருந்து வருகிறது அதை எப்படி தடுப்பது எப்படி என்பதே ஆலையில் போராடி வரும் பணியாளர்களுக்கு தலையாய கவலையாக இருக்கிறது.ஜப்பான் அணு உலையில் ஏற்பட்ட இந்த சிக்கலானது இன்னும் பல வார காலத்திற்கு நீடிக்கலாம் என சர்வதேச அணு சக்தி மையத்தின் தலைவரான யூகியா அமானோ தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை ஜப்பானின் அமைச்சரவை செயலரான யுகியோ எடோனோவும் எதிரொலித்துள்ளார். ஆலைக்குள் இருக்கும் கதிர்விச்சால் பாதிக்கப்பட்ட பொருளை வெளியே எடுப்பதற்கு காலச் செலவு நிறைய ஏற்படும் என கூறினார்.

இதே சமயம், அணு ஆலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு விவரமாக தகவல்களை கொடுக்காமைக்கு ஜப்பான் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விரிவுப்படுத்தும் திட்டமும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.


நன்றி் : பிபிசி

ஞாயிறு, 27 மார்ச், 2011

இந்திய பாகிஸ்தான் அரை இறுதி போட்டி நடக்கவிருப்பது என்னவோ 30 ஆம் தேதி தான் ஆனால் எந்த தொலைகாட்சியை திருப்பினாலும் ஏதோ போர் மூலப்போவதை போல ஏற்றி விட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே எங்களுடன் சச்சின் எங்களுடன் நூறாவது சதத்தை அடிக்க முடியாதென அப்ரிடி சொல்லி இருக்கிறார். பொதுவாகவே இது போன்றவற்றிற்கு சச்சினின் பதில் அவர் பேட்டிலிருந்து தான் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியா பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்ற உள்ள மொகாலியில் வரலாறு காணாத உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
.
போட்டியைக் காண வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஏற்றுக்கொண்டுள்ளதை யடுத்து விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தும் பீரங்கிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் காலிறுதி போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே அரையிறுதியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி வரும் புதன் கிழமை மொகாலியில் மோதுகிறது.

இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் முதல் போட்டியானதால், மொகாலியில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்திய பாகிஸ்தான் அணிகள் நீண்ட காலத்திற்கு பிறகு மோதுவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த போட்டியையொட்டி மொகாலி டிசிஏ ஸ்டேடியம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுமார் 3 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டேடியம் உள்ள பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் விமானம் ஏதேனும் பறந்தால் அதனை உடனடியாக சுட்டு வீழ்த்தும் வகையில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிலானி வருகிறார் :இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நல்லெண்ண ரீதியில் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை காஸ்தான் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இந்த அரசுக்கு தெரிவித்துள்ளது.

இரு நாட்டு பிரதமர்களும், முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் இந்த போட்டியை காண உள்ளதால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இறுதிப் போட்டி நடைபெற உள்ள மும்பை வான்கடே ஸ்டேடியத்தை பாதுகாக்கும் பணியில் முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
தமிழக சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிட 4280 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில்  சதவீத பேர் நிஜமாக மக்களின் எண்ணங்களை மதிக்க போகிறவர்கள் என்ற விவரமெல்லாம் எனக்கு தெரியாவிடினும் மக்களுக்கு யார் வர வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

234 தொகுதிகளிலும் மொத்தம் 4280 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சனிக்கிழமைதான், அதாவது கடைசி நாளான நேற்றுதான் அதிக அளவாக 1879 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் 152

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்தம் 152 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 145 பேர் சுயேச்சைகள் ஆவர். இவர்கள் அனைவரும் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆவர். அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனுக்களை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் 387 பேர்

சென்னை மாநகரில் மொத்தம் 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட மொத்தம் 387 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் அனைத்தும் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 13ம் தேதி வாக்குப் பதிவும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

நாட்டில் எல்லாமே போலிகளாகி விட்டனர். கொஞ்சம் பணத்தை வெட்டினால் மாட்டு வண்டி ஓட்டுபவர் கூட விமானத்தை ஓட்டலாம் போல் இருக்கிறது. லஞ்சம் பெற்று கொண்டு போதிய திறனற்ற , படிப்பற்ற ஆட்களை விமானிகளாக மாற்றி தினம் தினம் நூற்றுக்கணக்கனாவர்களை சாவின் விளிம்பில் வைத்து அழகு பார்க்கின்றனர்.

வான வீதியின் அலைகளை தான் விலைக்கு விற்கிறார்கள் என்றல்,
வான் வீதியில் பயணிக்கும் உயிர்களையும் விலைக்கு கொடுக்க பர்க்கின்றனரே ?

போலி விமான பைலட் லைசென்ஸ் முறைகேடு தொடர்பாக உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரக அதிகாரி, பைலட் உள்பட 4 பேரை தில்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீப் குமார், பைலட் பிரதீப் தியாகி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 10 பேரை போலீஸார் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலியான ஆவணங்கள், சான்றிதழ்களை அளித்து பலர் வர்த்தகரீதியில் விமானங்களை இயக்கும் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இப்படி லைசென்ஸ் பெற்ற 14 பேர் வரை இப்போது கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சியின்போது 200 மணி நேரம் வரை பறந்ததாகக் கூறி இந்த லைசென்ஸ்களை பெற்றுள்ளனர்.

இது குறித்து உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரக தலைவர் இ.கே. பாரத் பூஷண் கூறியுள்ளது: வர்த்தகரீதியில் விமானங்களை ஓட்டும் லைசென்ஸýகளை பெற்றுள்ள 10 ஆயிரம் பேரது சான்றிதழ்களையும் ஆய்வு செய்து வருகிறோம். நாட்டில் உள்ள 40 விமான பைலட் பயிற்சி மையங்களிலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். சிறிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இந்த முறைகேடு குறித்து உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியது:

மனித உயிர்களுடன் விளையாடும் மிகப்பெரிய முறைகேடு இது. தவறிழைத்த அனைவரது மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக அனைத்து நிலைகளில் இருந்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

போலி பைலட் லைசென்ஸ் பெற்ற விவகாரத்தில் வர்த்தகரீதியில் விமானம் ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் முறைகேடு, பயிற்சிப் பள்ளிகளில் போலியான சான்றிதழ்களை அளிப்பது, பயிற்சியின் போது விமானத்தில் பறந்ததாகக் கூறப்படும் நேரத்தை கூட்டி சான்றிதழில் அதிகப்படுத்தி எழுதுவது என பல்வேறு நிலைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ராணா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் அவருடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பதும் தெரிந்ததே. இதைத் தவிர மற்ற தகவல்கள் காற்றுவழிச் செய்தியாகவே இருந்தன.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ராணா படத்தை பற்றி கற்பனையான தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எந்த படத்துக்கும் இந்த அளவுக்கு தகவல்கள் வந்ததில்லை.

'சுல்தான் தி வாரியர்' படத்தைத்தான் 'ராணா' என்ற பெயரில் தயாரிப்பதாக சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். 'சுல்தான் தி வாரியர்' படத்தை நான் இயக்குவதாக இருந்தது உண்மைதான். பின்னர் அது உறுதி செய்யப்படவில்லை.

ரஜினிகாந்த் என்னிடம் வேறு ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 'சுல்தான் தி வாரியர்' கதைக்கும், 'ராணா' படத்தின் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. 'சுல்தான் தி வாரியர்,' சௌந்தர்யாவின் படம். அந்தப் படத்தை அவர்தான் டைரக்டு செய்கிறார். 'ராணா' படத்தில், அவர் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார்.

ரேகாவுடன் பேசவே இல்லை!

'ராணா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ரேகா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளியான தகவல், முற்றிலும் தவறானது. சத்தியமாக நான் ரேகாவுடம் பேசவில்லை. அதுபோல் ஹேமாமாலினியுடனும் பேசவில்லை.

அசினுடனும் நான் பேசவில்லை. அவர் என் டைரக்ஷனில் 2 படங்களில் நடித்துள்ளார். அவர் சென்னை வந்தால், என் அலுவலகத்துக்கு வருவார். நான் மும்பை சென்றால், அவருடைய வீட்டில் போய் சாப்பிடுவேன். அவ்வளவு நட்பானவர், அசின். அவருடன் பேசியதாக வெளியானதும் தவறான தகவல்தான்.

சரித்திர படம்

நிறைய கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்பது உண்மை. படத்தில் அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளன. 'ராணா,' ஒரு சரித்திர படம். வேறு எந்த படத்துடனும் இந்த படத்தை ஒப்பிட விரும்பவில்லை.

12 வருடங்கள் கழித்து நான் ரஜினி படத்தை டைரக்டு செய்கிறேன். என்றாலும் இடையில் நாங்கள் இருவரும் பேசாமல் இல்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம்.

7 கதாநாயகிகள்... மூன்று ஜோடிகள்!

'ராணா,' 17-ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. இந்த படத்தில், ரஜினியுடன் ஆறு அல்லது ஏழு கதாநாயகிகள் இணைந்து நடிப்பார்கள். அத்தனை பேரும் அவருக்கு ஜோடி அல்ல. மூன்று கதாநாயகிகள்தான் அவருக்கு ஜோடி. தீபிகா படுகோனே மட்டும் 'மெயின்' கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறார். வித்யாபாலனுடன் நான் போனில் பேசியது உண்மைதான். ஆனால், அவர் உறுதி செய்யப்படவில்லை.

ரஜினியுடன் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக, கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல் அமிதாப்பச்சனும் இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ரூ.100 கோடி செலவில்...

'ராணா' படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டும். படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் லண்டனில் தொடங்கும். சுமார் ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடைபெறும்,'' என்றார் ரவிக்குமார்.
இந்த உலக கோப்பை போட்டி தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்ற பெரும்பாலான போட்டிகள் ஆட்டம் முடியும் வரை சுவாரசியமாக இருந்து வந்தது.
இந்தியாவுடன் டை ஆனா போட்டி,
அயர்லாந்து உடன் தோல்வி அடிந்த போட்டி,
தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய போட்டி என்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டிகளாக நடந்தது. அண்ணல நேற்று அப்படியா தலைகீழாக மாறி விட்டது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் டிராட் போராடி அணியை 229 ரன்கள் வரை இட்டு சென்றார். ஆனால் மோசமான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் இங்கிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இலங்கையின் தில்ஷான் மற்றும் தரங்கா இருவரும் சதம் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 39.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

 டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பிரையருக்குப் பதிலாக இயன்பெல், ஸ்டிராசுடன் இணைந்து ஆட்டத்தைத் துவக்கினார். இலங்கை அணி வேகத்தில் மலிங்காவை நம்பியே களமிறங்கியது. அதனால் தொடக்க ஓவர்களை மலிங்காவுடன் இணைந்து தில்ஷான் வீசினார்.

ஸ்டிராஸ் 5 ரன்களில் தில்ஷான் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். இயன் பெல் 25 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த டிராட்டும், போபாராவும் இணைந்து மிகவும் பொறுமையாக ஆடினர். இதனால் இங்கிலாந்தின் ரன்விகிதம் மிகவும் மந்தமானது. போபாரா 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் டிராட்டுடன் ஜோடி சேர்ந்தார் மோர்கன். டிராட் 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். மோர்கன் கொடுத்த 3 கேட்சுகளை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு களம் புகுந்த ஸ்வான் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.

டிராட் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. பிரையர் 22 ரன்களுடனும், ரைட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தில் ஆமை வேகத்தில் ஆடிய இங்கிலாந்து அணி மொத்தம் 12 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது.

தில்ஷான்-தரங்கா சதம்:

230 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தில்ஷானும், தரங்காவும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர்.

இவர்களை வீழ்த்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தும் பலனில்லாமல் போனது. தில்ஷானும், தரங்காவும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

 சதத்தை நெருங்கியபோது இருவரும் சற்று வேகம் காட்டினர். இதனால் இலங்கை 36-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது. தில்ஷான் 96 ரன்களில் இருந்தபோது ஸ்வான் ஓவரில் ஒரு பவுண்டரியை விளாசி சதம் அடித்தார்.

வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற போது சதமடித்த தில்ஷான் பவுண்டரி அடித்தார். இதனால் தரங்கா சதம் அடிக்க முடியுமா என்ற ஐயம் உண்டானது.
ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே நோ பால் எல்லாம் வீசவில்லை இலங்கையை போல ( சேவாக் - தில்ஷான் நினைவிருக்கும் என எண்ணுகிறேன் )

39.3-வது ஓவரில் தரங்கா, பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதமடிக்க இலங்கை 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அரை இறுதி போட்டிகள் :


 * மார்ச் 29: முதல் அரையிறுதி

   இலங்கை-நியூசிலாந்து

   இடம்: கொழும்பு,

   நேரம்: மதியம் 2.30

 * மார்ச் 30: இரண்டாவது அரையிறுதி

    இந்தியா-பாகிஸ்தான்

   இடம்: மொஹாலி,

   நேரம்: மதியம் 2.30

சனி, 26 மார்ச், 2011

ஒரே இணைய இணைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பயன்படுத்துவதற்கு பல வழிகள் இருப்பினும். WiFi மூலம் நமது இணைப்பை பகிர்வது எல்லாவற்றிலும் மிக எளிது.

இதன் சிறப்பம்சங்கள் :

* துரித இணைப்பு
* பலருடன் பகிர முடியும்
* பாதுகாப்பாக பகிரலாம்

பிரயோகிக்கப்பட்ட

இயங்கு தளம் :  விண்டோஸ் 7
கணினி           :  லெனோவோ i3 மடிக்கணினி

* இதனை அமைக்கும் முன் உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* WiFi ஐ  இயக்கத்தில் வைக்கவும்.


1 ) கண்ட்ரோல் பேனலை திறக்கவும்.

 

 2 ) Manage wireless networks ஐ சொடுக்கவும்.

3 ) புதிய இணைய வழங்கியை உருவாக்க Add ஐ சொடுக்குக.

 4 ) Ad-hoc வலைப்பின்னலை உருவாக்க

 5 ) பின்வருமாறு தோன்றும் பெட்டியில்
* தங்களுக்கு விருப்பமான வலைப்பின்னல் பெயரை கொடுக்கவும்.
* பாதுகாப்பு வசதியை WEP என்று தெரிவு செய்யவும்.(பிற வசதிகளையும் பயன்படுத்தலாம்.)
* ஐந்து எழுத்து கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.
* இந்த வலைப்பின்னலை சேமிக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் புதிதாக உருவாக்கவும். சேமித்தால் அடுத்த முறை இதே இணைப்பை பகிர முடியவில்லை. யாரேனும் அது பற்றி தெரிந்தால் பின்னூட்டப் படுத்தவும்.

 6 ) இணைய இணைப்பை பகிர Turn on Internet Connection Sharing ஐ சொடுக்கவும். இச்செயலி முடிந்ததும் இணைய இணைப்பு பகிர்வதற்கு தாயார்.

7 ) பின்வருமாறு உங்களுக்கு connect to network icon ஐ சொடுக்கினால் கிடைக்கும்.


 8 ) இந்த இணைப்பை பயன்படுத்த விரும்பும் கணினியில் WiFi ஐ பயன்படுத்தி , கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

வெள்ளி, 25 மார்ச், 2011

உலக கோப்பையில் எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாத அணி தென் ஆப்ரிக்கா. உண்மையில் அதிர்ஷ்டம் இல்லை என்பது என்னவென்று நோக்கினால் அன்றைய தினத்தில் அவர்களின் சராசரிக்கும் குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே குறிக்கும்.

அதே அளவுகோளில் பார்த்தால் இன்று நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று சொன்னால் என்னை விட மகா முட்டாள் வலை வீசி தேடினாலும் கிடைக்க மாட்டான்.

குப்தில், மெக் குல்லம் - இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் மிக குறைந்த ரன்களுக்கு தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த பின்னர், அணியை சரிவினின்று தங்களின் மிக நேர்த்தியான,பொறுமையான,விவேகமான துடுப்பாட்டத்துடன் ரைடரும் டெய்லரும் மெதுவாக மீட்டு எடுத்தனர். அந்த இணை 114 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தது. டெய்லர் 43 ரன்களும், ரெய்டர் 83 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்த பின்னர் மற்ற நியூசிலாந்து வீரர்கள் வெகு விரைவாகவே தங்கள் ஆட்டத்தை இழக்க, வில்லியம்சன் மட்டும் 38 ரன்கள் எடுத்து அணியை 221 என்ற நல்ல நிலைமைக்கு இட்டு சென்றார்.

"ஒரு கேட்ச் ஒரு மேட்ச்"

ஒரு கேட்ச் ஆட்டத்தை எப்படி திசை திருப்பும் என்பதற்கு இந்த்த போட்டி ஒரு நல்ல சான்று. டிம் சவுத்தீ வீசிய பந்தில் கல்லிஸ் அடித்த பந்தை ஜேகப் ஓரம் ஓடிக்கொண்டே பிடித்த கேட்ச் ஆட்டத்தை சட்டென நியூசிலாந்தை நோக்கி திருப்பிற்று. 47 ரன்களுடன் கல்லிஸ் சென்ற பின்னர் மற்றுமொருமுறை தென் ஆப்ரிக்கா கோப்பை கனவுகள் அகல தோல்வி அடைந்தது.

தஹிர்,பீட்டர்சன்,போத்தா எப்படி தென் ஆப்ரிக்காவிற்கு பந்து வீச்சில் இருந்தனரோ அதை போல நியூசிலாந்துக்கு வெட்டோரி,நாதன் மெக் குல்லம்,வுட் காக்  சுழலில் திணறடித்தனர்.

ஆனால் ஜேகப் ஓரம் பிடித்த இரண்டு கேட்ச் மற்றும் நான்கு விக்கெட்டுக்கள் நியூசிலாந்தை வெற்றி அடைய வைத்தது.

இது தான் வெட்டோரி விளையாடும் கடைசி போட்டி என்றெல்லாம் மீடியாவில் பேசினார்கள். ஆனால் அவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வைத்து எல்லோர் எண்ணத்தையும் பொய்யாக்கி உள்ளார்.

இந்தியா என்ன செய்யுமோ?

வியாழன், 24 மார்ச், 2011


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று நடந்த உலகக் கோப்பை இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று அலஹபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழந்து 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அபாரமாக ஆடி சதமடித்தார்.

பின்னர் வெற்றிபெற 261 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 2 விக்கெட்கள் வீழ்த்தி நன்றாக பந்து வீசிய யுவராஜ் சிங் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 64 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் கவுதம் கம்பீரும் இணைந்து அமைத்துக் கொடுத்த உறுதியான அடித்தளத்தில் தொடர்ந்து ஆட வந்த யுவராஜ் மற்றும் ரெய்னா ஜோடி இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. ரெய்னாவின் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை போட்டியினைவிட்டு வெளியேறியது. அரையிறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.
திமுக இலவசங்களால் ஒரு முறை ஆட்சியை பிடித்து அதே பாணியை இம்முறையும் பின்பற்றுகிறது. அதிமுக, உங்களுக்கு நாங்கள் ஒன்றும் விலக்கல்ல என்பது போல தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாரி இரைத்துள்ளது.

பேசாமல் தமிழர்கள் எல்லோரும் தங்களுக்கு , தங்கள் வாக்குக்கு ஒரு விலையை நிர்ணயித்து விட்டால் அரசியல் கட்சிகள் தாரளமாய் அந்த விலையை கொடுத்து வங்கி விடுவார்கள்.

சிந்தித்து வாக்களிக்கலாம் என்று எவரேனும் நினைத்தால் , சிந்தனையில் தோன்றும் எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருக்கின்றன எந்திரன் ரஜினி மாதிரி.

அதிமுக வின் தேர்தல் அறிக்கை : 

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., ‌பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.
மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.கேபிள் டி.வி., அரசுடைமை : கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.பேன், மிக்சி, கிரைண்டர் : அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.மீனவர்கள் பாதுகாப்புக்கு உறுதி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.விலை மாந்தர்கள்- பகுதி 1

ரொம்ப சுருக்கமாக மக்களாட்சி மலர்ந்த விதத்தை பார்த்தோம். இப்போது தொடர்வோம்..

இந்தியா ஆங்கிலேயரின் பிடியில் இருந்து 1947ல் விடுபட்டதும், அரசியலமைப்பை உருவாக்க அம்பேத்கர் தலைமையில் குழு ஒன்று உருவானது. அது அடுத்த ஆண்டே தனது மாதிரி வரைவை சமர்ப்பித்தது.

இறுதியில் 1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடக மாறியது. மக்களுக்கு விருப்பமான, மக்கள் நலனில் அக்கறை காட்டுபவரை மக்களே வாக்களித்து தெரிந்தெடுக்கும் மக்களாட்சி இந்தியாவிலும் மலர்ந்தது.
வாக்குரிமை அனைத்து இந்தியர்களுக்கும் இருந்தது. அது கடமை இல்லை எனினும் தங்கள் உரிமையை கடமையை போல் எண்ணி வாக்கு அளிக்கலையினர் மக்கள்.

ஆனால் முதல் சில காலங்கள் கிட்டதட்ட பெயரளவிற்கு தான், ஏனெனில் காங்கிரசை எஹிர்க்கும் அளவுக்கு வலிமை வாய்ந்த எந்த கட்சியும் அப்போது இல்லை. ஏன் இப்போதும் கூட நாடே காங்கிரஸ் பிடியில் தானே இருக்கிறது. எதிர்ப்பதற்கு ஆள் இல்லாதவரை அவர்கள் வைத்தது தான் சட்டம். நல்ல எதிர்ப்பாளர்கள் தோன்றாத வரை நல்ல ஆட்சியாளர்கள் தோன்றவே முடியாது.

ஜவஹர்லால் நேரு இந்திய திருநாட்டின் முதல் பிரதமராக பொறுப்பெடுத்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செய்தார் என்பதை மறுத்தாலோ அல்லது மறைத்தலோ எவரும் நம்பி விட போவதில்லை. ஒரு தலைமுறையில் ஒருவர் நல்லவர் என்பதால் எல்லோரும் அப்படியே அமைந்து விடுவார்கள என்ன? அதே போல் தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பதெல்லாம் எப்போதும் மெய்ப்பதில்லை. அபூதைய காங்கிரஸில் எந்த அளவிற்கு தேச நலனுக்கு பாடுபட்டவர்கள் இருந்தார்களோ அதே அளவில் தங்கள் நலனையும் வளத்தையும் பெருக்கி கொள்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

எனக்கு நெடு நாட்களாகவே ஒரு சந்தேகம் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முதலிடம் வகிக்கும் நம் நாட்டில் , 110 கோடி பேரில் அந்த ஒரு நேரிய குடும்பத்தின் வாரிசுகளை தவிர எவருமே நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லையா?
ஆட்சி திறன் மிக்கவர்கள் இல்லையா?
நவீன உத்திகள் தெரிந்தவர்கள் இல்லையா?
தேச நலன் கொண்டோர் இல்லையா?
இல்லை, மற்ற எல்லோரை விடவும் அவர்களிடத்து இவை எல்லாம் மிக அதிகமோ.

அது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் 60 ஆண்டுகள் கடந்தும் பெரிதாய் எந்த மாறுதலும் மக்களின் வாழ்வில் உண்டாகவில்லையே?  ஏன் ?

இந்தியாவிற்கு பணியாற்றிய ஒரே குடும்பம் :

1 ) ஜவஹர்லால் நேரு
2 ) இந்திரா காந்தி
3 ) ராஜீவ் காந்தி
4 ) ராகுல் காந்தி ( இன்னும் கொஞ்ச நாளில் )

பயர்பாக்ஸ் இணைய உலவி தனது v4 ஐ வெளியிட்ட இரண்டே நாட்களில் 10 மில்லியனை தண்டி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உலவியில் IE9,கூகிள் க்ரோமில் உள்ளது போல இணைய தளங்கள் உங்களை பின் தொடர்வதை தடுக்கும் வசதி இருக்கிறது.

ஆனாலும் இது ஒரு வேண்டுகோளாக அந்த இணையதளத்துக்கு அனுப்பப்படும் என்பதால் பெரும்பாலும் அந்த தளங்கள் அந்த வேண்டுகோளை நிராகரிக்கும் என்பதால் இது ஒரு வேலை செய்யாத வசதி.

சிறப்பம்சங்கள் :

* புதிய வடிவமைப்பு
* சிறந்த செயல்பாடு
* அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகள்

மேலும் அதிக தகவல்களுக்கு பயணிக்க 
பகுத்தறிவு,மூட நம்பிக்கை என்றெல்லாம் வாய் கிழிய பேசுகிறார்கள் அப்புறம் என்ன காரணத்திற்காக, எதனை நம்பி எல்லோரும் ஒரே ( நல்ல ) நாளில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

 திருவாரூரில் போட்டியிடும் கருணாநிதி காலை 11 மணிக்கு திருவாரூர் மாவட்ட உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இங்கிருந்து அவர் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்குகிறார..

வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அன்று இரவு தஞ்சையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

ஜெயலலிதா தேர்தல் அறிக்கை:

 ஸ்ரீ ரங்கத்தில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில சீர்திருத்த ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

 அதிமுக வேட்பாளர்கள் 160 பேரும் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் ஏற்கெனவே உத்தரவு வாங்கி உள்ளனர்.

