மற்ற எல்லா ஐபிஎல் அணிகளுக்கும் மும்பை அணிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த அணியின் உள்ளூர் ரசிகர்களும் மும்பை அணியிடம் தங்கள் அணி தோற்பதை வெறுப்பதினும் கொஞ்சம் அதிகமாக விரும்புவார்கள். சச்சின் விளையாடும் அணி ஆயிற்றே, சச்சின் விளையாடுவதை பார்ப்பதற்காகவே போட்டிக்கு வருபவர்கள் உண்டு.
அந்த வகையில் பார்த்தால் பெங்களூர் ரசிகர்கள் இன்று திருப்தி பட்டிருப்பார்கள்.மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. சச்சின்,ராயுடு அரை சதமடித்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சச்சின் முதலில் பந்து வீச தீர்மானித்து பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் ஓவரிலியே மலிங்கா விக்கெட வீழ்த்த அந்த அணி தனது முதல் பாதியில் மிக மந்தமாக விளையாடியது. பின் பாதியில் சுதாரித்து ஆடினாலும் அந்த அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முனாப் படேல் தனது முதல் இரண்டு ஓவர்களில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். பொல்லார்டு,மலிங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
தில்ஷான் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். AB டி வில்லியர்ஸ் 38 ரன்கள் எடுத்தார். அவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் தான் பெங்களூர் அணியை ஒரு நல்ல ஸ்கோர் எடுக்கும் அளவிற்காவது இட்டு சென்றது.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தொடங்கியது. பெங்களூர் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜாகிர் கான் ஓவரில் மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்ததால் மற்ற பந்து வீச்சாளர்கள் ஓவரும் பயனற்று போனது. டேவி ஜேகப்ஸ் இரண்டு சிக்ஸர் அடித்து ரன்னை உயர்த்திய போதும் நானேஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். நானேஸ் ஏனென்று தெரியவில்லை ஒரு ஓவர் மட்டுமே வீசினர். அதுவும் விக்கெட் மெய்டன்.
பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின்-ராயுடு இணை கடைசி வரை பிரியாமல் நின்று மும்பையை வெற்றி பெற செய்தது. சச்சினின் அந்த காண காண திகட்டாத ஸ்ட்ரைட் டிரைவ், வெட்டோரி பந்தையும் ( இரண்டாவது ஓவர் ) ,வெற்றி பந்தையும் ( Winning Shot ) சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி திருப்பியது என சச்சின் ஒரு புறம் கிளாசிக் ஆட்டம் ஆட , ராயுடு மறு புறம் அதிரடியாக ஆடினார். முடிவில் சச்சின் 55 ரன்களும் ராயுடு 63 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
கடந்த போட்டியிலும் சச்சின் ஆட்டம் இழக்கவில்லை என்பது நினைவில் இருக்கலாம்.
அந்த வகையில் பார்த்தால் பெங்களூர் ரசிகர்கள் இன்று திருப்தி பட்டிருப்பார்கள்.மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. சச்சின்,ராயுடு அரை சதமடித்தனர்.
தில்ஷான் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். AB டி வில்லியர்ஸ் 38 ரன்கள் எடுத்தார். அவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் தான் பெங்களூர் அணியை ஒரு நல்ல ஸ்கோர் எடுக்கும் அளவிற்காவது இட்டு சென்றது.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தொடங்கியது. பெங்களூர் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜாகிர் கான் ஓவரில் மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்ததால் மற்ற பந்து வீச்சாளர்கள் ஓவரும் பயனற்று போனது. டேவி ஜேகப்ஸ் இரண்டு சிக்ஸர் அடித்து ரன்னை உயர்த்திய போதும் நானேஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். நானேஸ் ஏனென்று தெரியவில்லை ஒரு ஓவர் மட்டுமே வீசினர். அதுவும் விக்கெட் மெய்டன்.
பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின்-ராயுடு இணை கடைசி வரை பிரியாமல் நின்று மும்பையை வெற்றி பெற செய்தது. சச்சினின் அந்த காண காண திகட்டாத ஸ்ட்ரைட் டிரைவ், வெட்டோரி பந்தையும் ( இரண்டாவது ஓவர் ) ,வெற்றி பந்தையும் ( Winning Shot ) சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி திருப்பியது என சச்சின் ஒரு புறம் கிளாசிக் ஆட்டம் ஆட , ராயுடு மறு புறம் அதிரடியாக ஆடினார். முடிவில் சச்சின் 55 ரன்களும் ராயுடு 63 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
கடந்த போட்டியிலும் சச்சின் ஆட்டம் இழக்கவில்லை என்பது நினைவில் இருக்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக