தாவூத் எங்கே...?

on திங்கள், 9 மே, 2011

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பிரபல குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். நீண்ட காலமாக, அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசித்து வருகிறார். அவரை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டாலும், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் பதில் கூறி வந்தது.


இந்நிலையில், மே 2-ம் தேதி அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒசாமாவை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரி்க்கா கொன்றது போல், தாவூத்தை இந்தியா கொல்ல வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.


இதையடுத்து, தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.


அவரது மகன் மொயினின் திருமணம் மே 28-ம் தேதி கராச்சியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், திடீரென திருமண இடத்தை அவர் துபைக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டின் தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் தாவூத்தின் மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.


தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறுவது பச்சைப் பொய் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 பின்னூட்டங்கள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

கருத்துரையிடுக