வீர மங்கை - பகுதி 2

on ஞாயிறு, 6 மார்ச், 2011


முதற் பகுதியை படிக்க வீர மங்கை 1

வேலை முடித்து பேருந்துக்காக காத்திருந்த விமலா தன் தோழியிடம் கவலைகளை கொட்டி கொண்டு இருந்தாள்.

ஏண்டி எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?”

என்ன சொல்ட்ற விமலா?”

எனக்கு வந்த பாழாப்போன ஹார்ட் அட்டாக் என் தங்கச்சிக்கும் வந்திடிச்சி,
கடவுளுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா?”

கடவுள்னு ஒருத்தர் இருந்தா நிச்சயம் அவருக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கும். கவலப்படாதே எல்லாம் சரியாயிடும்….”

மூணு வேளை முழுசா சாப்பிடறதுக்கே கஷ்டபடுறோம். இதுல மூணு லட்சம் கொடுத்து ஆபரேஷன் பண்ணா தான் தங்கச்சிய காப்பாத்த முடியும்னா என்னடி பண்றது?” என்று சொல்லும் போதே விமலாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

சரி அழாதடி" என்ற தோழி தான் செல்ல வேண்டிய பேருந்து வந்ததும் விடை பெற்று சென்றாள்.

விமலாவின் நல்ல நேரம் என்பதா கெட்ட நேரம் என்பதா, அவள் பேசியதை பின்னாடி இருந்த கேட்டு கொண்டிருந்தான் ஃபரீத்.

அவன் விமலாவை நெருங்கி

ஹலோஎன்றான்.

யார் நீங்க?”

கடவுள்

என்ன உளர்றீங்க மிஸ்டர்?”

ஒரு உயிரை காப்பாத்தறவர் கடவுள் தானே?”

வாட் டு யூ மீன்?”

தங்கச்சி…..
உயிர்……
ஹார்ட் அட்டாக்……
பணம்…..”

நீங்ங்க யார்ர், எதுக்காக எனக்கு உதவி செய்யணும்?”

தங்களின் திட்டத்தை சொன்ன ஃபரீத் இதற்கு விமலா சம்மதித்தால் அவள் வீட்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என உறுதி கொடுத்தான்.

ஏதும் பேசாமல் நின்று கொண்டிருந்த விமலாவை சீக்கிரம் யோசித்து முடிவெடுக்க சொன்ன ஃபரீத் தன் மொபைல் எண் கொடுத்து விட்டு கிளம்பினான்.

விமலா யோசிக்கலானாள்.

இரண்டு மணித்துளிகளுக்கும் பின்…….

எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் பிரிய போகும் உயிரை தங்கைக்காக சீக்கிரமே துறக்க முடிவு செய்த விமலா ஃபரீத்தை மொபைலில் அழைத்தாள்.

ஹலோ நான் விமலா

நல்ல முடிவு தானே எடுத்திருக்கீங்க?”

ம்ம் நான் தயார்

கிரேட்.. உங்கிட்ட இருந்து இதை தான் எதிர்பார்த்தேன்

விமலா லைனில் இருக்கும் போதே தன் அருகில் இருந்த நண்பர்களிடம் விஷயத்தை சொன்னான்.

நண்பன் ஒருவன் பின்னாலிருந்து
அப்ப நாளைக்கு பார்ட்டி வெச்சு கொண்டாடிவோம்

.கே எல்லாரையும் நம்ம ஃபேக்டரிக்கு வர சொல்லிடு

சற்று நேரம் அமைதி காத்த விமலா பேச ஆரம்பித்தாள்.

ஃபரீத் ஃபரீத்..”

சாரி மிஸ்.விமலா

இட்ஸ் ஆல்ரைட்..
நான் எங்க, எத்தன மணிக்கு வரணும்?”

நாளைக்கு மதியம் 2.00 மணி
நாராயண் பட்டாசு ஃபேக்டரி..
அம்பத்தூர்

சரிஎன்று இணைப்பை துண்டித்தாள்.

தன் கடைசி இரவை வீட்டிற்கு சென்று கழிக்க தொடங்கினாள் விமலா.


பொழுது புலர்ந்தது.

காலை 6.00 மணி.

ஏண்டி விமலா இங்கிருந்த காஃபி பொடியை எங்கடீ காணோம்?”

சமையற்கட்டில் இருந்து அம்மாவின் குரல் கொஞ்சம் கனமாக ஒலித்தது.

நேத்தே தீர்ந்து போச்சுமா..
எனக்கு பால் மட்டும் கொடும்மா போதும்

உயிர் இருக்கும் போதே கடைசியாக பால் குடிக்க ஆசைப்பட்டாள் விமலா.

சிறிது நேரத்திற்கு பின் விமலா அம்மாவிடம் கேட்டாள். 
அம்மா டிஃபன் ரெடியா..”

என்னடீ எப்பவும் லேட் ஆயிடிச்சி, பசிக்கலன்னு எதாவது காரணம் சொல்லி சாப்பிடாம போயிடுவ இன்னிக்கி நீயே சாப்பாடு கேக்கற?”

இன்னிக்கு ஏதோ சாப்பிடணும்னு தோனிச்சி..”

கொஞ்சம் இரு எடுத்துட்டு வரன்
………
………
ம்ம்..இந்தாடீ சாப்பிடு

நீயே ஊட்டி விடும்மா

என்னடி இது குழந்த மாதிரி

என்று கடிந்த அம்மா தன் கைகளால் இட்லியை பிட்டு பாசத்தோடு விமலாவிற்கு ஊட்டிக் கொண்டே சொன்னாள்.

கீர்த்தனா ஏதோ நோட்ஸ் வாங்கிறதுக்காக ஃப்ரண்ட் யாரையோ பார்க்க விடியறதுக்கு முந்தியே போயிட்டா..
உங்கிட்ட சொல்ல சொன்னா மறந்துட்டன்டீ..”

அவ வந்தா சொல்லிடும்மா.. நானும் போயிட்டேன்னு….”

உள்அர்த்தம் வைத்து சொன்ன விமலாவை புரிந்து கொள்ளாத அம்மா,
சரி சொல்றன்..
நீ போகும் போது தம்பிய சாப்பிட வர சொல்லிட்டு போடி..”
எங்க இருக்கான்?”

வேற எங்க அந்த ஸ்கூல் கிரவுண்டுல தான்.. லீவு விட்டா போதும் பேட்ட தூக்கிட்டு கிளம்பிர்றான். மனசுல பெரிய கவாஸ்கர்னு நெனப்பு.”

கவாஸ்கர் இல்லம்மா சச்சினாவே வந்தாலும் வருவான். நான் வர சொல்லிட்டு போரேன்…”
வீட்டை விட்டு கிளம்பினாள் விமலா.

.......வீர மங்கை பகுதி 3 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக