பொறுமையாக விளையாட தொடங்கி அசுர வேகத்தில் சிக்ஸர்களை அடித்து ஐம்பதை நோக்கி சென்ற கில்லி பின்னர் மார்ஷை அடிக்க விட்டு கடைசியில் மீண்டும் வெளுத்து வாங்கி இன்னமும் பஞ்சாப் அணியை அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடிக்க வைத்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய காலங்களில் பார்த்த கில்லியை மீண்டும் காட்டிய ஐபிஎல்லிற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இவ்வளவு தொடர் நீளமாக இருப்பதால் என்ன இவ்வளவு விரைவாக முடிந்து விட்டது என்பதிற்கு பதிலாக, எப்படா இறுதிப் போட்டி வரும் என்று எண்ண வேண்டி இருக்கிறது.
தர்மசேலாவில் நடந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒரு புயலே அடித்தது மாதிரி இருக்கிறது.
"நான் நிறைய முறை அவர் விளையாடி பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து விளையாடும் போது அவர் ஒருபுறம் விளையாட நான் அதை மறுபுறம் இருந்து பார்ப்பது மிக சந்தோசமாக இருந்தது" என்று மார்ஷ் கூறியதில் வியப்பேதும் இல்லை.
ஷான் மார்ஷும் தன் பங்குக்கு சில நேரம் பெங்களூரை போட்டுத் தள்ளினார். பதினைந்தாவது ஓவரில் அவர் மூன்று சிக்ஸர்களும்,மூன்று பவுண்டரிகளும் அடித்தார். இவர் மொத்தம் 79 ரன்கள் சேர்த்தார். கில்லி முதல் ஆறு ஓவர்கள் 9 பந்துகளில் வெறும் 2 ரன் தான் சேர்த்து இருந்தார், ஆனால் மித்துன் வீசிய அந்த ஷாட் பிட்ச் பந்து அவரை பழைய நினைவுகளில் கொண்டு சேர்த்ததோ என்னவோ பவர் ப்ளே முடிந்த பின்னர் கில்லி தன் பவர் எண்ண என்பதை அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்துக் காட்டினார்.
லாங்க்வேல்ட் வீசிய பத்தாவது ஓவரில் கில்க்ரிஸ்ட் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் அதில் கடைசி ஒன்று 122 மீட்டர் பாய்ந்து மிக அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர் ஆக மாறியது.
இறுதி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கில்லி சத்தத்தைக் கடந்த பின்பு ஒரு வழியாக தன் விக்கெட்டை கொடுத்து விட்டு பெங்களூருக்கு 233 என்னும் எண்ண முடியாத இலக்கை விட்டு சென்றார்.
இவ்வளவு பெரிய இலக்கெல்லாம் கெய்ல் எதாவது சூரபத்ம ஆட்டம் ஆடினால் அன்றி வழி இல்லை என்ற நிலையில் அவரும் அவுட் ஆக கடைசி வரை பெங்களூர் போட்டியில் திரும்பாமலேயே 121 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
கில்லி ஆட்ட நாயகன் ஆனார் சந்தேகம் ஏதுமின்றி...
மிக நல்ல பதிவு
பதிலளிநீக்குஇன்று கில்லியின் ஆட்டம் ரணகள ஆட்டம் தான்
நீண்ட இடைவெளிக்கு பின்
மீண்ட கில்லி
"நீண்ட-மீண்ட"
பதிலளிநீக்குஎப்படி எந்த செய்தியிலும் எதுகை மோனை உங்களுக்கு கிடைக்கிறது..