வரும் ஆனா வராது... போலி விமானிகள் கைது..

on ஞாயிறு, 27 மார்ச், 2011

நாட்டில் எல்லாமே போலிகளாகி விட்டனர். கொஞ்சம் பணத்தை வெட்டினால் மாட்டு வண்டி ஓட்டுபவர் கூட விமானத்தை ஓட்டலாம் போல் இருக்கிறது. லஞ்சம் பெற்று கொண்டு போதிய திறனற்ற , படிப்பற்ற ஆட்களை விமானிகளாக மாற்றி தினம் தினம் நூற்றுக்கணக்கனாவர்களை சாவின் விளிம்பில் வைத்து அழகு பார்க்கின்றனர்.

வான வீதியின் அலைகளை தான் விலைக்கு விற்கிறார்கள் என்றல்,
வான் வீதியில் பயணிக்கும் உயிர்களையும் விலைக்கு கொடுக்க பர்க்கின்றனரே ?

போலி விமான பைலட் லைசென்ஸ் முறைகேடு தொடர்பாக உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரக அதிகாரி, பைலட் உள்பட 4 பேரை தில்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீப் குமார், பைலட் பிரதீப் தியாகி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 10 பேரை போலீஸார் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலியான ஆவணங்கள், சான்றிதழ்களை அளித்து பலர் வர்த்தகரீதியில் விமானங்களை இயக்கும் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இப்படி லைசென்ஸ் பெற்ற 14 பேர் வரை இப்போது கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சியின்போது 200 மணி நேரம் வரை பறந்ததாகக் கூறி இந்த லைசென்ஸ்களை பெற்றுள்ளனர்.

இது குறித்து உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரக தலைவர் இ.கே. பாரத் பூஷண் கூறியுள்ளது: வர்த்தகரீதியில் விமானங்களை ஓட்டும் லைசென்ஸýகளை பெற்றுள்ள 10 ஆயிரம் பேரது சான்றிதழ்களையும் ஆய்வு செய்து வருகிறோம். நாட்டில் உள்ள 40 விமான பைலட் பயிற்சி மையங்களிலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். சிறிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இந்த முறைகேடு குறித்து உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியது:

மனித உயிர்களுடன் விளையாடும் மிகப்பெரிய முறைகேடு இது. தவறிழைத்த அனைவரது மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக அனைத்து நிலைகளில் இருந்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

போலி பைலட் லைசென்ஸ் பெற்ற விவகாரத்தில் வர்த்தகரீதியில் விமானம் ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் முறைகேடு, பயிற்சிப் பள்ளிகளில் போலியான சான்றிதழ்களை அளிப்பது, பயிற்சியின் போது விமானத்தில் பறந்ததாகக் கூறப்படும் நேரத்தை கூட்டி சான்றிதழில் அதிகப்படுத்தி எழுதுவது என பல்வேறு நிலைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக