சனி, 16 ஏப்ரல், 2011

ரஜினியும் மனிதர் தானே?

| | 2 comments
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள், எங்கிருந்து வரும் தைரியம் இவ்வளவும்?
ஒருவேளை அவர் ஆதரவு யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமா?,
ஆட்சியை பிடிக்க நினைக்கும் கட்சியின் தூண்டுதலா?
அல்லது ஆட்சியில் தொடர நினைக்கும் கட்சியினரின் அடாவடித்தனமா?
எதுவாக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிடும் உரிமையை மீடியாவுக்கு கொடுப்பது யார்?

ரஜினிகாந்த் வாக்குப் பதிவு செய்வதை வேண்டுமென்றே பதிவு செய்து விட்டார்கள். ஏற்கனவே பிரபலங்களின் கலவு தொடர்பான விஷயங்களில் ஏகத்திற்கும் மூக்கை நுழைக்கும் மீடியா, விட்டால் அவர்கள் கழிவு போவதையும் படம் பிடித்து எக்ஸ்க்ளுசிவ் என்று போட்டாலும் போட்டு விடுவார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா,மட்டாரா என்று அவருக்கே தெரியாத நிலையில் அவரின் ரசிகர்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஒவ்வொரு மேடையிலும் தன் அருகே அழைத்து அமர வைப்பதும், ரஜினி புகழ தானும் தமிழகமும் கேட்பதாய் எத்தனை விழாக்களில் கலைஞர் அரங்கேற்றம் செய்துள்ளார்.

ஆனாலும் ரஜினிகாந்த் என்ற தனி மனிதர் அவரின் வாக்கினை யாருக்கு செலுத்த வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் இருப்பர என்ன? அவரை உங்களின் வசீகரிக்கும் பேச்சினால் மயக்கி விட்டதாக தப்புக்கணக்கு போட்டு விட்டு, பின்னர் தனக்கு ஓட்டு போடவில்லை என்று தெரிந்ததும் மாலையே அழைத்து  திரைபடம் போட்டுக் காட்டி, சிலரை விட்டு பேசியும் "காட்டி"யுள்ளராம் தலைவர்.

தான் வாக்களித்ததை படம் பிடித்ததும், நிலைமையை புரிந்து வேகமாக அங்கிருந்து கிளம்பினார் ரஜினி,மீடியாக்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு. பின்னர் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் லஞ்சம்,ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று வேறு சொல்லி இருப்பது ஆட்சி பீடத்தில் இருப்பவர்களை கோபத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.

சரி,விடுங்கள் அவர் யாருக்கு ஓட்டு போட்டால் என்ன? நம் தலைவிதி மாறி விடப் போகிறதா என்ன யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் விரும்பியதாக சொன்ன அதெல்லாம் நடக்க போவதில்லை.

பிடித்திருந்தால் பதிவு பிரபலமடைய  வாக்கு போடுங்கள்..

2 கருத்துகள்:

  1. bandhu16 ஏப்ரல், 2011 8:59 பிற்பகல்

    ஓட்டு போடுவதை படம் பிடித்தவர்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ள வேண்டும். அது வரை இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்!

    பதிலளிநீக்கு
  2. bandhu3 மே, 2011 7:23 முற்பகல்

    ஓட்டு போடுவதை படம் பிடித்தவர்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ள வேண்டும். அது வரை இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்!

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...