ஃபேஸ்புக்கை தோற்கடித்தது கூகுள்

பணியாளர்களை திருப்திபடுத்துவதில் எந்த நிறுவனம் முதன்மை வகிக்கிறது என்ற ஆய்வில் தான் கூகிள் ஃபேஸ்புக்கை தோற்கடித்து முதலிடம் பிடித்து இருக்கிறது.

இலவச தமிழ் மின்னூல்கள்

எப்போதுமே அச்சிட்ட புத்தகங்களில் படிக்கிற அந்த அனுபவம் மின் நூல்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நமக்கு தேவையான பல நூல்கள் தேடினாலும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அதன் விலை நமக்கு ஒத்துப் போவதில்லை.

சுஜாதாவின் மின்னூல்கள்

தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அது நிச்சயமாய் அவரது ஆழ்ந்த அறிவியல் அறிவால் என்பது அவரின் எழுத்துக்களை மேய்ந்த எவருக்கும் தெரியும்.

நிழலில்லா நிஜங்கள்

என் முதல் சிறுகதையை வெகுசிலரே படித்து அதிலும் மிக சிலரே "பரவாயில்லை" என்று சொல்லி இருந்தனர். இருந்தாலும் தொடர்ந்து எழுதினால் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுத தெரிந்து கொள்ள மாட்டோமா என்ற நப்பாசையில் தான் இந்த சிறுகதை..

இணையத்தை பகிர எளிய வழி

ஒரே இணைய இணைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பயன்படுத்துவதற்கு பல வழிகள் இருப்பினும். WiFi மூலம் நமது இணைப்பை பகிர்வது எல்லாவற்றிலும் மிக எளிது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

டெக்கான் ஒளியில் டெல்லி மழுங்கியது..!

 சங்கக்காரா மற்றும் சொஹல் இடையேயான வலுவான கூட்டாளி ஆட்டம் (Partnership?) காரணமாக டெக்கான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலியே சொஹல் பவுண்டரி அடிக்க, அதே ஓவரில் தவான் மேலும் இரண்டு பவுண்டரி அடித்து மிகச் சிறப்பானதொரு தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் டெல்லி அடுத்த ஓவரிலியே பதான் பந்தில் தவானை வெளியேற்றியது.

இந்த விக்கெட் அப்போதைக்கு டெல்லிக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த சங்ககரா சொஹல் இணை 92 ரன்கள் அடித்து டெக்கான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு விட்டனர்.

சொஹல் டெக்ஸ்ட்புக் ஷாட்களை விளையாடிய அதே நேரத்தில் சில வித்தியாசமான வீச்சுகளிலும் ரன் குவித்தார். சங்ககரா தனக்கு உரிய நேர்த்தியான ஆட்டம் மூலம் தொடர்ந்து ரன் குவித்தார். அதுவும் ஸ்பின்னர் பந்து வீசும் போதெல்லாம் அவர் ஏதோ தனக்காகவே அவர் பந்து வீச வருவதாக நினைத்து பவுண்டரிகள் அடித்தது, அவர் இலங்கைக்காரர் என்பதையும் மறந்து ரசிக்க செய்தது.

200 ரன்களை கூட எட்டி விடலாம் என்ற நிலையில் விளையாடிய டெக்கான் அணியில் சங்ககரா 49 ரன்களுக்கும், சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்து  சொஹல்  62 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க கொஞ்ச நேரம் டெல்லி நன்னிலைமைக்கு வந்தது. ஆனாலும் ஒயிட் கடைசியில் 31 ரன்கள் சேர்க்க டெக்கான் அணி 168 ரன்களை எடுத்தது.

டெல்லியில் திண்டா,பதான்,ஹோப்ஸ்,நதீம் ஆளுக்கொரு விக்கெட எடுத்தனர். அதே போல் டெக்கான் அணியிலும்  சொஹல்,சங்ககரா,ஒயிட் ஒரு சிக்ஸர் அடித்தனர்.

பின்னர் கொஞ்சமே கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நான்கு ஓவர்களுக்கு 28 ரன்கள் என்ற நல்ல விகிதத்தில்  போன டெல்லி அணிக்கு கேப்டன் சேவாக் ரூபத்தில் முதல் விக்கெட் போனது. அவர் மூன்று பவுண்டரிகள் அடித்தார்.

வார்னர் தான் எப்போதும் நம்பகமான பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். அவர் களத்தில் இருக்கும் வரை ஆட்டம் டெல்லி கையை விட்டு போகவில்லை.

நாமன் ஓஜா,ஃபின்ச் அடுத்து வந்து உடனே பெவிலியனுக்கு நடையை கட்ட டெல்லி, 38 ரன்களுக்கெல்லாம் மூன்று பேரை இழந்து தவித்தது. ஆனால் அதன் பின்னர் வேணுகோபால் ராவ் சற்று நேரம் வார்னருக்கு ஜோடி போட்டு விளையடியானர். அவர் மூன்று பவுண்டரி அடித்தார். சிக்ஸர் தான் அடிக்கிறார் என்று நினைத்தேன் பார்த்தால் நடுவர் கையை தூக்கி காட்ட அப்போது தான் தெரிந்தது அவர் அவுட் என்று.(டிவியில் சிக்ஸ் மாதிரி கேமராவை காட்டினார்கள்).

வார்னரும் தன்னால் முடிந்தளவிற்கு போராடினார். ஆனால் அவராலும் ஆட்டத்தை திருப்ப முடியாமல் போனது. ஐந்து பவுண்டரி,ஒரு சிக்ஸர் சேர்ந்து 51 ரன் எடுத்தார்.

பதான் மீண்டும் சொதப்ப, யாகர் இரண்டு சிக்ஸர் அடித்து கொஞ்சம் கண்ணுக்கு விருந்து கொடுத்தாலும், யாருமே நீண்ட நேரம் நிலைக்காமல் எல்லோரும் எல்லைக் கோட்டிலேயே பந்தை கேட்சாக அனுப்பி அவுட் ஆகினர்.

மார்கலும் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் தேவையான ரன்னை என்ன செய்தாலும் எடுக்க முடியாத நிலைக்கு டெல்லி எப்போதே வது விட்டிருந்தது.

முடிவில் டெல்லி அணி 158 ரன்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டது.


பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..!

ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்க உதவும் மென்பொருள்

நாம் பல வேளைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஃபோல்டரினுள் உள்ள மற்ற ஃபோல்டர்களின் பெயர்களை மட்டும் பிரதி எடுக்க விழைவோம்.

உதாரணமாக நம்மிடம்
Music என்று ஒரு ஃபோல்டர் இருக்கிறது, அதனுள் இருக்கும் ஃபைல்களை விடுத்து A.R.Rahman,Iaiyaraja,SPB என்னும் மற்ற ஃபோல்டர்களின் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கு மீண்டும் புதிதாக ஒவ்வொரு ஃபோல்டராக உருவாக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மென்பொருளைக் கொண்டு ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்கலாம்.

இதனை நிறுவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை.(Portable Software)

தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்...
 
TreeCopy


1.இடது புறம் பிரதி எடுக்கப் பட வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும்.

2.வலது புறம் பிரதி சேர வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும்.

3.GO வை சொடுக்கி, உங்கள் ஆணையை நிறைவேற்றலாம்.


பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..! 


அடத் தலை வலியே..!

விண்வெளி வீரர்கள் தலைவலியில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் பாராசிட்டமால் போன்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகள் பலவும் விண்வெளியில் செயலற்று போவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் நோய் எதிர்ப்பு மருந்துகள் விண்வெளியில் மிக விரைவிலேயே தங்கள் வீரியத்தை இழக்கின்றன என்று நிரூபித்துள்ளனர்.

நாசாவின் ஜான்சன் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சியின் முடிவில் விண்வெளியின் குறைந்த ஈர்ப்பு திறன், அதிக கதிர்வீச்சு தான் இதற்கு காரணங்கள் என பட்டியல் போட்டுள்ளது.

நாம் வாங்கும் சாதாரண மருந்துகள் அனைத்தும் ஒரு சில மாதங்களாவது திறன் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் நாம் அம்மருந்துகளை தகுந்த சூழ்நிலைகளில் வைத்து பாதுகாத்தால் மட்டுமே அவை குறிப்பட்ட காலம் வரை செயல் புரியும்.

நேரடி சூரிய வெளிச்சம், மிக குளிர்ந்த இடம், சூடான இடம் என பல காரணிகளும் அதன் செயல் திறன் மாறுபாட்டை நிர்ணயம் செய்கின்றன.

நீண்ட நாட்களுக்கு பயணம் செய்யும் விண்வெளி வீரர்கள் திடீரென ஏற்படும் தலைவலி போன்ற துன்பங்களுக்கு தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகள் பல நேரங்களில் எந்த வித மாறுதலும் ஏற்படுத்துவது இல்லை என்று புலம்பியதன் விளைவாக, இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட நாசா அதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்லியது.

அதன் ஆய்வுக்காக ஜான்சன் விண்வெளி மையத்தில் நான்கு பெட்டிகளில் அடைக்கப்பட்ட 35 வகையான மருந்துகள்  வைக்கப்பட்டு, ஒரு பெட்டி 13 நாட்களிலும், சில அதற்கு பிறகும் கடைசி பெட்டி 28 மாதங்கள் கழித்தும் சோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவாக மருந்துகளில் குறிப்பிட்ட காலத்திற்கு வெகு சீக்கிரமே அவை காலாவதி ஆகி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மாற்று என்ன என்பது குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

பி.கு : காலாவதி ஆன மருந்தை வீணாக்கி விடாதீர்கள், இங்கே கொடுங்கள் இந்திய நாட்டில் அதை விற்று பணம் ஆக்குவது மிக எளிது.

புதிய பதிவுகள் நிரல்பலகை (New Posts Widget)

உங்கள் வலைப்பூவில் இப்போது புதிய பதிவுகளை காண்பிக்கும் நிரல் பலகையை காண்பிப்பது மிக எளிது.

இந்நிரல் பலகை தலைப்புகளை மட்டும் காட்டக் கூடியது.
40*40 அளவில் சிறிய படத்தையும் இது காட்டும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்

1.கீழ்காணும் CODE ஐ பிரதி (Copy) எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பிளாக்கர் டாஷ்போர்ட் செல்லவும். டிசைன் ஐ திறந்து அதில் நீங்கள் விரும்பும் இடத்தில் Add a gadget என்பதை சொடுக்கவும்.

மாதிரி நிரல் பலகை
3. பின்னர் அதில் HTML/Javascript ஐ தெரிந்தெடுத்தால் கிடைக்கும் பெட்டியில் நீங்கள் விரும்பும் தலைப்பை கொடுக்கவும், உ.ம் -- புதிய இடுகைகள்

4. அடுத்து உள்ள பெட்டியில் ஏற்கனவே பிரதி எடுத்த Code ஐ உள்ளீடு செய்யவும்.
செய்த பின் home_page = "https://tamiltel.in/"; என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை இடவும்.

5. தங்கள் விருப்பத்திற்கேற்ப படங்கள் இல்லாத பதிவிற்கு காட்டும் படத்தை மாற்ற
http://s1.postimage.org/1l2zfzts4/40f.jpg என்ற முகவரிக்கு பதில் உங்கள் படத்தின் முகவரியை உள்ளீடு செய்யவும்.
numposts = 10; எனுமிடத்தில் எத்தனை பதிவுகள் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கவும்.

6. பின்னர்,Save ஐ சொடுக்கிய பின் உங்கள் வலைப்பூவை பாருங்கள். புதிய நிரல் பலகை இணைக்கப்பட்டிருக்கும்.

முதலில் மும்பை,இப்போது சென்னை - பின்னி எடுக்கும் கொச்சி

சென்னை இரண்டாவது முறையாக ஐபிஎல் 2011 இல் தோல்வி அடைந்தது. கொச்சி அணி சென்ற போட்டியில் மும்பை அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது. அப்போதே ஒரு இலங்கைக்காரர் தலைமை தாங்கும் அணியிடம் சச்சின் அணி தோற்றது ஒரு மாதிரி இருந்தது. இப்போது சென்னை அணி தோற்கும் போது அதனினும் வருத்தமாகவே உள்ளது.

ஆனாலும் திறமை இருக்கிறது வெற்றி பெறுகிறார்கள் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று கொச்சி களத்தடுப்பை தெரிந்தெடுத்தது. சென்னை வீரர் ஹஸ்ஸி 8 ரன்களில் வெளியேற, முரளி விஜய்,சுரேஷ் ரெய்னாவின் சிறப்பான மட்டை வீச்சில் நன்றாகவே விளையாடி வந்தது சென்னை. ஆனால் விஜய் ஆட்டமிழக்க, பத்ரிநாத் வந்து சில நேரம் ஆட்டத்தை தொடங்குமுன் மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர்களாக மாறியது. ஆட்டமும் மாறியது.
வழக்கம் போல கஷ்டப்பட்டு(?) விளையாடிய பத்ரிநாத் 19 ரன்களில் அவுட் ஆனார்.இதற்கிடையில் எப்போதும் நம்பிக்கையுடன் விளையாடும் ரெய்னா ஐம்பது ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

கடைசி ஓவரில் மார்கல்,தோனி ஒரு சிக்ஸர் அடித்து ரன்களை ஏற்றினர். கொச்சி அணியின் களத்தடுப்பு பிரமாதமாக இருந்தது, அதிலும் மெக்கல்லம் மிக சிறப்பாகவே பீல்டு செய்தார்.
எனக்கென்னவோ ஜெயவர்த்தனே கிளம்பியதும் அணித் தலைவராக இவர் தான் இருப்பாரோ எனத் தோன்றுகிறது.

D/L முறையில் சென்னை அடித்த 131 ரன்கள் 134 ஆக மாற்றப்பட்டது.
135 எனும் துரத்தக்கூடிய இலக்கை விரட்டிய கொச்சின் அணிக்கு சென்ற போட்டியை போல இதிலும் மெக்குல்லம்(ஆட்ட நாயகன்) அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். நம்ம பொறியாளர் அஷ்வின் ஜெயவர்தனே மற்றும் மெக்கல்லம்(47) விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பார்த்திவ் படேலும் பொங்கி எழ அந்த அணியின் கேட்கும் ரன் விகிதம் குறைந்தது. கடைசியில் எல்லாவற்றையும் முடித்து கொடுக்க ஜடேஜா வந்தார், இரண்டு சிக்ஸர் மூலம் விரைவாகவே போட்டியை முடித்து விட்டார்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..! 

அழித்த கோப்புகளைத் திரும்பத் தரும் மென்பொருள்

நாம் சில வேளைகளில் தவறுதலாக சில கோப்புகளை அழித்து விட்டு திரும்பப் பெற முடியாமல் தவிப்பதுண்டு.

வெறும் டிலெட் மட்டும் அழுத்தி இருந்தால் எளிதாக மறுபயன்பாட்டு பெட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் SHIFT+DELETE அழுத்தி இருந்தால் மீண்டும் பெறுவது கடினம்.

இதற்கு பல்வேறு மென்பொருள்கள் பல காலமாக கிடைக்கப்பெறுகிறது.
அவற்றுள் மிக எளிமையான ஒன்று தான் இந்த "Undelete Plus"

மென்பொருளை தரவிறக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்

Undelete Plus

இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்துசெல்லத்தக்க (Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.

இதன் பயன்பாடு குறித்து எளிதாக விளக்க முற்பட்டுள்ளேன். பிழைகள் இருப்பினோ அல்லது ஐயம் உண்டானலோ பின்னூட்டப்படுத்தவும்.

1.மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி, உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scan ஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும்.

2.உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள்.

3.இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில்,
பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம்.


4. டாகுமென்ட் கோப்புகளை மட்டும் தேட விரும்பினால் *.docx என முதல் பேட்டியில் நிரப்பி தேடலாம். அல்லது draftcopy என்று அதன் பெயர் இருக்குமேயானால் அதனை உள்ளிட்டும் தேடலாம்.

5.மாற்றி அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திகதியை கொண்டும் தேடலாம். குறைந்தபட்ச கோப்பு அளவு நிர்ணயித்து தேடும் வசதியும் காணப் பெறுகிறது (Ex. 100KB).


குறிப்பு : நீங்கள் எந்த டிரைவின் கோப்புகளை திரும்பப் பெற வேண்டுமோ அங்கு இந்த மென்பொருளை பிரதி எடுத்து பயன்படுத்தினால் முடிவுகள் வேகமாக கிடைக்கும்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..! 

திங்கள், 18 ஏப்ரல், 2011

மீண்டும் வருவோம்,மீண்டு வருவோம்..!


தலைவனை இழந்து தவித்து
தன் உரிமைக்கு போராடியவனை
தினம் பல உயிராய் குடித்தாய்..!

வாழ வழி கேட்டவனுக்கு
வளியுங் கூட கொடாது
வலிகளை கொடுத்தாய்...!

தகுந்த நேரம் பார்த்து
துரோகிகள் கரங் கோர்த்து
விரோதியென வீழ்த்தி விட்டாய்..!

உடல் என்னும் எண்ணெய்யில்
தமிழப் பற்று என்னும் திரிக்கு
உயிர் என்னும் தீ வைத்திட்டாய்..!

அன்று அனுமன் கொளுத்திய இலங்கைக்கு
இன்று அதர்மம் கொழுக்கும் இலங்கைக்கு
என்றேனும் இல்லை வென்றேனும்
வருவோம் அந்த இலங்கைக்கு
விரைவாக..!

யுவராஜ் ஆட்டம் சேவாக்கிடம் பலிக்கவில்லை : டெல்லி வெற்றி

ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஹோப்ஸ் வருகை:
டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார்.

ரைடர் அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணிக்கு, ஜெசி ரைடர் அதிரடி துவக்கம் கொடுத்தார். வேணுகோபால் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரைடர், இர்பான் பதான், உமேஷ் யாதவ் பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் (12), அசோக் டின்டா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ரைடர், நதீம் வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் பின்ச்சிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். இவர் 27 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ் அபாரம்:
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா (4), மோனிஷ் மிஸ்ரா (7) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடி காட்டிய யுவராஜ் சிங், "சிக்சர்' மழை பொழிந்தார். டின்டா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய யுவராஜ், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. யுவராஜ் (66 ரன்கள், 32 பந்து, 5 சிக்சர்), பார்னல் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் டின்டா, நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் ஜோடி:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி, புனே அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ராகுல் சர்மா வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட வார்னர் 28 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து "ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சேவக், 23 பந்தில் 37 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து, ரைடர் பந்தில் போல்டானார்.

"ஹாட்ரிக்' நழுவல்:
அடுத்து வந்த இர்பான் பதான், நமன் ஓஜா ஜோடி நிதானமாக ஆடியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் (14), யுவராஜ் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 3வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக்கிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். நான்காவது பந்தில் நமன் ஓஜா (11), "ஸ்டெம்பிங்' செய்யப்பட்டார். ஐந்தாவது பந்தை வேணுகோபால் எளிதாக சமாளிக்க, யுவராஜ் சிங்கின் "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.

வேணுகோபால் அபாரம்:
அடுத்து வந்த மாத்யூ வாடே (3), ராகுல் சர்மாவின் சுழலில் எல்.பி.டபிள்யு., ஆனார். பின் இணைந்த வேணுகோபால், பின்ச் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது பின்ச் (25), யுவராஜ் சுழலில் சிக்கினார். அபாரமாக ஆடிய வேணுகோபால் 20 பந்தில் 3 சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் வெளியேறினார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது ஹோப்ஸ், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார். புனே சார்பில் யுவராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி : தினமலர்

பாலாஜி கலக்கல் : கொல்கத்தா வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது."வேகத்தில்' மிரட்டிய பாலாஜி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி 81 ரன்களுக்கு சுருண்டு, ஏமாற்றம் அளித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

பாலாஜி மிரட்டல்:
முதல் ஓவரே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரட் லீ அனல் பறக்க பந்துவீச... அதனை சக ஆஸ்திரேலிய வீரரான வாட்சன் எதிர்கொண்டதை காண முடிந்தது. போட்டியின் 3வது ஓவரை வீசிய பாலாஜி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் வாட்சன்(11) போல்டாக, கோல்கட்டா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்துவந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். பவுனிக்கர்(15), பசல்(3) ஏமாற்றினர். ராத்(11) ரன் அவுட்டானார். இக்பால் அப்துல்லா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த அசோக் மனேரியா ஓரளவுக்கு நம்பிக்கை தந்தார். யூசுப் பதான் பந்தில் ராஸ் டெய்லர்(6) வெளியேறினார். போட்டியின் 14வது ஓவரை வீசிய
பாலாஜி இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் ரஹானே(6) போல்டானார். 6வது பந்தில் மனேரியா(21)காலியானார். சாகிப் அல் ஹசன் சுழலில் அமித் சிங்(0), டெய்ட்(0) அடுத்தடுத்து அவுட்டாகினர். பிரட் லீ வேகத்தில் திரிவேதி(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 15.2 ஓவரில் 81 ரன்களுக்கு சுருண்டது.
கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி, இம்முறை கோல்கட்டா அணி வீரராக அசத்தினார். இவர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

சுலப வெற்றி:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே ஷான் டெய்ட் "ஷாக்' கொடுத்தார். இவரது வேகத்தில் அனுபவ காலிஸ் "டக்' அவுட்டானார். வார்ன் சுழலில் பிஸ்லா(9)சிக்கினார். இதற்கு பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தலாக ஆடினர். மிகவும் விவேகமாக பேட் செய்த இவர்கள், துடிப்பாக ரன் சேர்த்தனர். இவர்களை வெளியேற்ற ராஜஸ்தான் கேப்டன் வார்ன் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. டெய்ட் ஓவரில் ஒரு இமாலய சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார் திவாரி. மறுபக்கம் காம்பிர் ஒரு பவுண்டரி அடித்து, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். கோல்கட்டா
அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. காம்பிர்(35), திவாரி(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே டெக்கான், ராஜஸ்தான் அணிகளை வென்ற கோல்கட்டா அணி மீண்டும் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, தொடரில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
ஆட்ட நாயகன் விருதை பாலாஜி வென்றார்.

மிக குறைந்த ஸ்கோர்
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 81 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இத்தொடரில் மிக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக, மும்பை அணிக்கு எதிராக டில்லி அணி 95 ரன்கள் எடுத்தது.
* ஐ.பி.எல்., அரங்கில் மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி(81 ரன்கள்). முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் (58 ரன்கள், எதிர்-பெங்களூரு, 2009), கோல்கட்டா (67 ரன்கள், எதிர்-மும்பை, 2008) அணிகள் உள்ளன.

ஐன்ஸ்டீனும் நீங்களும் ஒன்று தான்...!

மூளையின் கட்டமைப்பை வைத்துப் பார்த்தால் எல்லா மனிதர்களுக்கும் 94% அது ஒரே மாதிரியே இருக்கிறது. ஆம்,நம் மூளைக்கும் ஐன்ஸ்டீன் மூளைக்கும் எதாவது வேறுபாடு இருக்குமேயானால் அது அந்த 6% மீதியில் தான் இருக்க வேண்டும்.


மனித மூளை அமைப்பு (பழையது)

உலகின் மிக சிக்கலான வடிவங்களுள் ஒன்று மூளை, அறிவியல் ஆய்வாளர்களின் மூளையை கசக்கிய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த உலகின் முதல் கணினிமயமாக்கப்பட்ட ஜீன் வரைபட நிறுவனம் ஆலன் ஹுமன் பிரைன் அட்லஸ் இத்தகவல்களை வெளியிட்டுதுள்ளது.

55 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நான்கு ஆண்டுகள் அயராத உழைப்பில்,ஆய்வில் விஞ்ஞானிகள் மனித மூளையின் செயல்களை விளக்க முற்பட்டுள்ளனர். மூளை செயல் இழத்தல்,மன நோய்கள் உள்ளிட்ட பல நோய்களும் இதன் மூலம் விரைவில் குணமாக்க ஆய்வு பயன்படும்.

முக்கியமான ஜெனிடிக் வரைபடங்கள் மூலம், மனிதனின் ஜீன்களில் குறைந்தபட்சம்  82% மூளையில் தான் இருக்கிறது என்றும், 94% எல்லா மூளைகளும் ஒரே மாதிரி என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள உருவ வரைபடங்கள் பிற்காலத்தில் பெறும் நோய்களை தெற்க்க உதவும் என்று அவர்கள் உறுதி தெரிவித்து இருக்கின்றனர்.

முதன்மை அலுவலர் ஆலன் ஜோன்ஸ், மூளை பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆர்என்ஏ,ரைபோ நியூகிளிக் அமிலம்,டிஎன்ஏ மற்றும் புரதங்கள் என ஒவ்வொரு பகிதியும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சற்றேறத்தாழ 25,00 ஜீன்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிலிருந்து தான் இந்த மூளையின் வரைபடம் உருவானது என்று கூறி இருக்கிறார்.

இந்த அட்லஸ் ஒரு ஜிபிஎஸ் சிஸ்டம் போன்று செயல்படபோவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. மூளையின்  1000 த்திற்கும் மேலான அமைப்புகளில், நூறு மில்லியன் தகவல் புள்ளிகளை இணைத்து இருக்கும் இந்த வரைபடம் எந்த ஒரு ஆய்வாளரும் தான் விரும்பும் உயிரி-வேதிப் பகுதியை முப்பரிமானமாக உருமாற்ற உதவும்.

மூளையில் ஏற்படும் காயங்கள், மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இனி வெகு காலத்திற்கு நமக்கு பிரச்னைகளை தராது. மருத்துவ முறைகளில் மாற்றம் ஏற்படும், எந்த நுண்ணிய மூளையின் இடத்தில் ஊசி போட்டால்  நோய் தீரும் என்பது வரை இதன் மூலம் சாத்தியப் படுகிறது.

உலக நல வாழ்வு அமைப்பு மூளை சார்ந்த நோய்கள் 2020 இல் பெறும் பாதிப்பை உண்டாக்கும், என கூறி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மேற்கொண்டு தகவல்கள் அறிய

மூளை வரைபடம்

தகவலை பகிர வாக்களியுங்கள் .!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

தமிழா இந்தா பிடி உன் துரோகத்துக்கு விலை..!

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

எனும் பாரதியின் வரிகளை விட இந்த பதிவிற்கு பொருத்தமான தொடக்கம் வேறு எதுவும் படவில்லை. 

உலகில் தமிழை தாய்மொழியாக கொண்டு மக்கள் வாழும் நாடுகள் வெறும் இரண்டு தான். இந்தியா,இலங்கை. என்ன தான் அமெரிக்கா,சவூதி,சிங்கப்பூர்,இங்கிலாந்து,அரபு,கனடா என்று உலகம் முழுவதும் தமிழர்கள் நிறைந்து இருந்தாலும், அவர்களெல்லாம் தமிழகத்தில் இருந்தோ இலங்கையில் இருந்தோ குடி பெயர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

இப்படி வெறும் இரண்டு நாடுகளுக்குள் குறுங்கி இருந்த நம்மை இப்போது கிட்டத்தட்ட ஒரே நாட்டுக்குள் அடக்கி விட்டார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறான் என்று அடக்கி ஆள நினைத்த சிங்களனுக்கு எதிராக தமிழர் கூட்டம் திரும்பியது, எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தில்  எத்தனையோ குழுக்கள் இருந்தாலும் அவை எல்லாம் காந்தியின் கீழ் வந்ததோ அதே போல் (நான் வெறும் குழுவைத்தான் சொல்கிறேன் போராட்ட முறையை அல்ல), பிரபாகரன் என்னும் ஒரு புலியின் கீழாக ஒரு பெருங்கூட்டமே சேர்ந்தது. தமிழர்களுக்கு சொந்த நாட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் அடிமைத்தனம் பிடிக்காமல் சுதந்திரம் நோக்கி பயணிக்கும் உத்வேகம் வந்தது.

இதற்கெல்லாம் அவன் உதவி என்று யாரிடமும் போய் கை கட்டி நின்று விடவில்லை, ஆனாலும் அவனுக்கு உதவ வேண்டியது நம் கடமை அன்றோ? உயிர் பிரிய கிடக்கும் உன் சகோதரனையோ சகோதரியையோ பார்த்து விட்டும் உன்னால் சும்மா இருக்க முடியுமா?
இல்லை உதவி ஏதும் கேட்கவில்லை என்று மரணத்திடம் தான் அவர்களை உன்னால் தாரை வார்த்து கொடுக்க முடியுமா? நிச்சயமாய் முடியும் ஏனென்றால் நீ தான் ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான உன் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்ட போதும் வாயைக் கூட திறவாமல் இருந்தவனாயிற்றே?

பிரபாகரன் என்னும் அச்சத்தை வென்ற தலைவனின் கீழ் ஒரு அரசாங்கமே நடந்தது. உலகின் எந்த புரட்சியாளர்களும்,விடுதலை போராளிகளும் தனி அரசாங்கம் நடத்துமளவுக்கு திறன் பெற்றிருக்கவில்லை ஆனால் தமிழன் பெற்றிருந்தான். உலகின் எந்த மொழிக்காரனும் தன் இனத்தவன் கொல்லப்படும் போது சும்மா இருந்ததில்லை ஆனால் அதுவும் தமிழனால் தான் முடிந்தது.

நாட்டை சுத்தப்படுத்துகிறோம், தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று தமிழ் மக்களை எமது சகோதர இனத்தவரை சாரை சாரையாக கொன்று குவித்தானே சிங்களவன், அவனை நீ என்ன செய்தாய்? ஐநா சபையிலே இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட போது(மனிதாபிமானம் இருக்கும் வேறு நாட்டில் இருந்து) அதை வன்மையாக எதிர்த்து இலங்கைக்கு வக்காலத்து வாங்கியது இந்தியா.

இந்தியாவின் ஏகபோக உதவியால் இலங்கை எந்த வித பிரச்னையுமின்றி தமிழர்களை தீர்த்து கட்டியது. தான் ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யாமால் அப்போது இலங்கை தமிழக்கு நான் முழு ஆதரவு என்று ஒருவர் கூற, இலங்கை தமிழர் உட்பட உலகத் தமிழ்களின் தலைவன் தான் தான் எனத் தம்பட்டம் அடித்து கொண்டவரோ அவ்வப்போது ஏதோ சளி பிடித்தவனை விசாரிக்க எழுதும் கடிதம் கணக்காய் தந்தி அடித்து கொண்டிருந்தார்.

இடை இடையே உண்ணாவிரத நாடகம் வேறு, இவர் உண்ணாவிரதம் ஆரம்பிப்பாராம் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்னைகள் சுமுகமாக பேசி தீர்க்கப்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பாராம். இதில் உச்சகட்ட மோசடி என்னவெனில் அப்போது தான் கொல்விகிதம் (கொலைகளின் எண்ணிக்கை) மிக அதிகமாகி கொண்டிருக்கும்.

சரி இவர்களை விட்டால், வேறு கதியே இல்லை என்றால் வைகோ,சீமான் போன்றவர்கள் இருக்கிறார்கள். இருந்தென்ன பயன் வெறுமனே பேசுவதால் இதில் எதுவும் நிற்க போவதில்லை, பேச்சைக் கேட்டு நம் தமிழன் உணர்ச்சி பொங்க சிங்களவனை கேட்கப் போவதும் இல்லை எனும் அசட்டு தைரியம் தானே இன்று இலங்கையை செந்தூய்மை(RED WASH) படுத்தியிருக்கிறது.

இப்போது அதெல்லாம் பழைய கதையாகி விட்டது, நமக்கென்ன எவனோ சாகிறான் என்று இருந்தோம் அல்லவா? நம் பங்காளிகளை அழித்த சிங்களவன் இதோ வருகிறான்  நம் வீட்டிற்குள்ளும், ஆம் நம் வீட்டின் குளக்கரையை தொட்டு விட்டான். மீனவனை கொல்லத் தொடக்கி விட்டான். எப்போதே தொடங்கினான் ஆனாலும் இப்போது தான் வேகம் கொடுத்திருக்கிறான். தமிழா,இத்தனை நாளும் யாருக்கோ ஆபத்து என்று ஒதுங்கி இருந்தாயா இன்று உன் அடிமடியில் கை வைத்து விட்டான். இப்போதும் நீ மீனவன் தானே என ஒதுங்கி நின்றால், அடுத்த குறி நீயாக இருக்கமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இப்போது தான் நினைவுக்கு வருகிறது, ஒரு அம்மையார் தேர்தல் பிரச்சாரத்துக்கு சில நாட்களுக்கு முன் வந்தார், சொன்னார், இனி ஒரு தமிழனுடைய உயிரும் பிரியாது என்று. அவரின் பேச்சுக்கு எவ்வளவு மரியாதை, உடனே கேட்டு விட்டார்களே?

"உயிரை மட்டும் இன்றி,உடலையும் அல்லவா பிரித்து விட்டார்கள் துண்டு துண்டாக..!"

பாகிஸ்தான் நமக்கு எதிரி தான், ஆனாலும் எல்லை கடந்த மீனவரை (22 பேர்) கைது மட்டும் தான்  செய்து இருக்கிறார்கள். ஆனால் வெறி பிடித்த இந்த மிருகங்கள் நம் எல்லையில் இருக்கும் மீனவரை கடத்தி சென்று அவர்கள் எல்லையில் இருந்ததாய் சாடுவது ஒரு பக்கம் என்றால், இப்படி பல வேளைகளில் கொன்று குவிப்பது எவ்வகை நியாயம்?
என்ன நியாயமா,அப்படி ஒரு வார்த்தையே சிங்கள மொழியில் கிடையாதே?

ஆனாலும் இந்த பிரச்னைக்கெல்லாம் சிங்களவன்தான் காரணம் என்று மட்டும் கூற முடியாது நீயும் தான் காரணம் தமிழா, இந்தா பிடி நீ செய்த துரோகத்திற்கான விலை.. என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

புதுக்கோட்டையில் இறந்து கரை ஒதுங்கியிருக்கும் நம் சகோதரனுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில்,
குறித்துக்கொள் சிங்களனே, இது நாள் வரையிலும் எல்லை தாண்டிய பிரச்னை, ராஜீவை கொலை செய்தவர்கள் என்று உனக்கு உதவியாய் இருந்தவரும் உனக்கு எதிராக திரும்பிடுவர். இன்னொரு பங்களாதேஷ் வெகு சீக்கிரம் அமைய போகிறது, பார்..!

பலரும் படித்திட ஓட்டு போடுங்கள் நண்பரே..! 

சனி, 16 ஏப்ரல், 2011

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிப் பாதைக்கு திரும்பியது..!

மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக வெளிப்பட்ட சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.பெங்களூர் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் வகையில் விளையாடினாலும் பின்னர் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வி அடைந்தது.


8 ஓவர்கள் வீசி 46 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ரன்தீவ், அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது.

சென்னை சேப்பாகம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமாக இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி, திலகரத்னே தில்சானை முதல் பந்திலும், அதன் பிறகு அதிரடியாக ஆடி 14 ரன்களை 5ந்தே பந்துகளில் குவித்த யூசுஃப் பத்தானை 2வது ஓவரிலும் இழந்தது. நின்றாடி ரன்களை எடுக்க முயன்ற அகர்வால் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே அதன் வெற்றிக் கனவு சரிந்தது.

ஆனால் விராத் கோலியும், டி வில்லியர்ஸும் மிக அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் 52 ரன்களைக் குவித்தனர். 28 பந்துகளில் 4 பெளண்டரிகளுடனும், ஒரு சிக்கசருடனும் 35 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் டி வில்லியர்ஸ் ரன்களைக் குவிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 19வது ஓவரில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்க தோல்வி உறுதியானது. டி வில்லியர்ஸ் 44 பந்துகளை ஆடி 5 பெளண்டரிகளுடனும், 2 சிக்சர்களுடனும் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழிந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஜினியும் மனிதர் தானே?

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள், எங்கிருந்து வரும் தைரியம் இவ்வளவும்?
ஒருவேளை அவர் ஆதரவு யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமா?,
ஆட்சியை பிடிக்க நினைக்கும் கட்சியின் தூண்டுதலா?
அல்லது ஆட்சியில் தொடர நினைக்கும் கட்சியினரின் அடாவடித்தனமா?
எதுவாக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிடும் உரிமையை மீடியாவுக்கு கொடுப்பது யார்?

ரஜினிகாந்த் வாக்குப் பதிவு செய்வதை வேண்டுமென்றே பதிவு செய்து விட்டார்கள். ஏற்கனவே பிரபலங்களின் கலவு தொடர்பான விஷயங்களில் ஏகத்திற்கும் மூக்கை நுழைக்கும் மீடியா, விட்டால் அவர்கள் கழிவு போவதையும் படம் பிடித்து எக்ஸ்க்ளுசிவ் என்று போட்டாலும் போட்டு விடுவார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா,மட்டாரா என்று அவருக்கே தெரியாத நிலையில் அவரின் ரசிகர்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஒவ்வொரு மேடையிலும் தன் அருகே அழைத்து அமர வைப்பதும், ரஜினி புகழ தானும் தமிழகமும் கேட்பதாய் எத்தனை விழாக்களில் கலைஞர் அரங்கேற்றம் செய்துள்ளார்.

ஆனாலும் ரஜினிகாந்த் என்ற தனி மனிதர் அவரின் வாக்கினை யாருக்கு செலுத்த வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் இருப்பர என்ன? அவரை உங்களின் வசீகரிக்கும் பேச்சினால் மயக்கி விட்டதாக தப்புக்கணக்கு போட்டு விட்டு, பின்னர் தனக்கு ஓட்டு போடவில்லை என்று தெரிந்ததும் மாலையே அழைத்து  திரைபடம் போட்டுக் காட்டி, சிலரை விட்டு பேசியும் "காட்டி"யுள்ளராம் தலைவர்.

தான் வாக்களித்ததை படம் பிடித்ததும், நிலைமையை புரிந்து வேகமாக அங்கிருந்து கிளம்பினார் ரஜினி,மீடியாக்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு. பின்னர் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் லஞ்சம்,ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று வேறு சொல்லி இருப்பது ஆட்சி பீடத்தில் இருப்பவர்களை கோபத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.

சரி,விடுங்கள் அவர் யாருக்கு ஓட்டு போட்டால் என்ன? நம் தலைவிதி மாறி விடப் போகிறதா என்ன யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் விரும்பியதாக சொன்ன அதெல்லாம் நடக்க போவதில்லை.

பிடித்திருந்தால் பதிவு பிரபலமடைய  வாக்கு போடுங்கள்..

வெற்று வரலாற்று கற்பனைகள்...! (1)

வரலாறு புராணம் இரண்டுமே நடந்து முடிந்து விட்ட சம்பவங்களின் தொகுப்பு தான். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது. புராணம் ஆதாரங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் கடவுள் நம்பிக்கை, மன்னர்களை போற்றுவது என்றே பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆதாரங்கள் தொடர்புடையது. சிறிதளவேனும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் திருக்கோயிலை கட்டியது வரலாறு, அதுவே அவன் கனவில் வந்து சிவபெருமான் கட்ட சொன்னது புராணம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு,முன்னதற்கு ஆதாரமாக அந்த கோயில் இன்றும் கம்பீரத்துடன் நிற்கிறது. பின்னதற்கு பெரிதாக ஏதும் ஆதாரங்கள் இல்லை.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் தெருவிலுள்ள கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என நீங்கள் பிரார்த்தித்து அது நடந்தும் விடுகிறது எனில், இந்தியா வெற்றி பெற்றது வரலாறு,அதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கும். ஆனால் உங்கள் பிரார்த்தனை கடவுள் எல்லாமே வெறும் புராணத்துடன் நின்று கொண்டாக வேண்டியது தான்.

சரி, அப்படியானால் வரலாற்றில் சொல்லப்பட்டன எல்லாமே உண்மையா என்று பார்த்தால்,நீங்கள் எந்த அளவிற்கு வரலாற்றை அணுகி உள்ளீர்கள் என்பதை பொறுத்து தான் அந்த வரலாறு எந்த அளவிற்கு உண்மை என்பதை சொல்ல முடியும். என் போன்ற சிறுபிள்ளைத்தனமானவர்கள் யாரேனும் அவர்கள் விருப்பத்திற்கு என்னத்தையாவது எழுதி வைத்ததை எல்லாம் படித்து அது வரலாறு என்று நாம் நினைத்து கொண்டிருந்தால் அதற்கு வரலாறால் அதுவும் செய்ய முடியாது. வரலாறு என்றைக்கும் உண்மை தான் நாம் தான் அதனை வெவ்வேறு விதமாக அணுகுகிறோம்.

நடப்பது என்னவோ ஒரே தேர்தல் தான்,ஒரே நிகழ்வுகள் தான் ஆனால் பச்சை தொலைக்காட்சியில் ஒரு மாதிரியும் மஞ்சள் தொலைக்காட்சியில் ஒரு மாதிரியும் அவர்கள் விருப்பத்திற்கு இணங்க மாற்றிக் கொள்(ல்)கிறார்களே, அதெல்லாம் வரலாற்றில் இடம் பெற்றால் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

நாலே வரியில் தொடங்கலாம் என நினைத்து இவ்வளவு நீளமாக இழுத்து விட்டது வருத்தம் தான், சரி அந்த வெற்று வரலாற்று கற்பனைகள் என்று தலைப்பிட்டிருந்தேனே அது வேறொன்றுமில்லை நாம் பல ஆண்டுகளாக,தலைமுறைகளாக ஏன் நூற்றாண்டுகளாக கூட சில விஷயங்களை தப்பான கோணத்திலேயே பார்த்து கொண்டிருக்கிறோம். அவற்றுள் எனக்கு தெரிந்த சிலவற்றை பதிந்துள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டப்படுத்துங்கள்.

20.ஏவாள் கெட்ட ஆப்பிளை சாப்பிட்டாள்.

 'தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவனுக்கு வேலை இல்லை' என்பார்கள். ஆனால் ஏவாள் சாப்பிட்ட அந்த மறைத்து வைக்கப்பட்ட சாப்பிடக்கூடாத ஆப்பிளால் தான் இன்றைக்கும் நாம் துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம் என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். பைபிளை பார்த்தீர்கள் என்றால் அப்படி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்பட்டிருப்பதாக தெரியவில்லை "தோட்டத்தின் நடுவே இருந்த அந்த மரத்தின் பழம்"(Genesis 3:3) என்று தான் இருக்கிறது. ஏன் அது மாம்பழமாகவோ,இலந்தைப் பழமாகவோ கூட இருந்திருக்கலாம் இல்லையா?
  
19.நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தது.

அடுத்ததும் ஆப்பிள் பற்றி தான், நாம் சிறு வயதில் படித்திருப்போம். மரத்தில் இருந்து நியூட்டன தலையில் ஆப்பிள் விழ அதனாலேயே அவர் புவி ஈர்ப்பு விசையை பற்றி கண்டு பிடித்தார் என்று. ஆனால் ஐசக் நியூட்டன் தான் சாகும் வரை அப்படி யாரிடமும் கூறவில்லை. வால்டர் என்பவர் ஒரு கட்டுரையில் விளையாட்டாக அப்படி எழுத நன்றாக இருக்கிறதே என்று எல்லோரும் மறுபிரசுரித்து அதை உண்மையாகவே மாற்றி விட்டனர்.

18.வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸை வரைந்தார்.

உலகின் மிகப் பிரபலமான கற்பனைக் கதாபாத்திரங்களில்  எப்போதும் மிக்கி மௌசிற்கு தனி இடம் உண்டு. ஆனால், மிக்கி மௌசிற்கு வடிவம் கொடுத்தது வால்ட் டிஸ்னி என்று நீங்கள் நினைத்திருந்தால் கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள், மிக்கி மௌசின் ஒலி (குரல்) தான் அவருடையது. ஒளி(வடிவம்) அவரது நண்பர் உப் இவேர்க்ஸ் உடையது. தனி ஆளாக வரைந்து முதல் படத்தை வெளியிட உதவினாரம் அவர், நாளொன்றுக்கு 700 சித்திரங்கள் வரைவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் எல்லாம் வருவதற்கு முந்தைய அந்தக் காலத்தில்.

17.மேரி ஆண்ட்வாநெட் (பிரெஞ்சு மகாராணி) இனிப்பு ரொட்டிகளை சாப்பிடச் சொன்னாள்.

1776 இல் ஜாக்ஸ் ரவுசே என்பவர், தனது 25 ஆண்டுக்கு முந்தைய நிகழ்வு ஒன்றை எழுதும் போது "ஒரு பெரிய மகாராணி" மக்களுக்கு ரொட்டி துண்டுகள் கூட சாப்பிட கிடைப்பதில்லை என்ற போது "அப்படி என்றால் இனிப்பு ரொட்டிகளை(Cakes) கொடுங்கள்" என்று சொன்னாளாம். ஆனால் அப்போது  மேரி ஆண்ட்வாநெட் 11 வயது மட்டுமே உடையவள். பின்னாளில் பிரெஞ்சு புரட்சிக்காரர்கள் புரட்சியின் வேகத்தை அதிகரிக்க மக்கள் நலனில்,துயரத்தில் அக்கறை இல்லாமல் ராணியார் தான் இவ்வாறு  கூறியதாக கிளப்பி விட்டு விட்டார்கள்.


16."தி கிரேட் ட்ரெயின் ராப்பரி" தான் முதல் முழு நீளத் திரைப்படம்

பல ஹாலிவுட் ரசிகர்களும்  1903 இல வெளியான "தி கிரேட் ட்ரெயின் ராப்பரி" தான் முதல் முழு நீளத் திரைப்படம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். சினிமாவில் க்ளோஸ்-அப் காட்சிகள்,ஒழுங்கான கதை என பல விதத்திலும் இத்திரைப்படம் ஒரு மைல் கல் என்றாலும் முதல் முழு நீள திரைப்படம் , இப்படம் வந்து சில ஆண்டுகளுக்கு பிறகு வெளியான "தி ஸ்டோரி ஆப் தி கெல்லி கேங்" என்ற ஆஸ்திரேலிய திரைப்படம் தான்

அடுத்த பதிவில் : நெப்போலியன்,ஷேக்ஸ்பியர்,நீரோ மன்னன்..,

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. 
  

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சச்சினின் சத வேட்டை தொடர்கிறது..! கூடவே தோல்வி ராசியும்...!

சச்சின் ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை கொச்சி அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார். உலக கோப்பை முடிந்தவுடன் சச்சின் ஒய்வு பெற வேண்டும் என ஓதிய வாய்கள் வாவ்.. என்று வியக்கும் அளவுக்கு விளாசி தள்ளிய சச்சின் இன்னிங்க்ஸ் ன் கடைசி பந்தில் சதமடித்தார். ஆனால் பின்னர் விளையாடிய கொச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறந்த ஆட்டத்தால் அவ்வணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொச்சி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச தீர்மானித்தது.
முதலில் ஜேகப்ஸ் உடன் களம் இறங்கிய சச்சின்  அவர் சரியாக விளையாடாததால் கொஞ்சம் வேகமாக ரன் குவிக்கும் கட்டாயத்தில் இருந்தார். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்ந்த நிலையில் ஜேகப்ஸ் அவுட் ஆனார். அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சச்சின் அந்நேரத்திர்கெல்லாம் நாற்பது ரன்களை கடந்திருந்தார். இதில் பெரேரா பந்தில் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ், ஆர் பி சிங் பந்தில் அடித்த ஸ்கொயர் பவுண்டரி என எல்லாமே கண்கொள்ளா காட்சிகள்.

சென்ற போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் அடுத்ததாக அம்பத்தி ராயுடு களம் கண்டார். அவர் வந்த வேகத்தில் மளமள என ரன் குவிக்க ஆரம்பித்தார். ஸ்கோர் வேகமாக ஏற தொடங்கியது.ராயுடு நான்கு சிக்ஸர்கள் அடித்தார். சச்சின்-ராயுடு இணை 50 ரன்களை கடந்த போது அதில் சச்சினின் பங்களிப்பு வெறும் 12 ரன்கள் தான்.

சச்சின் அரை சதத்தை கடந்து தனக்கே உரிய பாணியில் சற்று நேரம் இளைப்பாற பொறுமையாக விளையாடினார். அந்த நேரத்தில் அருமையாக விளையாடி ராயுடு இருபத்தி சொச்சம் பந்துகளில் அரை சதம் கண்டார் (28?). அது வரை பொறுமையாக விளையாடி வந்த சச்சின் அடுத்து பூதாகரமாக வெடிக்க தொடங்கினார். ராயுடு 44 ரன்கள் எடுத்திருந்த போது சச்சின் 55 ரன்கள் தான் எடுத்திருந்தார் பின்னர் ராயுடு 50 ரன்களை தொடும் போதெல்லாம் சச்சின் எண்பதை தாண்டி நின்று கொண்டிருக்கிறார்.

வினய் குமாரின் ஒரே ஓவரில் ராயுடு இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, சச்சினோ அதே ஓவரில் தனது ட்ரேட்மார்க் ஸ்வீப் ஷாட்டை அடித்து 4 ரன் சேர்த்தார். பின்னர் லெக் சைடில் கால்களை தூக்கி பந்தை லாவகமாக எல்லைக்கோட்டை தாண்டி விழுமாறு அடிக்கும் அந்த சிறு வயது சச்சினும் நமக்கு காண கிடைத்தார். பின்னர் தோனி ஸ்டைலில் ஒரு காலை அகற்றி பந்தை சிக்ஸர்க்கு சச்சின் விரட்டியது பார்க்க ஒரு மாதிரி இருந்தது.(சச்சின் ஸ்டைலாக விளையாடுவதை பார்த்தே பழகி விட்டது).

சரி எப்படியும் இன்று சச்சின் சதம் போட்டு விடுவார் நாம் பதிவு எழுதலாம் என்று இருந்தேன். ஆனால் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தேன். நான் பதிவு எழுத ஆரம்பிக்க போதாத காலம் , ஒருவேளை அதற்கு பின்னர் சச்சின் அவுட் ஆனால் நான் அவசர குடுக்கையாக பதிவு எழுத ஆரம்பித்ததால் தான் சச்சின் அவுட் ஆனார் என்று அவர்கள் பேசும் அற்ப காரணங்களுக்கு இடங்கொடாமல் பொறுமையாய் ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தேன்,சச்சின் சற்றும் பொறுக்காமல் ரன்னை ஏற்றி கொண்டிருந்தார்.

சச்சின் நூறை நெருங்கும் நிலைமையை புரிந்து கொண்ட ராயுடு சச்சினுக்கு சிங்கில்ஸ் ஆடினார். சச்சினும் இடை இடையில் தனது நுணுக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை ஏற்றி கொண்டே இருந்தார்.

18 வது ஓவரில் இருந்தே சச்சின் எப்போது சதம் அடிப்பார் என்று ஆர்வம் தொற்றிக்கொண்டது. பெரேரா பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து சச்சின் 85 ஐ தாண்டி விட்டார்.

19 வது ஓவரில் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் அவசரமாக ஒரு ரன் ஓட பீல்டர் ஸ்டம்பை நோக்கி எறிந்த பந்து ஸ்டம்பில் படாது விலகி செல்ல மீண்டும் ஒரு ரன் ஓடினார். நல்ல வேலைக்கு அடுத்த ஓவரின முதல் பந்திலியே ராயுடு சின்கிள் எடுத்தார். ஐந்து பந்துகள் பத்து ரன்கள். சச்சின் ஃபோர் அடித்து 95ற்கு சென்றார். பின்னர் அடுத்த பந்தில் ராயுடு தனது விக்கெட்டை சச்சினுக்காக கொடுத்த போது பாவமாக இருந்தது(பெயருக்கு ஏற்றாற் போல் அவர் அம்பத்தி சொச்சத்தில் அவுட் ஆனார்). ஆனாலும் ராயுடு எல்லாம் இந்திய அணியில் இன்னும் ஏன் சேர்க்கப்படவே இல்லை என்பது தெரியவில்லை மனிதர் என்னமாய் பந்தை விரட்டி விரட்டி அடிக்கிறார்.

அடுத்து பொல்லார்டு வந்தார், மும்பை மைதானத்தினர் என்ன நடக்க போகிறதோ என்று மயான அமைதியில் கிடக்க ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து 99ற்கு தாவினார் சச்சின். கடைசி பந்தில் சின்கிள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்ததும் என்னமோ நாமே நூறு ரன்கள் அடித்தது மாதிரியான உணர்வு வருவதை எல்லாம் தடுக்க முடிவதில்லை.

பின்னர் ஆடத் தொடங்கிய கொச்சி அணியின் ப்ரேண்டான் மெக்குல்லம் மற்றும் ஜெயவர்தனே இணை தொடக்கம் முதலே ரன் விகிதத்தை சரியாக கடை பிடித்து ஆடி வெற்றி பெற்றது.

மலிங்கா இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கி விட்டார் அதுவுமில்லாமல் அவர்களின் தேவைப்படும் ரன் விகிதம் எடுக்கப்பட்ட ரன்களின் விகிதத்துடன் எப்போதும் ஒத்தே இருந்தது.

பொல்லார்டு பிடிவாதமாக சென்று ஒரு பந்தை பவுண்டரிக்கு தள்ள கூட்டம் அவரை கரித்து கொட்டியது. ஆனால் அடுத்த பந்தில் மனிதர் என்னமாய் ஐந்து ரன்களை சேமித்தார். சிக்சருக்கு செல்ல வேண்டிய பந்தைத் தடுத்து விழுந்த வேகத்தில் மீண்டெழுந்து அப்பப்பா... உடனே அதே கூட்டம் அவரை புகழ்ந்து தள்ளியது வேறு விஷயம். நம்மவர்கள் எப்போதும் அப்படித்தானே.

ஜெயவர்தனே 56 ரன்களும் மெக் குல்லம் 81 ரன்களும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இது என்ன இந்திய அணியா? தோற்றதும் கவலைப்படுவதற்கு மும்பை தானே சச்சின் விருந்து கிடைத்தால் சரி என்று தேற்றினாலும் சச்சின் சதமடித்து தோற்றதால் நண்பர்களின் அந்த
"சச்சின் சதமடிச்சா டீம் ஜெயிக்காது" வாதம் மீண்டும் களை கட்டியது.

"சச்" ஆட்டங்கள் தொடரட்டும்...

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. மனதை தேற்றுவதற்கு உதவும்...! 

கம்பீர்,காலிஸ் அடியில் காணாமல் போன ராஜஸ்தான் ராயல்ஸ்

சாவாய் மான்சிங் அரங்கத்தில் இன்று நடந்த கொல்கத்தா உடனான  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

160 ரன்களை துரத்திய கொல்கத்தா அணியின் கம்பீர் ஜோகன் போத்தாவிடம் கேட்ச் கொடுக்க,ஒரு பீல்டர் வலையத்திற்குள் இல்லை என்பதால் அஆட்டம் இழக்காமல் விளையாடிய கம்பீர் ஆட்டத்தின் இறுதி வரை விளையாடி அணிய வெற்றி பாதையில் வழி நடத்தினார்.

முதலில் கம்பீரை விட குறைவான வேகத்தில் விளையாடி வந்த கால்லிஸ் கடைசியில் ரன் மழை பொழிய ஆரம்பித்தார். இவர்கள் இரண்டே பேர் மட்டும் சேர்ந்து மொத்த ரன்களையும் அடித்து விட்டனர். ரன்விந்தர் தானாக முன்வந்து ரன் அவுட் ஆகி முதலில் ராஜஸ்தானுக்கு சந்தோசத்தை வழங்கி பின்னர் அவரே இருந்திருக்கலாம் எனும் அளவிற்கு இவர்களை ஆட்டம் அமைந்து விட்டது.

கம்பீர் 75 ரன்களும் காலிஸ்  80 ரன்களும் எடுத்தனர்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியில் டிராவிட் நல்ல அடித்தளம் அமித்து கொடுத்தாலும் ரன் விகிதம் குறைவாகவே இருந்தது,யூசுப் பதான் தான் வீசிய ஒரே ஓவரில் இரண்டு பேரை அவுட் ஆக்கி ராஜஸ்தானுக்கு கடுப்பு ஏற்ற, அந்த அணியின் ரன் விகிதம் பெரிதாக மட்டுப்பட்டது. கடைசியில் விளையாடிய டெய்லர், வாட்சன் அதிரடியில் ( இருவரும் தலா இரு சிக்ஸர் அடித்தனர்)அந்த அணி 159 என்னும் ஓரளவிற்கு தடுக்கக்கூடிய ரன்களை போர்டில் வைத்தது.

மீண்டும் கங்குலி?

இந்தியா மற்றும் கொல்கத்தா அணிகளின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கு எந்த அணியின் சார்பிலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இதனால் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளை காண மிக குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வருகின்றனர்.

இதற்கிடையில் கங்குலி கொச்சி அணிக்கு விளையாட போவதாக தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கொச்சி அணி இந்த ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக விளையாடும் அணி. அவ்வணி ஏற்கனவே அந்த அளவிற்கு மோசமாக ஆரம்பிக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆரம்பித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று மும்பை இண்டியன்ஸ் உடனான முக்கியமான போட்டியில் விளையாடுகிறது.

அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அந்த இடம் கங்குலியால் நிரப்பப்படலாம் என மீடியாக்களில் கூவிக் கொண்டு இருக்கின்றனர். முதலில் இது குறித்து மௌனம் காத்த கொச்சி அணி நிர்வாகம் இப்போது அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நாங்களும் கங்குலியை அணுகவில்லை,கங்குலியும் எங்களை அணுகவில்லை என தெரிவித்து இருக்கிறது.

கங்குலி விளையாடினால் நன்றாக தான் இருக்கும், ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் இந்தியாவின் மும்மூர்த்திகளாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்களுள் இருவர் (சச்சின்,டிராவிட்) சிறப்பாக விளையாடி வருகின்றனர். லக்ஸ்மனும் ஓரளவு நன்றாகத் தான் விளையாடுகிறார் பழைய,வயதானவர்கள் என்று ஒதுக்கும் அதே நேரத்தில் திறமை,அனுபவம் சேர்ந்தால் அது எல்லாம் காணமல் போய் விடும் என்பது நிதர்சனம் தானே?

எது எப்படி ஆயினும் இன்னும்  சில நாட்களில் அவர் வருவாரா, இல்லையா என்பது தெரிந்து விடும்.

போதும்பா அவர் விளையாடியதெல்லாம் புதுசா யாராவது விளையாடலாமே என்கிறீர்களா?

அது சரி இதற்கெல்லாம் நான் என் செய்வேன்?

சுஜாதாவுடன் ரஜினி..!


பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்… எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.

அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த அமரர் சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் வெளிவந்தது.

கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்…


இரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகளை மட்டும் ஃப்ளாஷ்பேக் பகுதியின் முதல் கட்டுரையாகத் தருகிறோம்.

சுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா?

ரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்… (சுஜாதா: ‘அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது!’)

சுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு?

ரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல்? பணம் – புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்… இதுக்காகத்தானே? ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும்…?

சுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா?

ரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா… அதுமாதிரி… எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு.

சுஜாதா: ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது…


ரஜினி: ஆமாம்… எம்ஜிஆரையே எடுத்துக்கங்க… வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவராலயே ஒண்ணும் செய்ய முடியலயே…

சுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா?

ரஜினி: யெஸ்… என்னன்னா… கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். ‘அவரை விட இவர் பெட்டர்’னு (சிரிக்கிறார்)… ஆனா அது பிரயோஜனம் இல்லையே…ஸிஸ்டம் மாறணும்.

சுஜாதா: நீங்க ஒரு சக்தி. உங்க படம் ரிலீஸ் ஆகலேன்னு ஒரு ரசிகர் தற்கொலை செஞ்சிகிட்டதாக் கூட படிச்சேன். ஆனா அந்த இல்யூஷன் உங்ககிட்ட இல்லேங்கிறது தெரியும். ‘உலகமே நம்மை விரும்புது’ங்கற இல்யூஷன் இல்லை. ஆனா ரசிகர்கள் உங்களை நெருக்கமா உணர்றாங்க. Larger than life image… ரசிகனோட சப்ஸ்டிட்யூட்டா இருக்கிற ஒரு பெரிய Motivatibe Force உங்களோடது இல்லையா…? ‘அவங்கள்ல ஒருத்தர் நீங்க’ன்ற இமேஜ் இருக்கே, அதை பாஸிடிவ்வா மாத்தலாமில்லையா? உங்க ரசிகர் மன்றங்கள்ல என்ன பண்றாங்க?ரஜினி: நிறைய பண்றாங்க… நற்பணி பண்றாங்க. சமூக சேவை பண்றாங்க. கண்தானம், முதியோர் உதவி, ரத்த தானம், வெள்ள நிவாரணம் மாதிர பலதும் பண்றாங்க.

சுஜாதா: நீங்க சொல்றதை அப்படியே கேக்குறாங்களா?

ரஜினி: நிச்சயமா… அவங்க எல்லாருக்குமே, நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேங்குறேன்னு ஒரு ஆசை இருக்கு. ஏன் தெளிவாச் சொல்ல மாட்டேங்குறேன்னு நினைக்கிறாங்க. ஆனா ஆரம்பத்துலேர்ந்து நான் சொல்லிக்கிட்டே வந்திருக்கேன், எனக்கு அரசியல்ல ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமில்ல… நான் எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க மாட்டேன். இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன்னா நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யாரு, வில்லன் யாருன்னு இப்ப யாருமே சொல்ல முடியாது (சிரிக்கிறார்). It is Unpredictable..

சுஜாதா: ரசிகர் மன்றங்களுக்குன்னு ஏதாவது கைட்லைன் கொடுத்திருக்கீங்களா?

ரஜினி: ஆமாம்… முதல்ல வீடு, அப்பா, அம்மா, பொண்டாட்டி, குழந்தைகள்… இவற்றைத்தான் கவனிக்கணும். அதுக்கு அப்புறம் ரசிகர் மன்றத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கேன்.

சுஜாதா: ஸ்டாருக்கும் நடிகருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஸ்டார் நடிகரால சில வித்தியாசமான ரோல்களைப் பண்ண முடியாது. ஷாரூக்கான் மாதிரி நெகடிவ் ரோல்களைப் பண்ண முடியாது. கமல்கிட்ட அந்தத் திறமை இருக்கு. பாதி நடிகர், பாதி ஸ்டார் மாதிரி. அல்பசே்சினோ, ராபர்ட் டி நீரோ, டஸ்டின் ஹாஃப்மேன் மாதிரி ஸ்டார்களெல்லாம் ரொம்ப வித்தியாசமா கட்டுப்பாடுகள் இல்லாம நடிக்கிறாங்க. பெண் வேஷம் கூடப் பண்றாங்க. உங்களால அப்படி வித்தியாசமா பண்ண முடியாதா… அல்லது தயாரிப்பாளர்கள் விடமாட்டேங்கறாங்களா?ரஜினி: இல்லை… நானே அந்த மாதிரி செய்ய விரும்பறதில்ல. ஏன்னா, இதுல பெரிய அளவுல பணம் இன்வால்வ் ஆகியிருக்கு. அதில நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. என் படம் பெயிலியரானா அதோட பாதிப்பு ரொம்பப் பேருக்கு இருக்கும். என் இமேஜுக்குத் தகுந்த படம் பண்றதுதான் எல்லோருக்கும் நல்லது.

சுஜாதா: உங்க பேர்தான் Selling point… இல்லையா?

ரஜினி: யெஸ்… யெஸ்…

சுஜாதா: மணிரத்னம், பாராதிராஜா போன்ற டைரக்டர்ஸ் எல்லாம் உங்களை வெச்சு ஒரு பெரிய சக்ஸஸ் கொடுக்க முடியலையே… ஏன்? உங்க சூப்பர் ஸ்டார் இமேஜை அவங்க சரியா புரிஞ்சுக்கலையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? அது பரிசோதனை முயற்சியா?

ரஜினி: ரஜினிகாந்த் படம்னா ரசிகர்கள் சில விஷயங்களை எதிர்பார்ப்பாங்க. கிம்மிக்ஸ் மாதிரின்னு வெச்சுக்கங்க. இன்டலிஜென்ட் டைரக்டர்ஸ் அவங்களோட தனித்துவம் இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதான் குழப்பம். ஆனா தளபதி, It was really did well… but not as expected!

ஆமா… ரஜினி படமா, மணிரத்னம் படமான்னு ரசிகர்கள் குழம்பிட்டாங்க. ரசிகர்கள் விரும்பறதைக் கொடுக்கிறதுதான் நல்லது. அடுத்தவங்க பணத்தை வச்சிக்கிட்டு நான் எக்ஸ்பரிமெண்ட் பண்ண முடியாதில்லையா? That is why I don’t want to take risk.

சுஜாதா: ஆனா ரஜினி, இதுமாதிரி லிமிட்டேஷன் இருந்தாலும் பல டெக்னிக்கல் முன்னேற்றங்களை insist பண்ணலாமே. ஒரு ஸ்டாண்டார்டு இருக்கணும்னு வற்புறுத்த முடியுமே உங்களால!

ரஜினி: ஓயெஸ்… பண்றேன். அண்ணாமலை, வீரா படங்கள்ல டெக்னிக்கல் தரத்துல நிறைய கான்சன்ட்ரேட் பண்ணியிருக்கேன். ஆனா மணிரத்னம் அளவுக்கு முடியாது. It may take some time. புதுசா வர்றவங்க என் இமேஜை மாத்தணும்னு நினைக்கிறாங்க. ஃபைட் வேண்டாம்னு சொல்வாங்க. யூஷுவலா செய்யறதை செய்ய வேண்டாம்பாங்க. அதுக்கு ரஜினிகாந்த் தேவையில்லையே…வேற யாரையாவது வச்சிக்கலாமே!

சுஜாதா: பொதுவா சராசரி வாழ்க்கையில டென்ஷன் இருக்கு. உங்களுக்கு படம் ரிலீஸாகும்போது டென்ஷன் ஏற்படுமா?

ரஜினி: இருக்கும். ஒரு வாரம் வரை இருக்கும். ரெண்டாவது வாரத்துல படம் எப்படின்னு தெரிஞ்சிடும். முதல்வாரத்துல வர்ற விமர்சனங்கள் தெளிவா இல்லாம குழப்பும். அப்புறம் சுலபமா தெரிஞ்சிடும். யாருக்கும் போன் பண்ணிக்கூடக் கேட்க மாட்டேன்.

தொகுப்பு: எஸ்எஸ்
நன்றி : என்வழி

வியாழன், 14 ஏப்ரல், 2011

ஸ்வீட்டர் ட்வீட்டர் (14/4/2011)

ட்விட்டர் இணையதளத்தை பெரும்பான்மையோர் உபயோகிக்க காரணம் தாங்கள் ஏற்கனவே நன்கு பழகி விட்ட SMS மொழியே அங்கும் பயன்படுத்தப்படுவது தான்.

அத்தளத்தில் எனக்கு பிடித்தவற்றில் சிலவற்றின் தொகுப்பு தான் இது.

[email protected]

என் ஜிமெயில் பூனம் பாண்டேவை பார்த்து கேட்டு போய் விட்டது.
திறக்கவே மாட்டேன் என்கிறது..!

[email protected]

நான் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எனக்குத்தான்
போட்டோஷாப் தெரியுமே#

[email protected] Ginny

கடவுளுக்கு முட்டாள்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது,
நிறைய படைத்து இருக்கிறாரே#?

[email protected]

அமெரிக்காவின் மிகப்பெரிய சிட்டி எது?
ஒபே'சிட்டி' (உடல் பருமன்)

[email protected]

கணினி மிக வேகமாகவும்,துல்லியமாகவும் முடிவெடுக்கும். # நமக்கென்ன சரியா தப்பான்னு தெரியவா போகுது?

[email protected]

பெரும்பான்மையான கிறித்துவர்களுக்கு பைபிள் மென்பொருள் உரிமையை(License?) போல,
வேகமாக  ஸ்க்ரோல் செய்து "நான் ஒத்து கொள்கிறேன்" என்று சொலி விடுகிறார்கள்.

[email protected]

//என்னை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை-
எஸ்.வி.சேகர் // #அதானே?அதிமுககாரன அவர் எப்படி நீக்குவாரு?என்னது நீங்க காங்கிரஸ்க்கு போயாச்சா?


[email protected]

இரட்டை இலைக்கு ஓட்டளித்தால் பொன்னர் சங்கர் படத்திலிருந்து தப்பலாம் - ரஜினி தப்புக்கணக்கு # விதி வலியது

[email protected] Mind_Valley

நுழைவாயிலில் கையேந்தும் மனிதர்களைக் கண்ட பிறகுமா நம்பிக்கையுடன் கோவிலுக்குள் செல்கிறீர்கள்.?

[email protected]

தவளை க்கும் விஜயகாந்துக்கும் என்ன ஒற்றுமை ? ரெண்டுமே தண்ணியிலும் இருக்கும் நிலத்திலும் இருக்கும் ! ரெண்டுமே தன வாயால் கெடும் !

[email protected]_Here

பெரும்பாலும் ஆண் தன் மனைவி மூலமாகவும், பெண்
தன் மாமியார் மூலமாகவும் தாயின் மதிப்பை உணரும் வாய்ப்பை பெறுகிறார்கள்

[email protected]@SrBachchan

கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்த உடன் இரண்டு மிஸ்ட் கால் வந்ததாம்.
#எடுத்து பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாம்

 

ஜாகீர் கானுக்கு டும் டும் டும்...!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் ‌செய்ய இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த உலக கிண்ணக் கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றி 28 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்தது.

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாகீர்கான். உலக கோப்பையை கைப்பற்றியது மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது என்று மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாகீர்.

இந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமும் ஜாகீருக்கு சேர்ந்திருக்கிறது. அது அவருடைய திருமணம். ஜாகீர்கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தங்களது நாட்டிற்கு திரும்பும் போது இரு அணி வீரர்களும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது தான் ஜாகீரும், இஷா சர்வானியும் முதன் முதலில் சந்தித்து கொண்டனர்.

பார்த்த உடன் இருவருக்கும் காதல் வந்து விட்டது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்குள் தொடர்ந்த இந்த உறவு 2007ம் ஆண்டுக்கு பிறகு முறிந்தது.

அதன் பின்னர் சில ஆண்டுகளாக இருவருக்குமிடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்கள் இருவருக்கும் தி‌ருமணம் நடைபெற இருப்பதாக இருவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் திரட்(ரு)டியது : www.viduppu.com

நீங்கள் கையொப்பம் இட தெரிந்தவரா?

எனக்கு பெரும்பாலும் இந்த ஒரே நாளில் மாற்றம் என்பன போன்ற அதீத நிகழ்ச்சிகளில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அப்படி திடீரென எதாவது மாற்றம் ஒரே நாளில் நடக்கிறது என்றாலும் அது அன்றைய ஒரே நாளில் வந்து விட்டது கிடையாது. இந்தியா உலக கோப்பையை வென்றது ஒரு நாளில் தான், தேர்தல் நடந்தது ஒரு நாளில் தான் ஆனால் இதன் முடிவுகள் எப்படி அமைய போகின்றன என்பதை கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளே பின்புலமாக இருந்து நிர்மானிக்கின்றன.

ஐந்து ஆண்டுகளும் சும்மாவே இருந்து விட்டு திடீரென ஒரே நாளில் வாக்கு கேட்டு முதலமைச்சர் ஆவது எப்படி முடியாத காரியமோ, நான்கு ஆண்டுகளாக சுமாராக விளையாடி விட்டு உலக கோப்பையை ஒரு தொடரில் மட்டும் நன்றாக விளையாடி பெறுவது என்பது எவ்வளவு இயலாத காரியமோ அதே போலத்தான், இந்த புத்தாண்டு மாதிரியான நாட்களில் திடீரென மாற முயற்சிப்பதும்.

நான் சில நண்பர்களை பார்த்து இருக்கிறேன், ஆண்டின் தொடக்கத்தில் சிகரெட்டை விடுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு நாள் ஒரு சிகரெட், பின் சில நாட்களிலேயே பழைய ஃபார்ம் க்கு வந்து விடுவார்கள். இன்னும் சில பேர் இன்றிலிருந்து பொய் பேசுவதில்லை, சைட் அடிப்பதில்லை போன்ற விபரீதமான முடிவுகளை எடுத்து விட்டு சில மணி நேரத்தில் காலாவதி ஆகி விடுவதும் உண்டு.

சரி, ரொம்ப கதை கட்டாமல் விஷயத்துக்கு வருகிறேன்.
இன்று தமிழ் புத்தாண்டு என்று சில தொலைக்காட்சிகள் கொண்டாட, சில சித்திரை திருநாள் என்றும் இன்னும் சில தொலைக்காட்சிகள் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றும் அறிவிக்கின்றன. இப்போதெல்லாம் டிவி யை பார்த்து தான் எந்த நாள் என்ன? என்று பெரும்பாலும் அறிய வேண்டி இருக்கிறது, இதுவே ஆங்கில புத்தாண்டு என்றால் ஆரவாரமாய் இருந்திருக்கும்.

சிலர் என்னய்யா, தை ஒண்ணு தான்யா தமிழ் புத்தாண்டு என்று சொல்வதும் உண்டு. ஆனால் எனக்கென்னவோ சித்திரை ஒன்று தான் நன்றாக படுகிறது, நான் இந்த புராண,இலக்கியங்களை எல்லாம் பிடித்து கொண்டு சொல்லவில்லை. ஏற்கனவே விழாக்கள் சூழ்ந்த மார்கழி,தை மாதங்களில் எதற்கு புத்தாண்டு வேறு? காய்ந்து போய் கிடக்கும் சித்திரை மாதத்தில் இருந்தால் எனா என்று தான் என் மனம் நினைக்கின்றது.

அய்யய்யோ, தலைப்பை மறந்து விட்டேனே, உங்களுக்கு கையொப்பம் இட தெரியுமா?

"என்னய்யா இது கேள்வி, அது தெரியலனா இவ்வளவு தூரம் உங்க பதிவை படிக்க முடியுமா?"

எந்த மொழியில் கையொப்பம் இடுகிறீர்கள், தமிழிலா ஆங்கிலத்திலா?

தமிழில் என்றால் பிடியுங்கள் வாழ்த்துக்களை வேறென்ன தர முடியும் என்னால்?
ஆனால் பெரும்பான்மையோரின் பதில் "ஆங்கிலத்தில்" என்று தான் இருக்கும்.
அதை எப்படி நீயே சொல்லலாம் என்றால், நம் சகோதரர்களை பற்றி நமக்கு தெரியாத என்ன?
நான் பயிலும் கல்லூரியில் தமிழில் கையொப்பம் இடும் எந்த மாணவனையும் நான் இதுவரை கண்டதில்லை. அதே நிலை தான் எங்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது தான் என்றாலும் பொது உண்மை அது தானே.

அரசாங்கத்தில் பணி புரியும் பலரும் தமிழில் கையொப்பம் இடுகின்றனர். ஒருவேளை அரசு ஆணையாக இருக்கலாம். சரி அது கிடக்கட்டும், நாமும் தமிழில் கையொப்பம் இட்டாலென்ன?

ஏற்கனவே ஆங்கிலத்தில் கையெழுத்திடுபவர்கள் அவ்வளவு எளிதில் தங்கள் கையொப்பத்தை மாற்ற இயலாது, Gazette ல் பதிய வேண்டும், வங்கியில் மாற்ற வேண்டும் என நடைமுறை சிக்கல்கள் உலுக்கி எடுக்கும். குறைந்தபட்சம் அதிகாரபூர்வமற்ற இடங்களிலாவது தமிழில் கையொப்பம் இடலாமே? அதுவமல்லாமல் பத்தாம் கீழ் படிக்கும் மாணாக்கர்களுக்கு தமிழினை பற்றி கூறி பற்றை உண்டாக்கி தமிழில் ஒப்பமிட செய்தால் உங்களுக்கு தமிழ்த்தாய்க்கு பரிகாரம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

நண்பர்களுக்கு கடிதம் எழுதும் போது போன்றவற்றில் தமிழில் ஒப்பம் இடலாமே?

எதுவுமே ஒரே நாளில் மாறாது என்றாய், இப்போது கையொப்பத்தை மாற்று என்கிறாய் என்றெல்லாம் கேட்காதீர்கள், நம்ம என்ன ஆட்சி கட்டிலை பிடிக்க போகின்றோமா  அல்லது உலக கோப்பையை வெல்ல போகின்றோமா ஆண்டு கணக்கில் எடுத்து கொள்வதற்கு? கையொப்பம் தானே ஒரு சில நாட்கள் முயற்சி செய்தால் வந்து விடப் போகிறது.

எல்லா செயலுக்கும் வேண்டிய உழைப்பு வேண்டுமானால் ஆண்டுக்கணக்கில் பிடிக்கலாம். ஆனால் முயற்சி நீங்கள் முடிவெடுக்கும் அந்த ஒரு கணத்தில் தான் தீர்மானிக்கப்படுகிறது.

நீ முதலில் தமிழில் கையொப்பம் இடுகிறாயா என்று யாரேனும் கேட்பின்,
நான் செய்யாத விஷயங்களை பிறரை செய்யும்படி எப்போதும் சொல்வதில்லை என்று சொல்லி கொள்(ல்)கிறேன்???

சச்சினுக்கு இன்னொரு மகுடம்..!

கடந்த ஓராண்டில் சச்சின் தன் 20 வருட கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தை அடைந்து விட்டார்.
ஒரு தின போட்டிகளில் கனவாக இருந்த 200 ரன்களை நிஜமாக்கி காட்டினார்,
டெஸ்ட் போட்டிகளில் 50வது சதம் அடித்தார்,
சர்வதேச அரங்கில் 30,000 ரன்களை கடந்தார்,
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடிக்கும் தன் வாழ்நாள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.
இப்போது 2010 ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதை பெற்றிருக்கிறார்.

விஸ்டன் விருதுகள் :

கிரிக்கெட்டின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருதுகள் 142 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இம்முறை பாகிஸ்தான் அணியில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஐந்து விருதுகளுக்கு பதிலாக இம்முறை நான்கு தான் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தான் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிக்கும்,நேர்த்தியாக விளையாடும் வீரர் சச்சினை தவிர்த்து வேறு எவரும் இருக்க முடியாது. (நிச்சயமாக மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்). அப்படிப்பட்ட வீரருக்கு இவ்விருது கிடைப்பது இதுவே கொஞ்சம் தாமதம் தான். ஆனாலும் விஸ்டன் 2007 ஆம் ஆண்டின் போது ஒருவேளை விஸ்டனின் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர் விருது 2004 ற்கும் முன்பே இருந்திருக்குமேயானால், சச்சின் 1998 ஆம் ஆண்டே இதற்கு பெயரிடப்பட்டிருப்பார் என்று தெரிவித்து இருந்தது.

சச்சின் 2010 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களுடன் 1500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். மேலும் 200, 50வது சதம் என எதையும் அவர் சொத்தை அணிகளுடன் அடிக்கவில்லை, இன்றைய நிலைமையில் மிக திறமையான வேகப்பந்து வீச்சு திறன் கொண்ட தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராகவே அடித்துள்ளார்.

ஆஷஸ் சாதனை :


மேலும் இந்த விஸ்டன் இதழில் இங்கிலாந்து அணியின் கடந்த ஆண்டின் சாதனைகள் வெகுவாக பாரட்டப்பட்டிருக்கின்றன. ஆஷஸ் தொடர் மூலம் இங்கிலாந்து அணி இரண்டு மாத காலத்திற்கு ஆஸ்திரேலிய செய்தி தாள்களின் முதல் பக்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தது என்றும் முதல் முறையாக ICC  நடத்திய கோப்பை ஒன்றை T20 உலக கோப்பை  பெற்றதும் பாராட்டுக்கு உள்ளாயின. ஆனாலும் அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஈக்களை போல உலக கோப்பைக்கு முன்னரும் உலக கோப்பையிலும் விழுந்த விட்டதாக அது வருத்தம் தெரிவிக்கிறது.(காயம் காரணமாக)

மைகேல் வான் ஆஷஸ் பற்றி கூறுகையில் " இங்கிலாந்து வீரர்கள் தங்களின் பேட்டிங்கை நாட்களில் எண்ணிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய அணியினர் நிமிடங்களிலேயே முடித்து விட்டனர்" என சாடி உள்ளார்.

2009 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியும் இதில் அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பெற்றனர். பங்களாதேஷின் தமிம் இக்பால், அவர் நாட்டில் இருந்து தெரிந்தெடுக்கப்படும் முதல் வீரராகிறார். சச்சின் தனது பிடித்தமான நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவரும் இடம் பிடிக்கவில்லை.

அணியில் இடம் பிடித்தோர் :

1.விரேந்தர் சேவாக், இந்தியா
2.தமிம் இக்பால், பங்களாதேஷ்
3.குமார் சங்ககாரா. இலங்கை
4.சச்சின் டெண்டுல்கர், இந்தியா
5.ஜாக் காலிஸ், தென் ஆப்ரிக்கா
6.விவிஎஸ் லக்ஷ்மன், இந்தியா
7.மகேந்திர சிங் தோனி, இந்தியா,கேப்டன்,விக்கெட் காப்பாளர்,
8.கிரேம் ஸ்வான், இங்கிலாந்து,
9.டேல் ஸ்டெய்ன், தென் ஆப்ரிக்கா,
10.ஜாகிர் கான், இந்தியா
11.ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து.

மேலும் முதல் முறையாக புகைப்பட கலைஞர் ஒருவரை விஸ்டன் கௌரவிக்கிறது.
அவர் விஸ்டன்-எம்சிசி யின் ஸ்காட் பார்பர்.

இந்த விஸ்டன் இதழை முடிந்தால் சச்சினுக்காக வாங்கி வையுங்கள்..!

புதன், 13 ஏப்ரல், 2011

வால்தாட்டி அதிரடி சதம் : சூப்பர் கிங்க்ஸ் வீழ்ந்தது

52 பந்துகளில் சதமடித்த பால் வால்தாட்டியின் அபார ஆட்டத்தின் உதவியால், 188 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் வென்றது.

மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்கை நோக்கி பதிலாட்டம் ஆடிய பஞ்சாப் அணிக்கு பால் வால்தட்டி அட்டகாசமான தொடக்கத்தை அளித்தார். முதல் 5.5 ஒவர்களிலேயே ஆடம் கில்கிறிஸ்டுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் எடுத்தார். ஆடம் கில்கிரிஸ்ட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஆடவந்த ஷான் மார்ஸ் (12 ரன்கள்) உடன் இணைந்த வால்தாட்டி, 2வது விக்கெட்டிற்கு 4.6 ஓவர்களில் 39 ரன்களைக் குவித்தார். அடுத்த ஆடவந்த சன்னி சிங், 11 பந்துகளில் 20 ரன்களை எடுத்து அணியின் ரன் குவிப்பை துரிதப்படுத்தினார். நய்யார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு வால்தாட்டியின் ஆட்டம் உச்சகட்டத்திற்குச் சென்றது. விசப்பட்ட பந்துகளின் போக்கை அறிந்து, அவைகளை சிறப்பாக அடித்தாடி ரன்களை படு வேகமாகக் குவித்தார். தான் எதிர்கொண்ட 52வது பந்தை ஸ்லிப் திசையில் தட்டிவிட்டு மேலும் ஒரு பெளண்டரியுடன் சதத்தை எட்டினார்.

மறுமுனையில் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடினார். ஆட்டத்தின் இறுதி ஓவரின் முதல் பந்தை கார்த்திக் சிக்ஸர் அடிக்க 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எட்டி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பால் வால்தாட்டி 63 பந்துகளில் 19 பெளண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 120 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்காமல் வெற்றியுடன் திரும்பினார்.

எப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது

இன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா?
இது மாறுவதற்கான நேரம். dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது.

படி 1 :
இந்த தளத்திற்கு செல்லவும்

http://www.dot.tk/en/index.html?lang=en

படி 2 :
உங்கள் தள முகவரியை இடவும்.

படி 3 :
நீங்கள் விரும்பும் தள முகவரி, வார்த்தை சரிபார்த்தலை முடித்து பதிவு செய்யப்பட்ட இலவச டொமைன் என்பதில் சொடுக்கவும்.

படி 4 :
இலவச டொமைன் தெரிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியே தொடரவும். அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். தங்களுக்கு அனுப்பப்படும் சரிபார்க்கும் மின்னஞ்சலை திறந்து, அதில் தரப்பட்டுள்ள முகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் CODE ஐ கொடுத்து விடவும்.

படி 5 :
dot.tk தளத்தில் உள்நுழைந்து டொமைனை திருத்தும் பக்கத்திற்கு செல்லவும். (Modify a domain)

படி 6 :
டொமைன் திருப்புதல் (Domain Forwarding) தெரிவு செய்யப்பட்ட இடத்தில் Use Dot TK Free DNS service என்பதை தெரிவு செய்து Configure  பட்டனை அழுத்தவும்.

படி 7 :

* Type - A என்று இருக்கும் இடத்தில் CNAME  ஐ தெரிந்தெடுக்க.

* Host name  : உங்கள் தள முகவரி (www.yourname.tk)

*  IP address : ghs.google.com என்று கொடுத்து next ஐ சொடுக்கவும்.

படி 8 :

 * பிளாக்கர் டாஷ்போர்டில் அமைப்புகள் (Settings) இல் சென்று Publishing னுள் செல்லவும்.

* Custom Domain ஐ தெரிவு செய்யவும்.

* பிறகு, Advanced Settings ற்கு செல்லவும்.

* அதில், உங்கள் www.yourname.tk ஐ நிரப்பிய பின்னர் சரிபார்க்கும் வார்த்தையை பூர்த்தி செய்து தொடரவும்.

*  இப்போது உங்கள் www.yourname.tk தயார்.

* ஆனால் இன்னொரு படி இருக்கிறது, சேமித்த பின் மீண்டும் தோன்றும் பக்கத்தில் yourname.tk ஐ www.yourname.tk க்கு திருப்பும் வசதியை டிக் செய்யவும்,இல்லையெனில் yourname.tk ஐ யாரேனும் திறக்க முயன்றால் பிழை பக்கம் காண்பிக்கும். 

சந்தேகம் இருப்பின் பின்னூட்டப்படுத்தவும். 
  ஐஸ்வர்யா ராய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டார்..!

இதுவரை நான் எந்த முடிவு எடுப்பதற்கும் இவ்வளவு சிந்தித்தது இல்லை. ஆனால் எந்த கட்சிக்கு இம்முறை ஓட்டு போடுவது... ம்ஹூம் இந்த இடத்தில் இம்முறை பொருந்தாது என நினைக்கிறேன். ஏனென்றால் இது தான் எனக்கு முதல் அனுபவம்,ஓட்டு போடுவதில்!

எப்போதுமே ஒரு செயலை முதல் முறை செய்யும் போது பொதுவாகவே நமக்குள் சில எண்ணங்கள் வரும், நமக்கு அதை பற்றி எல்லா விசயங்களும் தெரிந்து இருக்கிறதா?
எந்த பட்டனை அழுத்த வேண்டும், எப்போது அழுத்த வேண்டும் என்பன போன்றவை.

சரிவர செய்யாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
ஒருவேளை தவறான இடத்தில் கை வைத்து விட்டால், வேறு யாருக்காவது ஓட்டு போய் விட்டால்?

எல்லாம் முடிந்த பின்னரும், முடிந்தது தெரியாமல் அவ்வளவுதானா என நினைத்தல்.
பீப் சத்தம் வந்த பின்னரும் அங்கேய நிற்றல்.

மற்றவர்கள் நம் அனுபவத்தை பற்றி கேட்டால் மழுப்புதல்.
"யாருக்கு ஓட்டு போட்டீங்க?" என்று பலரும் கேட்கத்தான் செய்கின்றனர்.

சரி, அந்த சிந்தித்தது பற்றி சொல்லி விடுகின்றேன். எங்கள் தொகுதியில் தமிழகத்தின் மிக முக்கிய இரண்டு கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஒருவர் ஊழலை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் நவீன முறையில் செய்யும் கட்சியை சார்ந்தவர், அவருக்கு வாக்களிக்க பிடிக்கவில்லை. இன்னொருவர் சின்ன சின்ன ஊழலை கூட சரியாக செய்ய தெரியாமல் மாட்டி கொண்டு தவிப்பவர், அவருக்கும் வாக்களிக்க முடியவில்லை. சரி தான் போ என்று 49'ஓ போடலாம் என்றால் எமகாதகர்கள் (ஏஜெண்டுகள்) அங்கேயே அமர்ந்து இருக்கிறார்கள்.

கடைசியில் எல்லாமே ஒரே குட்டை தான் அதில் கொஞ்சம் சக்தி குறைச்சலான குட்டையில் விழுவோம் என்று ஓட்டு போட்டு விட்டு வீடு திரும்பினேன்..!

ம்ம்... ஐஸ்வர்யா ராய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டதாக தலைப்பு போட்டிருக்கே?
இந்த காணொளியை பாருங்களேன்..என்ன இப்போது திருப்தியா?
அந்த படத்தில் மோகன்லால் யார் அவர் என்ன கட்சி என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?

பிடிச்சா ஓட்டு போடுங்க...
  

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி நடை.. சச்சின்,ராயுடு அரை சதம்

மற்ற எல்லா ஐபிஎல் அணிகளுக்கும் மும்பை அணிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த அணியின் உள்ளூர் ரசிகர்களும் மும்பை அணியிடம் தங்கள் அணி தோற்பதை வெறுப்பதினும் கொஞ்சம் அதிகமாக விரும்புவார்கள். சச்சின் விளையாடும் அணி ஆயிற்றே, சச்சின் விளையாடுவதை பார்ப்பதற்காகவே போட்டிக்கு வருபவர்கள் உண்டு.

அந்த வகையில் பார்த்தால் பெங்களூர் ரசிகர்கள் இன்று திருப்தி பட்டிருப்பார்கள்.மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. சச்சின்,ராயுடு  அரை சதமடித்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சச்சின் முதலில் பந்து வீச தீர்மானித்து பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் ஓவரிலியே மலிங்கா விக்கெட வீழ்த்த அந்த அணி தனது முதல் பாதியில் மிக மந்தமாக விளையாடியது. பின் பாதியில் சுதாரித்து ஆடினாலும் அந்த அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முனாப் படேல் தனது முதல் இரண்டு ஓவர்களில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். பொல்லார்டு,மலிங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

தில்ஷான் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். AB டி வில்லியர்ஸ்  38 ரன்கள் எடுத்தார். அவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் தான் பெங்களூர் அணியை ஒரு நல்ல ஸ்கோர் எடுக்கும் அளவிற்காவது இட்டு சென்றது.

141 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தொடங்கியது. பெங்களூர் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜாகிர் கான் ஓவரில் மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்ததால் மற்ற பந்து வீச்சாளர்கள் ஓவரும் பயனற்று போனது. டேவி ஜேகப்ஸ் இரண்டு சிக்ஸர் அடித்து ரன்னை உயர்த்திய போதும் நானேஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். நானேஸ் ஏனென்று தெரியவில்லை ஒரு ஓவர் மட்டுமே வீசினர். அதுவும் விக்கெட் மெய்டன்.

பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின்-ராயுடு இணை கடைசி வரை பிரியாமல் நின்று மும்பையை வெற்றி பெற செய்தது. சச்சினின் அந்த காண காண திகட்டாத ஸ்ட்ரைட் டிரைவ், வெட்டோரி பந்தையும் ( இரண்டாவது ஓவர் ) ,வெற்றி பந்தையும் ( Winning Shot ) சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி திருப்பியது என சச்சின் ஒரு புறம் கிளாசிக் ஆட்டம் ஆட , ராயுடு மறு புறம் அதிரடியாக ஆடினார். முடிவில் சச்சின் 55 ரன்களும் ராயுடு 63 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

கடந்த போட்டியிலும் சச்சின் ஆட்டம் இழக்கவில்லை என்பது நினைவில் இருக்கலாம்.

மன்மோகனுக்கு இந்திய அரசியல் மீது வெறுப்பு | PM dislikes Indian Politics


இந்திய நாட்டின் மிக உயரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் சேர்ந்து பதவியில் அமர்த்தப்படும் பிரதமரே தனது வாக்குரிமையை செலுத்தவில்லை எனும் போது இந்திய ஜனநாயகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் அதில் பிரதமர் வெறுப்புடன் இருப்பதையும் அறிய முடிகிறது.

இருக்காதா பின்னே?
அவரும் எத்தனை ஆண்டுகள் தான் தஞ்சாவூர் பொம்மையை போல தலை ஆட்டி கொண்டு இருப்பார். முதலை வாயில் அகப்பட்ட கதை தான் அவரது கதையும். இதில் அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகளுக்கு வேறு வித வித மாக கதைக்க வேண்டி இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை.பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். பிரதமரும், அவரது மனைவியும், அசாம் மாநிலம் திஸ்பூர் சட்டசபை தொகுதி வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளாக அங்கு தான், அவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. 2006ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவியுடன் திஸ்பூருக்கு வந்து ஓட்டுப் போட்டார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில், திஸ்பூர் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. இதனால், பிரதமர் ஓட்டளிப்பதற்காக, அசாம் மாநிலத்துக்கு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது.இதையொட்டி, திஸ்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பிரதமர் நேற்று ஓட்டளிக்க வரவில்லை. தேர்தல் விதிமுறைப்படி, தபால் ஓட்டு அளிக்கும் உரிமை பிரதமருக்கு வழங்கப்படவில்லை.தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமே தபால் ஓட்டு அளிக்க முடியும்.இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டில்லியில் பிரதமருக்கு பல்வேறு பொது நிகழ்ச்சிகள் இருந்ததன் காரணமாகவே, அவர் ஓட்டளிக்க வரவில்லை' என்றன.

ஓட்டு போடுவதை விட பிரதமருக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்றால், அவர் நம் மக்களுக்கு நிச்சயம் ஒரு தவறான முன் உதாரணம் ஆகிறார்.

சரி நமக்கென்ன, நாளைக்கு போய் நம் கடமையை செவ்வனே நிறைவேற்றி விட்டால் போச்சு...!

ஓ போடு... 49'ஓ போடு..!

என்னங்க நாளைக்கு உங்க ஜனநாயக கடமையை செலுத்துவதற்கு தயராயிட்டீங்களா?
வாழ்த்துகள், ஒரு இந்திய குடிமகனுக்கு இருக்கும் முதல் உரிமையான வாக்குரிமையை பயன் படுத்த போவதற்கு. நான் பல சமயங்களில் ஏன் வாக்கு செலுத்துவதை இந்திய குடிமகனின் கடமைகளில் ஒன்றாக அரசியல் சட்டம் சேர்க்கவில்லை என்று..?

ஆனால் அம்பேத்கரும் அவரோடு இருந்தவர்களும் பிற்காலத்தில் நிகழப் போவதை நன்கு அறிந்து இருப்பார்கள் போலும். ஒருவேளை வேட்பாளர்கள் அனைவரையும் வாக்காளருக்கு பிடிக்காமல் போனால் அவன் என்ன செய்வான் என்று நினைத்ததாலோ என்னவோ அது வெறும் உரிமையுடன் நின்று விட்டது.

ஆனால் இந்த எண்ணம் சீக்கிரத்திலேயே மாறி விட்டது. யாரையும் பிடிக்காவிட்டால் என்ன, வாக்கு சாவடிக்கு வாருங்கள் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றுசொல்லி விட்டு  விட்டு செல்லுங்கள் எனுமாறு சட்ட திருத்தம் 1961ல் கொண்டு வரப்பட்டது. அதற்கு பெயர் தான் 49'.

மின்னணு எந்திரம் வருவதற்கு முன்னர் இந்த 49' பற்றி பெரிதாக அறியப்பட்டு இருக்கவில்லை. ஏனென்றால் அப்போது இருந்த வாக்குச்சீட்டு முறையில் நமக்கு எந்த ஒரு வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் நமது ஓட்டை நாமே செல்லாத ஓட்டாக மாற்றி விடலாம்.

ஒரே சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு போடுவது அல்லது யாருக்கும் வாக்கு போடாமல் வெறும் சீட்டை மடித்து போடுவது என பல வழிகள் இருந்ததால் இந்த சிறப்பு விதி அப்போதெல்லாம் பெரிதாய் அறிந்திருக்கப் படவில்லை. ஆனால் இப்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு முறையில் ஒருவர் ஒரு முறை அழுத்தினால் வாக்கு பதிவு ஆகி விடும் பிறகு செல்லாத ஓட்டுக்கு வழி இல்லாமல் போய் விடுகிறது. ஓட்டு போடாமலும் இருக்க முடியாது.

அதனால், நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படுத்த ஒரே வழி 49' தான்.

எப்படி?

1. வாக்கு செலுத்த கையில் மையிட்டதும்
2. வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்களிக்க விருப்பமின்மையை கூறவும்,
3. அதற்கென இருக்கும் ஃபார்மில் (17A)  கையொப்பமிடவும்.
4. உங்களின் நிராகரிப்பு விருப்பம் பதிவு செய்யப்பட்டு விட்டது.

எதற்கு?

1. யாரையும் பிடிக்கவில்லை என்று வாக்கை செலுத்தாமல் இருந்தால், உங்களுக்கு பதிலாக வேறு யாரேனும் உங்கள் உரிமையை அவர்கள் கடமையாய் நினைந்து நிறைவேற்றிடுவர்.

2.
வாக்கு செலுத்துவதால் என்ன ஆகி விட போகிறது என்று எண்ணுவதை விடுத்து, யாரையுமே எனக்கு பிடிக்கவில்லை என்று பதியுங்கள். அப்போதாவது நம்ம அரசியல்வாதிகள் பெயருக்காவது நல்லவர்களாய் நடிக்கட்டும்.

ஓட்டைகள் 

1. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி வாக்குரிமை ரகசியமானது, ஆனால் 49' வெளிப்படையானது.

2. கட்சிக்காரர்களின் மிரட்டலுக்கு வாக்காளர் பயப்பட வேண்டி இருக்கிறது.

3. மின்னணு எந்திரத்தில் இன்னுமும் தனி பொத்தான் வைக்காமல் இருப்பது.

ஏன்? 

முன்பெல்லாம் வெவ்வேறு விதமான் சின்னங்களுடன் வாக்கு கேட்பார்கள். 

இப்போதும் சின்னங்கள் மூலமாகத்தான் கேட்கிறார்கள்.
ஒன்று மிக்சியும் கிரைண்டருமாய் இருக்கிறது,
அல்லது கத்தியும் அறிவாளுமாய் இருக்கிறது. ( நான் CPI சொல்லவில்லை )

நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள்?
கிரண்டருக்கும் மிக்சிக்குமா? அல்லது உங்கள் மனசு சொல்லும் முடிவுக்கா?

சிந்தித்து வாக்களியுங்கள்..!

மாற்று வழி :

என்ன தான் 49' இருந்தாலும் அது   ரகசியமானது இல்லை என்பதால் கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்யும், அப்போது என்ன செய்வது?

பேசமால் யாரென்றே தெரியாத வெற்றி பெற வாய்ப்பு இல்லாத ஒரு சுயேட்சைக்கு  வாக்களித்து விடலாம்.

முதல் தடவை இப்போது தான் வாக்களிக்க போகிறேன், அதனால் எனக்கு இதுவரை தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவினை இட்டுள்ளேன். 
தவறுகளை சுட்டி காட்டவும்.


பிடித்திருந்தால் எனக்கும் ஓட்டு போடுங்கள்.. இன்ட்லியில்... 

Summary :

49'O is a great option for those who are not liking any of the candidates to vote. It is a option like none of the above. 
If you don't want to vote for Grinder or Mixi then vote for 49'O. 
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு