விலை மாந்தர்கள்- பகுதி 1

on செவ்வாய், 22 மார்ச், 2011

மனிதன் தான் தோன்றிய காலந்தொட்டே ஏதாவது ஒன்றின் பால் மோகம் கொண்டோ அல்லது அதன் மீது அடிமைபட்டோ கிடக்கின்றான். அந்த ஒன்று அவனுக்கு மிகவும் பிடித்ததாகவோ அல்லது அவனுக்கு மிகவும் அச்சுறுத்தலானதாகவோ இருந்து வருகிறது.

மனித குலத்தின் முதல் சில நூற்றாண்டுகளை நோக்கினால் மாறி மாறி வரும் இரவு,பகல்,திடீரென பொழியும் மாரி ,இடி,மின்னல்,தீ,புயல் என இயற்கையின் எல்லா நிகழ்வுகளும் அவனுக்கு ஒரு வித அச்சத்தை உண்டாக்கின. அதனால் தானோ என்னவோ அவன் ஐம்பெரும் பூதங்களையும் கடவுளாக்கி வழிபட தொடங்கினான்.

மேலும் சில பக்கங்களை வரலாற்றில் புரட்டினால் மனிதன் தான் ஓரளவிற்கு உடலாலும் அறிவாலும் வளர்ந்த பின், ஆற்றங்கரை நாகரீகங்கள் ஆரம்பித்தன. அங்கு தான் வலிமை படைத்தவன் வலிமை குன்றியவனை அடக்கி ஆளும் சகாப்தம் ஆரம்பித்தது.
சற்றே வலிமை கொண்டவனை மக்கள் தாங்களே முன் வந்து தங்களுக்கு தலைவன் ஆக்கி கொண்டனர்.

தன்னை கண்டு ஒருவன் பயப்படுகிறான் எனில் எல்லாருக்கும் ஒரு இறுமாப்பு வருவது மிக சாதாரணம் தானே. அதே தான் நிகழ்ந்தது அரசர்கள் தங்களின் கீழ் படைகளை அமைத்து தன்னை போல் உள்ள மற்ற அரசர்களை நோக்கி படை எடுத்து வெற்றி பெற்று பேரரசன் ஆனான்.

மனித உடல் எவ்வாறு மெது மெதுவாக வளர்ச்சி பெற்றதோ அதே கதி தான் அவனின் மூளைக்கும். அது மிக மந்தமான வளர்ச்சியே பெற்று வந்தது, ஒரு கட்டத்தில் அரசர்களின் கீழ் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்கு தோன்றவே பல நூற்றாண்டுகள் ஆயிற்று. மூளை மனிதனை மெல்ல ஏதோ ஒருவித மாறுதலுக்கு உட்படுத்தி முடியாட்சி மன்னர்களுக்கு எதிராக திருப்பி விட்டது.

இதற்கெல்லாம் ஒரு விதத்தில் மன்னர்களே காரணம் ஆயினர். தங்களின் கீழ் வரும் கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவரை தெரிந்தெடுக்க அவர்கள் மக்களிடமே வாக்கு அளிக்கும் உரிமையை கடமையை கொடுத்தனர்.

மக்களில் சிந்தனை வாதிகளும் , புரட்சி வாதிகளும் தோன்றினர். மக்களும் அவர்களின் பால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன்  சேர்ந்து  போராட்டத்தில் குதித்தனர்.

மக்கள் புரட்சி உண்டாயின் மன்னன என்ன மகேசன் என்ன?
மன்னராட்சி ஒரு வழியாக 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து மெல்ல அகல தொடங்கியது.

இந்தியாவிலும் ஹரப்பா காலந்தொட்டு ஐரோப்பியர் காலம் வரை முடியாட்சியே நடந்து வந்தது. உலகமே மக்களாட்சி திரும்பி கொண்டு இருந்த அதே வேளையில் தான் இந்தியா விடுதலைக்காக போராடி வந்தது.

தொடரும்...

விலை மாந்தர்கள் - பகுதி 2 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக