சனி, 30 ஜூலை, 2011

அடிமைகளா நாம்?

தற்செயலாக என் தங்கைக்கு விடுதலை நாள் விழா குறித்த கட்டுரை ஒன்றிற்கு உதவ நேரிட்ட போது எனக்கு தோன்றியவற்றை பதிக்கிறேன். நிச்சயம் பலருக்கும் இது தோன்றி இருக்கலாம்.

சென்னை மாநகரம்,தமிழ்நாட்டின் தலைநகரம் புதிதாக சென்னைக்கு செல்லும் எவரும் காண விழைவது சிலவற்றை தான் அவற்றுள் இவைகள் நிச்சயம் இருக்கும்.
1. உயர் நீதிமன்றம் : தொலைகாட்சி செய்திகளில் மட்டுமே பார்த்து பழகிப் போனது
2.சட்டப்பேரவை : செயின்ட் ஜார்ஜ் கோட்டை
3.சென்னை சென்ட்ரல் : தென்னகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையம்

இவை யாவுமே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவானவை. இவை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இதே நிலை தான்.
சரி விடுதலை அடைந்த இவ்வளவு ஆண்டுகளில் இதுவரை எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதை நமது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு உள்ளது?
எங்கள் ஊருக்கு ஆங்கிலேயர் காலத்தில் பாதை ஏதும் அமைக்கப்படவில்லை அவ்வளவு தான்.
இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.

எனக்கு என்னவோ என்ன தான் ஆங்கிலேயர்கள் நாட்டை சுரண்டினார்கள் என்றாலும் அதில் ஒரு பாதியையாவது நமக்கு நன்மை செய்து விட்டு தான் போய் இருக்கிறார்கள்.
அரசாங்கத் துறைகள் ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.
சுதந்திரம்,விடுதலை,வெளியே போ என்று முழங்கியோரை அடித்தார்கள், வதைத்தார்கள் என்பது எந்த அளவுக்கு மறுக்க முடியாத உண்மையோ அதே அளவுக்கு சுதந்திரம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு நாட்டை சூறை ஆடி வீட்டில் மறைத்து வைக்கும் பெருச்சாளிகள் நாட்டில் அளவுக்கு அதிகமாய் பெருத்துப் போயிருப்பதும் உண்மை.

இதை களைய வழியே இல்லையே..
வலி ஒன்று தான் வழி..
நம் வலி அவனுக்கு தெரிய வந்தால் தானே அவன் திருந்துவான்..

நாடே கூடி சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று வருடா வருடம் மிட்டாய் கொடுத்து மகிழும் நேரத்தில் கொஞ்சமாவது நான் நிஜமாகவே விடுதலை அடைந்தோமா என்று சிந்திக்க வேண்டும்.

வெள்ளையரிடம் இருந்து வாங்கிய சுதந்திரத்தை நாம் இப்போது நாட்டின் சில அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் அடகு வைத்து இருக்கிறோம்.

அதை மீட்கும் நாள் எப்போது...

விரைந்து சிந்தியுங்கள் இலை என்றால் விடுதலை காலாவதி ஆகி விடப் போகிறது..

உங்கள் கருத்துகளை பதியுங்கள்...

2 பின்னூட்டங்கள்:

  1. ஆமினாJul 30, 2011 06:41 AM

    //இலை என்றால் விடுதலை காலாவதி ஆகி விடப் போகிறது..//
    சிந்திக்க வேண்டிய விஷயம் தான்!!!

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரிJul 30, 2011 07:08 AM

    வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு
    கொள்ளையர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...