இவ்வளவு தான் இங்கிலாந்தா? - இலங்கை இமாலய வெற்றி

on ஞாயிறு, 27 மார்ச், 2011

இந்த உலக கோப்பை போட்டி தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்ற பெரும்பாலான போட்டிகள் ஆட்டம் முடியும் வரை சுவாரசியமாக இருந்து வந்தது.
இந்தியாவுடன் டை ஆனா போட்டி,
அயர்லாந்து உடன் தோல்வி அடிந்த போட்டி,
தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய போட்டி என்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டிகளாக நடந்தது. அண்ணல நேற்று அப்படியா தலைகீழாக மாறி விட்டது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் டிராட் போராடி அணியை 229 ரன்கள் வரை இட்டு சென்றார். ஆனால் மோசமான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் இங்கிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இலங்கையின் தில்ஷான் மற்றும் தரங்கா இருவரும் சதம் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 39.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

 டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பிரையருக்குப் பதிலாக இயன்பெல், ஸ்டிராசுடன் இணைந்து ஆட்டத்தைத் துவக்கினார். இலங்கை அணி வேகத்தில் மலிங்காவை நம்பியே களமிறங்கியது. அதனால் தொடக்க ஓவர்களை மலிங்காவுடன் இணைந்து தில்ஷான் வீசினார்.

ஸ்டிராஸ் 5 ரன்களில் தில்ஷான் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். இயன் பெல் 25 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த டிராட்டும், போபாராவும் இணைந்து மிகவும் பொறுமையாக ஆடினர். இதனால் இங்கிலாந்தின் ரன்விகிதம் மிகவும் மந்தமானது. போபாரா 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் டிராட்டுடன் ஜோடி சேர்ந்தார் மோர்கன். டிராட் 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். மோர்கன் கொடுத்த 3 கேட்சுகளை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு களம் புகுந்த ஸ்வான் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.

டிராட் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. பிரையர் 22 ரன்களுடனும், ரைட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தில் ஆமை வேகத்தில் ஆடிய இங்கிலாந்து அணி மொத்தம் 12 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது.

தில்ஷான்-தரங்கா சதம்:

230 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தில்ஷானும், தரங்காவும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர்.

இவர்களை வீழ்த்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தும் பலனில்லாமல் போனது. தில்ஷானும், தரங்காவும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

 சதத்தை நெருங்கியபோது இருவரும் சற்று வேகம் காட்டினர். இதனால் இலங்கை 36-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது. தில்ஷான் 96 ரன்களில் இருந்தபோது ஸ்வான் ஓவரில் ஒரு பவுண்டரியை விளாசி சதம் அடித்தார்.

வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற போது சதமடித்த தில்ஷான் பவுண்டரி அடித்தார். இதனால் தரங்கா சதம் அடிக்க முடியுமா என்ற ஐயம் உண்டானது.
ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே நோ பால் எல்லாம் வீசவில்லை இலங்கையை போல ( சேவாக் - தில்ஷான் நினைவிருக்கும் என எண்ணுகிறேன் )

39.3-வது ஓவரில் தரங்கா, பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதமடிக்க இலங்கை 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அரை இறுதி போட்டிகள் :


 * மார்ச் 29: முதல் அரையிறுதி

   இலங்கை-நியூசிலாந்து

   இடம்: கொழும்பு,

   நேரம்: மதியம் 2.30

 * மார்ச் 30: இரண்டாவது அரையிறுதி

    இந்தியா-பாகிஸ்தான்

   இடம்: மொஹாலி,

   நேரம்: மதியம் 2.30





0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக