என்னங்க நாளைக்கு உங்க ஜனநாயக கடமையை செலுத்துவதற்கு தயராயிட்டீங்களா?
ஆனால் அம்பேத்கரும் அவரோடு இருந்தவர்களும் பிற்காலத்தில் நிகழப் போவதை நன்கு அறிந்து இருப்பார்கள் போலும். ஒருவேளை வேட்பாளர்கள் அனைவரையும் வாக்காளருக்கு பிடிக்காமல் போனால் அவன் என்ன செய்வான் என்று நினைத்ததாலோ என்னவோ அது வெறும் உரிமையுடன் நின்று விட்டது.
வாழ்த்துகள், ஒரு இந்திய குடிமகனுக்கு இருக்கும் முதல் உரிமையான வாக்குரிமையை பயன் படுத்த போவதற்கு. நான் பல சமயங்களில் ஏன் வாக்கு செலுத்துவதை இந்திய குடிமகனின் கடமைகளில் ஒன்றாக அரசியல் சட்டம் சேர்க்கவில்லை என்று..?

ஆனால் இந்த எண்ணம் சீக்கிரத்திலேயே மாறி விட்டது. யாரையும் பிடிக்காவிட்டால் என்ன, வாக்கு சாவடிக்கு வாருங்கள் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றுசொல்லி விட்டு விட்டு செல்லுங்கள் எனுமாறு சட்ட திருத்தம் 1961ல் கொண்டு வரப்பட்டது. அதற்கு பெயர் தான் 49'ஓ.
மின்னணு எந்திரம் வருவதற்கு முன்னர் இந்த 49'ஓ பற்றி பெரிதாக அறியப்பட்டு இருக்கவில்லை. ஏனென்றால் அப்போது இருந்த வாக்குச்சீட்டு முறையில் நமக்கு எந்த ஒரு வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் நமது ஓட்டை நாமே செல்லாத ஓட்டாக மாற்றி விடலாம்.
ஒரே சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு போடுவது அல்லது யாருக்கும் வாக்கு போடாமல் வெறும் சீட்டை மடித்து போடுவது என பல வழிகள் இருந்ததால் இந்த சிறப்பு விதி அப்போதெல்லாம் பெரிதாய் அறிந்திருக்கப் படவில்லை. ஆனால் இப்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு முறையில் ஒருவர் ஒரு முறை அழுத்தினால் வாக்கு பதிவு ஆகி விடும் பிறகு செல்லாத ஓட்டுக்கு வழி இல்லாமல் போய் விடுகிறது. ஓட்டு போடாமலும் இருக்க முடியாது.
அதனால், நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படுத்த ஒரே வழி 49'ஓ தான்.
எப்படி?
1. வாக்கு செலுத்த கையில் மையிட்டதும்,
2. வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்களிக்க விருப்பமின்மையை கூறவும்,
3. அதற்கென இருக்கும் ஃபார்மில் (17A) கையொப்பமிடவும்.
4. உங்களின் நிராகரிப்பு விருப்பம் பதிவு செய்யப்பட்டு விட்டது.
எதற்கு?
1. யாரையும் பிடிக்கவில்லை என்று வாக்கை செலுத்தாமல் இருந்தால், உங்களுக்கு பதிலாக வேறு யாரேனும் உங்கள் உரிமையை அவர்கள் கடமையாய் நினைந்து நிறைவேற்றிடுவர்.
2. வாக்கு செலுத்துவதால் என்ன ஆகி விட போகிறது என்று எண்ணுவதை விடுத்து, யாரையுமே எனக்கு பிடிக்கவில்லை என்று பதியுங்கள். அப்போதாவது நம்ம அரசியல்வாதிகள் பெயருக்காவது நல்லவர்களாய் நடிக்கட்டும்.
2. வாக்கு செலுத்துவதால் என்ன ஆகி விட போகிறது என்று எண்ணுவதை விடுத்து, யாரையுமே எனக்கு பிடிக்கவில்லை என்று பதியுங்கள். அப்போதாவது நம்ம அரசியல்வாதிகள் பெயருக்காவது நல்லவர்களாய் நடிக்கட்டும்.
ஓட்டைகள்
1. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி வாக்குரிமை ரகசியமானது, ஆனால் 49'ஓ வெளிப்படையானது.
2. கட்சிக்காரர்களின் மிரட்டலுக்கு வாக்காளர் பயப்பட வேண்டி இருக்கிறது.
3. மின்னணு எந்திரத்தில் இன்னுமும் தனி பொத்தான் வைக்காமல் இருப்பது.
ஏன்?
முன்பெல்லாம் வெவ்வேறு விதமான் சின்னங்களுடன் வாக்கு கேட்பார்கள்.
இப்போதும் சின்னங்கள் மூலமாகத்தான் கேட்கிறார்கள்.
ஒன்று மிக்சியும் கிரைண்டருமாய் இருக்கிறது,
அல்லது கத்தியும் அறிவாளுமாய் இருக்கிறது. ( நான் CPI ஐ சொல்லவில்லை )
நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள்?
கிரண்டருக்கும் மிக்சிக்குமா? அல்லது உங்கள் மனசு சொல்லும் முடிவுக்கா?
சிந்தித்து வாக்களியுங்கள்..!
மாற்று வழி :
என்ன தான் 49'ஓ இருந்தாலும் அது ரகசியமானது இல்லை என்பதால் கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்யும், அப்போது என்ன செய்வது?
பேசமால் யாரென்றே தெரியாத வெற்றி பெற வாய்ப்பு இல்லாத ஒரு சுயேட்சைக்கு வாக்களித்து விடலாம்.
முதல் தடவை இப்போது தான் வாக்களிக்க போகிறேன், அதனால் எனக்கு இதுவரை தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவினை இட்டுள்ளேன்.
தவறுகளை சுட்டி காட்டவும்.
பிடித்திருந்தால் எனக்கும் ஓட்டு போடுங்கள்.. இன்ட்லியில்...
Summary :
49'O is a great option for those who are not liking any of the candidates to vote. It is a option like none of the above.
If you don't want to vote for Grinder or Mixi then vote for 49'O.
Summary :
49'O is a great option for those who are not liking any of the candidates to vote. It is a option like none of the above.
If you don't want to vote for Grinder or Mixi then vote for 49'O.
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
பதிலளிநீக்குhttp://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
நன்றாகத்தான் எழுதி உள்ளீர்கள். மற்ற பீத்த பதிவர்களைப்போல் 49-Oவில் பதிந்தால் வெற்றி பெற்ற வேட்பாளரை தோல்வி அடைய செய்யலாம் என 'இணைய புரளி' எல்லாம் உங்களின் இந்த இடுகையில் இல்லை, உண்மையில் 49-O வில் பதிவது ஓட்டே கிடையாது. அதில் பதிவது ஆப்பில் தானே சென்று அமர்வது போலத்தான். நான் இதே விளக்கமாக 2009 மே மாதம் 12ம் தேதியே இங்கே http://www.gnuismail.com/2009/05/49-o.html எழுதிவிட்டேன். அதில் உள்ள யூடியுப் அசைபடத்தில் கூவுவது போல நாம் கூவினால் 49-O க்கு பதிய இயலும். அந்த நிமிடமே பூத் ஏஜெண்டுகளினால் நீங்கள் கட்டம் கட்டப்பட்டுவிடுவீர்கள். பிறகு சங்குதான்.
பதிலளிநீக்குஎனது இடுகையை மீண்டும் பதிந்த மூத்த பதிவரான டோண்டு ராகவனின் இந்த இடுகையையும் http://dondu.blogspot.com/2009/05/49-o.html பார்க்கவும். மேலும் விவரங்கள் அறியலாம். நன்றி.
with care & love,
Muhammad Ismail .H, PHD.,