செவ்வாய், 19 ஏப்ரல், 2011

டெக்கான் ஒளியில் டெல்லி மழுங்கியது..!

| | Leave a Comment
 சங்கக்காரா மற்றும் சொஹல் இடையேயான வலுவான கூட்டாளி ஆட்டம் (Partnership?) காரணமாக டெக்கான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலியே சொஹல் பவுண்டரி அடிக்க, அதே ஓவரில் தவான் மேலும் இரண்டு பவுண்டரி அடித்து மிகச் சிறப்பானதொரு தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் டெல்லி அடுத்த ஓவரிலியே பதான் பந்தில் தவானை வெளியேற்றியது.

இந்த விக்கெட் அப்போதைக்கு டெல்லிக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த சங்ககரா சொஹல் இணை 92 ரன்கள் அடித்து டெக்கான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு விட்டனர்.

சொஹல் டெக்ஸ்ட்புக் ஷாட்களை விளையாடிய அதே நேரத்தில் சில வித்தியாசமான வீச்சுகளிலும் ரன் குவித்தார். சங்ககரா தனக்கு உரிய நேர்த்தியான ஆட்டம் மூலம் தொடர்ந்து ரன் குவித்தார். அதுவும் ஸ்பின்னர் பந்து வீசும் போதெல்லாம் அவர் ஏதோ தனக்காகவே அவர் பந்து வீச வருவதாக நினைத்து பவுண்டரிகள் அடித்தது, அவர் இலங்கைக்காரர் என்பதையும் மறந்து ரசிக்க செய்தது.

200 ரன்களை கூட எட்டி விடலாம் என்ற நிலையில் விளையாடிய டெக்கான் அணியில் சங்ககரா 49 ரன்களுக்கும், சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்து  சொஹல்  62 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க கொஞ்ச நேரம் டெல்லி நன்னிலைமைக்கு வந்தது. ஆனாலும் ஒயிட் கடைசியில் 31 ரன்கள் சேர்க்க டெக்கான் அணி 168 ரன்களை எடுத்தது.

டெல்லியில் திண்டா,பதான்,ஹோப்ஸ்,நதீம் ஆளுக்கொரு விக்கெட எடுத்தனர். அதே போல் டெக்கான் அணியிலும்  சொஹல்,சங்ககரா,ஒயிட் ஒரு சிக்ஸர் அடித்தனர்.

பின்னர் கொஞ்சமே கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நான்கு ஓவர்களுக்கு 28 ரன்கள் என்ற நல்ல விகிதத்தில்  போன டெல்லி அணிக்கு கேப்டன் சேவாக் ரூபத்தில் முதல் விக்கெட் போனது. அவர் மூன்று பவுண்டரிகள் அடித்தார்.

வார்னர் தான் எப்போதும் நம்பகமான பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். அவர் களத்தில் இருக்கும் வரை ஆட்டம் டெல்லி கையை விட்டு போகவில்லை.

நாமன் ஓஜா,ஃபின்ச் அடுத்து வந்து உடனே பெவிலியனுக்கு நடையை கட்ட டெல்லி, 38 ரன்களுக்கெல்லாம் மூன்று பேரை இழந்து தவித்தது. ஆனால் அதன் பின்னர் வேணுகோபால் ராவ் சற்று நேரம் வார்னருக்கு ஜோடி போட்டு விளையடியானர். அவர் மூன்று பவுண்டரி அடித்தார். சிக்ஸர் தான் அடிக்கிறார் என்று நினைத்தேன் பார்த்தால் நடுவர் கையை தூக்கி காட்ட அப்போது தான் தெரிந்தது அவர் அவுட் என்று.(டிவியில் சிக்ஸ் மாதிரி கேமராவை காட்டினார்கள்).

வார்னரும் தன்னால் முடிந்தளவிற்கு போராடினார். ஆனால் அவராலும் ஆட்டத்தை திருப்ப முடியாமல் போனது. ஐந்து பவுண்டரி,ஒரு சிக்ஸர் சேர்ந்து 51 ரன் எடுத்தார்.

பதான் மீண்டும் சொதப்ப, யாகர் இரண்டு சிக்ஸர் அடித்து கொஞ்சம் கண்ணுக்கு விருந்து கொடுத்தாலும், யாருமே நீண்ட நேரம் நிலைக்காமல் எல்லோரும் எல்லைக் கோட்டிலேயே பந்தை கேட்சாக அனுப்பி அவுட் ஆகினர்.

மார்கலும் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் தேவையான ரன்னை என்ன செய்தாலும் எடுக்க முடியாத நிலைக்கு டெல்லி எப்போதே வது விட்டிருந்தது.

முடிவில் டெல்லி அணி 158 ரன்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டது.


பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக