தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பண்டைத் தமிழரின் வாக்கு.
அது இனி எந்தளவுக்கு தமிழரின் வாழ்வில் ஒத்துப் போகப் போகிறது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
தை மாதத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ஏன் அதை கொண்டாட வேண்டும் என்று இயற்கையாகவே சிறுவர்கள் எதுவரையில் அறிந்து இருக்கிறார்களோ அது வரையில் தான் வளமும் செழிப்பும்.
என்று பொங்கலை பிரஷர் குக்கரில் வைக்க ஆரம்பித்தோமே அன்றே அதன் சிறப்பு போயிற்று.
ஆனால் பெரும்பாலும் இன்றைய குழந்தைகள் புத்தகங்களில் படித்தும் தொலைகாட்சிகளில் (?) பார்த்தும் தான் இது உழவர் திருநாள் என்று அறிகின்றனர்.
மூன்று மாத கால உழைப்புக்கு பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் முதலான வாழ்வியல் விளைச்சல்களை கொண்டு புது அரிசி புது பானை என தை முதல் நாள் ஆதவனுக்கும் அடுத்த நாள் உறுதுணையாய் நின்ற அவன் நண்பன் மாட்டுக்கும் உழவன் பொங்கலைப் படைத்து தன் நன்றியை வெளிப்படுத்துவான்.
இன்றைக்கு இருக்கும் மென்பொருள் துறையினரோ அல்லது வேறு எவராயினும் எப்படி தங்கள் Project முடித்ததும் Party வைத்து கொண்டாடுகிறார்களோ அதே மாதிரி தான் உழவர்களும் தங்களின் அறுவடையின் நன்னிறைவின் பின்பு விழாவாக இந்த பொங்கலை கொண்டாடுகின்றனர்.
இந்த பொங்கல் தமிழர்களுக்கு அவ்வளவு இனிமையான பொங்கலாக இல்லாமல் போவதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்.
தானே புயல்,
கூடங்குளம் அணுஉலை,
பெரியாறு அணை
என்று எதுவுமே தமிழர்க்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இல்லை தான்.
ஆனால் நடந்ததை மாற்ற நம்மால் முடியாது என்பதை நினைவில் நிறுத்தி,
பொறுமையாக பிரச்னைகளை அணுகி அதன் முடிச்சுகளை அவிழ்த்து இந்த தை முதல் தமிழரின் வாழ்வு வளம் பெற வாழ்த்துவதை தவிர
வேறு என் செய்வேன்?
இவண்
மனோவி

//ஆனால் நடந்ததை மாற்ற நம்மால் முடியாது என்பதை நினைவில் நிறுத்தி,
பதிலளிநீக்குபொறுமையாக பிரச்னைகளை அணுகி அதன் முடிச்சுகளை அவிழ்த்து இந்த தை முதல் தமிழரின் வாழ்வு வளம் பெற இறைவனை பிராத்திப்போம்
அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.