ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நீங்கள் பிறந்த ஆண்டை, திகதியை பிடித்தமானவர் மொபைல் எண்ணை என எதை வேண்டுமானாலும் உங்களுடையது ஆக்குங்கள். இலவசமாக...

உங்கள் மனதுக்கு பிடித்தமான மொபைல் எண்ணைப் பெற இதுவே சரியான தருணம்.



1 மில்லியன் மொபைல் எண்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தெரிந்தெடுங்கள்.

கீழ்வரும் இணைப்புகளை சொடுக்கி தேடத் துவங்குங்கள்..

சென்னை எண்கள்


தமிழ்நாடு எண்கள்


MNP ஐ கொண்டு  BSNL ல் இருந்து மற்ற இணைப்புகளுக்கு மாறவும் செய்யலாம்.

மொபைல்  எண்ணை தெரிந்தெடுத்த 72 மணிக்குள் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு தகுந்த அடையாள சான்றுகளுடன் சென்று உங்கள் எண்ணைப் பெறலாம்.


எனவே மற்றவர் முந்தும் முன்னர் பதியுங்கள் உங்கள் எண்ணுக்கு...


இப்பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

புதன், 14 டிசம்பர், 2011

பழைய செந்தில்-கவுண்டமணி படங்கள் அதிகம் பார்த்திருந்தால் இந்த அண்ணே.. என்ற சொல் அச்சு பிறழாமல் செந்திலின் குரலில் உங்களுக்கு நினைவுக்கு வரும்..
(வரவில்லை என்றால் விடுங்கள், 24 மணி நேரமும் இவர்களை காட்டுவதற்காகவே ரெண்டு தொலைகாட்சிகள் இருக்கிறதே அவர்கள் காட்டுவார்கள் பார்த்தது தெளிந்து கொள்ளுங்கள்.)

பெரும்பாலும் செந்தில் அண்ணே.. என்று ஆரம்பித்தால் எதாவது வில்லங்கமான கேள்வியில் தான் முடிப்பார்..

சொப்பன சுந்தரிய யார் வெச்சிருந்தாங்க?...
ஏன் முகத்தில இருக்கிற முடிய தாடின்னு சொல்றாங்க, முகமூடின்னு சொல்லலாமே?...
புல்- முழுப் புல்....

இந்த மாதிரி நிறைய..

அந்த அளவுக்கு நமக்கு திறமை இல்லன்னாலும் நிறைய விடை தெரியாத கேள்விகள் தின வாழ்க்கையில் வருகின்றன.


பெரும்பாலான வினாக்களுக்கு விடை கிடைத்தாலும் சிலவற்றுக்கு பதில் தெரிவதில்லை தெரிந்தாலும் புரிவதில்லை.

இன்றைய கேள்விகள் :

௧.மனிதன் தோன்றினானா? தோற்றுவிக்கப்பட்டனா?


௨.எல்லோருக்கும் பொதுவான தண்ணீரை "தன் நீர்" என்று அண்டை மாநிலத்தவர் உரிமை கொண்டாடுவது ஏன்?

௩.அரை மணி நேர செய்தியில் விளம்பரம் போக மீதமுள்ள இருபது நிமிடங்களையும் அரசியலும் அது சார்ந்தவர்களுமே வருவது ஏன்?


௪.சில கேள்விகளுக்கு விடை தெரிந்த போதிலும் அது அவர்களுக்கும் தெரிந்தும் மனம் மாறாமல் மழுப்புவது ஏன்?


செவ்வாய், 13 டிசம்பர், 2011

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி எல்லா துறைகளையும் புரட்டி போட்டு விட்டது.
மனிதன் தன்னால் செய்ய முடிந்ததை வேகமாகவும், செய்ய முடியாததை செய்யவும் தன் நுண் அறிவால் கருவிகளை உற்பத்தி செய்து ஒரு நாளை எந்த அளவு நீட்டிக்க முடியுமோ அந்தளவு நீட்டித்தான்.

ஆனாலும் சற்று ஆழமாக யோசித்தால் இத்தனை வளர்ச்சி அடைந்த இந்த கால வாழ்க்கை ஏதோ மின்சார ரயில் போல வேகமாகவும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கை நிதானமாக அனுபவிக்கும்மாட்டு வண்டி பயணமாகவும் இருந்து இருக்கிறது.

ஒரு நாள் முழுவதையும் செலவிட்டு நாடகம் பார்த்தார்கள்,
வாரக் கணக்காக விழாக்கள் கொண்டாடினார்கள்,
நடந்தே காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் போய் வந்தார்கள்.
இருந்தும் நிம்மதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அதிக நிம்மதியை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பில் நாம் படைத்த கருவிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இப்போது நம் நேரத்தை குறுக்கி விட்டதோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில் முன்பு ஒரு மணி நேரத்தில் துவைக்க முடிந்த துணிகளை இப்போது ஐந்து நிமிடத்தில் மெஷின் முடிக்கின்றது.

அப்படி என்றால் நாம் சேமிக்கும் அந்த நேரமெல்லாம் என்ன தான் ஆகிறது?

மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை ஓரளவிற்கு புள்ளி விவரங்கள் மீது ஆர்வம இருக்கும் எவருக்கும் தெரிந்திருக்கும்.

நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேமிக்கும் இந்த நேரமெல்லாம் கடைசியில் நம் வாழ்நாளில் இருந்து கழிக்கப் படுகிறதோ? என்ற எண்ணம் இப்போது உங்களுக்கும் வரலாம்.

சரி அப்படி என்ன தான் நான் சொல்ல வருகிறேன் என்று எவரேனும் அறிய விரும்பினால் அது "ஒன்றும் இல்லை" தான்.

இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை,
குழந்தைகள் பட்டாம்பூச்சி பிடிப்பதில்லை,
பாட்டி  கதைகள் கேட்பதில்லை,
மாட்டு  வண்டி சவாரி போவதில்லை,
கூட்டாஞ் சோறு ஆக்குவதில்லை,
இன்னும்  எவ்வளவோ மகிழ்விக்கும் தருணங்களை அவர்கள் காண்பதே இல்லை என்று நினைக்கும் அதே நேரத்தில்,

அக்காலத்தில்  கம்ப்யூட்டர் கண்டதில்லை,
இணையம் பார்த்ததில்லை,
செஸ் ஆடியதில்லை,
டியூசன் போனதில்லை
என்று நீட்டினால் அது வெறும் சப்பைக்கட்டாக மட்டுமே முடியும்.

இளம் வயதிலேயே கண் பார்வை மங்கி, வாயில் நுழையாத வியாதிகளை வாங்கிக் கொண்டு விஞ்ஞானம் தந்த விபரீதங்களை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கம்ப்யூட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணர்ந்து கொண்டாலே பாதிக்கும் மேல் நேரமிருக்கும் நம் இளம் பிராயத்தினருக்கு.

சனி, 10 டிசம்பர், 2011

கேரள - தமிழக அணைப் பிரச்னை,
ஊழலை ஒழிப்பதாக ஊளையிடும் கூட்டம்,
மருத்துவமனையில் தீ,
வெற்று வழக்கான அலைக்கற்றை பிரச்னை,
இன்னும் என்ன தான் நடந்தாலும்

ஏதோ பத்தாம் வகுப்பில் இருப்பவன் படிப்பதைப் பார்த்து எட்டாம் வகுப்பு பையன் சம்மந்தமே இல்லாததது போல விலகுவதை போல,
ஒரு உச்... கொட்டி விட்டு அடுத்த கணத்தை நோக்கி அவசரமாய் அடி எடுத்து வைக்கிறோம்.

இன்றைய வாழ்நிலையில் எல்லாமே சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்ற மனநிலை நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே வந்து விட்டது. விளைவுகள் புரியாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி செய்து இப்போது நாட்டில் பலரும் தவித்து வருவதும் அதை மையமாக கொண்டு பலரும் பணம் பார்ப்பதையும் பிறகொரு பதிவில் பார்ப்போம்.

நாட்டில் உள்ள எந்த பிரச்னையையும் தன்னோடு தொடர்பு படுத்திப் பார்க்க எவருக்கும் மனம் வருவது இல்லை.

தண்ணீர் பிரச்னை என்றால் விவசாயிகள் கவலைப்பட வேண்டும்.
ஊழல் பிரச்னை என்றால் அரசாங்கம கவலைப்பட வேண்டும்,
பொதுப் பிரச்னை என்றால் அதிகாரிகளும் அது தொடர்பானோரும் கவலைப்பட வேண்டும்,

என்று தன் முதுகை தீண்டும் வரை தீயை வளர விட்டு பின்பு அய்யோ சுடுகிறதே என்றால் ஆறிவிடப் போவதும் இல்லை.

இரண்டு கேள்விகளுடன் இப்பதிவை முடிக்கிறேன்.

1.219 ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் யார்?
2. கொல்கத்தா தீ விபத்தில் பலரையும் காப்பாற்றிய மூவர் யார்?


புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு