புதன், 5 அக்டோபர், 2011

தமிழ் தெரியாதா எனக்கு?

| | 12 comments
நான் படித்த படிப்பிற்கான வேலை வந்தால் தான் சேருவேன் என்று அடம் பிடிக்கும் நிலையிலோ,
ஓரிரு ஆண்டுகள் நல்ல வேலை(ளை)க்காக காத்திருக்கும் நிலையிலோ நாடோ நானோ இல்லை என்பதை தெளிவற அறிந்து விட்ட பின்பு நாட்களை கடத்த விருப்பம் இல்லை. என்னோடு போட்டிக்கு லட்சக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள், அதுவும் அதில் பெரும்பான்மையானோர் என்னை விட அதிக மதிப்பெண்களை எடுத்தவர்களாக இருப்பார்கள்.

அதனால் தான் கிடைத்த வேலைக்கு போக முடிவெடுத்து விட்டேன்.
கரூர் வைஸ்யா வங்கியில் தகுதிகாண் அலுவலர் (Probationary Officer) பணிக்கு தெரிந்தெடுக்கப்பட்டு இணைந்தும் விட்டேன்.

அதற்கான பயிற்சிக்கு சென்றிருந்த போது பல மாநிலங்களில் இருந்து வந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

பெரும்பாலும் வட இந்தியர்கள் எல்லோருமே இந்தி பேசினார்கள். தமிழகம் தவிர்த்த மற்ற தென் மாநிலத்தவரும் ஓரளவு இந்தி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். தமிழர்கள் தான் குண்டு சட்டியிலே குதிரை ஒட்டி கொடு இருக்கிறோம்.
ஏதோ நமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தான் அவர்களுடன் பேச முடிந்தது.
நான் ஒன்றை மனதிற் கொண்டு கஷ்டப்பட்டு ஆங்கில வார்த்தைகளை இணைத்து ஒரு வாக்கியத்தை பேசினால் அது அவர்களுக்கு புரிய ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது. ஓரிரு நாட்களில் எங்களின் ஆங்கிலம் ஒரே நேர்கோட்டில் வந்து விட்டது. அதன் பின்பு பெரிதாய் தகவல் பரிமாற்றத்தில் பிரச்னை இல்லை.

பயிற்சி வகுப்பின் போது "திருமகள் திருமண திட்டம் (TTT)" என்னும் வைப்பு நிதி பற்றி விளக்கம் கொடுத்தார்கள்.
அன்று இரவு என் அறையில் இருந்த வட இந்திய நண்பர்கள் மற்றொரு தமிழ் அன்பரிடம் தமிழ் சொற்களை மொழி பெயர்க்கும் வேலையில் இருந்தனர்.

திருமகள் - Girl
திட்டம் - Plan

ஆனால் திருமணம் என்பதில் தான் பிரச்னை.
அவர்கள் (இந்திக்காரர்கள்) கேட்கின்றனர்,
"கல்யாணத்திற்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?"
நம் அன்பரின் விளக்கம் அபரிமிதம்
"கல்யாணம் என்பது Marriage திருமணம் என்பது Wedding"

சரி நமக்கு தெரிந்தவற்றை சொல்லிப் பார்ப்போமே என்று நானும் மொழிப்பெயர்ப்பு வேலையில் இறங்கினேன்.

"அப்படி இல்லை...
கல்யாணம் தமிழ் சொல் இல்லை அது சமஸ்கிருத சொல்.
திருமணம் என்பது தான் தமிழ்.
Marriage,Wedding இரண்டிற்கும் ஒரே சொல் தான் அது திருமணம் தான்"

என்று சொல்லி பார்த்தேன்.
ஏற்கனவே கேட்ட தமிழ் அன்பரின் விளக்கமே அவர்களுக்கு பிடித்து விட்டது போலும். நான் சொல்வதை ஏற்கவே இல்லை. நம்ம அன்பரும் நான் சொன்னது தவறு என, நான் துணைக்கு ஆள் இல்லாததால் ஜகா வாங்கி கொண்டேன்.

இது பரவாயில்லை, அடுத்த நாள் தண்ணீர் பிரச்னை வெடித்து விட்டது.
நாங்கள் தாங்கி இருந்தது இரண்டாம் தளம். முதல் தளத்தில் சென்று தண்ணீர் கொண்டு வந்த வட இந்திய நண்பருக்கு "பாணி"க்கு தமிழ் சொல் அறியும் ஆர்வம ஏற்பட்டு என்னிடம் கேட்க,
நான்

பாணி - நீர் - water
'தண்'டா பாணி - 'தண்'ணீர் - Cold Water
'கரம்' பாணி - வெந்நீர் - Hot water

என்று விளக்கம் கொடுத்து தண் என்னும் சொல் ஒன்றி வருவதை வியந்து சொன்னேன். அவனுக்கு என் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் மற்றொரு தமிழ் நண்பரிடத்து கேட்க,
அவர் என்னை முழுக்க தவறு என்று சொல்லி விட்டு விளக்க ஆரம்பித்து விட்டார்.

பாணி - தண்ணி
கரம் பாணி - சுடு தண்ணி
தண்டா பாணி - குளிர்ந்த தண்ணி

இதைக் கேட்ட நான் சும்மா இல்லாமல் குளிர்ந்த தண்ணி என்றால் "Chill Cold Water" என்று தேவை இல்லாமல் வார்த்தைகளை இழுப்பது போலாகி விடும் என்று சொல்லிப் பார்த்தேன்.

விளைவு எனக்கு தமிழ் தெரியாது என்று இரண்டு பக்கத்தினரும் சேர்ந்து விளாசினார்கள்.

இதற்கு பிறகும் நான் பேசினால் என்னை வேறு மாதிரி ஏதாவது சொல்லி விடுவார்களோ என பயந்து என் மொழி அறிவுக்கு குட்டு வைத்து விட்டேன்.

அடுத்த நாள் வகுப்பில் "Note Book" என்றால் என்னவென்று விவாதம்.
"நோட்டுப் புத்தகம்" என்று சொன்னார் நம் அன்பர்.
நான் "இல்லை, அது குறிப்பேடு" என்று சொல்லி இருந்தால் என்னை ஏதோ வேற்று கிரக மொழிக்காரன் என்று முடிவு கட்டியிருப்பார்கள்.

இதற்கு பின்பும் இது போன்ற அறிய மொழி விளக்கங்கள் அரங்கேறின. ஆனால் மேலும் மேலும் அசிங்கப்பட விரும்பாமல் அமைதி காத்தேன்.

ஆமாம் தமிழில் நம் அன்பரை போல ஞானம் பெறுவது எப்படி?

என் செய்வேன் நான்?

12 கருத்துகள்:

  1. தமிழில் நம் அன்பரை போல ஞானம் பெறுவது எப்படி??????!!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நொந்து நூலகிப்போனீர்களோ

    பதிலளிநீக்கு
  4. "என் ராஜபாட்டை"- ராஜா9 அக்டோபர், 2011 1:00 பிற்பகல்

    Paavam boss nenga. . .

    பதிலளிநீக்கு
  5. "என் ராஜபாட்டை"- ராஜா9 அக்டோபர், 2011 1:02 பிற்பகல்

    Final question super . . .

    பதிலளிநீக்கு
  6. அ. வேல்முருகன்11 அக்டோபர், 2011 7:25 பிற்பகல்

    தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உங்கள் பதிவில் ஒரு அன்னிய மொழி கற்க வேண்டும் என்ற அவாவை காட்டிலும் தமிழனை பழிப்பது போன்ற ஒரு தொனி தெரிகிறது. அதாவது இங்கு இந்தியை ஏற்பதில்லை என்று.

    உங்கள் ஒருவருக்காக ஏன் 6 கோடி மக்கள் வேற்று மொழியை கற்க நேரம் ஒதுக்க வேண்டும். வேண்டுமானால் 1 கோடி பேருக்கு தங்களை போன்று ஒரு அவசியம் ஏற்படுகிறது என்பதற்காக எதற்காக தேவையின்றி 5 கோடி மக்கள் வேற்று மொழி கற்க வேண்டும்.

    உங்களுக்கே 22 /25 வயதில்தான் மொழியின் தேவை ஏற்படுகிறது. அதற்குள் ஒரளவு கல்வி தகுதி பெற்றுவிடுகிறீர்கள். இத்தகுதியை கொண்டு மிகக் குறுகிய காலத்தில் எந்தவொரு மொழியையும், கற்றுக் கொள்ளலாம்.

    உங்களுக்கு ஒருவேளை ஜப்பானிலோ, பிரான்ஸிலே வேலை கிடைத்தால் இந்த இந்தி உதவுமா இல்லை மராத்தியோ, பெங்காலியோ தெரிந்திருக்க உங்களால் சமாளிக்க இயலுமா?

    எனவே மொழி ஒரு கருவி என்ற நோக்கில் பாருங்கள்.

    அம்பலத்தார் சொன்னதுபோல் எனது மறுமொழி தங்களை நூலாக்காது என நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  7. ♔ம.தி.சுதா♔15 அக்டோபர், 2011 9:55 முற்பகல்

    யாரு சொனனது தமிழ் தெரியாதுண்ணு அது தானே பதிவு படிச்சிட்டனே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

    பதிலளிநீக்கு
  8. Surya Prakash18 அக்டோபர், 2011 11:43 முற்பகல்

    பேசாம ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்!!!!

    பதிலளிநீக்கு
  9. Agape Tamil Writer2 நவம்பர், 2011 5:37 பிற்பகல்

    அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில்
    பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக
    விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. சீனுவாசன்.கு10 நவம்பர், 2011 5:18 பிற்பகல்

    தமிழா...தமிழா?

    பதிலளிநீக்கு
  11. Vikash11 டிசம்பர், 2011 6:12 முற்பகல்

    Hello dear Author
    Nice to read your posting.Hindi is our national language. We all have enough time to learn Hindi.Learning another language will be a plus point for the youngsters.Maybe Mr.Velmurugan is a retired person.He does not need to learn Hindi.

    பதிலளிநீக்கு
  12. மனோவி21 ஜனவரி, 2013 3:12 பிற்பகல்

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி...
    யாரையும் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டயபடுதும் நோக்கம் எமக்கு இல்லை.
    தமிழை தமிழர்களே சரியாக தெரிந்து வைத்துக் கொள்ளாமல், வடமொழி வார்த்தைகளை தமிழென்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலையை சொல்ல விழைந்தே இப்பதிவு.

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...