இது தான் சென்னை...!

on வியாழன், 2 ஜூன், 2011அடுக்கு மாடி கொண்ட
கட்டிடங்கள்
ஆயிரமாம்..

மெத்த படித்தவர்
தான்
மொத்த பேர்களுமாம்..

வந்தோர் எல்லார்
வாழ்வும்
வளம் பெறுமாம்..

கடைகளை எல்லாம்
பணப் பகடைகளாய்
மாற்றும் ஏமாற்றிகளாம்

எங்கும் எதுவும்
அதுவும்
எளிதென கிட்டுமாம்..

விடை இல்லா
வினாக்களும்
விளக்கம் பெறுமாம்..

அலை கடல் மட்டுமல்ல
அது போலவே
மக்களும் இங்குண்டாம்..

அரசு எந்திரமும்
இங்கேயாம்..
அதைக் கொடுக்கும்
கனவு தொழிற்சாலையும்
இங்கேயாம்...

என்ன இருந்தென்ன?
ஒரு மணி நேர மழையில்
மொத்தமாய் அத்தனையும்
கொத்தென
காணாமற் போயிட்டதே?

இது தான்
சென்னையா?1 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் சொன்னது…

சென்னை நல்லா வந்திருக்கு.. கவிதை வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக