இணையம் மூலம் உலகமே சுருங்கி விட்டாலும், பெரும்பாலான இணையப் பயன்பாட்டாளர்களின் நேரம் இந்த இரண்டு நிறுவனங்களின் தளங்களுக்குள் முடிவது மிக சாதரணமான ஒன்று தான்.
பொதுவாகவே நம்மில் பலரும் இணைய உலவியை (Browser) திறந்ததும் முதலில் GMail ஐயும் பின்னர் Facebook ஐயும் திறந்து விட்டு தான் மற்ற தளங்களை பற்றி யோசிப்போம். பல நேரங்களில் இந்த இரண்டே தளங்களின் ஊடே மொத்த நேரமும் முடிந்தும் விடும்.
கூகிள் ஃபேஸ்புக்கை தோற்கடித்து விட்டது என்ற செய்தியை படித்த நான் எதில் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த இணையப் பக்கத்தை திறந்தால், கொஞ்சம் வயிற்று எரிச்சலான செய்தியாகவே அது இருந்தது.
பணியாளர்களை திருப்திபடுத்துவதில் எந்த நிறுவனம் முதன்மை வகிக்கிறது என்ற ஆய்வில் தான் கூகிள் ஃபேஸ்புக்கை தோற்கடித்து முதலிடம் பிடித்து இருக்கிறது.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இடத்தை ஃபேஸ்புக் தக்க வைத்து இருந்து இருக்கிறது. இம்முறையும் வெறும் இரண்டு சதவிகிதத்தில் தான் தோல்வி அடைந்து இருக்கிறது.
GlassDoor எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தங்களின் முதன்மை நிர்வாகி (CEO) செயல்பாட்டில் லாரி பேஜ் 94 சதவீதத்துடன் மார்க் ஜூக்கர்பெர்கை (92) முந்தினாலும், சம்பளம் பற்றி பணியாளர்களின் கருத்தில் ஏறத்தாழ இரண்டு நிறுவனங்களும் ஒரே நிலையிலேயே உள்ளன.
வேறெந்த வேலையைப் போலவும் இங்கேயும் அலுவலக அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அது கூகிளில் சற்று அதிகமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மன அழுத்தம் மற்றும் அதிக நேர வேலை ஆகியவை ஃபேஸ்புக்கில் அதிகமாம்.
இன்னும் பல கூறுகளின்அடிப்படையில் நூலிழையில் இவ்வாண்டு ஃபேஸ்புக்கை தோற்கடித்தது கூகுள்.
நமக்கு இந்த மாதிரி நிறுவனத்தில் வேலை கிடைக்க மாட்டேங்கிறது. என் செய்வேன் நான்?