விஜயகாந்த்:

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதற்காக அவர் வியாழக்கிழமை காலை சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து புறப்படுகிறார். முதலில் திருக்கோவிலூரில் பிரசாரம் செய்கிறார். பின்னர் ரிஷிவந்தியத்தில் பிரசாரத்தைத் தொடர்கிறார்.

முக்கிய தலைவர்கள் வியாழக்கிழமை முதல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகின்றனர். இதனால் இனி வரும் நாள்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும். வேட்புமனு தாக்கலுக்கு வரும் சனிக்கிழமை கடைசி நாள்.

எனவே அடுத்த இரு நாள்களில் பிரதான கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதன், 23 மார்ச், 2011

காங்கிரஸ் நீண்ட மௌனத்திற்கு பிறகு ஒரு வாறாக எல்லா கொஷ்டிகளுக்கும் பிரித்து தொகுதிகளை அறிவித்துள்ளது.

மூண்டு தொகுதிகளுக்கு மட்டும் பின்னர் அறிவிக்கப்படுவர் என தெரிகிறது.


1.திருத்தணி - சதாசிவலிங்கம்,
3.ஆவடி - தாமோதரன்,
4.ஸ்ரீபெரும்புதூர் - யசோதா,
5.ஆலந்தூர் - காயத்ரி தேவி,
6.டி.நகர் - செல்லக்குமார்,
7.மதுராந்தகம் ஜெயக்குமார், ‌
8.சோளிங்கர்- அருள் அன்பரசு,
9.ராயபுரம் - மனோ,
10. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்,
11.கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்,
12.ஆத்தூர்- அர்த்தநாரி,
13.செங்கம்- செல்வப்பெருந்தகை,
14.ஓசூர்-கோபிநாத்,
15.கலசப்பாக்கம்-விஜயக்குமார்,
16.திரு.வி.க., நகர் - நடேசன்,
17.வேலூர் - ஞானசேகரன்,
18.ஈரோடு ( மேற்கு) - யுவராஜ்,
19.சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்,
20 .மொடக்குறிச்சி - பழனிச்சாமி,
21 .உதகை - கணேஷ்,
22 .தொண்டாமுத்தூர் - கந்தசாமி,
23 .வால்பாறை- கோவை தங்கம்,
24 .கரூர்- ஜோதிமணி,
25 .மணப்பாறை- டாக்டர் சுப. சோமு,
26 .ரிஷிவந்தியம்- சிவராஜ்,
27 .திருச்சங்கோடு - சுந்தரம்,
28 .முசிறி - ராஜசேகரன்,
29 .விருத்தாச்சலம் - நீதி ராஜன்,
30 .திருத்துறை பூண்டி - செல்லத்துரை,
31 .மயிலாடுதுறை- ராஜ்குமார்,
32 .காரைக்குடி - கே.ஆர். ராமசாமி,
33 .செய்யார் - விஷ்ணு பிரசாத்,
34 .தொண்டாமுத்தூர் - கந்தசாமி,
35 .வேடசந்தூர் - தண்டபாணி,
36 .அரியலூர் - பாளை தி அமரமூர்த்தி,
37 .பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்,
38 .திருமயம் - ராமசுப்புராம்,
39 .மதுரை (வடக்கு) - ராஜேந்திரன்
40 .திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41 .விளாத்திகுளம்- பெருமாள் சாமி,
42 .விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்,
43 .நாங்குநேரி - வசந்தகுமார்,
44 .ராதாபுரம் - வேல்துரை,
45 .மதுரை தெற்கு - வரதராஜன்,
46 .சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்,
47 .திருத்துறைபூண்டி - செல்லத்துரை,
48 .பரமக்குடி - ராம்பிரபு,
49 .கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்,
50 .வாசுதேவநல்லூர் - கணேசன்,
51 .குளச்சல் - ராபர்ட் ரூப்ஸ்,
52 .பேராவூரணி -கே.மகேந்திரன்
53 .சிவகங்கை - வி.ராஜசேகரன்
54 .கா‌ங்கேயம் - விடியல் எஸ் சேகர்
55 .நிலக்கோட்டை -ராஜாங்கம்
56 .பாபநாசம் - ராம்குமார்
57 .ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
58 . கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
59. விளவங்கோடு - விஜய தரணி
60 .அறந்தாங்கி - திருநாவுக்கரசர்.

பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
காலிறுதி போட்டிகள் தொடங்கி விட்டன, இனி மேலாவது விறுவிறுப்பான போட்டிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் இப்படி அநியாயமாக பாகிஸ்தானிடம் சரண் அடைவார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

போட்டி தொடங்கியது முதலே பாகிஸ்தானின் கை ஓங்க ஆரம்பித்து விட்டது முஹம்மது ஹபீஸ் சுழலில் வெஸ்ட் இண்டீஸ் தட்டு தடுமாற விக்கெட்டுக்கள் சரிந்த வண்ணம் இருந்தன. உமர் குல் மற்றும் ஹபீஸ் சேர்ந்து 16/3 என அதள பாதாள நிலைக்கு வெஸ்ட் இண்டீசை தள்ளிய பின் சீனியர் பேட்ஸ்மேன்கள் சர்வான் மற்றும் சந்தர்பால் தாக்கு பிடித்து 50 ரன்னை தண்ட உதவினர்.

ஆனால் மீண்டும் அந்த அணி தள்ளாட தொடங்கியது, ஒன்பது பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அப்போது ஸ்கோர் 71/8 ஆக இருந்தது.

கடைசியில் அப்ரிடி தன் விக்கெட வேட்டையை ஆரம்பிக்க வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. சந்தர்பால் 44 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் தனி ஆளாக களத்தில் போராடி கொண்டு இருந்தார்.

வெறும் 113 ரன்கள் எடுத்தல் வெற்றி என்றால் எளிய இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தானிய தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் இருந்து அடித்து ஆடி ஓவர்களில் வெற்றி பெற்றனர். சிறப்பாக விளையாடிய ஹபீஸ் ரன்கள் எடுத்தார்.

பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் திறமை காட்டிய ஹபீஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

நாம் தோற்கடித்த வெஸ்ட் இண்டீசை நம் பங்காளிகள் தோற்கடித்து விட்டார்கள்.
நம் பங்காளிகள் தோற்கடித்த பாகிஸ்தானை நாம் தோற்கடிக்க நாளை நல்ல வேளை அமையும் என்ற நம்பிக்கையுடன்.....வேறென்ன செய்வேன்?

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரை இறுதி நடந்தால் நல்ல தானே இருக்கும்???

உலகம் முன்பை விட இப்போதெல்லாம் மிகவும் சுருங்கி விட்டது. வேலை,படிப்பு என்று பல காரணங்களால் நாம் இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கு முதற் கட்டமாக நம்மிடம் கடவுச்சீட்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது. முன்பெல்லாம் பெரிய வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்து பெற வேண்டி இருந்தது. ஆனால் இந்திய அரசு இவ்வேலையை மிகவும் எளிதாக மாற்றி உள்ளது.முதற் கட்டமாக முக்கியமான் சில நகரங்களில் மட்டுமே இவ்வசதி கிடைக்கப் பெறுகிறது.
அந்த பட்டியலை காண கீழ்காணும் உரலியை சொடுக்கவும்.

இணைய வழி கடவுச்சீடுக்கான நகரங்கள்

இந்த நகரங்களின் எண்ணிக்கை மென்மேலும் வருங்காலத்தில் அதிகரிக்கும்.

விண்ணப்பிக்கும் உரலி


கடவிச்சீட்டு விண்ணப்பிக்கும் உரலி

1 ) பெரும்பாலான  கேட்கப்பட்டிருக்கும் தகவல்கள் மிகவும் நேரடியானதாகவே உள்ளது. யாருடைய உதவியுமின்றி நாமாகவே நிரப்பும் வண்ணமே அது அமைந்துள்ளது.

கடைசியாக உங்களது தகவல்களை சரிபார்க்க கேட்கும்  போது சரி என்று சொடுக்கவும்.


மேலும்,  இதற்கான  மற்றொரு முறை

கடவுச்சீட்டு விண்ணப்பம் : PDF கோப்பு
சுய விவரங்கள்                    : PDF கோப்பு

இவற்றை பூர்த்தி செய்து கடவுச்சீட்டு அலுவலகத்தில் கொடுத்தும் விண்ணப்பிக்கலாம்.

2 ) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமுன் :

* உங்கள் விண்ணப்பம் எந்திரத்தால் படிக்கப்படும் என்பதால் நீலம் அல்லது கருப்பு பேனாவால் பூர்த்தி செய்யவும்.

* பெரிய எழுத்துகளால் மட்டும் நிரப்பவும். CAPITAL LETTERS ONLY.

* ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் ஒரு கட்டத்தை விடவும்.

* உங்கள் எழுத்துகள் கட்டத்தின் எல்லையை தொடாமல் பார்த்து கொள்ளவும்.

* திருத்தங்கள் ஏதுமின்றி பூர்த்தி செய்யவும்.

* கட்டங்கள் போதாவிடில் உங்கள் தகவலை சுருக்கி கொள்ளவும்.

* முழுவதும் நிரப்ப பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளவும். குறைந்தபட்சம் வேண்டிய பகுதிகளையவது பூர்த்தி செய்யவும்.


விவரங்களுக்கு இங்கே செல்க

3 ) இணைக்க வேண்டிய கோப்புகள் : 

I. மூன்று பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்.

II. முகவரிக்கான அத்தாட்சி ( ஏதேனும் ஒன்று ) : ரேஷன் கார்டு, அலுவலக சான்று, தண்ணீர்/தொலைபேசி/மின்சார ரசீது,வங்கி கணக்கு சீட்டுவருமான வரி சீட்டு, வாக்காளர் அடை,துணைவரின்/பெற்றோரின் கடவுச்சீட்டு( ரேஷன் கார்டு எனில் மேலும் ஒரு அஹ்தட்சி தேவைப்படும்).

III. பிறந்த நாளுக்கான ( ஏதேனும் ஒன்று ) : பிறந்த போது பதிவு செய்த சான்றிதழ்,பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்

IV. குடியுரிமை சான்றிதழ்

*** மன்னிக்கவும்...  

 V. If you are a Government/Public Sector/Statutory body employee, then you should submit "Identity Certificate" in original ANNEXURE B along with Standard Affidavit ANNEXURE I.

VI. If you are eligible for "ECNR" attach attested copy of supporting document as stated in Column 15 of the guidelines link given earlier.

VII. If you were repatriated at Government cost, enclose documents to show that the expenditure, if any, incurred by the Government of India on his/her repatriation has been fully refunded to the Government of India, Ministry of External Affairs.

VIII. If you were ever deported to India, give details of Emergency Certificate/Passport.

Note: All original documents are to be shown at the time of submission of the passport application and the Original Passport Application Form (printout) with self-attested copies of all required documents attached needs to be submitted. You need to furnish two additional photocopies of the Personal Particulars form for each additional place of stay, in case you have stayed at more than one address during the last one year.

4 ) எங்கே விண்ணப்பிக்க வேண்டும் : 

இணையம் வழியில் செய்து இருப்பின் உருவாக்கப்படும் pdf கோப்பை அச்சிட்டு  கடவுச்சீட்டு அலுவலகத்தில் கொடுக்கவும்.

PDF கோப்பை அச்சிட்டு அதன் வழியில் செய்தீர்கள் எனில்,

1 ) பாஸ்போர்ட் கவுன்டேர்களில்,
2 ) ஸ்பீட் போஸ்ட் சென்டர்கள்,
3 ) மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகங்கள்,
4 ) பாஸ்போர்ட் சேகரிக்கப்படும் இடங்கள்.

5 ) உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ரூ.1000 கட்டணம் செலுத்தவும்.

6 ) எல்லாம் முடிந்ததும் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கவும். 15 நிமிடம் முன்னரே செல்லவும்.
 ஆன்லைனில் விண்ணப்பித்தால் நெடு வரிசையில் நிற்க வேண்டி வராது. 
மொபைல் இணையம் பயன்படுத்துவோர் இப்போதெல்லாம் வெகுவாக அதிகரித்து விட்டனர். நாம் நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில் வேண்டிய தகவலை பெறுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கின்றது. ஆனாலும் கணினியில் கிடைக்கும் அந்த இணைய உலவும் அனுபவம் கைப்பேசியின் ஊடே இணைந்த உலவியில் கிடைப்பது இல்லை.

ஒபேரா உலவி அந்த குறையை முடிந்தளவு போக்குகிறது.
இப்போது அதன் பதிப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

1) Opera Mini 6.0
2) Opera Mobile 11.0

முதலாவது பதிப்பு ஜாவா மற்றும் சிம்பியன் இயங்குதளங்களுக்கு கிடைக்கிறது.
இரண்டாவது பதிப்பு SmartPhones களுக்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ்,ஆண்ட்ராய்ட்,சிம்பியன் இயங்குதளங்களுக்கு இது கிடைக்கும்.

இதனை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் உரலிக்கு செல்லவும்தரவிறக்கம் செய்ய

இதன் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் :

* பெரிதாக்கி பார்க்கும் வசதி
* சமூக வலைதள பதிவேற்றம்
* சுருக்கப்பட்ட வலைப்பக்கங்கள்
* அதிகப்படியான கைப்பேசி ஆதரவு
* HTML5 பக்கங்களையும் காணலாம்

செவ்வாய், 22 மார்ச், 2011

பிரான்சின் ரகசிய கண்காணிப்பு ( Privacy watchdog) CNIL  நிறுவனம் கூகிளுக்கு அவர்களின் ரகசிய தகவல்கள் சேகரிக்க பட்டதற்காக 100,000 euro அபராதம் விதித்து உள்ளது.

கூகிள் தன் தெரு  பார்வைக்காக (Street View) திரட்டிய தகவல்களில் அந்நிறுவனத்தின் தகவல்களும் சேர்ந்து திரட்டப்பட்டு விட்டது. இதற்கு கூகிள் மன்னிப்பு கேட்டு கொண்டு உள்ளது. மேலும் அந்த தகவல்களை உடனடியாக அழித்து விடவும் உறுதி அளித்து இருக்கிறது.

2007-2010 வரை கூகிள் CNIL ன் திறந்த wi-fi நெட்வொர்க்கில் இருந்து தகவல்களை தெரியாமல் திரட்டி இருக்கிறது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த CNIL நிறுவனத்தை சார்ந்த யான் படோவா கூகிள் தங்களுக்கு எந்த சமயத்திலும் வேண்டிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்றும் அவர்கள் கடைசி வரை தங்களின் Source Code ஐ தரவில்லை எனவும் சாடி இருக்கிறார்.

கூகிளின் தகவல் படி கடந்த மூன்றாண்டுகளில் 600GB தகவல்கள் திறந்த Wi-Fi நெட்வொர்களில் இருந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் மின்னஞ்சல், பயனர் விவரங்கள், கடவுச் சொற்கள் அடங்கும்.

இனி இது போன்ற தகவல்கள் திரட்ட பட மாட்டாது என கூகிள் தெரிவித்து உள்ளது.
உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 34 போட்டிகளாக  வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அடி கொடுத்து உள்ளது. நம் பங்காளி கொடுத்ததை நாமும் கொடுக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சச்சினின் அந்த நெடு நாள் கோப்பை கனவு மெய்ப்படும். இம்முறை நிச்சயம் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என நம்புவோம் வேறென்ன நம்மால் செய்ய முடியும்.

உலக கோப்பை போட்டிகள் தொடங்கிய புதிதில் நானும் ஏதாவது பதியலாம் என்று ஒரு உலக கிண்ண போட்டிகள் தொடர்பான பதிவை ஆரம்பித்தேன். பின் இது போன்ற எந்த பதிவு எழுதினாலும் அவர்கள் விளையாடும் முறை ஏதும் மாறபோவதும் இல்லை. அவர்களுக்கு அறிவு புகட்டும் அளவுக்கு நமக்கு கிரிக்கெட் அறிவும் இல்லை என்பதால் பிறகு பதிவு இடுவதை நிறுத்தி விட்டேன்.

ஆனால் முக்கிய கட்டமான காலிறுதி போட்டிகள் நாளையில் இருந்து தொடங்க போகிறது. இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ள போகும் இந்நேரத்தில் என்னால் ஏதும் பதியாமல் இருக்க முடியவில்லை.

கடந்த 12 ஆண்டுகளில் இப்போது தான் ஆஸ்திரேலியா வலுவிழந்து கிடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்திடல் கூடாது. ஆஸ்திரேலியா ஒரு அடி பட்ட புலி. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சொல்வது போல

"ஆஸ்திரேலியாவிற்கு ஒன்று மட்டும் தான் தெரியும்.
அது வெற்றி பெறுவது, அவர்கள் இன்னும் தோல்வி அடைவது பற்றி அதிகம் கற்காதவர்கள்"

அது என்னவோ நிஜம் தான். ஆனால் ஒருவருக்கு தெரியாத ஒன்றை சொல்லி தருவது மிகவும் அவசியம் அன்றோ அதனை நிச்சயம் நம் இந்திய அணியினர் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இந்த போட்டியில் சேவாக் ஆசை படுவது போல் 50 ஓவர்கள் எல்லாம் விளையாட வேண்டாம் அதில் பாதி அளவு விளையாடினலே ஸ்கோர் அதிகமாவது உறுதி.

அஷ்வினை ஜாகிர் கானுடன் முதல் 15 ஓவர்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ஜாகிர் கான் அளவுக்கு அவருடன் இணைந்து பந்து வீச யாரும் இந்திய அணியில் யாருமில்லை. பழைய பந்தில் ஜாகிர் சிறப்பாக பந்து வீசுவர் என்பதால் அவரை பின் பாதியில் பயன் படுத்துவது சிறந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எப்போதும் துடிப்பாக இருக்கும் பந்து வீச்சாளர்கள் சாதித்து காட்டுவது உண்டு. ஸ்ரீசாந்த் இதில் கெட்டிக்காரர் ஆதலால் அவர் அணியில் இடம் பிடித்தால் வியப்படைய ஒன்றுமில்லை.

பேட்டிங் பவர் ப்ளே குறித்து அதிகம் சிந்திக்காமல் , சாதரணமாக அதனை எதிர் கொள்வது என்று. எனக்கு என்னவோ 16 ஆவது ஓவரிலியே எடுத்து விட்டால் என்ன?

கோப்பை கனவுகள் மெய்ப்பட விரும்பும் நான்,....


தமிழில் தட்டச்சு செய்ய அழகி,குறள், எ-கலப்பை போன்ற மென்பொருள்கள் உதவுகின்றன.
ஆனால் கூகிள் வழங்கும் IME எனும் புதிய மென்பொருள் பயன்படுத்த மிக எளிதாக உள்ளதோடல்லாமல் அதனுடன் இணைக்கப்பட்ட சொற்கள் பட்டியல் இருப்பதால் நம் வேலையை மிக எளிதாக்குகிறது.

 

இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Tamil, Telugu and Urdu ஆகிய மொழிகளில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.
இந்த கருவி மைக்ரோசாப்ட் வின்டோஸ் XP/ Vista/ 7 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் AOL இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.

கணினியில் அதனை இணைப்பது எப்படி ?

1.இந்த இணைப்பில் சென்று IME ஐ தரவிறக்கம் செய்க.

   கூகிள் IME 

2.இந்த மென்பொருளை இயக்கி இணையம் மூலம் கணினியில் பதிந்து கொள்ளவும்.

3.Alt+Shift மூலம் English லிருந்து  தமிழுக்கு தட்டச்சு முறையை மாற்றி கொள்ளலாம்.


4.நீங்கள் விரும்பினால் இதனை மாற்றி கொள்ளலாம்.
             கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Settings Tab இல் Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings பொத்தானை சொடுக்குங்கள்.
            இனி திறக்கும் Change Key Sequence எனும் வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
         
5.பிறகு உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொண்டு short cut கீயை அழுத்தினால் கூகிள் தமிழ் உள்ளீடு செயல் பட துவங்கிவிடும்.
மனிதன் தான் தோன்றிய காலந்தொட்டே ஏதாவது ஒன்றின் பால் மோகம் கொண்டோ அல்லது அதன் மீது அடிமைபட்டோ கிடக்கின்றான். அந்த ஒன்று அவனுக்கு மிகவும் பிடித்ததாகவோ அல்லது அவனுக்கு மிகவும் அச்சுறுத்தலானதாகவோ இருந்து வருகிறது.

மனித குலத்தின் முதல் சில நூற்றாண்டுகளை நோக்கினால் மாறி மாறி வரும் இரவு,பகல்,திடீரென பொழியும் மாரி ,இடி,மின்னல்,தீ,புயல் என இயற்கையின் எல்லா நிகழ்வுகளும் அவனுக்கு ஒரு வித அச்சத்தை உண்டாக்கின. அதனால் தானோ என்னவோ அவன் ஐம்பெரும் பூதங்களையும் கடவுளாக்கி வழிபட தொடங்கினான்.

மேலும் சில பக்கங்களை வரலாற்றில் புரட்டினால் மனிதன் தான் ஓரளவிற்கு உடலாலும் அறிவாலும் வளர்ந்த பின், ஆற்றங்கரை நாகரீகங்கள் ஆரம்பித்தன. அங்கு தான் வலிமை படைத்தவன் வலிமை குன்றியவனை அடக்கி ஆளும் சகாப்தம் ஆரம்பித்தது.
சற்றே வலிமை கொண்டவனை மக்கள் தாங்களே முன் வந்து தங்களுக்கு தலைவன் ஆக்கி கொண்டனர்.

தன்னை கண்டு ஒருவன் பயப்படுகிறான் எனில் எல்லாருக்கும் ஒரு இறுமாப்பு வருவது மிக சாதாரணம் தானே. அதே தான் நிகழ்ந்தது அரசர்கள் தங்களின் கீழ் படைகளை அமைத்து தன்னை போல் உள்ள மற்ற அரசர்களை நோக்கி படை எடுத்து வெற்றி பெற்று பேரரசன் ஆனான்.

மனித உடல் எவ்வாறு மெது மெதுவாக வளர்ச்சி பெற்றதோ அதே கதி தான் அவனின் மூளைக்கும். அது மிக மந்தமான வளர்ச்சியே பெற்று வந்தது, ஒரு கட்டத்தில் அரசர்களின் கீழ் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்கு தோன்றவே பல நூற்றாண்டுகள் ஆயிற்று. மூளை மனிதனை மெல்ல ஏதோ ஒருவித மாறுதலுக்கு உட்படுத்தி முடியாட்சி மன்னர்களுக்கு எதிராக திருப்பி விட்டது.

இதற்கெல்லாம் ஒரு விதத்தில் மன்னர்களே காரணம் ஆயினர். தங்களின் கீழ் வரும் கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவரை தெரிந்தெடுக்க அவர்கள் மக்களிடமே வாக்கு அளிக்கும் உரிமையை கடமையை கொடுத்தனர்.

மக்களில் சிந்தனை வாதிகளும் , புரட்சி வாதிகளும் தோன்றினர். மக்களும் அவர்களின் பால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன்  சேர்ந்து  போராட்டத்தில் குதித்தனர்.

மக்கள் புரட்சி உண்டாயின் மன்னன என்ன மகேசன் என்ன?
மன்னராட்சி ஒரு வழியாக 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து மெல்ல அகல தொடங்கியது.

இந்தியாவிலும் ஹரப்பா காலந்தொட்டு ஐரோப்பியர் காலம் வரை முடியாட்சியே நடந்து வந்தது. உலகமே மக்களாட்சி திரும்பி கொண்டு இருந்த அதே வேளையில் தான் இந்தியா விடுதலைக்காக போராடி வந்தது.

தொடரும்...

விலை மாந்தர்கள் - பகுதி 2 

புதன், 9 மார்ச், 2011

முதலில் இந்த பதிவிற்கு திமுக - காங்கிரஸ் மீண்டும் கூட்டு என்று தான் தலைப்பிடல்லாம் என்றிருந்தேன். ஆனால் அப்போது தான் ஒன்று நினைவுக்கு வந்தது. பொதுவாக நாம் பேசும் வசனம் " மறந்தால் தானே நினைப்பதற்கு ".

அதே போல் பிரிந்தால் தானே மீண்டும் இணைவதற்கு இவர்கள் தான் பிரியவே இல்லை.
ஒரு வழியாக வெகு விரைவாகவே இரு தரப்பிற்கும் வேண்டியது சுமுகமாக பேசி முடிக்க பட்டு விட்டது. காங்கிரசிற்கு அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்து விட்டது. ஆனால் திமுக எதற்காக அடம் பிடித்தார்கள் என்பதும் தெரியவில்லை, அது எப்படி நிறைவேறியது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அதுவாக இருக்குமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

நம் தலையில் நாமே எழுதி கொள்ள கொடுக்கப்படும் வாய்ப்பு தான் தேர்தல் அதை நாம் எவ்வாறு எழுதுகிறோம் என்றால் பிறரிடம் பணமோ அல்லது ஏதோ பெற்று கொண்டு நமக்கு எதிராக நாமே எழுதி கொள்கிறோம். சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போது தான் ஐந்து ஆண்டுகட்கு விதி நன்றாக அமையும்.

சரி, சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறேன்.
திமுக கூட்டணி உறுதி ஆகி விட்டது அதன் தொகுதி பங்கீடு நிலவரங்கள் வருமாறு :

தி.மு.க., 121
காங்., 63 .
பா.ம.க., 30,
விடுதலைச்சிறுத்தைகள் 10,
கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7,
முஸ்லிம் லீக் 2,
மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு