தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நாளை வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் மே 16ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். வேட்பு மனு தாக்கல் 29ம் தேதி நிறைவு பெறுகிறது.தினமும் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர் மே, 2ம் தேதி
மதியம் 3:00 மணிக்குள் வாங்க வேண்டும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அலு
வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் 5,000 ரூபாய்செலுத்தினால் போதும்.l வேட்பாளருடன் வேட்பு மனு தாக்கல் நடக்கும் அலுவலக வளாகத்திற்குள் மூன்று கார்கள் அனுமதிக்கப்படும். அதற்கான செலவு வேட்பாளர் செலவு கணக்கில்
சேர்க்கப்படும். வேட்பாளர் ஊர்வலமாக வந்தால் அதற்குரிய செலவும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். வேட்பு மனு தாக்கல் நடைபெறும், தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
வேட்பாளர்கள் வேட்பு மனு விண்ணப்பத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் கமிஷன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
lவேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின்போது ஸ்டாம்ப் அளவு புகைப்படம் ஒன்றை வழங்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் விபரம் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியி டப்படும். வேட்பாளர்களின் சொத்து விவரம் 24 மணி நேரத்திற்குள்
இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு ராஜேஷ் லக்கானிதெரிவித்தார்.தமிழகத்தை போல் புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்திலும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நாளை வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.