இந்திய அணி ஏமாற்றம் தொடர்கிறது..!

on திங்கள், 7 மார்ச், 2011


இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் சரியான் மாதிரி தெரியவில்லை.
ஜாகிர் கான் தவிர்த்து மற்ற அனைவரும் அப்படி ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி வந்து வீசவில்லை. யுவராஜ் சிங் பகுதி நேர பந்து வீச்சாளர் ஐந்து விக்கெட் எடுக்கிறார்.
இனி வரும் போட்டிகளிலாவது இந்தியாவின் பந்து வீச்சு முன்னேற வேண்டும்.

இந்திய - அயர்லாந்து அணிகளுக்கு இடையே, இன்று பெங்களூருவில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 207 ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது, பந்து வீச்சில் யுவராஜ் சிங் ஐந்து விக்கெட்டுக்களையும் ஷகீர் கான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியை அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் தடுமாற செய்தனர், ஷேவாக் வந்த வேகத்திலேயே ஐந்து ரன்களுக்குள் பவிலியன் திரும்பினார். டெண்டுல்கர் 38 ஓட்டங்களுடனும் கோலி 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில், 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது இந்தியா. எனினும் யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் இணைந்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் 50 ரன்களையும் பதான் 24 பந்துகளையும் 30 ரன்களையும் குவித்தனர்.

இறுதியில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமிழந்து 208 ரன்களை எடுத்தது இந்தியா. ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது, பந்துவீச்சிலும் கலக்கிய யுவராஜ் சிங் தெரிவானார்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக