சனி, 3 மார்ச், 2012

பணியில் அவன்...!

பாவம் அவன்
பணியில் சேர்ந்த பின்
பல நாட்களாய்
பகலவனை
பார்த்த தில்லை

பாவம்  அவன்
போலியான புன்னகை
பூசிக்  கொண்டான் முகத்தில் எப்பொழுதும்

பாவம் அவன்
பொய்கள் கோர்வையாகும் பேச்சு
பொழுது  சாயும் வரை
அவன் அவனாய் இல்லை...!0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக