சனி, 9 ஏப்ரல், 2011

IPL 4 : முதல் ஆட்டத்தில் சென்னை வெற்றி

| | Leave a Comment
ஐபிஎல் போட்டிகளின் நான்காவது கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த சென்னை அணியில் அனிருதா ஸ்ரீகாந்த் அதிரடியான நேர்த்தியான ஆட்டம் மூலம் 64 ரன்கள் குவித்தார் அவருக்கு பக்க பலமாக விளையாடிய தோனி மற்றும் ரைனா 29 மற்றும் 33 ரன்கள் அடித்தனர்.

சன்னை அணியில் நான்கு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதில் இரண்டு அனிருதா அடித்தது ஆகும். கொல்கத்தாவுக்கு விளையாடிய பாலாஜி விக்கெட ஏதும் எடுக்கவில்லை எனினும் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. காலிஸ் அரை சதம் விளாசினார். இதில்  7 பவுண்டரிகள் அடங்கும். மேலும் அந்த அணியில் கடைசியில் மனோஜ் இரண்டு சிக்ஸர்கள் அடித்து கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலைக்கு கொல்கத்தாவை அழைத்து வந்த பின் ரன்டிவ் பந்தில் ஸ்டும்பிங் ஆனா பின் கொல்கத்தா பரிதாபமாக இரண்டு ரன்களினால் தோல்வி அடைந்தது.

திருப்பு முனை : யூசுப் பதான் தவற விட்ட இரண்டு கேட்சுகள்
ஆட்ட நாயகன்  : அனிருதா ஸ்ரீகாந்த்
அதிக சிக்ஸர் : மனோஜ் திவாரி, அனிருதா ஸ்ரீகாந்த் (2)
அதிக ரன்கள் : அனிருதா ஸ்ரீகாந்த் (64)
அதிக விக்கெட்டுகள் : ஜாக் காலிஸ் (2)
சிறந்த கஞ்சன் : ராஜாத் பாசியா, யூசுப் பதான் (3 ஓவர்-19 ரன்கள்) *

* குறைந்தப்பட்சம் இரண்டு ஓவர்கள் பந்து வீசி இருக்க வேண்டும்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக