வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மீண்டும் கங்குலி?

| | Leave a Comment
இந்தியா மற்றும் கொல்கத்தா அணிகளின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கு எந்த அணியின் சார்பிலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இதனால் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளை காண மிக குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வருகின்றனர்.

இதற்கிடையில் கங்குலி கொச்சி அணிக்கு விளையாட போவதாக தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கொச்சி அணி இந்த ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக விளையாடும் அணி. அவ்வணி ஏற்கனவே அந்த அளவிற்கு மோசமாக ஆரம்பிக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆரம்பித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று மும்பை இண்டியன்ஸ் உடனான முக்கியமான போட்டியில் விளையாடுகிறது.

அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அந்த இடம் கங்குலியால் நிரப்பப்படலாம் என மீடியாக்களில் கூவிக் கொண்டு இருக்கின்றனர். முதலில் இது குறித்து மௌனம் காத்த கொச்சி அணி நிர்வாகம் இப்போது அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நாங்களும் கங்குலியை அணுகவில்லை,கங்குலியும் எங்களை அணுகவில்லை என தெரிவித்து இருக்கிறது.

கங்குலி விளையாடினால் நன்றாக தான் இருக்கும், ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் இந்தியாவின் மும்மூர்த்திகளாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்களுள் இருவர் (சச்சின்,டிராவிட்) சிறப்பாக விளையாடி வருகின்றனர். லக்ஸ்மனும் ஓரளவு நன்றாகத் தான் விளையாடுகிறார் பழைய,வயதானவர்கள் என்று ஒதுக்கும் அதே நேரத்தில் திறமை,அனுபவம் சேர்ந்தால் அது எல்லாம் காணமல் போய் விடும் என்பது நிதர்சனம் தானே?

எது எப்படி ஆயினும் இன்னும்  சில நாட்களில் அவர் வருவாரா, இல்லையா என்பது தெரிந்து விடும்.

போதும்பா அவர் விளையாடியதெல்லாம் புதுசா யாராவது விளையாடலாமே என்கிறீர்களா?

அது சரி இதற்கெல்லாம் நான் என் செய்வேன்?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக