செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மன்மோகனுக்கு இந்திய அரசியல் மீது வெறுப்பு | PM dislikes Indian Politics

| | Leave a Comment

இந்திய நாட்டின் மிக உயரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் சேர்ந்து பதவியில் அமர்த்தப்படும் பிரதமரே தனது வாக்குரிமையை செலுத்தவில்லை எனும் போது இந்திய ஜனநாயகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் அதில் பிரதமர் வெறுப்புடன் இருப்பதையும் அறிய முடிகிறது.

இருக்காதா பின்னே?
அவரும் எத்தனை ஆண்டுகள் தான் தஞ்சாவூர் பொம்மையை போல தலை ஆட்டி கொண்டு இருப்பார். முதலை வாயில் அகப்பட்ட கதை தான் அவரது கதையும். இதில் அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகளுக்கு வேறு வித வித மாக கதைக்க வேண்டி இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை.பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். பிரதமரும், அவரது மனைவியும், அசாம் மாநிலம் திஸ்பூர் சட்டசபை தொகுதி வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளாக அங்கு தான், அவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. 2006ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவியுடன் திஸ்பூருக்கு வந்து ஓட்டுப் போட்டார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில், திஸ்பூர் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. இதனால், பிரதமர் ஓட்டளிப்பதற்காக, அசாம் மாநிலத்துக்கு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது.இதையொட்டி, திஸ்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பிரதமர் நேற்று ஓட்டளிக்க வரவில்லை. தேர்தல் விதிமுறைப்படி, தபால் ஓட்டு அளிக்கும் உரிமை பிரதமருக்கு வழங்கப்படவில்லை.தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமே தபால் ஓட்டு அளிக்க முடியும்.இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டில்லியில் பிரதமருக்கு பல்வேறு பொது நிகழ்ச்சிகள் இருந்ததன் காரணமாகவே, அவர் ஓட்டளிக்க வரவில்லை' என்றன.

ஓட்டு போடுவதை விட பிரதமருக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்றால், அவர் நம் மக்களுக்கு நிச்சயம் ஒரு தவறான முன் உதாரணம் ஆகிறார்.

சரி நமக்கென்ன, நாளைக்கு போய் நம் கடமையை செவ்வனே நிறைவேற்றி விட்டால் போச்சு...!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக