தி.மு.க வெற்றி பெற்றால்...?

on சனி, 14 மே, 2011

நாளை தமிழகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கும் (அப்படி ஒண்ணும் தெரியலியே?) அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமக்கு சேவை புரிய போகிறவர்கள் (சேவை என்றால் என்ன? அப்படின்னு கேள்விக் கேட்டா வெற்றி பெறுபவர்கள் பதில் சொல்ல விட்டால் பதவி பறிக்கப்படும் என்றால் எத்தனை பேரு தேறுவார்கள்?) யார் யார் என்ற விவரம் தேர்தல் முடிவுகளாக வெளி வரப் போகிறது. (மக்களவை தேர்தல் மாதிரி உள்குத்துகள் நடக்காமல் இருக்குமா?)

இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க வெற்றி பெறவில்லை எனில் என்ன நடக்கும்?

1. தொலைக்காட்சி 'அலைவரிசை'கள் கண்டிப்பாக குறையும். (நிஜமாக நம்புவோமாக)

2. செய்தி என்ற பெயரில் இயங்கும் 24 மணி நேர விளம்பர டிவி தொடராமல் போகலாம்.

3. வாரத்துக்கு ஒரு முறை நடக்கும் பாராட்டு விழா நின்று போகும். (அய்யய்யோ நடிகைகளின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அவ்வளவுதானா?)

4. பிரதான அலைவரிசையில் கூட்டம் போட்டிருக்கும் ஜால்ரா நடிகர் பட்டாளம் கழன்று கொள்ளும். (அப்பாடா சீரியல் குறையும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் எதிர் குழாமின் அலைவரிசை இருக்கிறது.)

5. தமிழின் நெம்பர்.1 நாளிதழுக்கு போட்டி குறையும்.

6. கேபிள் ராஜாக்கள் அம்போ கதியாவார்கள்.

7. "தமிழ்நாட்டுக்கு புரிந்த சேவையை தமிழுக்காக இனி தொடர்வேன்" என்று வரிசையாக கதை,வசனத்தில் படம் வெளியிட நினைத்தாலும் முடியாமல் தவிப்பார்.

8. பாவம் ரவுடிகளுக்கான பாதுகாப்பு குறைந்து விடும்.

9. இலவசங்கள் தொடரும் .. (ரெண்டு பேருமே சொல்லி இருக்காங்களே..ஹி..ஹி)

10. மச்சான்ஸ்..ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாவார்.

11. சொம்பு நடிக,நடிகையர்கள் கழகம் தாண்டுவார்கள்??

12. இன்னும் நிறைய இருக்கு...


பலன்களும் பாதகங்களும்...

நீங்களும் சொல்லுங்க கீழே பின்னூட்டத்தில்..



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..

1 பின்னூட்டங்கள்:

ரேவா சொன்னது…

தொலைக்காட்சி 'அலைவரிசை'கள் கண்டிப்பாக குறையும். (நிஜமாக நம்புவோமாக)ஹ ஹ கண்டிப்பாக குறையும்...நல்ல வியூகம் நண்பரே...

கருத்துரையிடுக